Lankamuslim.org

One World One Ummah

Archive for December 2009

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். பாகம்-3

leave a comment »

[lanka.jpg]

பி.எம். புன்னியாமீன்

1 ஆவது ஜனாதிபதித் தேர்தல்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982.10.20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர். விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 31, 2009 at 7:55 pm

இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் சந்திப்பு

leave a comment »

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் வகையில் இதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் விடுக்கப்படடிருந்ததாக தெரிய வருகின்றது. இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு அதரவு வழங்குமாறு கோரியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டை அக்கட்சியைச் சார்ந்தவர்கள் எடுத்துக் கூறியதாகவும் தெரியவருகின்றது.

Written by lankamuslim

December 31, 2009 at 6:51 pm

முசலியில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

leave a comment »

தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக மன்னார், முசலிப் பிரதேசத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அகதிகளாக விரட்டப்பட்டு 19 வருடங்களின் பின்னர் மீளக்குடியேறுகின்ற மன்னார், முசலி முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மின்சாரம், போக்குவரத்து, மற்றும் மலசல கூடங்கள் இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் வாழுகின்ற இம்மக்கள் தற்போது பெய்துவருகின்ற மழையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

1990ம் ஆண்டு வெளியேற்றப்படும் போது சுமார் 4200க்கும் அதிகமாக காணப்பட்ட குடும்பங்கள்  தற்போது 10,000 க்கும் அதிகமாக காணப்படுகின்றன. இவர்களில் தற்போது 1526 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளனர். விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 31, 2009 at 3:34 pm

எதிர்க்காட்சிகள் தேர்தல் பிரசாரம் நடத்த மட்டு. மாநகர முதல்வர் மறுப்பு

leave a comment »

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமர்று கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதாவூத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாநகர ஆணையாளரிடம் இதற்கு விண்ணப்பம் செய்திருந்த போதிலும், அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவித்தார். “குறிப்பிட்ட இடத்தில் முன்கூட்டியே நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்” என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்துள்ளதாக சேகு தாவூத் பஷீர் மேலும் தெரிவித்தார்.

வீரகேசரி

Written by lankamuslim

December 31, 2009 at 3:05 pm

கல்முனை மாநகர சபை மேயர் எச்.எம்.எம்.ஹரீஸை வழிமறித்துத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது

leave a comment »

Imageதேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கத் நஸீம் மற்றும் அவரது சகாக்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று நேற்றுக் காலை கல்முனையில் இடம்பெற்றதாக தெரிகிறது  இது தொடர்பாக கல்முனை மேயர் ஹரீஸ் கூறியவை வருமாறு கல்முனை மாநகர சபையின் வரவு  செலவுத் திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்காக நான் இன்று (நேற்று) காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நஸீம், அவரது சகாக்கள் சிலரை அழைத்து வந்து என்னை வழிமறித்துத் தாக்க முற்பட்டார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வந்து நஸீம் மீது தாக்குதல் நடத்தினர். அவர் சிறிது நேரம் மாநகர சபை அலுவலக அறையில் அடைத்து வைக்கப்பட்டு மக்களால் முற்று கையிடப்பட்டிருந்தார்.சம்பவம் இடம்பெற்ற அரைமணி நேரம் கழித்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். “துல்கர் நஸீமை கைதுசெய்யாவிட்டால் நாம் இங்கிருந்து போகமாட்டோம்”  என்று மக்கள் கூறினர். இதனால், பொலிஸார் அவரைக் கைது செய்தனர். என்ற தகவல் வெளியாகியுள்ளது

Written by lankamuslim

December 31, 2009 at 12:10 pm

சச்சிதானந்தன் மற்றும் ஜேயாகராஜன் ஆகியோர் எதிர் கட்சி கூட்டணியில் இணைவு!

leave a comment »

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான சச்சிதானந்தன் மற்றும் ஜேயாகராஜன் ஆகியோர் எதிர் கட்சி கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளனர்.நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட இவர்கள் இருவரும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.சச்சிதானந்தன் தற்போதைய அரசாங்கத்தின் பிரதி கல்வி அமைச்சராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரிவு செய்யப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 தேசிய பட்டடியல் உறுப்பினர்களுடன் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக தொழிலாளர் காங்கிரசில் இருந்து வடிவேல் சுரேஸ்,பைசர் முஸ்தபா,புத்திரசிகாமணி ஆகிய மூன்று பேர் வெளியேறி அரசாங்கத் தரப்பிற்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தற்போது மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினரும் கட்சியில் இருந்த வெளியேறியுள்ளமை கட்சியை பலவீனப்படுத்தியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 19 முக்கிய அமைச்சர்கள் எதிர் கட்சிக் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

December 31, 2009 at 12:12 am

யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீதான வலம்புரி நாளேடின் இரண்டாவது தாக்குதல்- “நாய்களின் தலை”

leave a comment »

யாழ்ப்பாண முஸ்லிம்கள் வலம்புரி நாளேடின் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் ஐந்து சந்தியிலும் யாழ் நகரிலும் வலம்புரி பத்திரிகையை தீயிட்டுக் கொளுத்தி தமது எதிப்பை வெளிட்டனர் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் முஸ்லிம் கொத்து ரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக வலம்புரி நாளிதழிதல் 28.12.2009 ஆசிரியர் தலைப்பு  “நாய்களின் தலை” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது  யாழ்ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதுபற்றி எஸ் . முஹம்மத் சர்ராஜ் குறிபிடும்போது இது யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீதான வலம்புரி நாளேடின் இரண்டாவது திட்டமிட்ட பொய்யான தாக்குதல் இந்தமுறை  முஸ்லிம்களில் கொத்துரொட்டிக் கடை பற்றி குறிபிட்டுள்ளது என்றார்

இதனால் யாழ் நகர்ப் பகுதி யாழ் ஐந்து சந்தி போன்ற இடங்களில் திரண்ட நூறுக்கும் அதிகமான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழிற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது

ஆசிரியர்

Written by lankamuslim

December 30, 2009 at 9:28 pm

பலஸ்தீன விடுதலை போராட்டமும் இஸ்ரேலிய ,அமெரிக்க , ஐரோப்பிய பயங்கரவாதமும்

with one comment

M. ஷாமில் முஹம்மட்

எந்தவொரு சமுகமும் மேலாதிக்க வெறிகொண்ட சக்திகளினால் ஒடுக்கப்படும் போது ஆக்கிரமிக்க படும்போது ஒடுக்கப்பட்டும் சமுகம் எதிர் மறையாக தொழில் படும் தமக்குள் விரைவாக ஒன்றிணையும் . இந்த ஒன்றிணைப்பு ஓர் அமைப்பினையும் ஒரு தலைமையினையும் உருவாக்கி விடும் . அந்த பலஸ்தீன சமுகதின் எதிர் மறை தொழில் பாடுதான் ஹமாஸ் விடுதலை போராட்ட இயக்கம் . இருப்பு சிந்தனையை தீர்மானிக்கிறது இருப்பு என்பது புறச்சுழல் சிந்தனை என்பது அகச்சூழல் எல்லா போராட்ட இயக்கத்திற்கும் ஒடுக்குமுறை என்ற அகச்சூழல் போராட்டம் என்ற புறச்சுழலை கஷ்டமின்றி பிரசவிகிறது.

