Archive for November 28th, 2009
யாழ்ப்பாண முஸ்லிம்கள் சம்மந்தமாக எம் . ஷாமில் முஹம்மட் ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறப்பு கட்டுரை
by M.Shamil mohamed
Ever memorable and Never forgettable painful memory of Jaffna muslims என்ற தலைப்பில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் 20 வருடங்களுக்கு முன்பு மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள் என்றும் . பயங்கரவாதம் அவர்களை நாசப்படுதிய முறை பற்றியும் , யாழ்ப்பாண முஸ்லிம்கள் 20 வருடங்களாக அரசியல் ரீதியாக புறகணிக்கப் பட்டுள்ளனர் என்றும் அவர்களின் இழப்புகள் , அவர்களின் தற்போதைய நிலை பற்றியும் அவர்கள் புத்தளத்தில் 28 முகாம்களில் 7200 குடும்பங்களைச் சேர்ந்த 30000 க்கும் அதிகமான அகதிகளாக வாழ்கிறார்கள் என்றுகுறிபிடுகிறார் இவர் எழுதியுள்ள இந்த கட்டுரையை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்
ஜனாதிபதி தேர்தலும் வேட்பாளர்களும்
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையா ளர் தயானந்த திஸாநாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் ஏற்றுக்கொள் ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கமையவே ஜனவரி 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறும் என்று தயானந்த திஸாநாயக்கா நேற்று அறிவித்திருக்கிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராகத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடவிருக்கின்றமை தெரிந்ததே. அத்துடன் இடதுசாரி முன்னணித்தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவும் தேர்தல் களத்தில் குதித்திக்கவுள்ளார். இதேவேளை வடக்கு கிழக்குத் தமிழர் தரப்பு குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இன்னமும் விடை கிடைக்காத நிலையில், தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் சில வட்டாரங்களில் ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதியில் மழை வெள்ளம் 80பேர் சஹீதாகினர்
புனித ஹஜ் யாத்திரை கடைசி நாளான நேற்று முன்தினம் மக்காவில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள செங்கடல் பகுதியில் உள்ள ஜித்தா நகரில் பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழை வெள்ளத்தில் சிக்கி ஹஜ் பயணிகள் 80பேர் சஹீதாகினர். இவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தகவலை ஜித்தா சிவில் பாதுகாப்பு தலைவர் கேப்டன் அப்துல்லா அல்-அமீர் தெரிவித்துள்ளார். மெக்கா நெடுஞ்சாலை சேதமடைந்ததால் அதில் வாகனங்கள் செல்ல முடிய வில்லை. எனவே அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வாகனங்களும், மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.










