Archive for November 23rd, 2009
இலங்கையில் லக்க்ஷர் – இ – தொய்பா இயக்கம்
- லக்ஷர் – இ – தொய்பா இந்த கதையை எழுதியவர் முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இந்த கதைக்கு உயிர் கொடுப்பவர் கே.சி வர்மா இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ வின் இன்றைய பணிப்பாளர்.
- தனது மேலாதிக்க பிடியை நழுவாது பாதுகாக்க காரணம் தேடி கதை சொல்கிறது இந்தியா.
M. ஷாமில் முஹம்மட்
இலங்கை கிழக்குப்பகுதியில் லக்ஷர் – இ – தொய்பா இயக்கம் இயங்கிவந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. 1990 களில் இருந்து செயற்படும் இவ் அமைப்பு பொஸ்னியா மத்திய ஆசிய குடியரசு செச்சினியா மற்றும் தாஜகிஸ்தானில் இதுவரை இயங்கிவந்ததாகவும் , சிலகாலத்துக்கு முன்னார் இது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இயங்கி வந்ததாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து விட்டது இப்போது இந்தியா இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் தொடர்ந்தும் வைத்திருக்க காரணம் தேடுகிறது, தேடவேண்டும் அதற்கு உருவாக்க பட்ட கதைதான் லக்ஷர் – இ – தொய்பா இந்த கதையை எழுதியவர் முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இந்த கதைக்கு உயிர் கொடுப்பவர் கே.சி வர்மா இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ வின் இன்றைய பணிப்பாளர் என்று நம்பப்படுகின்றது.
இந்தியா இலங்கை இனப் பிரச்சினையை பயன்படுத்தி, இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது அதுதான் இந்திய இலங்கை உறவு முறை . இதுவே இலங்கையின் , கடந்த 50 வருட கால வரலாறுமாகும் . இதன் பின்னணியில் இந்தியா தமிழீழக் இயக்கங்களுக்கு பயிற்சி , ஆயுதம் மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய ஆதிக்க நலனுக்கு ஏற்ற கூலிக் படையாக உருவாக்கி வந்திருகிறது
புலிகளின் ஆரம்ப கால கட்டத்தில் இந்திய எதிர்பார்ப்புக்கு எதிராக புலிகள் இயக்கம் தம் மேலாதிக்கத்தை நிறுவும் வகையில், இந்தியா சார்புக் தமிழின போராட்ட அமைப்புகளை அழித்தது. இதன் விளைவாக, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கம் தளர்வடைன்தது என்று குறிப்பிடலாம்
எம்பதுகளில் இலங்கை அரசு புலிகள் மீதான தாக்குதலினால், புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய இந்தியா அதை தமிழின அழிப்பாகக் சித்தரித்து காட்டியது. இதன் மூலம் நேரடியான ஆக்கிரமிப்பை நடத்தி தன் மேலாதிக்கத்தை நிறுவமுனைந்தது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் அரசின் சிறப்பான காய் நகர்த்தலினால் இந்தியா தோல்வியை தழுவியது. இப்படி இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலனை, இலங்கையில் தான் விரும்பியவாறு இந்தியா ஏற்படுத்த முனைத்து வருகிறது
இலங்கையில் பாகிஸ்தானிய, சீனத் தலையீடு, இந்தியாவுக்கு சவாலாகவே மாறிவருகிறது இப்படி இலங்கையில் பாகிஸ்தான, சீனாவின் மேலாதிக்கம் உருவாவதைத் தடுக்கவும், தன் மேலாதிக்கத்தை உருவாக்கவும், இலங்கை அரசக்கு உதவுகின்றது. இந்தியா 900 கோடி ரூபாவை இலங்கைக்கு ஆயுதம் வாங்க வழங்கியமையும், 500 கோடி ரூபாவை முகாம்களுக்கு வழங்கியயமையும் இதற்கு உதரணமாகும் இப்படி தன் பிராந்திய மேலாதிக்கத்தை இலங்கைக்குள் திணிக்க , இந்தியா புலிகளுக்கு எதிரா யுத்தத்தை தமிழ்நாட்டு தமிழர்களின் எதிர்பையும் மீறி ஆதரித்தது
இந்தியாவின் பிராந்திய , நோக்கங்கள் அனைத்தையும் மீறி , இன்று சீனாவின் பாகிஸ்தானின் தலையீடு இலங்கையில் அதிகரித்துள்ளது . யுத்தம் முடிந்து விட்டது இப்போது இந்தியா இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க காரணம் தேடுகிறது அதில் ஒன்றுதான் இந்த கிழக்கு இலங்கையில் லக் ஷர் – இ – தொய்பா
சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது அது இந்தியாவுக்கு நல்லதாக இருக்காது, அவர் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தோழமையாக செயல்படுவார் என இந்தியாவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது . இதனால்தான் சரத் பொன்சேகாவின் எழுச்சியை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதவிர, இலங்கை . இந்தியாவில் எதிரிகளான சீனா, பாகிஸ்தானுடன் சமீப காலமாக மிகவும் தோழமையாக உள்ளது இவைகள் இந்தியாவை அச்சம் அடைய செய்துள்ளது ஆகவே தனது மேலாதிக்க பிடியை நழுவாது பாதுகாக்க காரணம் தேடி கதை சொல்கிறது இது ஒன்றும் புது கதையள்ள இந்த கதையை முன்பு இரண்டு தடவைகள் கூறியுள்ளது
இந்திய உளவு நிறுவனமான றோ’ வின் ஈ என் டி எல் எப் என்ற ஒரு அமைப்பு உண்டு இதில் நம் நாட்டு தமிழ் வாலிபர்கள் 500 பேர் வரை உள்ளனர் இந்த அமைப்பு றோ’ வின் கட்டுபாட்டில் பரந்தன் ராஜன் என்பவரின் தலைமையில் இந்தியாவில் இயங்குகிறது என்று தெரிய வருகின்றது , இந்த அமைப்பு 1987 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு நிறுவனமான ‘றோ’ அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
ஈ.என்.டி.எல்.எப்பை பயன்படுத்தி மீண்டும் தலையிட இந்திய வகுத்துள்ள புதிய உபாயமாக இது இருக்க முடியும் பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு இன்று வெளியிடப்படும்
எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு இன்று திங்கட்கிழமை நள்ளிரவில் வெளியாகும் என்று தெரிய வருகிறது. பெரும்பாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னர் தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் சம்மேளனத்தில் அறிவிக்கப்படவில்லை. அதேவேளை கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைப்பாளர்களை சந்தித்து பேச்சு நடத்திய ஜனாதிபதி விரைவில் பிரதான தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு கோரியிருந்தார். அதனையடுத்தே இன்று திங்கட்கிழமை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது
வீரகேசரி
SLMC பொது வேட்பாளர் பற்றி இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை

முன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். முன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் பிரச்சனைகள் ,மற்றும் பொது விடையங்கள் குறித்து கலந்துரையாடி உடன்பாடு ஒன்று எட்டியபின்னர் அவரை ஆதரிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் இதுவரையில் பொது வேட்பாளர் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிய வருகிறது .