ஹமாஸ், இஸ்ரேல் ஆக்கிரமித்த முஸ்லிம் தேசத்தை மீட்டெடுத்து, பாலஸ்தீன நாட்டை மீண்டும் நிர்மாணிக்க உருவாக்கப்பட்ட சியோனிஸ பயங்கரவாத பாசிச ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கம். ஹமாஸ் என்பது அரபு மொழியில் “ஹரகதுல் முகாவமதுல் இஸ்லாமிய்யா” (حركة المقاومة الاسلامية) “இஸ்லாமிய எதிர் போராட்ட அமைப்பு” என்பதன் சுருக்கமாகும்.

ஹமாஸ் விடுதலை போராட்ட அமைப்பு இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியில் 1978 ல் ஷேக் அஹ்மத் யாஸீன் என்ற விடுதலை போராளியால் உருவாக்க பட்டதாகும் . அப்போது அல் மஜ்மஃ அல் இஸ்லாமி எனும் பெயரில் இஸ்லாமிய போதனைகள் மற்றும் சமூக சேவைகளுக்கான அமைப்பாகவே  இயங்கி வந்தது விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 30, 2009 at 5:17 pm

ஊடகங்களின் ஊகங்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? :

leave a comment »

பி.எம். புன்னியாமீன்

இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 6ஆவது ஜனாதிபதித் தேர்தல் 2010 ஜனவரி 26ஆந் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இருந்தபோதிலும்கூட, பிரதான வேட்பாளர்கள் இருவரே மக்கள் முன் சோபிக்கின்றனர். ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ அடுத்தவர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா. இவர்கள் இருவரும் தவிர ஏனைய 20 வேட்பாளர்களும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 5% வாக்குகளையாவது பெறுவார்களா என்பது சந்தேகத்திக்கிடமானதே.

இலங்கையில் காணப்படக்கூடிய அனைத்து  அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரண்டு வேட்பாளர்களை பிரதானப்படுத்தியே தமது செய்திகளுக்கும், கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எந்தவொரு ஊடகமாவது ஏனைய 20 வேட்பாளர்களுள் ஒருவருக்காவது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அது பிரதான வேட்பாளர்களை மையப்படுத்திய முக்கியத்துவமாகவே விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 30, 2009 at 1:41 am

யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதியின் ஊடாக ஆயிரக்கணக்கானோர் பயணித்துள்ளனர்

leave a comment »

யாழ்ப்பாணத்துக்கான ஏ9 பிரதான வீதியில் கடந்த டிசம்பர் 24ம் திகதி முதல் கடந்த (27.12. 2009)  ஞாயிற்றுக்கிழமை வரையில் 2 215 வாகனங்கள் பயணித்திருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.அந்த வாகனங்களில் 30142 பேர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏ9 பாதை முற்றாக திறக்கப்பட்டதன் பின்னர், பாரிய எண்ணிக்கையிலான பயணிகள் அதன் ஊடாக பயணிப்பதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளா. அவரது தகவலுக்கு ஏற்ப, யாழ்ப்பாணத்தில் இருந்து 16138 பேர் தென் பிரதேசங்களுக்கு பயணித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

December 30, 2009 at 1:12 am

அலி சாஹீரும் (மௌலானா)அரசில் பச்சோந்தித்தனமும்!!!பாகம்-1

leave a comment »

எஸ்.எம்.எம் பஷீர்

மௌலானா புலிகளின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ரமேஷ் வேண்டிக்கொண்டபடிதான் கருணாவை கொழம்புக்கு கொண்டுவந்ததவர்; அவராக கருனாவை கொண்டுவர தீர்மானிக்கவில்லை . மொத்தத்தில் புலிகளின் கட்டளைப்படியே இவர் அதனை செய்தார். கருணாவை கொழும்புக்கு கடத்திவந்த அலி சாகிர் மௌலானா அமெரிக்காவில் இலங்கை அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் தனக்கு சர்வதேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகலிடம் தருமாறு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் தீர்மானிக்கப்பட முன்னர் ராஜரீயகடவுச்சீட்டு பெறும் பதவி ஒன்றினை ( வெகுமதி ) பெற மறுபுறம் கருணா பிறிதொரு பெயரில் ராஜரீய கடவுச்சீட்டினால் பிரித்தானியாவுக்குள் நுழைந்தமைக்காக தண்டனை பெற்றார். இதனை பற்றி நான் டிசம்பர் மாதம் 2007 மாண்டு ஆங்கிலத்தில் ( Diplomacy of Reward and Retribution) என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரையின் தலைப்பாக ” வெகுமதியும் தண்டனையும் வழங்கும் ராஜதந்திரம்” என்பதாகும். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாத்திய அரசியல் மாற்றங்கள், தகிடுதித்தங்கள் மீண்டும் இன்றைய நிகழ்வுகளுடன் இக்கட்டுரையை எழுத என்னைத்தூண்டின.   விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 30, 2009 at 12:10 am

ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள்…

leave a comment »

2008 டிசம்பர் மாதத்தின் அந்தக் கடைசி நாட்கள் உங்கள் ஞாபகத் தை மெல்லத் தட்டி திறந்து பாருங்கள். உலகின் மனசாட்சி செத்துப்போய்விட்ட ஒரு தருணத்தில் எதேச்சதிகார ஆதிக்கச் சக்திகளின் கொடூரமான மறுபக்கத்தைத் தோலுரித்துக் காட்டிய அந்தப் இருபத்தி இரண்டு நாட்கள்… இன்றுவரை கடலெனப் பெருகி ஓடும் எம் சொந்தங்களின் ரத்தம் இந்தப் புகைப்படங்களை நினைவிருக்கிறதா? இவை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவோ ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காகவோ பற்பல வர்ணங்களில் வெடித்துச் சிதறும் வானவெடிகளா? இல்லை. விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 29, 2009 at 8:41 pm

கே.பி. மூன்று தடவைகள் அரசினால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

leave a comment »

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்:

தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மூன்று தடவைகள்  அரசினால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவர் ஏன் அழைத்துச்செல்லப்பட்டார் என்ற தகவலை வெளியிட்டால் நான் நான்காம் மாடிக்கு செல்லநேரிடும். ஆகவே, நான் அதனை இங்கு தவிர்த்துக்கொள்கிறேன் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கல்முனையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பின்னர் அங்கு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -கைதுசெய்யப்பட்ட கே.பி. கொழும்பில் முன்னாள் அமைச்சர்கள் அனுர பண்டாரநாயக்க மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் தங்கிய அமைச்சர்கள் வாசஸ்தலத்திலேயே தங்கவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். முக்கிய சந்திப்புக்களுக்காக கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்கே அழைத்துவரப்படுகிறார். மூன்று தடவைகள் வெளிநாட்டு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார். விடுதலைப்புலிகளின் கப்பல்களை அவரிடமிருந்து வாங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவை பற்றி மேலதிகள தகவல்களை நான் இங்கு வெளியிட்டால் நான் நாலாம் மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அவற்றை இங்கு தவிர்த்துவிடுகிறேன்.

