Lankamuslim.org

One World One Ummah

Archive for November 2009

முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய “நேர் அணுகுமுறை”( Positive approach) :M.ஷாமில் முஹம்மட்

with one comment

M.ஷாமில் முஹம்மட்
முஸ்லிம்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதிதூதர் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் ஒரு வேத நூலை அல்குர்ஆனை முழுமையாக நம்புகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஸஹிஹான ஹதீஸ்களை முழுமையாக நம்பி விசுவாசிக்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகைக்காக அழைகின்றார்கள்.

முஸ்லிம்கள் அனைவரும் ஒரு இறைவனை , ஒரு திசையை நோக்கி தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் இறைவனை தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைக்கின்றார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஸகாத் கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ஜை கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

November 30, 2009 at 10:22 pm

ஜனாதிபதி வேட்பாளர்கள் 6 ஆகுமா ?

leave a comment »

http://johnochwat.files.wordpress.com/2008/02/6.png?w=101&h=101

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 6 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும், புதிய இடதுசாரி முன்னணி  விக்ரமபாகு கருணாரத்னவும், சோசலிச சமசமாஜ கட்சி  விஜே டயஸ், பிக்குகள் முன்னணி  தேரர் பத்தரமுல்ல சீலாரத்னவும்  அதே நேரம் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பல தரப்பினரும் முனைந்து வருவதாக தெரிகிறது

Written by lankamuslim

November 30, 2009 at 3:25 pm

மனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்:ஹதீஸ்

leave a comment »

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.

ஸஹீஹுல் புகாரி
ஹதீஸ் எண்: 7376

Written by lankamuslim

November 29, 2009 at 7:42 pm

Posted in ஹதீஸ்

ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென SLMC தீர்மானம்

leave a comment »

ஐக்கிய தேசிய முன்னணியின்  பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஐக்கிய தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுவேட்பாளரான சரத்பொன்சேகாவை ஆதரிப்பதென எமதுகட்சியின் உயர்மட்டம் கூடி தீர்மானித்துள்ளது. அத்துடன் சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பில் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளோம். முதலில் எமது தலைவர் ரவூப்ஹக்கீம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்குச் சென்று கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதன்பின்னரே சரத் பொன்சேகாவை சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின்போது சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

November 29, 2009 at 7:00 pm

யாழ்ப்பாண முஸ்லிம்கள் சம்மந்தமாக எம் . ஷாமில் முஹம்மட் ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறப்பு கட்டுரை

with one comment

by M.Shamil mohamed

Ever memorable and Never forgettable painful memory of Jaffna muslims என்ற தலைப்பில்  யாழ்ப்பாண முஸ்லிம்கள் 20 வருடங்களுக்கு  முன்பு  மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள் என்றும் . பயங்கரவாதம் அவர்களை நாசப்படுதிய முறை பற்றியும் , யாழ்ப்பாண முஸ்லிம்கள் 20 வருடங்களாக அரசியல் ரீதியாக புறகணிக்கப்  பட்டுள்ளனர் என்றும் அவர்களின் இழப்புகள் , அவர்களின் தற்போதைய நிலை பற்றியும் அவர்கள் புத்தளத்தில் 28 முகாம்களில் 7200 குடும்பங்களைச்  சேர்ந்த 30000 க்கும்  அதிகமான அகதிகளாக வாழ்கிறார்கள் என்றுகுறிபிடுகிறார் இவர்  எழுதியுள்ள இந்த  கட்டுரையை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்

Written by lankamuslim

November 28, 2009 at 11:59 am

ஜனாதிபதி தேர்தலும் வேட்பாளர்களும்

leave a comment »

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையா ளர் தயானந்த திஸாநாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் ஏற்றுக்கொள் ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.                       எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கமையவே ஜனவரி 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறும் என்று தயானந்த திஸாநாயக்கா நேற்று அறிவித்திருக்கிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராகத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடவிருக்கின்றமை தெரிந்ததே. அத்துடன் இடதுசாரி முன்னணித்தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவும் தேர்தல் களத்தில் குதித்திக்கவுள்ளார். இதேவேளை  வடக்கு  கிழக்குத் தமிழர் தரப்பு குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இன்னமும் விடை கிடைக்காத நிலையில், தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் சில வட்டாரங்களில் ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by lankamuslim

November 28, 2009 at 11:10 am

சவூதியில் மழை வெள்ளம் 80பேர் சஹீதாகினர்

leave a comment »

புனித ஹஜ் யாத்திரை கடைசி நாளான நேற்று முன்தினம் மக்காவில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள செங்கடல் பகுதியில் உள்ள ஜித்தா நகரில் பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழை வெள்ளத்தில் சிக்கி  ஹஜ் பயணிகள் 80பேர் சஹீதாகினர். இவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தகவலை ஜித்தா சிவில் பாதுகாப்பு தலைவர் கேப்டன் அப்துல்லா அல்-அமீர் தெரிவித்துள்ளார். மெக்கா நெடுஞ்சாலை சேதமடைந்ததால் அதில் வாகனங்கள் செல்ல முடிய வில்லை. எனவே அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வாகனங்களும், மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Written by lankamuslim

November 28, 2009 at 10:51 am

தியாக பெருநாள் வாழ்த்துக்கள்

leave a comment »

Written by lankamuslim

November 27, 2009 at 3:19 pm

புலி சீமான் கைது செயப்பட்டு நாடுகடத்தப்பட்டார்

leave a comment »

alt

புலிகளின் இறந்த  நாளை முன்னிட்டு தமிழ் மக்களை ஏமாற்றி வரும்  புலி  சீமான்  ரொறன்ரோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டார் கனடாவில் உள்ள ரொறன்ரோவில் புலிகளின்   வணக்க நாள் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு பேசிய புலி  சீமான் பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால்( முழு உலகமும் நாசமாகி விடும் ) உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து( தமிழர்கள் தற்கொலை  செய்துகொள்வார்கள் ), தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், ………..தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி பேசினார்.

