Archive for November 7th, 2009
நாடு முழுவதிலும் பௌத்த தூபிகளை அமைப்பதில் பயனில்லை: ரணில் விக்ரமசிங்க
பௌத்த மதக் கோட்பாடுகளை பின்பற்றி நாட்டை நல்லவழியில் ஆட்சி செய்யாது நாடு முழுவதிலும் பௌத்த தூபிகளை அமைப்பதில் பயன் எதுவுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி இன்னமும் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மிஹிந்தல ரஜ மஹா விஹாரையில் நடைபெற்ற விசேட சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வாழும் சகல இனத்தவர்களையும் ஒன்றிணைக்கும் முக்கிய கடமை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும், இந்த நிலைமை நீடித்தால் மீண்டும் நாட்டில் பிரிவினைவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்து பௌத்த மதம் தெளிவாக விளக்கியுள்ளதாகவும், இந்தக் கோட்பாடுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தை கட்டியெழுப்பி, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கூடிய ஓரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் வாழ் இலங்கையர்கள் ஜனாதிபதியுடன் 14, 15 இல் பேச்சு
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து புலம்பெயர்ந்தவர்களுக்கு விளக்கமளி க்கும் விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் 14ஆம் 15ஆம் திகதிகளில் விசேட கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக ஒருங்கிணைப்புப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர் களின் பங்களிப்பினையும் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுடன் 14ஆம் திகதி ஜனாதிபதி கலந்துரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து 15ஆம் திகதி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இலங்கையின் நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பொன்று நடைபெறுவதாகவும் சந்திரபால லியனகே கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட மட்டு.முஸ்லிம்களுக்கு உதவுமாறு ஆஸியிடம் வேண்டுகோள்
![]() |
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால போர்ச் சூழலின் போது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச நாடுகள் உதவ முன்வர வேண்டும்” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் அவுஸ்திரேலியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய இரண்டாவது செயலாளர் ஜோசப் பெஹ்ஹெட்டுடனான சந்திப்பின் போது இந்த கோரிக்கையை அவர் முன் வைத்தார்.
மாகாண சபை உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஏறாவூர் பிரதேச செயலாளர் எம்.சி. அன்சார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த கால சூழ்நிலையின் போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும், அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் இந்த சந்திப்பின் போது அவுஸ்திரேலிய ராஜதந்திரியிடம் எடுத்துக் கூறினார்.
குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் விரிவாக விளக்கமளித்தார்
virakesari
புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்- இழப்பு -2
சமூகம் என்ற வகையில் முஸ்லிம் சமூகம் தனது ஈட்டல்களையும் இழப்புகளையும் கணக்கில் வைத்துகொள்ள வேண்டும் என்பதால் இந்த இழப்பையும் எமது இணைய தளம் பதிவேற்றி கணக்கில் வைத்துகொள்கிறது- www.lankamuslim.org
“புலியில் சேர்ந்து தம்மை அழித்துக்கொண்ட சில முஸ்லிம் இளைஞ்ர்கள் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும்“
எஸ்.எம்.எம்.பஷீர்
“பகை ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின் இன்னா வித்து ஆகிவிடும்.” (விளம்பி நாகனார்)
எனது “புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்” என்ற கட்டுரையின் முதல் பகுதி முஸ்லிம் இளைஞ்ர்கள் புலியின் கொள்கைகளால் கவரப்பட்டோ அல்லது சமூக ஆதிக்க சக்திகளாக மாறும் போது ஆயுதம் தாங்குவதால் அனுபவிக்கும் அதிகாரம் சமூக மேலாதிக்க நிலவுடமை சமூகத்தின் மீதான உள்ளார்ந்த வெறுப்பு என்பனவும் அவர்கள் புலிகளில் இணைந்ததற்கான காரணங்களாகவும் இருக்கலாம் சென்ற கட்டுரையில் நான் அக்கரைப்பற்று புலி உறுப்பினரின் (கப்டன் பாரூக்) இயக்க ஈடுபாடும் இறப்பும் குறித்து புலிகளின் வரலாறு எழுதிய அதகான பணியில் ஈடுபட்ட புலி வரலாற்றாளரின் மூலப்பதிவிலிருந்தே மறுபதிப்பு செய்தேன். இம்முறை காத்தான்குடி கான்கேயநூடை சேர்ந்த இன்னுமொரு முஸ்லிம் புலி பற்றிய வரலாறு உங்களின் வாசிப்புக்கு. விரிவாக பார்க்க