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை கோத்தபாயவின் உத்தரவின் பேரில் படையினர் சுட்டுக்கொன்றார்கள் என்று பொன்சேகா கூறிய விடயத்துக்கு எதிராக – இராணுவ இரகசியங்களை வெளியிட்ட குற்றத்தின்பேரில் – நடவடிக்கை எடுக்கப்போவதாக  அரசு முதலில் தெரிவித்தபோதும் அந்த முயற்சியை அவர்கள் தற்போது கைவிட்டுவிட்டார்களே ஏன? சண்டேலீடர் பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய செவ்வியை அவர் மறுத்துவிட்டார் என்று சர்வதேச சமூகத்துக்கு  அரசு தரப்பு தொடர்ந்து கூறி வருகின்றதே தவிர பொன்சேகா கூறிய விடயங்கள் தொடர்பாக தனது தரப்பு விளக்ககத்தை  அரசு இன்னமும் வெளியிடவில்லையே ஏன?பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பது என்று  முஸ்லிம் காங்கிரஸ் ஒரே இரவில் முடிவு எடுத்துவிடவில்லை. எத்தனையோ விடயங்களை பரிசீலித்து அயல்நாடுகள் மற்றும் ஏனைய சக்திகளின் சிறிலங்கா தொடர்பான ஆர்வங்கள் குறித்து தீவிரமாக பரிசீலித்து சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு சரியான முடிவு எது என்று ஆராய்ந்துதான் எமது  முடிவை எடுத்தோம்.

Written by lankamuslim

December 29, 2009 at 12:42 am

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு

leave a comment »

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோய் பரவி வருகிறது இன்று கலை பத்து வயது சிறுமி டெங்கு காரணமாக வபாதானார்.   மூன்று டெங்கு நோயாளர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தகவல்களின்படி இது வரை மட்ட களப்பு  மாவட்டத்தில்   120 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்டப்டுள்ளதாகதெரிகிறது  இதேவேளை   பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள், நகர சபை உறுப்பினர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்ட கூட்டமொன்றில்  தனியார் கல்வி  நிறுவனங்களை    மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Written by lankamuslim

December 28, 2009 at 9:25 pm

இஸ்ரேல் பயங்கரவாத ஆக்கிரமிப்பு இராணுவ தாக்குதல் ஒரு வருட பூர்த்தி

leave a comment »

பலஸ்தீன   காஸா பகுதி மீது இஸ்ரேல் பயங்கரவாதிகள் கண்முடித்தனமான, போர் விதிமுறைகளுக்கு எதிரான பயங்கர வாத ஆக்கிரமிப்பு  இராணுவத் தாக்குதல் நடத்தி.  ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி கொன்று குவித்து   கொல்லபட்டவர்களின்   உறுப்புகளை திருடி அமெரிக்காவுகும் ஐரோப்பிய நாடுகளுக்கு இலவசமாக விநியோகம்  செய்து     கொலை தாண்டவம் ஆடி  ஒரு வருடம்  பூர்த்தி அடைகின்றது தற்போதைய நிலையில், பாலஸ்தீன நிலப்பரப்புகளில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம்  தொடர்ந்து கடைபிடித்துவரும் கொலைகள் , உடல் உறுப்பு திருட்டு , மற்றும் பொருளாதார தடைகள் என்பன தொடர்கிறது அங்கே உடல் உறுப்பு திருட்டுகளை தான் செய்வதை வேறு வழி இல்லாமல் ஒத்து கொண்டுள்ளது     ஆனால் அதை பற்றி பெரிதாக கருதாத  ஐ.நா   பொது சுகாதார சேவைகள் அழிந்துபோகும் ஓர் அபாய நிலையை உருவாக்கியுள்ளதாக .மட்டும்  ஐ.நா மன்றத்தின்  கூறுகிறது  விரிவாக பார்க்க.

Written by lankamuslim

December 28, 2009 at 5:31 pm

ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு தமிழ்க்காங்கிரஸ் நேற்றுத் தீர்மானம்

leave a comment »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சி, கூட்டமைப்பு இவ்விடயத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தனது முடிவை நேற்று எடுத்தது.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் விசேட பொதுக் குழுக்கூட்டம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அ.விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. சுமார் எழுபத்தியைந்து பேர் வரை அங்கு பிரசன்னமாகி யிருந்தனர்.

இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான விளக்கங்கள், வியாக்கியானங்களை விவரிக்கும் அறிக்கை ஒன்றைக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு வாசித்தார்.அந்த அறிக்கை பிரேரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று தேர்தலைப் பகிஷ்கரிக்கும் முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டதாக அறியவந்தது. எனினும், தேர்தலைப் பகிஷ்கரிக்கும் முடிவுக்குத் தனிப்பட்ட முறையில் கட்சித் தலைவர் அ.விநாயகமூர்த்தி உடன்படவில்லை என்றும் தெரியவருகின்றது. எவ்வாறெனினும் கட்சியின்  செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விருப்பத்துக்கு அமைய பகிஷ்கரிப்பு முடிவு எடுக்கப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் மூலம் அறியவந்தது.

Written by lankamuslim

December 28, 2009 at 3:11 pm

மீண்டும் உருவாகி வரும் பாசிச புலனாய்வு புலி பயங்கரவாதம்

with 2 comments

M. ஷாமில்  முஹம்மட்

* முஸ்லிம்கள் இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை தம் மீது மேலாதிக்கம் செலுத்த முற்படும் ஒன்றாக பார்த்தனர் பார்க்கின்றனர்

* வட்டுக்கோட்டை தீர்மானம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படுவதானது தமிழ் மக்களின் உள்ளங்களில் இருந்து வழுக்கி விழ்ந்து இறுதி கட்ட போரில் நந்திகடல் மூழ்கி விட்ட தமிழ் தேசியம் மீண்டும் அத்திவாரமிடபட்டு அதில் இலகுவாக புலி பாசிச பயங்கரவாதம் கட்டமைக்க முடியும்.

மீண்டும் புலிகள் உருவாகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன” இதன் உண்மை தன்மை ஆராயப்படவேண்டும் புலிகளின் பல இணையத்தளங்கள் மூடப்பட்டு மீண்டும் வேறு பெயர்களில் தீவிரமாக இயங்கி வருகிறது என்பதுடன் புலம் பெயர் நாடுகளில் இவர்கள் நடத்தி வருகிற ஈழத்துக்கான தேர்தல்கள், இளையோருக்கான ஈழ போராட்ட விளக்க வகுப்புகள் ,இரகசிய ஒன்று கூடல்கள் என்பன வற்றை பார்க்கும்போது புலிகள் முனைப்புடன் இருப்பது தெரியவருகிறது என்பதுடன் புலிசார்பு இணையத்தளங்களை இவர்கள் மீண்டும் ஒரு திசை நோக்கி வழி நடத்த முற்படுவதும் தெரிகிறது சில தினங்களுக்கு முன்பு ஒரு புலி சார்பான இணையத்தளம் 24 மணிக்குள் ஈழத் துரோகிகளின் பட்டியல் ஒன்றை தாம் வெளி இடப்போவதாக அறிவித்தது எனிலும் அது வெளியிடப்படவிலை காரணம் புலிகளின் புலனாய்வு பிரிவு தமக்கு தடை விதித்ததாக குறிப்பிட்டது என்பது  நோக்கதக்கது .