Written by lankamuslim

November 27, 2009 at 9:39 am

ஜனாதிபதி பொது வேட்பாளராக சரத் பொன்சேகா

leave a comment »

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் கூட்டு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன.

இன்று இடம்பெற்ற கட்சியின் உயர்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்

Written by lankamuslim

November 26, 2009 at 7:23 pm

இது முதூர் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் எமக்கு ஈ மெயில் மூலம் கிடைத்த செய்தி:

leave a comment »

http://1.bp.blogspot.com/_zg_RpQ14M2g/SbbgU6HRVFI/AAAAAAAAIB4/7rtgkyVkJv4/s320/vote-smart-button.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது தாய்நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையாகும்-

முதூர் தொழிலாளர் சங்கம்:

இந்து சமுத்திரத்தின் சிறு நீர்த்துளியைப்போல் இருந்த எம்நாடு பயங்கரவாதிகளால் இரத்ததுளிபோல் மாற்றப்பட்டிருந்ததை யாரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். நாட்டை உலுக்கிக்கொண்டுருந்த கொடூரமான பயங்கரவாதப்  பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்திய காலம் கடந்து விட்டது.எமது இலங்கைத் திருநாடு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு அண்மையில் வெளிவந்த சிறந்த, சந்தோசமாக உள்ள நாடுகளின் பட்டியலில் நமது நாடு முன்வரிசையில் இருப்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.விரிவாக பார்க்க

Written by lankamuslim

November 25, 2009 at 9:41 pm

முஸ்லிம்களையும் , இறுதி துதரையும் கொச்சை படுத்திய தினகுரலை வன்மையாக கண்டிக்கிறோம்

leave a comment »

http://wolfweb.unr.edu/homepage/yathee/dlogo1.jpg

முஸ்லிம் மீடியா போரம்

இறுதி தூதர்  சம்பந்தமாக ‘தினக்குரல்’ பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட செய்திக்காக தினக்குரல் நிர்வாகத்தை  நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் பி.எம்.முர்சிதீன் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் ஐந்து ஊடக நிறுவனங்களையும் மற்றும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனதையயும் இந்நிறுவனத்தின் இச்செயலை கண்டிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.டென்மார்க்கில் உள்ளது போன்று இல்லாவிடினும் அது போன்ற ஒரு தவறை இலங்கை பத்திரிகை நிறுவனம் செய்துள்ளது. அதற்கு அவர்கள் மன்னிப்புக் கோரியபோதும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட வடு தொடர்ந்தும் காணப்படும் எனவும் கூறினார்.

Written by lankamuslim

November 25, 2009 at 8:47 pm

கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். வடக்கு கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது.

leave a comment »

http://www.greatpersonalities.com/pics/m/mahinda-rajapakse.jpg

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பற்றிய பேச்சுக்கே இனி இடமில்லை. அது கேள்விக்கு அப்பாற்பட்டது. காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக்கொண்டு வராதீர்கள். கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. நான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது ஒரு வாக்குறுதியளித்தேன். ,தமிழர் ஒருவரை மாகாண முதலமைச்சராக்கினேன். அதனால் நான் எதிர்கொண்ட எதிர்ப்புகள் சொல்லி மாளாதவை. முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என்று ஒரு கூட்டமே பொங்கி எழுந்தது. எனினும், எனது முடிவில் உறுதியாக இருந்து அதனைச் செய்தேன். அப்படி எப்போதும் செயற்பட முடியாது.

ஒரு பிரதேசத்துக்கு ஒருவரும் தனியுரிமை கோர முடியாது. இன்று கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினர். அவர்கள் இங்கு(கொழும்பில்) இருபத்தியேழு வீதத்தினராகக் குறைந்துவிட்டனர். அதற்காக அவர்கள் இன்று ஊர்வலம் நடத்தவில்லை. போராட்டம் செய்யவில்லை. எல்லா இடத்திலும் எல்லோரும் கலந்து வாழ அனுமதிப்பதே சரியானது; முறையானது.விரிவாக பார்க்க

Written by lankamuslim

November 25, 2009 at 12:45 pm

தங்குமிட வசதிகளின்றி இலங்கை ஹாஜிகள் நிர்க்கதி

leave a comment »

http://www.atlanta.is/Uploads/images/Hajj%202007%20-%202008_mekkah.jpg

இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றச்  5000 பேர் சென்றுள்ளனர் இதில் குழுவில்  300 பேர் கொண்ட குழு புனித மக்கா நகரில் உரிய தங்குமிட வசதிகள் வழங்கப்படாததன் காரணமாக நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, தெரியவருகிறது.

முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்ற ஹஜ் முகவர் நிலையம் ஒன்றினால் அழைத்துச் செல்லப்பட்ட இக்குழுவினர் தங்குவதற்கு முகவர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வேறு ஒரு குழுவினர் தங்கியுள்ளதாகவும் இதனையடுத்து இலங்கைக் குழுவினர் வீதியோரங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிபதாக தகவல் வெளியாகியுள்ளது

Written by lankamuslim

November 24, 2009 at 8:53 pm

டிசம்பர் 5இல் மெளலவி ஆசிரியர் நியமனம்

leave a comment »

http://people.ku.edu/~kennedy1/Islamic%20Teacher%20Shi_Wuzhong%20.JPG

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் விசேட பணிப்புரைக் கமைய டிசம்பர் 05 ஆம் திகதி மெளலவி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ள தாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்கடுவையின் கண்டி உத்தியோகபூர்வ வாச ஸ்தலத்தில் நடைபெற்ற மத்திய மாகாண ஸ்ரீல. சு. கட்சி அமைப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட தகவல் களைத் தெரிவித்தார்.மேல்மாகாண ஆளுநர் எஸ். அலவி மெள லானா, ஜனாதி பதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் கடந்த வியாழ க்கிழமை நிதி அமைச்சு மற்றும் திறை சேரியின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசு ந்தரவைச் சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தை யையடுத்து இந்நியமனங்களுக்கான நிதியை உடன டியாகக் கல்வியமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்ப ட்டது.

Written by lankamuslim

November 24, 2009 at 4:23 pm

சூரிச் மாநாட்டில் பொது இணக்கப்பாடு

leave a comment »

இலங்கையில் சிறுபான்மை சமூகத்துக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் சூரிச்சில் கூடிய இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.13 ஆம் அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் கீழ் இந்த அதிகாரப் பரவலாக்கல் அமையவேண்டும் என இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ளது எனினும், தமிழ் மக்களுக்கு இன்றும் உரிமைகள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Written by lankamuslim

November 24, 2009 at 3:52 pm

ஜனாதிபதித் தேர்தலில் பொதுச்சின்னத்தில் களமிறங்க சரத் பொன்சேகா இணக்கம்

leave a comment »

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகளின் சின்னங்களைத் தவிர்த்து பொதுச் சின்னத்தில் போட்டியிட சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய பிரதான எதிர்க்கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட பொதுச்சின்னத்தில் சரத் பொன்சேகா போட்டியிட உள்ளார்.

ஜே.வி.பி. புதிய கட்சியொன்றைப் பதிவு செய்து சின்னம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்சியொன்றை பதிவு செய்ய விண்ணப்பத்திருந்த போதிலும் தேர்தல் ஆணையாளர் அதனை நிராகரித்ததை தொடர்ந்து பொதுவேட்பாளரைக் களமிறக்கும் பொதுச் சின்னம் தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்பட்டது.
இந்த நிலையில் பொதுச் சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட பின்னர், சரத் பொன்சேகாவின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் ஆகியன குறித்து அறிவிக்க எதிர்க்கட்சிகள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

uthayan

Written by lankamuslim

November 24, 2009 at 3:41 pm

இலங்கையில் லக்க்ஷர் – இ – தொய்பா இயக்கம்

leave a comment »

  • லக்ஷர் – இ – தொய்பா இந்த கதையை எழுதியவர் முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இந்த கதைக்கு உயிர் கொடுப்பவர் கே.சி வர்மா இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ வின் இன்றைய பணிப்பாளர்.
  • தனது மேலாதிக்க பிடியை நழுவாது  பாதுகாக்க காரணம் தேடி கதை சொல்கிறது இந்தியா.

M. ஷாமில் முஹம்மட்

இலங்கை கிழக்குப்பகுதியில் லக்ஷர் – இ – தொய்பா  இயக்கம் இயங்கிவந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. 1990 களில் இருந்து செயற்படும் இவ் அமைப்பு பொஸ்னியா மத்திய ஆசிய குடியரசு செச்சினியா மற்றும்  தாஜகிஸ்தானில் இதுவரை  இயங்கிவந்ததாகவும் , சிலகாலத்துக்கு முன்னார் இது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இயங்கி வந்ததாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து விட்டது இப்போது இந்தியா  இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் தொடர்ந்தும் வைத்திருக்க காரணம் தேடுகிறது,  தேடவேண்டும் அதற்கு உருவாக்க பட்ட கதைதான் லக்ஷர் – இ – தொய்பா இந்த கதையை எழுதியவர் முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இந்த கதைக்கு உயிர் கொடுப்பவர் கே.சி வர்மா இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ வின் இன்றைய பணிப்பாளர் என்று நம்பப்படுகின்றது.

இந்தியா இலங்கை  இனப் பிரச்சினையை  பயன்படுத்தி, இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது அதுதான் இந்திய இலங்கை உறவு முறை  . இதுவே இலங்கையின் , கடந்த 50 வருட கால வரலாறுமாகும் . இதன் பின்னணியில் இந்தியா தமிழீழக் இயக்கங்களுக்கு பயிற்சி , ஆயுதம் மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய ஆதிக்க  நலனுக்கு ஏற்ற கூலிக் படையாக  உருவாக்கி வந்திருகிறது

புலிகளின்  ஆரம்ப கால கட்டத்தில்  இந்திய எதிர்பார்ப்புக்கு எதிராக  புலிகள் இயக்கம் தம்  மேலாதிக்கத்தை நிறுவும் வகையில், இந்தியா சார்புக் தமிழின போராட்ட  அமைப்புகளை  அழித்தது. இதன் விளைவாக, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கம் தளர்வடைன்தது  என்று குறிப்பிடலாம்

எம்பதுகளில் இலங்கை  அரசு புலிகள் மீதான  தாக்குதலினால், புலிகளுக்கு  தோல்வி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய இந்தியா அதை தமிழின அழிப்பாகக் சித்தரித்து காட்டியது. இதன் மூலம் நேரடியான ஆக்கிரமிப்பை நடத்தி தன் மேலாதிக்கத்தை நிறுவமுனைந்தது.  ஆனால் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் அரசின் சிறப்பான காய் நகர்த்தலினால்  இந்தியா தோல்வியை தழுவியது.  இப்படி இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலனை, இலங்கையில் தான் விரும்பியவாறு இந்தியா ஏற்படுத்த முனைத்து வருகிறது

