Lankamuslim.org

One World One Ummah

Archive for December 8th, 2009

மக்கள் விடுதலை இராணுவதுடன் எமக்கு தொடர்பு இல்லை

leave a comment »

டாக்டர். அன்வர் அல் அக்ஹா:

இலங்கையின்  கிழக்குப் பகுதியில் மக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் உருவாக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள PLO எனும் அமைப்பிற்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் ( PLA இப்போது -West Bank- வெஸ்ட் பேங்க்கிள் அதிகாரத்தில் உள்ள அமைப்பு ) எவ்வித தொடர்புகளும் கிடையாது என இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் டாக்டர். அன்வர் அல் அக்ஹா நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவ்வமைப்பிற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கதுடன் தொடர்பு இருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ள அவர் பாலஸ்தீன் அரசாங்கம் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கத்திற்கு போதுமான உதவிகளைச் செய்துள்ளதாகவும், தொடர்ந்தும் தமது உதவியை புரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

December 8, 2009 at 9:57 pm

மக்கள் விடுதலை இராணுவம் குறித்து அரசுக்கு தெரியும்

leave a comment »

இணைப்பு -2

கிழக்கில் புதிய தமிழ் மார்க்ஸீசிய ஆயுதக் குழு

கிழக்கில் மக்கள் விடுதலை இராணுவம்  என்ற பெயரில் இயங்கி வருவதாக பிரிட்டிஷ் பத்திரிகையான த டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ள புதிய இராணுவஅமைப்பு  தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்ததென பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த தமிழ் கிளர்ச்சி இயக்கம் தொடர்பில் நிர்வாக  மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்
மக்கள் விடுதலை இராணுவம் அல்லது பீ.எல்.ஏ கிளர்ச்சி இயக்கம் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் எல்லா நாடுகளிலும் இவ்வாறான நிலைமைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டிய அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில்அணுகப்படும் என மேலும்தெரிவித்துள்ளார்.

…………………………………………………………………………………………………………………………………………………

இது பற்றி எமது அரசியல் ஆய்வாளர்  M . ஷாமில் முஹம்மடிடம் தொடர்பு கொண்டு  வினவியபோது உடனடியாக இது பற்றி குறிபிட முடியாது ஆனாலும் அரசியல் , இராணுவ, உளவியல் கள  நிலைகளை  வைத்து பார்க்கும்போது மூன்று விடையங்க களை குறிபிடலாம் என்றார்

M . ஷாமில் முஹம்மடின் பதில்:

ஒன்று , கிழக்கில் வடக்கின் பெரும் பகுதி போன்று  அல்லாமல் கிழக்கில் விடுதலை போராட்ட மன நிலை முற்றாக அழிக்கப்பட்ட விலை வடக்கில் மக்கள் தோல்வியின் அதன் இழப்பின் தாகத்தால் உளரீதியாக சோர்வடைந்துள்ளார்கள்      இதை பத்து மாதம் கருவில் சுமந்த குழந்தை ஒன்று இறந்து பிறக்கும் போது அதன் தாய்க்கு உடன் ஏற்படும் மனநிலைக்கு ஒப்பிட முடியும்    கிழக்கில் பெரும் பகுதி தமிழ் வாலிபர்கள் போராட்ட மன நிலையுடன் இருப் பதற்கு  வாய்புகள் அதிகம் உண்டு . கருணா , பிரபா பிளவுக்கு  பின்பு  கிழக்கின் பெரும் பகுதி தமிழ் வாலிபர்கள் இந்த  பிளவின்  வெறுப்பினால் போராட்டத்தை விட்டும் ஒதுங்கி கொண்டார்கள் அல்லது கருணா தரப்பினால் வீட்டுக்கு அனுப்பட்டார்கள் இதுதான் புலிகள் கிழக்கை விரைவாக இழப்பதற்கும் பிரதான காரணமாக அமைந்தது இவர்கள் இவர்களின் தலைவர் பிரபாகாரனினால்   ஈழம் ஒன்றுதான் தமிழர்களுக்கான ஒரே விடிவு என்று போதிக்க பட்டவர்கள் வடக்கில் தமது தலைமைஅழிக் கப்படும்போது இவர்கள் ஒதுங்கி இருந்தாலும் தமது தலைமயின் அழிவைப் பார்த்து போராட்ட மன வலிமை பெறுவதற்கு நிறைய கரணங்கள் இருக்கிறது எப்போதும் அழிவிற்கும் , ஆபத்துக்கும் உள்ளானவர்களை    விடவும் அழிவை பார்த்து போராட்ட மன வலிமை  பெற்று போராடுபவர்கள் அதிகம் இதுதான் 1983 july இனக் கலவரத்தின் பின்பு நடைபெற்றது தாக்கப்பட்டவர்கள் கொழும்பு தமிழர்கள்ஆனால் இயக்கங்களின் அதிகமாக இணைந்தவர்கள் வடக்கு கிழக்கு வாலிபர்கள்  இது   போராட்ட மன நிலை அதனால் அதற்கான வாய்ப்பை முழுமையாக  மறுக்க முடியாது