இங்கு புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்டு விட்டது என்பது அவர்களின் பாசிச இயங்கும் சக்தி அழிக்க பட்டுவிட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது புலிகள் இறுதி கட்ட போரில் நந்திகடல் பகுதியில் தமது தலைவனுடன் ஆட் பலத்தை, ஆயுத பலத்தை , நில பரப்புடன் நில பலத்தை இழந்து சுமார் மூன்று வருடங்கள் நீடித்த மஹிந்தவின் யுத்தத்தில் முப்பது வருடங்களாக உருவாகிய பிரமாண்டமான பாசிச பயங்கரவாத இராணுவ கட்டுமானம் முற்றாக இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை ஆனால் அவர்களின் பாசிச சிந்தனை இன்னும் பல ஆயிரம் புலம் பெயர் புலிகளிடம் புது முனைப்புடன் இருக்கிறது, உருவாக்கபடுகிறது விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 27, 2009 at 9:21 pm

மீண்டும் உருவாகி வரும் புலிகள்:பலமான தாக்குதல் திட்டம் !

leave a comment »

மீண்டும் உருவாகி வரும்  புலிகள் இலங்கையில் புனர் வாழ்வு  தடுப்பு முகாம் ஒன்றைத்தாக்குவதற்கு  புலம்பெயர் புலிகளால் உருவாக்கப்பட்ட”புதிய புலிகள்” அமைப்பினர்கள் பாரிய திட்டத்துடன்  இருப்தாக தகவல் வெளியாகியுள்ளன   நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பு முகாம்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலிகள்  பலரை கொலை செய்து மாபெரும் மனிதபேரவலத்தை உண்டுபண்ணி நடைபெறவிருக்கும் ஐனதிபதி தேர்தலை குழப்பியடிக்கவும் அந்த பழியை இராணுவத்தினரின் மேல்போட்டு நாட்டை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டுவருவதற்கு பாரிய தாக்குதல் திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. புலிகளின் பல இணையத்தளங்கள் மூடப்பட்டு மீண்டும் வேறு பெயர்களில் தீவிரமாக இயங்கி வருகிறது என்பது குறிபிட தக்கது

Written by lankamuslim

December 27, 2009 at 1:50 am

வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்:

leave a comment »

வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்:

புத்தளம் – மன்னார் வீதி ஜனவரியில் திறப்பு:

அமைச்சர் ரிஷாட்டுக்கு ஜனாதிபதி புகழாரம்:

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களும் மே மாதமளவில் சொந்த இடங்களில் முற்றாக மீள்குடியேற்றப்படுவ ரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு வசதியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு நேற்று 26.12.2009 புத்தளம் ஆலங்குடாவில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:-

முஸ்லிம் மக்களை பணயக் கைதிகளாக வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம்.முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். என்னை முழுமையாக நம்புங்கள். முஸ்லிம்கள் தொடர்பாக என்மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்பட்டன. ஐந்து வேளைத் தொழுகையை நான் நிறுத்தி விடுவேனெனக் கூறினார்கள். இப்போது உண்மை நிலையை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவ்வாறான பொய்களெல்லாம் எதிர்க் கட்சிகளினாலும் அதன் தலைவர்களினாலும் பரப்பப்பட்டவை. அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள். விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 27, 2009 at 1:11 am

முஸ்லிம்களை, அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள குடியமர்த்துவது எனது பொறுப்பு

with one comment

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ:

நேற்று 26.12.2009 புத்தளத்தில் வட மாகாண முஸ்லிம்களை வட மாகாணத்தில் மீண்டும் மீள் குடியமர்த்த எடுக்கப்பட்டும் நடவடிக்கைகளை ஆரமித்து வைக்கும்    நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி  வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களை, அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள குடியமர்த்துவது தமது பொறுப்பு எனவும் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்கள் குடியமர்த்த படுவார்கள் என  தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், வடக்கின் இடம்பெயர்ந்தவர்களின் சொந்த இடங்களில் மாற்று பிரதேசத்தவர்கள் குடியமர்த்தப்படுவர் என யாரும் நம்பவேண்டாம் எனவும், அந்த பிரதேசங்களில் அவ்வாறான குடியேற்றங்கள் எவையும் நிகழாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

December 27, 2009 at 12:57 am

இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்கிறது

leave a comment »

. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சர் ஜெயசுந்தர சீனாவின் வர்த்தக இணை அமைச்சர் சென் ஜியானை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது இந்த நிதி உதவி குறித்து சீனா உறுதி அளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக இலங்கைக்கும்,​​ சீனாவுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இலங்கையில் இன்னும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள்,​​ அதற்கு சீனாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் உதவி ஆகியவை குறித்தும் ஜெயசுந்தர இந்த சந்திப்பின்போது எடுத்துக் கூறினார்.

இலங்கை எதிர்ப்பாக்கும் அனைத்து உதவிகளை செய்ய சீனா தயாராகவுள்ளதாக சென் ஜியான் உறுதியளித்துள்ளார்.​ இந்தச் சந்திப்புக்குப் பின் சீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த சந்திப்பின்போது மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு,​​ நாட்டின் உள்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்துவதற்கும்,​​ மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டுவருகிறது. அதற்கு சீனா   அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Written by lankamuslim

December 27, 2009 at 12:37 am

சிவாஜிலிங்கம் எம்.பி, திருச்சி விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்டார்

leave a comment »

தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.இலங்கை அதிபர் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர்.

சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு செல்ல வேண்டும் என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர் என்று குடியேற்றத்துறை அவருக்குத் தெரிவிக்கவில்லை.இலங்கை அதிபர் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், வெற்றி பெறுவதற்கு தமிழர்களின் வாக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தனி வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பது தேர்தலில் விழும் தமிழர்களின் வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.இதுமட்டுமின்றி, தமிழர்களிடையே  செல்வாக்குப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டணியின் வாயிலாக தமிழர்களின் வாக்குகளை அதிபர் ராஜபக்சவுக்கு சாதகமாக திருப்புவதில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த திட்டத்திற்கு எதிராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பதாலும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் அவர் கலந்துகொள்வது அவருக்கு ஆதரவாக தமிழர்களின் வாக்குகளை ஒன்று சேர்க்கும் என்று கருதப்பட்டதாலும் அவரை மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Written by lankamuslim

December 27, 2009 at 12:34 am

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடு கடந்த அரசுக்கு டாட்டா காட்டுமா ?

leave a comment »

பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்றும் தொடர்ந்து பேச்சுகள் நடைபெற்றன. இங்கு பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன் ஆகியோர் எதிரணித் தரப்பில் பங்குபற்றியுள்ளனர் . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் இப்பேச்சுகளில் கலந்துகொண்டுளளனர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கி, அவர் அத்தேர்தலில் வெற்றிபெற்றால், அவரது அரசு தமிழர் விடயத்தில் கைக்கொள்ளக்கூடிய உள்நாட்டுக்குள் உருவாகும் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக இந்தப் பேச்சுகளில் ஆராயப்பட்டதாகத் தெரிகின்றது இவற்றில் விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 26, 2009 at 12:54 pm