இலங்கையில் பாகிஸ்தானிய, சீனத் தலையீடு, இந்தியாவுக்கு சவாலாகவே மாறிவருகிறது  இப்படி இலங்கையில் பாகிஸ்தான, சீனாவின் மேலாதிக்கம் உருவாவதைத் தடுக்கவும், தன் மேலாதிக்கத்தை உருவாக்கவும்,  இலங்கை அரசக்கு   உதவுகின்றது. இந்தியா 900 கோடி ரூபாவை இலங்கைக்கு ஆயுதம் வாங்க வழங்கியமையும், 500 கோடி ரூபாவை முகாம்களுக்கு வழங்கியயமையும் இதற்கு உதரணமாகும்  இப்படி தன் பிராந்திய மேலாதிக்கத்தை இலங்கைக்குள் திணிக்க , இந்தியா புலிகளுக்கு எதிரா  யுத்தத்தை தமிழ்நாட்டு தமிழர்களின் எதிர்பையும் மீறி   ஆதரித்தது

இந்தியாவின் பிராந்திய , நோக்கங்கள் அனைத்தையும் மீறி , இன்று சீனாவின் பாகிஸ்தானின் தலையீடு இலங்கையில் அதிகரித்துள்ளது  . யுத்தம் முடிந்து விட்டது இப்போது இந்தியா  இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க காரணம் தேடுகிறது அதில் ஒன்றுதான் இந்த  கிழக்கு இலங்கையில் லக் ஷர் – இ – தொய்பா

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது அது இந்தியாவுக்கு நல்லதாக இருக்காது, அவர் சீனா மற்றும் பாகிஸ்தானுடன்  தோழமையாக செயல்படுவார் என இந்தியாவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது . இதனால்தான் சரத் பொன்சேகாவின் எழுச்சியை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதவிர, இலங்கை . இந்தியாவில் எதிரிகளான சீனா, பாகிஸ்தானுடன் சமீப காலமாக மிகவும்  தோழமையாக உள்ளது  இவைகள் இந்தியாவை அச்சம் அடைய செய்துள்ளது ஆகவே தனது மேலாதிக்க பிடியை நழுவாது  பாதுகாக்க காரணம் தேடி கதை சொல்கிறது இது ஒன்றும் புது கதையள்ள இந்த கதையை முன்பு இரண்டு தடவைகள் கூறியுள்ளது

இந்திய உளவு நிறுவனமான றோ’ வின்  ஈ என் டி எல் எப் என்ற ஒரு அமைப்பு உண்டு இதில் நம் நாட்டு  தமிழ் வாலிபர்கள்  500 பேர்  வரை உள்ளனர்  இந்த அமைப்பு   றோ’ வின் கட்டுபாட்டில் பரந்தன் ராஜன் என்பவரின் தலைமையில் இந்தியாவில் இயங்குகிறது என்று தெரிய வருகின்றது ,  இந்த அமைப்பு  1987 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு நிறுவனமான ‘றோ’ அமைப்பினால் உருவாக்கப்பட்டது.

ஈ.என்.டி.எல்.எப்பை பயன்படுத்தி மீண்டும் தலையிட இந்திய வகுத்துள்ள புதிய உபாயமாக  இது இருக்க முடியும்  பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும்   தகவல் வெளியாகியுள்ளது.

Written by lankamuslim

November 23, 2009 at 6:30 pm

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு இன்று வெளியிடப்படும்

leave a comment »

எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு இன்று திங்கட்கிழமை நள்ளிரவில் வெளியாகும் என்று தெரிய வருகிறது. பெரும்பாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னர் தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் சம்மேளனத்தில் அறிவிக்கப்படவில்லை. அதேவேளை கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைப்பாளர்களை சந்தித்து பேச்சு நடத்திய ஜனாதிபதி விரைவில் பிரதான தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு கோரியிருந்தார். அதனையடுத்தே இன்று திங்கட்கிழமை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது

வீரகேசரி

Written by lankamuslim

November 23, 2009 at 12:44 pm

SLMC பொது வேட்பாளர் பற்றி இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை

leave a comment »

http://doc.trolltech.com/4.3/images/calculator-example.png

முன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பொது செயலாளர் ஹசன் அலி  தெரிவித்துள்ளார். முன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  முஸ்லிம் பிரச்சனைகள் ,மற்றும்  பொது விடையங்கள் குறித்து கலந்துரையாடி உடன்பாடு  ஒன்று எட்டியபின்னர் அவரை ஆதரிப்போம்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  உள்ளிட்ட ஏனைய கட்சிகள் இதுவரையில் பொது வேட்பாளர் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிய வருகிறது  .

Written by lankamuslim

November 23, 2009 at 12:36 pm

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை: மனோ கணேசன்

leave a comment »

http://therogueparent.com/blog/wp-content/uploads/2008/10/badmath.jpg

முன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி முன்வைத்த எழுத்து மூல கேள்விகளுக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் இதுவரையில் பொது வேட்பாளர் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

