சரத் பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தில் குறிபிடபட்ட சிறு பான்மை மக்களுடன் சம்மந்தப்பட்ட காரணங்கள் பின்வருமாறு
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். பாதுகாப்பு செயலர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்தில், தன்னுடைய இந்தத் திடீர் முடிவுக்கான 16 காரணங்களை சரத் பொன்சேகா தெளிவுபடுத்தியிருந்தார்.
இவ்வாறு அவரால் குறிப்பிடப்பட்ட அந்த காணரங்களில் சிறு பான்மையுடன் சம்மந்த பட்டவை பின்வருமாறு :
13.சாதாரண மட்டத்தில் இருந்து தரமுயர்த்தி, என்னால் பெரும்பாடுபட்டு கட்டிக்காக்கப்பட்ட இராணுவ சேவையிலிருந்து நான் தற்போது புறந்தள்ளப்பட்டமையானது கவலைக்குரிய விடயமாகும்.
14. யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் தற்போதைய நிலைமை என்னை மென்மேலும் வருத்துகின்றது. அவர்களை சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் வாழ வைப்பதற்காக, விடுதலைப் புலிகளின் கொடூரத்திலிருந்து மீட்கும் முயற்சியில் இராணுவ வீரர்கள் பலரும் உயிர்த் தியாகங்களைச் செய்தனர். இருப்பினும் அவர்களில் பலர் இன்னமும் அசாதாரணமானதொரு நிலைமையில் வாழ்வதானது அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையைக் குறித்துக் காட்டுகிறது. தங்களுடைய பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வரையில் அந்த மக்களின் உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அம்மக்களுக்கு இடமளிக்க வேண்டும்.
15. என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் உங்களுடைய அரசாங்கத்தினால் இன்னமும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளும் வகையிலானதொரு கொள்கை இதுவரையில் ஏற்படுத்தப்படாமையானது, பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி சீரழிக்கப்பட்டு வருவதற்கு சமமானது. அத்துடன் எதிர்க்காலத்தில் மற்றுமொரு போராட்டம் வெடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
16. யுத்தத்தின் முடிவில் அனைத்து இன மக்களும் எதிர்ப்பார்த்திருந்த சமாதானத்தின் பிரதிபலன், இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அழிவும் வஞ்சகமும் மென்மேலும் தலையெடுத்துள்ளது. ஊடக அடக்குமுறை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. எமது தாய் நாட்டுக்கு சமாதானத்தையும் சமரசத்தையும் கொண்ட யுகத்தை ஏற்படுத்திக் கொடுக்க எம்மால் முடியுமானால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரின் முயற்சி மற்றும் தியாகங்கள் வீண் போகாது