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 02

leave a comment »

புன்னியாமீன் B.A (cey), Dip in Journ (Ind), S.L.T.S

இலங்கையில் ஜனாதிபதிப் பதவி பதவிக்காலத்துக்கு முன் வறிதாகினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன் வறிதாகினால் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் 37ம் உறுப்புரை, 40ஆம் உறுப்புரை போன்றவற்றிலும் 1981ஆம் ஆண்டு 2ம் இலக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) சட்ட மூலத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 37ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தியில் ஜனாதிபதிக்குரிய தத்துவங்களும், கடமைகளும், பணிகளும் பிரதமரினால் பிரயோகிக்கப்படுதலும், புரியப்படுதலும், நிறைவேற்றப்படுதலும் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுகவீனம் காரணமாக, இலங்கையில் இல்லாமை காரணமாக அல்லது வேறேதும் காரணமாகத் தமது பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பாரெனக் கருதுவாரெனில் அத்தகைய காலத்தின்போது ஜனாதிபதி என்ற பதவியில் பிரதமரை ஜனாதிபதி என்ற பதவிக்குரிய தத்துவங்களையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அவர் (ஜனாதிபதி) நியமிக்கலாம் என்பதுடன் விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 26, 2009 at 11:45 am

மீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் -பாகம் 15

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்


‘இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனதும் அவரது சகபாடிகளினதும் சகுனி அரசியல் குறித்து முஸ்லிம்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்’

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கெதிரான -தனித்தமிழ் கோஷத்தை – முன்வைத்து நடத்தப்பட்ட தேர்தலுக்கு எதிராக கிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்தனர் என்பதை நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அதில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலில் முஸ்லிம் தேசத்தை பற்றிய “கிழக்கிஸ்தான்”  கோரிக்கை எவ்வித  முகாந்திரமுமின்றி வெறும் கவர்ச்சி கோசமாக முவைக்கப்பட்டதை தமிழர்களோ  முஸ்லிம்களோ கண்டு கொள்ளவில்லை. அதற்கான நிர்பந்தங்கள்  எதுவும் அன்று காணப்படவுமில்லை. மாறாக பதியுதீன் மஹ்மூத் அவர்களும்  ராஜன் செல்வநாயகமும் சிறீலங்கா சுதந்திரகக்ட்சியில் ஒரே தேர்தல் தொகுதியில்  தங்களது சமூகங்களை தனித்தனியாக முன்வைத்து தேசிய அரசியலை முன்னெடுத்தபோதும் தமிழ்  மக்களும் ஏறாவூர் முஸ்லிகளும் அதிகளவில் அன்று ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மறைந்த டாக்ட்ர். பரீத் மீராலெப்பைக்கு வாக்களித்தனர். இந்த தேர்தலில் அதிக வன்முறைகள் இடம்பெற்றன என்பதுடன்  காத்தான்குடியில் சத்தார்  என்பர் கொடூரமாக வாளினால் வெட்டப்பட்டார்.விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 26, 2009 at 1:13 am

ரிசானாவின் மேல்முறையீடு விசாரணைக்கு வருகின்றது. மொழிபெயர்பாளரை மாற்ற உத்தரவு.

leave a comment »

http://cache.daylife.com/imageserve/0c5EaG32Hg6mI/610x.jpg

parents of Rizana Nafeek

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான ரிசானா நௌபீக் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அந்த நாட்டின் நீதியரசர் அப்துல்லா அல் ரசீம் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ரிசானாவின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்த இந்திய மொழிபெயர்ப்பாளரை நீக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மன்றில் ரிசானா நௌபீக் மற்றும் அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்த இரு பொலிஸாரும் ஆஜராகியிருந்தனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நீதிமன்றில் ஆஜராகிவந்த இறந்தகுழந்தையின் தந்தை இம்முறை மன்றில் ஆஜராகி இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 25, 2009 at 11:32 am

வந்தேமதரம் பாடலை தொடர்ந்து பாடுவேன் என்று அடம் பிடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான்

leave a comment »

இசை மதங்களை, வேறுபாடுகளை, வெறுப்புகளை கடந்த ஒன்று என்று கூறுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.வந்தேமாதரம் பாடலை இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த ரஹ்மான் பாடியது தவறு என்றும்  முஸ்லிம்கள் இந்த பாடலை பாடுவது ஷிர்க் என்றும்      பல  இஸ்லாமிய அமைப்புகள்  கண்டித்தது குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இந்தியாவின் தேசிய பாடலான வந்தேமாதரம் பாடலை இந்திய சுதந்திரப் பொன்விழாவின் போது வெளியிடப்பட்ட ஒரு இசைத் தொகுப்பில் உணர்சிகரமாக பாடியிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலை தான் தொடர்ந்து பாடிவருவதாகவும்  தெரிவித்தார்.

இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாமிய கோட்பாடுக்கு எதிராக இருப்பதாகவும் இதை முஸ்லிம்கள் பாடக் கூடாது என்றும் இந்திய உலமாக்கள் சபை  என்ற இஸ்லாமிய  அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தமை சர்ச்சையை கிளப்பியிருந்தது.வந்தேமாதரம் பாடலை பாடுமாறு யாரும் தன்னை அப்போது நிர்பந்திக்கவில்லை என்றும், அதே போன்ற நிலை தொடர வேண்டும் என்றும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒவ்வொருவரின் மத நம்பிக்கைகளும் அது தொடர்பிலான புரிதல்களும் மாறுபட்டவை என்றும் அவை மதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார் .தான் இப்போதும் தனது இசை நிகழ்சிகளை நிறைவு செய்யும் முன்பாக இந்தப் பாடலை பாடுவதாகவும் அவர் கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் பிரபல்யமான ஆங்கில  பாடகர் லூன்னிடம் பாடம்  படிக்கட்டும்

லூன் ( AKA LOON) என்ற மிகவும் பிரபல்யமான பாடகர் இசையின் ஹராமான பகுதிகளை முழுமையாக ஒதுக்கி விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கிறித்தவ வாலிபர் இவரிடம்  ஏ.ஆர். ரஹ்மான் படிப்பினை பெறவேண்டும்

Written by lankamuslim

December 25, 2009 at 1:48 am

பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

leave a comment »

எதிர்க்கட்சிகளின் பொது   வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்ற இந்த பேரணியில் அரசாங்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட இலங்கை அரசாங்கத்தை காட்டிக்கொடுக்க ஜெனரலுக்கு வெட்கம் இல்லையா? ஐக்கிய தேசிய கட்சிக்கு வெட்கம் இல்லையா என எழுதப்பட்ட பாதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.இராணுவத்தை காட்டிக்கொடுத்த சரத் பொன்சேகா, தேசத்துரோகி பொன்சேகா, ஸ்ரீலங்காவை சர்வதேச சக்திகளுக்கு அடகுவைக்க முற்படும் பொன்சேகா என ஆர்ப்பாட்டக்கார்கள் கோசங்களை எழுப்பினர்.மேல் மாகாணசபை ஆளுநர் அலவி மெளலானா உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Written by lankamuslim

December 25, 2009 at 1:18 am

அல்-அக்ஸா எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தல்

leave a comment »

மர்லின் மரிக்கார்

இஸ்லாத்தை ஏற்று விசுவாசிக் கின்ற ஒவ்வொரு முஸ்லிமுக் கும் அல்- அக்ஸா புனித தலமாகும். அது இறை நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்ட புனித தலமே யன்றி நிலம் சார்ந்ததல்ல. அதனால் அல்-அக்ஸா முழு முஸ்லிம் உம்மாவுக் கும் சொந்தமான ஒன்றாகத் திகழுகின் றது. மாறாக இது பலஸ்தீனர்களுக்கு மாத்திரமுரிய ஒன்றல்ல.