November 22, 2009 at 5:35 pm

சுவிஸ் நாட்டின் சூரிச் கூட்டதில் சலசலப்பு

leave a comment »

http://www.condoroptions.com/wp-content/uploads/2008/03/contradiction.jpg

சுவிஸ் நாட்டின் தலைநகர் சூரிச்சில் தமிழர் தகவல் மையம் ஏற்பாடு செய்துள்ள “இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் அதற்கான தீர்வும்’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கின் போது சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பகமான தகவல் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒரு பொது உடன்பாட்டுடனான இணக்கப்பாடு குறித்தே இங்கு கலந்தாலோசிக்கப்பட வேண்டுமென்றும், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சிகளின் சுயாதீன முடிவுக்கே இடமளிக்கப்பட வேண்டுமென்றும் பல கட்சிகள் தெரிவித்ததன் காரணமாகவே இந்தச் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறிப்பிட்ட இந்த இரு விடயங்களிலும் ஒரு பொதுவான இணக்கப்பாடு காணப்பட வேண்டுமென்ற கருத்தின் பிரதிபலிப்பாக அதிகமான எதிர்க் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை, இந்தக் கருத்தரங்கில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு இணையத்தள தகவல்

Written by lankamuslim

November 22, 2009 at 5:30 pm

“இந்த நாட்டை இறைவன் தான் காக்க வேண்டும்” புத்தளத்தில் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை

leave a comment »

ஒரு உரை மீட்டல்:

“தேசியவாத அலையில் பெரும்பான்மை மக்கள்:” புத்தளம் நகரில் அண்மையில் இடம் பெற்ற வட மேல் மாகாண சபைத் தேர்தல் கூட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை:

மாகாண சபைத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்குள் ஒரு பொதுத் தேர்தல் வரலாம் என்று இப்போது கட்டியம் கூறப்படுகிறது. எனவே, எமக்கு இருக்கின்ற சவால்கள் யாவும் ஆகக் கூடியது 90 நாட்களுக்குத் தான் இருக்கப் போகிறது. சகல கட்சிகளிலும் இருந்தும் பிரித்து, விலைக்கு வாங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காலம் காலமாக சுதந்திரக்கட்சியோடு இருந்தவர்கள் தான்.

இனங்களுக்கு இடையில் இருக்கின்ற ஒற்றுமையைக் குலைக்கின்ற வகையிலும் சிறுபான்மை இனங்களை வந்தான் வரத்தான்களாகவும், அவர்களுக்கு நாட்டின் பிரஜா உரிமை வழங்கக் கூட அருகதையில்லை என்ற வகையிலும் இனவாதக் கட்சியின் தலைமைத்துவங்கள் அரசாங்கத்திடம் சோரம் போயிருக்கின்றன.

யுத்தமுனை வெற்றிகளை மட்டும் மூலதனமாகக் கொண்டு ஆட்சியிலே நீடிக்கலாம் என்று நினைப்பவர்களின் பிரசாரங்களினால் நாட்டில் தேசியவாத அலை வீசுகிறது. நாட்டில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டி விட்டோம் என்ற இறுமாப்பில் புறப்பட்டிருக்கும் இந்த தேசியவாத அலையில் பெரும்பான்மையின மக்கள் அசந்து போயிருக்கிறார்கள். சிறுபான்மையின மக்கள் என்ன நடக்கப் போகிறது என்று அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரிவாக பார்க்க

Written by lankamuslim

November 22, 2009 at 12:01 am

இணைப்பு-2: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ புத்தளத்தில்

leave a comment »

இணைப்பு-2

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்று 21ம் திகதி   புத்தளத்துக்கு விஜயம் செய்யதுள்ளார்.    ஜனாதிபதியின் புத்தளம்  விஜயதின்போது புத்தளத்தில் இலங்கையின்  திறந்த பல்கலை கழகத்தின்  கல்வி வளாகம் -Study center for open university of  sri lanka – புத்தளம் நகரில்  வட மேல் மாகாண பல்கலைக்கழக வெளியடைவு நிறுவனம், மும்மொழி விஞ்ஞான கல்லூரி ஆகியவற்றை நேற்று ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. அங்கு உரையாற்றிய ஜனாதிபதி நுரைச்சோலை மின் நிலையத்திட்டத்தை ஆரம்பிக்க நாம்  வந்தபோது கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று நீலக் கொடிகளால் தோரணமிட்டு எம்மை வரவேற்கின்றனர். தலைவர்களின் உத்தரவுகளை கட்சியிலுள்ளோர் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அர்த்தம்தான்  அது. அமைச்சர்களான விஷ்வா வர்ணபால, மில்றோய் பெர்னாண்டோ, பிரதியமைச்சர்களான கே. ஏ. பாயிஸ், அமைச்சர் றிசாட நியூமல் பெரேரா, வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது கடந்த காலங்களில் இப்பகுதியைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. நாம் பதவியேற்ற பின் நாட்டின் சகல பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம். சுபீட்சமான நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் எம்முடனே மக்கள் பலமும் உள்ளது. அதனை எவரும் அசைக்க முடியாது எனவும் ஜனாதிபதி  தெரிவித்தார். என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

Written by lankamuslim

November 21, 2009 at 1:47 pm

சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயற்சி : அரசு மறுப்பு

leave a comment »

கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார். சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான ‘லங்கா’ பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது.

அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்

Written by lankamuslim

November 21, 2009 at 12:19 pm

சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு பெண் குண்டுதாரி

leave a comment »

http://i1.ytimg.com/vi/XAo4_rh070E/default.jpg

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்குத் தமிழ் அரசியல்வாதி ஒருவர் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிப் பெண்  ஒருவரைக் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார் என்று “லங்கா இரட” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான அந்த அரசியல்வாதி, “வசந்தி” என்ற தற்கொலைப் பெண் குண்டுதாரியை இப்படுகொலை நடவடிக்கைக்காக ஏற்பாடு செய்துள்ளார் என்ற அப்பத்திரிகை சுட்டிக்காட்டி உள்ளது.

