Archive for December 6th, 2009
கிறிஸத்தவ தேவாலயம் , பௌத்தவிகாரை என்பன தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ஜா-எல குருஸ்சவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலாயம் ஒன்றும் கொட்டுக்கொட பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றும் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
கிறிஸ்த்தவ தேவாலயத்திற்கு பலத்த சேதத்தை உருவாக்கியவர்கள் அங்கிருந்த இரு வாகனங்களுக்கும் தீ மூட்டிச்சென்றுள்ளனர். இத்தாக்குதலில் எதிரொலியாகவே பௌத்த விகாரை தாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு காணப்பட்ட புத்தர் சிலையைத் தவிர விகாரையின் பெரும்பகுதி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அதே நேரம் குறிப்பிட்ட விகாரையில் உள்ள பிக்குவின் மீது அதிருப்தி கொண்டோராலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் பொருட்டு விசேட அதிரடிப்படையினர், இராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்தோர் பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்ததப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், இரு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய விரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஜா-எல நெடுஞ்சாலையை வழிமறித்த 500 க்கு மேற்பட்டோர் கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குல் தொடர்பான விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
நன்றி இலங்கைநெட்
தமிழ் நாட்டில் நூற்று கணக்கான தவ்ஹீத் ஜமாத்தினர் கைது
லிபரான் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத சங் பரி்வார் தலைவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டின் முன் கோரிக்கை முன்வைத்த தவ்ஹீத் ஜமாத் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 17வது ஆண்டு தினம் இன்று அயோத்தி உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அனுசரிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று முஸ்லீம் அமைப்புகள் கண்டனக் கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மாநிலச் செயலாளர் மவுலானா நாசர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன் பின்னர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரின் தடுப்பை மீறி அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தாக்கியதால் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.பின்னர் தமுமுகவின் தலைவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர் பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து எதிர்ப்பு கோஷமிட்டனர். வாலாஜா சாலையில் ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.