சர்வ வல்லமை படைத்த அல்லாஹுத ஆலாவை வணங்கி வழிபடவென பூமியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது மஸ்ஜிதே அல்- அக்ஸாவாகும். இது மக்கா நகரிலுள்ள கஃபாவுக்கு அடுத்த படியாகவே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது கஃபா நிர்மாணிக்கப்பட்டு நாற்பது வருடங்கள் கழிந்த பின்னரே அல்- அக்ஸா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல இறைத்தூதர்கள் வழிபட்டி ருக்கின்றார்கள்.

இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலி ருந்து அல்-அக்ஸா வுக்கு, ‘இஸ்ரா’ பயணம் மேற்கொண்டிருக்கின்றார்கள் விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 25, 2009 at 1:05 am

கல்முனை பிரதேசத்தில் 7500 குடும்பங்கள் பாதிப்பு

leave a comment »

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் 7500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தெளபீக் தெரிவித்தார்.

கல்முனை இஸ்லாமாபாத், கல்முனைக்குடி, மருதமுனை போன்ற தாழ் நிலப் பிரதேசங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பிரதேச மக்கள் இடம்பெயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளரைப் பணிந்துள்ளதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பதில் பிரதேச செயலாளர் எம். ஐ. எம். தெளபீக் மேலும் தெரிவித்தார்.

தற்போது மழை ஓய்ந்து ஓரளவு சீரான காலநிலை நிலவி வருவதால் வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வருவது குறிப் பிடத்தக்கது.

Written by lankamuslim

December 25, 2009 at 12:58 am

அபூபக்கர் (றழி) அவர்களை முஸ்லிம்கள் கிலாபத்தின் ஆட்சி தலைவராக நியமித்தபோது

leave a comment »

அபூபக்கர் (றழி) தனது பதவியேற்பு உரையில்:

“உங்களின் பொருப்பாளனாக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.  நான் உங்களைவிட மேலானவன் அல்ல. உங்களின் விடயத்தில் நான் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் போதெல்லாம் எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நான் அவனுக்கு மாறு செய்தால் என்னை திருத்திவிடுங்கள்” என அனைவரையும் வேண்டிகொள்கிறேன் என்றார்கள்

Written by lankamuslim

December 24, 2009 at 1:33 pm

Posted in ஹதீஸ்

மஹிந்த சிந்தனையின் இரண்டாம் கட்ட கொள்கைப் பிரடகடனம்

leave a comment »

மஹிந்த சிந்தனையின் இரண்டாம் கட்ட கொள்கைப் பிரடகடனம் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரமாளவில் குறித்த சிந்தனைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வெளியிடப்படும் என ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.நாடு முழுவதனையும் உள்ளடக்கிய பாரிய அபிவிருத்தித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர் வடிகாலமைப்பு, பெருந்தெருக்கள், விவசாயம், உள்ளிட்ட பல துறைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.மஹிந்த சிந்தனையின் இரண்டாம் கட்டத்தின் அடிப்படையில் நாட்டின் சகல மக்களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட உள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

December 24, 2009 at 12:43 pm

மட்டு, அம்பாறை மாவட்டங்களில் வெள்ளம்; 23,000 குடும்பங்கள் பாதிப்பு

leave a comment »

அம்பாறை மாவட்ட த்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக இம் மாவட்டத்தில் 23, 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அம்பாறை அரச அதிபருக்கு வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 150 குடும்பங்கள் இடம் பெயர்ந்து ள்ளன. அக்கரைப்பற்று பிரதேச செய லாளர் பிரிவில் 1800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 200 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவில் 1400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 70 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

Written by lankamuslim

December 24, 2009 at 12:27 am

இஸ்ரேல் துருக்கிய வான்பரப்பில் அத்துமீறினால் ஒரு பூகம்பத்தை எதிர்கொள்ளவேண்டும்

leave a comment »

இஸ்தான்புல் – இஸ்ரேல் துருக்கியின் வான்பரப்பைத் துஷ்பிரயோகம் செய்ய முற்படுமாயின் தமது நாடு எடுக்கும் எதிர்நடவடிக்கை ஒரு பெரும் பூகம்பமாய் வெடிக்கும் என்று துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் கடுமையாக எச்சரித்துள்ளார். துருக்கியுடனான கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, அண்மையில் ஈரானை உளவுபார்க்கும் பொருட்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் துருக்கிய வான்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்தமை தான் காரணம் என்று சொல்லப்படும் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி எகிப்திய ஊடகவியலாளர் ஃபஹ்மி ஹுவைதி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்குமுகமாகவே அர்தூகான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 23, 2009 at 2:27 pm

எந்த வழியால் நுழைந்து எந்த வழியால் வெளியேற …? முஸ்லிம் அரசியல் நடப்புகள்.

leave a comment »

எஸ் எம்.எம்.பஷீர்

1989 பொதுத்தேர்தல் கூட்டங்களில் “சிங்கள பேரினவாதம்” “ தமிழ் பேரினவாதம்” ஆகியவற்றிற்கெதிராக முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரச்சாரங்கள் முஸ்லிம் காங்கிரசின் மேடைகளில் அதிகளவில் முடுக்கிவிடப்பட்டன. இலங்கயின் பிரதான கட்சிகளில் அங்கத்துவம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் உறுப்பினர்களின் குற்றங்கள் மேடைகளில் சிலாகித்துபேசப்பட்டன ; முஸ்லிம் காங்கிரசின் அரசியல் யாப்பு குர்ஆண் ஹதீஸ் என்பவற்றின் அடிப்படையில் தான் செயற்படும் என்று பாமர முஸ்லிம் மக்களினை மதத்தினூடாக உள்வாங்கும் தமது அரசியல் பிரவேசத்துக்கு சுருதி சேர்க்கும் செயற்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பிரச்சாரங்களை முன்னெடுத்தது. முஸ்லிம் மத நம்பிக்கையின் அடிப்படைக்கு சில முஸ்லிம் அமைச்சர்கள் எதிராக செயற்படுகிறார்கள் விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 23, 2009 at 1:41 pm

இலக்கியச் சந்திப்பின் 32வது தொடரில் முஸ்லிம் அடையாளம் பற்றி எஸ். எம். எம். பஷீர்

leave a comment »

ஒரு கடந்த பார்வை:

புகலிட இலக்கியச் சந்திப்பின் 32வது தொடர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம், 13ம் திகதிகளில் பாரிஸில் நடை பெற்றது. காலை தொடங்கி இரவு வரை இரண்டு நாட்களும் நிறைந்த கூட்டத்துடன் உரைகள், கலந்துரையாடல்கள் என்று நடைபெற்றது. இங்கு “முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி” என்ற தலைப்பில்

எஸ். எம். எம். பஷீர்:
முஸ்லிம் மக்கள் என்று சொல்லுகின்ற பொழுது இவர்கள் ஒரு தேசிய இனமா? அல்லது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மாத்திரம்தான் ஒரு தேசிய இனமா? அல்லது முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்குட்பட்ட வெறும் குழுவா?  விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 23, 2009 at 1:38 pm

முஸ்லிம்களின் உரிமைகளும் வேற்பாளர்களின் வாக்குறுதிகளும்!!

leave a comment »

எம்.சஹாப்தீன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையே கடும் பலப்பரீட்சை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் தேர்தலில் சிறுபான்மையினன் வாக்குகள் இவ்விருவரில் எவருக்கு அதிகம் அளிக்கப்படுகின்றதோ அவரே வெற்றி பெறுவார் என நம்பப் படுகிறது. சிறுபான்மையினன் வாக்குகள்தான் தமக்கு வெற்றியைத் தேடித்தரப் போகின்றதென்பதனை உணர்ந்தவர்களாகவே இந்த இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் உள்ளார்கள் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால், வெற்றிபெற்ற பின்னர் எந்தளவுக்கு சிறுபான்மையினரின் குறிப்பாக, முஸ்லிம்களின் உரிமைகள், அதிகாரங்கள் பலப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கலே சிறந்ததென்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கமைய இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. அவற்றிற்கான அதிகாரங்களும் வழங்கப்பட்டன.விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 23, 2009 at 12:20 pm

இந்திய அரசாங்கம் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

leave a comment »

வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வடக்கு பகுதியின் புகையிரத சேவையை புனரமைக்கும் முகமாக இந்திய அரசாங்கம் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் இந்த நிதியுதவி குறித்து அறிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியுதவியின் கீழ் ஓமந்தை முதல் பலாலி வரையிலான புகையிரத பாதையில், வரையறுக்கப்பட்ட இந்திய ரெயில்வே கொன்ஸ்டக்சன் நிறுவனம், நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது.இந்தியா,வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தமது முதலீடுகளையும் அதிகரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

December 22, 2009 at 9:15 pm

மீண்டும் கூடிய த.தே.கூட்டமைப்பு தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை

leave a comment »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இன்று ஆராய்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை. நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில், இந்த சந்திப்பு இன்று, முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்றது.இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களும் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.

இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.இதனையடுத்து எதிர்வரும் 4 ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்வதென்றும் அதுவரையில் மீண்டும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும்

Written by lankamuslim

December 22, 2009 at 9:05 pm

என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

with 2 comments

பிரித்து செதுக்கியவர்  M. ஷாமில் முஹம்மட்

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி
வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!
களப்பலியாய் போனவர் போகட்டும்

ஆனால்..
சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்
உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!

கவிபாடும் தமிழ் சொல்லாலே
முஸ்லிம்களை தமிழீழத் துரோகிகள் என பாடி புலியெனப் பாய்ந்த
புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!

“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து
ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து
புலிப் பாசறை புகுந்து முஸ்லிம்கள் ஈழத்தின் கேன்சர் என போதித்த
அந்த அரசியல் வித்தகன் பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!

விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 22, 2009 at 2:02 pm

வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

leave a comment »

என் சபேசன்

கலந்தரையாடலில் கருத்து வெளியிட்ட என் சபேசன் முஸ்லிம்கள் தனியான தேசம் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இலங்கையில் சிங்களம் தமிழ் என்ற இருதேசங்களே உள்ளதாகவும் கருத்து வெளியிட்டார். அப்போது குறுக்கிட்ட ராகவன் அவ்வாறே சிங்களத் தலைமைகள் தமிழர்கள் ஒரு தனியான இனம் இல்லை எனக் கருதுவதாகத் தெரிவித்தார். என் சபேசனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாசில் பாலன் தேசிய இனங்களை வரையறுப்பது என்பது ஸ்ராலினின் வரையறைகளைக் கடந்து வரவேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன்னைத் தனித்துவமான இனமாக உணருமானல் அவர்கள் தனித்துவமான இனமாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பழங்குடிகள் இன்று அவ்வாறே உணருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சபா நாவலனும் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் தேசியம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இருந்துள்ளது எனத் தெரிவித்த த ஜெயபாலன் அது புலித் தேசியமாக ஆக்கப்பட்டு அதிலேயே புலிகள் ஊன்றி நின்றனர் என்றும் புலிகளின் தோல்வி என்பது அவர்களுடைய தோல்வி மட்டுமல்ல அவர்கள் ஊன்றி நின்ற தமிழ் தேசியத்தினதும் தோல்வியாகவே அமையும் என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 22, 2009 at 11:49 am

பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்

leave a comment »

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி கோரிக்கை:

கடந்த மே மாதம் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின் போது மூன்று சிரேஷ்ட விடுதலைப்புலி உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் மரணமடைந்த சூழ்நிலை குறித்து விளக்கமளிக்குமாறு நீதி விசாரணையற்ற கொலைகள் அல்லது தன்னிச்சையான மரண தண்டனை நிறைவேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் இளைப்பாறிய ஜென ரல் சரத் பொன்சேகா டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வெளியான ஆங்கில வாரப்பத்திரிகையான சண்டே லீடருக்கு அளித்த பேட்டி ஒன்றில் மேற்படி கொலைகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டியதை அடுத்தே அது பற்றி விளக்கம் கோரப்படுவதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

December 22, 2009 at 11:11 am

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் யுவதியொருவரை காணவில்லை

leave a comment »

குருநாகல் குளியாப்பிட்டிய தும்மலசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் யுவதியொருவர் காணாமற் போயிருப்பதாக பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு குளியாப்பிட்டிய பொலீஸ் நிலையத்தில் நேற்றையதினம் செய்யப்பட்டுள்ளது. காணாமற் போனவர் தும்மல சூரிய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் யுவதியான 17வயதானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி

Written by lankamuslim

December 21, 2009 at 11:36 pm

மூன்றாக பிளவுபட்டுள்ள தமிழ் கூட்டமைப்பு?

leave a comment »

நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது, யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டுள்ளது.இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்த கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு முக்கிய பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது.இன நெருக்கடி தொடர்பாகவும், அதற்கான அரசியல் தீர்வு தொடர்பாகவும் இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 21, 2009 at 8:14 pm

புலிகளிடையே ஏற்பட்ட பிளவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை:அலி சாகீர் மௌலானா

leave a comment »

2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை என அமெரிக்காவில் தங்கியிருந்து நேற்று நாடு திரும்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மௌலானா வலியுறுத்திக் கூறுகின்றார். விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்ட பின்பு தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அந்நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளிறே வேண்டியிருந்ததாகவும்,ஆனால் தற்போது அப்படியான சூழ்நிலை இல்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