“வசந்தி” என்ப்படும் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிப் பெண், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்திய காலத்தில் கொழும்புக்கு வந்து கிருலப்பனையில் சித்தார்த்த ஒழுங்கையிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தார் என்றும் அந்த வீடு கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்குச் சொந்தமானதென்றும் குறித்த தமிழ் அரசியல்வாதி அந்த தற்கொலைதாரிப் பெண்ணை அந்த வீட்டில் சந்தித்துப் பேசி யிருக்கின்றார் என்றும் புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி “லங்கா இரட” மேலும் தெரிவித்துள்ளது.

ஆனால், புலனாய்வுப் பிரிவினர் உஷார் அடைந்ததை அடுத்து அந்தப் பெண் தம்புள்ள பிரதேசத்துக்குத் தப்பிச் சென்றிருந்தார் என்றும், ஆனால் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவை படுகொலை செய்வதற்காக மேற்படி தமிழ் அரசியல்வாதி அப்பெண்ணை கொழும்புக்கு திரும்ப வரவழைத்துள்ளார் என்றும் “லங்கா இரட” மேலும் குறிப்பிட்டுள்ளது.

உதயன்

Written by lankamuslim

November 21, 2009 at 11:54 am

லண்டன், நியூயார்க் நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் ஆபத்து

leave a comment »

பிரிட்டீஸ் அண்டார்டிக் சர்வே நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற் கொண்டுள்ளது.. காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்கும் போது தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. காற்றில் கார்பன்டை ஆக்சைடின் அளவு உயரும்போது அண்டார்டிகா கடல் பகுதியில் 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகுவது தெரிய வந்தது. இதனால் கடல் நீரின் மட்டம் 6 மீட்டர் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கடல் நீரின் அளவு உயரும்போது கடற்கரை நகரங்களாக லண்டன், நியூயார்க், மற்றும் சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது. கடந்த 1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கார்பன்டை ஆக்சை டின் அளவு உயர்ந்தபோது 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகின. இதனால் கடல் நீரின் அளவு 4 முதல் 6 மீட்டர் அளவு உயர்ந்தது.

அது போன்று தற்போதும்  கார்பன்டை ஆக்சைடின் அளவு உயர்ந்துள்ளது. இதனால் அது போன்று சுமார் 6 மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. எனவே, சுற்றுப் புறம் சூழலையும், வான் மண்டலத்தையும் மாசு படாத அளவில் பாதுகாக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Written by lankamuslim

November 20, 2009 at 9:12 pm

இலங்கைக்கு மருந்து விநியோகிக்கும் நான்கு இந்திய கம்பனிகளுக்கு தடை

leave a comment »

http://www.centralasiatraveler.com/cn/xj/h/images/h_c10_uyghur-tradl-medicin2.jpg

இந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி கம்பனிகளின் உற்பத்திகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

இந்தக் கம்பனிகளின் உற்பத்திகள் யாவும் அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதுடன், அக்கம்பனிகளின் உற்பத்திகளைத் தனியார் ஆஸ்பத்திரிகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் பெறுமதியை அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் மீளப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பெல்கோ பார்மா, வின்ஸ் பயோ புரடெக்ட் லிமிட்டட், கிளிச் மருந்து பொருள் கம்பனி, யுமெடிகா லெபோரட்டரி தனியார் நிறுவனம் ஆகிய நான்கு கம்பனிகளின் உற்பத்திகளே இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்குப் பயன்படுத்தப்பட விருந்த ஊசி மருந்து குப்பிகளுக்குள்ளும், சேலைன் போத்தலினுள்ளும், கண்ணாடித் துகள்களும், பிளாஸ்ரிக் துண்டுகளும் இருந்தமை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Written by lankamuslim

November 20, 2009 at 9:26 am

ஈராக் ஆக்கிரமிப்பு ஒரு தமிழ் ஆவணபடம்

leave a comment »

ஈராக்கில் பேரழிவை தரக்கூடிய ஆயுதங்ககள் இருகின்றன . அதனால் உலக மக்களையும் ஈராக் மக்களையும் நாங்கள் காப்பாற்றப் போகிறோம் என்று கூறி ஆடிய புஷ், அத்துமீறி ஈராக்கில் நுழைந்து ஈராக்கை தகர்த்தான் பல லட்சம் பேரை கொன்று குவித்தான் இன்று அந்த மனித மிருகம் உல்லாசமாக வாழ்கின்றது ஆனால் ஈராக் மக்கள் வாழ்வதற்காக தங்கள் உடல் உறுப்புகளை விற்கும் கொடூரம் ஈராக்கில் நடந்துக்கொண்டிருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பு  தமிழ் ஆவணபடம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Written by lankamuslim

November 19, 2009 at 9:37 pm

Posted in ஈராக்

எதை இழந்தாலும் இஸ்லாத்தை சமூகம் இழக்க முடியாது

with one comment

M.ஷாமில்  முஹம்மட்

ஜெனரல் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் முஸ்லிம்களை வந்தேறு குடிகள் என ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார் இக்கூற்று தொடர்பாக ரவுப் ஹக்கீம் பாராளு மன்றத்திலும் ஊடகங்களிலும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் சிறுபான்மைக் கட்சிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கையில், தமிழ்,முஸ்லிம்  மற்றும் சிங்கள  மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை   வலியுறுத்திநடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் கானி தொடர்பான பிரச்சனைகள் பற்றி பேசிவருகிறார்    இவைகள் பாராட்ட படவேண்டியவை.