இரண்டவதாக இந்த விடயத்தை ஒரு வெறும் உள்நாட்டு விடயமாக மட்டும் பார்த்துவிட முடியாது. பிராந்திய மேலாதிக்கம் என்ற கோணத்திலிருந்து நோக்கும் போது தமது பிடியை விட்டு நழுவிப் போய்க்கொண்டிருக்கும் இலங்கை அரசு மீது அழுத்தங்களைப் ஏற்படுத்தி இலங்கையை மீண்டும் தமது மேலாதிக்கதின் கீழ கொண்டுவரும் நோக்கோடு இந்தியா தனது புலனாய்வாளர்கள் மூலமாக இலங்கைத் தமிழ் வாலிபர்களை பண்படுத்தி இராணுவ குழு உருவாக்கத்தில் ஈடுபடலாம் இதற்கு நிறைய சாதகமான காரணங்கள் உண்டு இது பற்றி எனது கட்டுரைகளில் ( புது முனைப்புடன் உருவாகிவரும் மேலாதிக்க போட்டி இலங்கை முஸ்லிம்களை நேரடியாக பாதிக்குமா ?) என்ற கட்டுரைகளில் குறிபிட்டு இருக்கிறேன்

மூன்றாவது.   இது இலங்கை புலனாய்வு பிரிவின் ஒரு திட்டமிட்ட   வலை விரிப்பு  நகர்வாக இருக்க முடியும்.   இவைகளை பிரதானமாக குறிபிடலாம் என்று குறிபிட்டார் .

Written by lankamuslim

December 8, 2009 at 4:33 pm

அக்குறணை குர்பான் மாடுகளை படமெடுக்க வந்த ஹெல உறுமய எம் பி

with one comment

http://www.telo.org/images/JHU%20leader%20continues%20death%20fast.gif
ஹஜ்ஜு பெருநாளுக்கு முதல் நாள் நாட்டின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக சட்ட அனுமதியுடன் குர்பானுக்காக தயார் நிலையில் வைக்க பட்டிருந்த மாடுகளை கண்டி மாவட்ட  ஹெல உறுமய  எம் பி  உடவத்த நந்த தேரர் மற்றும் அவரின் குழுவினரும் தனியார்காணி ஒன்றுக்குள் அனுமதி இன்றி   நுழைந்து    படம் எடுக்க முற்பட்டனர் இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது பின்பு முஸ்லிம் அரசியல் வாதிகளின் நடவடிக்கையால் உடவத்த நந்த தேரர் மற்றும் அவரின் குழுவும் திருப்பி அனுப்பட்டனர் கண்டி புதிய  பொலிஸ் மா அதிபர் நியமனத்தின் பின்பு மாடுகள் தொடர்பான கெடுபிடிகள் அதிகம் என்பது குறிபிடதக்கது .

Written by lankamuslim

December 8, 2009 at 10:35 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,831 other followers