தான் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என பலரும் எதிர்பார்ப்பதால்,ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அலி சாகீர் மௌலானா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ” 2006 ஆம் ஆண்டு எனக்கு அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் ஏற்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி என்னை தனிமைப்படுத்தி விட்டது.இதனால் தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

2007 ஆம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னைச் சந்தித்து நாடு திரும்பி மீண்டும் அரசியலில் ஈடுபடுமாறும், பாதுகாப்பான நிலை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.அத்துடன் இலங்கை தூதராலயத்தில் உயர் பதவியொன்றையும் வழங்கியிருந்தார்”என்றார். விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தியது தமது கட்சியே என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருவது பற்றி அவரிடம் கேட்ட போது,

“ஐக்கிய தேசிய கட்சி செயலாளர் இதில் என்னை தொடர்புபடுத்திக் கூறியிருப்பது எனக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல அது அவர்களினது அரசியல் நோக்கத்தை கொண்டது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தற்போதைய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் அன்று பிரிந்திருந்தார்.இந்தப் பிரிவுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.அன்று மோதல் தவிர்ப்புக்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டோமே தவிர விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படவில்லை. அது ஒரு மனிதாபிமான நடவடிக்கையே ” என்று பதிலளித்தார் அலி சாகீர் மௌலானா. இதற்கிடையில் நேற்று நாடு  திரும்பியதும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி

Written by lankamuslim

December 21, 2009 at 5:52 pm

மீள்பார்வை பத்திரிகையின் கவனத்திற்கு எமது பணிவான வேண்டுகோள்

with 2 comments

.

Lankamuslim-ED-Groups:

lankamuslim-ED-Groups இன் பணிவான வேண்டுகோள் உங்களின் பத்திரிகை மீள்பார்வை (இதழ் 187 இல் 11 டிசம்பர் வெள்ளிக் கிழமை வெளியான ) பத்திரிகைலும் , உங்களின் இணையத்தள இதழிலும் “புதுமுணைப்புடன் உருவாகி வரும் மேலாதிக்க போட்டி இலங்கை முஸ்லிம்களை நேரடியாக பாதிக்குமா? ” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது இந்த கட்டுரை M. ஷாமில் முஹம்மட் Lankamuslim-ED-Groups இன் குழுமத்திக்கு எழுதி இணையத்தள குழுமத் தளயங்களில்  டிசம்பர் 3 ம் திகதி வெளியானது இந்த கட்டுரை உங்களின் இதழ்களில்  தணிகைகளுடன் வெளிட்டதுடன்   M. ஷாமில்  முஹம்மட் என்ற பெயரையும் முன் எழுத்துகளுடன்  முறையாக குறிபிடவில்லை என்பதுடன் எமது  இணையத்தள பெயரும் குறிபிடபட வில்லை  இது பற்றி M. ஷாமில்  முஹம்மட் உங்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக எம்மிடம் கூறினார் எனவே தயவு செய்து “மீள்பார்வை” தான் மீள் பார்வை இடும்போது இவற்றை கவனத்தில் கொள்ளுமாறு மிகவும் பணிவாக நாம் வேண்டுகிறோம். எமது இணையத்தளயங்களில் வெளியாகும் ஆக்கங்களை முழு விபரங்களுடன்  தாராளமாக எவரும் மீள் பதிவேற்ற முடியும்  என்பதையும் குறிபிட விரும்புகிறோம்

Written by lankamuslim

December 21, 2009 at 11:42 am

அலிஸாஹிர் மெளலானா நேற்று நாடுதிரும்பினார்

leave a comment »

நாடுதிரும்பிய  ஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா நேற்று நண்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.

அலிஸாஹிர் மெளலானா நேற்றுக் காலை 8.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் வைத்து அலிஸாஹிர் மெளலானாவை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஆளுநர் அலவி மெளலானா உட்பட மட்டு. மாவட்டத்திலுள்ள அவரது ஆதரவாள ர்களும் ஒன்று சேர்ந்து வரவேற்றனர்.

இதன்பின் அலரிமாளிகை சென்ற அலிஸாஹிர் மெளலானா ஜனாதிபதியை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அலிஸாஹிர் மெளலானா தீர்மானித்து ள்ளார்.

Written by lankamuslim

December 21, 2009 at 2:51 am

A-9 தனியார் வாகனங்கள் இன்று முதல் பாதுகாப்பு அனுமதி பெறத் தேவையில்லை

leave a comment »

கொழும்பிலிருந்து யாழ். நகருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் ஏ-9 பாதையூடாக பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் வாகனங்கள் இன்று திங்கட்கிழமை முதல் எந்தவித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ இந்த அறிவித்தலை விடுத்தார்.

Written by lankamuslim

December 21, 2009 at 2:47 am

கல்முனை வடக்குக்கு ஒரு செயலாளர், தீர்மானம் திரும்பப்பெறப்பட்டுள்ளது

leave a comment »

கல்முனை வடக்குக்கு ஒரு செயலாளரை நியமிக்கவேண்டும் என்ற ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் ஒன்று, கடந்த 16 ஆம் திகதி அமைச்சர் பேரியல் அஸ்ரப் எதிர்த்தமையை அடுத்து திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனையில், கல்முனை வடக்குக்கு ஒரு செயலாளர் நியமிக்கப்படுவாராக இருந்தால் அது முஸ்லிம்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தும் என பேரியல் அஸ்ரப் தெரிவித்தமையை அடுத்து அந்த முடிவு திரும்பப்பெறப்பட்டுள்ளது. கருணாவின் ஆலோசனைப்படி புதிய கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்படும் போது 27 ஆக இருந்த கிராமசேவையாளர் பிரிவுகள் 29 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Written by lankamuslim

December 20, 2009 at 3:20 pm

ஏ-9 வீதியூடாக பயணம் செய்வதற்கு இனி வாகனங்களுக்கும் பாதுகாப்பு அனுமதி தேவையில்லை

leave a comment »

பஸில் ராஜபக்க்ஷ நேற்றுத் தெரிவிப்பு:

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 பாதை யூடாக பயணம் மேற்கொள்ளும் போது மக்களின் வாகனங்கள் நாளை திங்கட்கிழமை தொடக்கம் எந்தவித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவை இல்லை. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான ஜனாதிபதி செயலணி யின் தலைவருமான பஸில் ராஜபக்ஷ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்ற உறுப் பினர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகை யில் அவர் இப்படிக் கூறினார்.

வடக்கில் இருந்து கொழும்பு வந்த வர்கள் எந்தவித பதிவுகளையோ அல்லது அது தொடர்பான நடைமுறைகளையோ இனிமேல் மேற்கொள்ளாமல் மீண்டும் அங்கு பயணத்தை மேற்கொள்ளலாம் என் றும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அனுமதி  (கிளியரன்ஸ்) பெறும் நடைமுறை கடந்த மாதம் முழுமையாக நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் ஏ 9 பாதையூடாக சுதந்திரமாகப் பயணம் மேற்கொண்டு வருவது தெரிந்ததே

Written by lankamuslim

December 20, 2009 at 3:00 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,701 other followers