ஆனால் தன்னை முஸ்லிம்களின் தனித்துவமான காவலன் தான் என்று கூறும் இவர் ஐக்கிய தேசிய முன்னணி கடந்த      14.11.2009 அன்று கண்டியில் பௌத்த  மத தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம்    பெற்றுகொண்ட    காட்சி டிவி இல் ஒளிபரப்பட்டது அதில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் மலர் தட்டு ஏந்தி சென்று அதனை சமர்ப்பித்து விட்டு குனிந்து ( ருக்குஹு) சிரம் தாழ்த்தி கை கூப்பி தேரருக்கு சாஸ்டாங்கம் செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது .

இது சலுகைகளுக்காக உரிமைகளை விற்பதை எப்படி சரிகாண முடியாதோ அதை விட மிகவும் பாவமான பிழையான ,சரிகாண முடியாத  விடயம் உரிமைகளுக்காக எமது அடிப்படைகளையும் அடையாளத்தையும்  விற்பனை செய்யும் இந்த விடயம் . இப்படிப்பட்ட விடயங்களை யார் செய்தாலும் குற்றம்தான் அது அமைச்சர் அதாவுல்லாஹ்வாக,  அமைச்சர் றிசாடாக,அமைச்சர் பாயிஸாக எவராக இருந்தாலும் குற்றம் குற்றம்தான்      இஸ்லாத்தை உலகில் பாதுகாக்க தினமும் நுறு வாலிபர்கள் உயிர்  தியாகம் செய்வதாக ஒரு ஆய்வுகூறுகிறது  உயிர்  தியாகயாகங்கள் எல்லாம்   உரிமைகளையும் வெறும்  சலுகைகளையும் பெருவதற்காக அல்ல சில வேளைகளில்  உரிமைகளையும், சலுகைகளையும் இழந்தும  அடிப்படைகளையும் அடையாளத்தையும் பாதுகாக்க இவர்கள் உயிர்  தியாகயாகங்கள் செய்கின்றார்கள் இங்கு அடையாளம், அடிப்படை என்பது இஸ்லாம்தான் ஆகவே எதை இழந்தாலும் இஸ்லாத்தை சமூகம் இழக்க முடியாது எந்த விலை கொடுத்தாவது அடையாளம், அடிப்படை பாதுகாக்க படவேண்டும் எந்த மனிதனுக்கும் அஞ்சாத, இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிற சிலரைக் கொண்ட நிர்வாகம்-அதைத்தான் முஸ்லிம்கள் ஆதரிக்கவேண்டும்,எப்போதோ படித்த ஒரு கவிதை நினைவிலிருக்கிறது.உங்கள் பேனா உங்கள் பேப்பர் எதை வேண்டுமானலும் எழுதுங்கள்.உங்கள் நாவு உங்கள் மூச்சு எதை வேண்டுமானாலும் பேசுங்கள் உங்கள் கைகள் உங்கள் கால்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்  மறந்துவிடாதீர்கள்.வரலாறு உங்கள் பிணங்களைக் கூடதோண்டியெடுத்து தூக்கில் போட்டு  விடும் இப்படியான பெரிய ஷிர்க்கில் இருந்து அல்லாஹ் என்னையும்   உங்களையும் பாதுகாக்க வேண்டும் -ஆமின்

Written by lankamuslim

November 19, 2009 at 5:28 pm

காணாமல் போன சாய்ந்தமருதை சேர்ந்த அஹமட் லெப்பை ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்

leave a comment »

http://kalaniosullivan.com/OsanAB/Pics/RiceFieldIrrigation1954RobertFurrer.jpg

16.11.2009 அன்று  காணாமல் போன சாய்ந்தமருதை சேர்ந்த அஹமட் லெப்பை வயது56 ,நேற்று ஜனாஸாவாக  மீட்கப்பட்டுள்ளார் மாவடிப்பிள்ளை சின்னப்பாலத்தடியில் துவிச்சக்கரவண்டி கைவிடப்பட்ட நிலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது . சம்பாந்துறை கல்லரைச்சல் கிராமத்திலுள்ள வயலொன்றுக்கு வேலைக்குச் செல்லும் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வழமைபோல் வயலுக்கு செல்லும் வழியிலுள்ள மாவடிப்பிள்ளை சின்னப்பாலயத்துக்கு அருகிலுள்ள நீரோட்டத்தில் இறங்கி கால்கழுவ எத்தனித்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது .

Written by lankamuslim

November 19, 2009 at 12:21 pm

அரச ஆதரவு சிங்களக் குடியேற்றத் திட்டம் ஒரு சிக்கலான சூழல்

leave a comment »

See full size image

இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்:

அரச ஆதரவு சிங்களக் குடியேற்றத் திட்டம் ஒரு சிக்கலான சூழல். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வெளி இடங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து கிராமங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதற்கான நம்பகமான தகவல்கள் என்னிடம் உள்ளன. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

இலங்கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும். இவ்வாறு கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் இதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்

Written by lankamuslim

November 19, 2009 at 11:59 am

லொறியின் ஓட்டுனர் ஒருவர் கண்ணாடிகளுக்கு இடையில் அகப்பட்டு வபாத்தானரர்

leave a comment »

See full size image

கண்ணாடிகளை லொறியிலிருந்து கீழே இறக்கும்போது அந்த லொறியின் ஓட்டுனர்  கண்ணாடிகளுக்கு இடையில் அகப்பட்டு  வபாத்தான  சம்பவமொன்று நேற்று மருதமுனையில் இடம்பெற்றுள்ளது. மருதமுனை பிரதான வீதியிலுள்ள கண்ணாடி விற்பனைக் கடையொன்றுக்குரிய கண்ணாடிகளை இறக்கும்போது சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் ஹமீட் நஸார் வயது 47 என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கல்முனை பொலிஸ் நிலைய விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.ஏஸ்அமீன்  தலைமையிலான குழுவினர் குறித்த ஜனாஸாவை  குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Written by lankamuslim

November 19, 2009 at 11:43 am

தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியலை ஒன்றிணைந்து முன்னெடுக்க முயற்சி

leave a comment »

http://www.villagraziadio.com/images/conference-services.jpg

இலங்கையில், தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச்நகரில் நடத்தப்படும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலர் அங்கு சென்றிருக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதேசமயம், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி , புளொட் , ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்ற சூரிச் சென்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி., புதிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், மற்றும் அமைச்சர்அதாவுல்லா போன்றோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக சூரிச் சென்றுள்ளனர். லண்டனில் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் “தமிழர் தகவல் மையம்” என்ற அரச சார்பற்ற அமைப்பே இந்தக் கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றது. இக்கலந்துரையாடலில் சர்வதேச தரப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், முக்கியஸ்தர்கள் ஆலோசகர்களாகக் கலந்துகொண்டு கருத்துரை  வழங்குவர் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

Written by lankamuslim

November 19, 2009 at 11:17 am

தமிழர்களும், முஸ்லிம்களும் வந்தேறு குடிகள் – அமைச்சர் சம்பிக ரணவக்க

leave a comment »

champika-ranawaka.jpg
இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் வந்தேறு குடிகளாவார்கள். சிங்கள மக்கள் மட்டுமே இந்நாட்டின் பூர்வீக குடிகளாவார்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும், சுற்றாடல் அமைச்சருமான பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள அரசின் பங்காளிக் கட்சியின் அமைச்சரான சம்பிக ரணவக்க சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் தேசத் துரோகிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர்களின் தயாள குணம் காரணமாகவே ஏனைய சிறுபான்மை குடியேறி வாழ முடிந்ததாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் சம்பிக ரணவக்க சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களுக்கு வர்த்தகம் செய்ய அனுமதித்ததன் மூலமே முஸ்லிம்கள் இன்று இலங்கையில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க.

Written by lankamuslim

November 19, 2009 at 9:55 am

தேர்தல் பற்றி இன்று இரவு ஜனாதிபதி தமது அறிவிப்பைச் செய்வார்

leave a comment »

http://sacramentoscoop.com/wp-content/uploads/2008/11/election_results.gif

18 ஆம் திகதி இன்று இரவு   ஜனாதிபதி தமது அறிவிப்பைச் செய்வார் என்றும் அரச வட்டாரங்களால் ஊகம் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும் அதனை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும்  தகவல்கள்  தெரிவித்தன.எனினும்  இச்செய்தி   ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.இதேவேளை, தேர்தல் பிரசார வேலைகளை இன்று புதன்கிழமை தொடக்கம் ஆரம்பிக்குமாறு ஸ்ரீ.ல.சு.கட்சியின் மாவட்ட  அமைப்பாளர்களுடனும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்களுடனும் நடத்திய கூட்டங்களில் ஜனாதிபதி யோசனை வழங்கினார்.

Written by lankamuslim

November 18, 2009 at 7:47 pm

பேராதனை பல்கலைகழக மாணவி கைதுசெய்யப்பட்டதனை ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கிறது

leave a comment »

http://lankatruth.com/sin/images/photos/Daily/2009/June/22/jvp02.jpg

பேராதனை பல்கலைகழக கலைப்பீட 2 ஆம் ஆண்டு மாணவி பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டதனை ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கிறது. அந்த மாணவி பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றமைக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படுவாராயின் மஹிந்த ராஜபக்ஷவினால் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காகவும் அவரை விசாரணைக்கு உட்படுத்தல்வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

Written by lankamuslim

November 18, 2009 at 4:33 pm

முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்டோர் விவரம் பார்வைக்கு வைக்கப்படும்: பஸில்

leave a comment »

http://www.lankaenews.com/English/files/news/2103idp-sri-lanka.jpg

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவு. முகாம்களில் தங்கியிருந்த வேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வவுனியா செயலகத்தில் காட்சிப்படுத்தப்படும் என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வன்னி சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும்,  ஜனாதிபதியின்  சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம் பெற்ற சந்தப்பில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன்நாள் வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் கொண்ட குழு, நேற்று பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியது.

அகதி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேற்றைய சந்திப்பில் தாங்கள் விவரமாக எடுத்து விளக்கியதாக அக்குழுவில் அங்கம் வகித்த என்.சிறிகாந்தா எம்.பி. தெரிவித்தார்.

Written by lankamuslim

November 18, 2009 at 1:36 pm

கிழக்கு மாகாண சபை பதில் முதலமைச்சராக எஸ்.எம். உதுமான் லெப்பே பதவிப் பிரமாணம்

leave a comment »

http://1.bp.blogspot.com/_qKP1tij2zvQ/SwJ_YnpCOPI/AAAAAAAAE4A/9OIRB0s4gA4/s1600/uduman.jpg

கிழக்கு மாகாண சபை பதில் முதலமைச்சராக  எஸ்.எம். உதுமான் லெப்பே பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர் கிழக்கு மாகாண சபையின் முக்கிய  உறுப்பினர் முதலமைச்சர் பிள்ளையான் பிரித்தானிய தமிழ் தகவல் நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறுபாண்மைக் கட்சிகளுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிற்சலாந்து சென்றுள்ளார் அந்த பதவிக்கான   இவ் நியமனம் இடம்பெற்றுள்ளது.

Written by lankamuslim

November 17, 2009 at 6:42 pm

சவூதி அரேபியாவில் நிர்க்கதியான இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

leave a comment »

http://www.railroadsignals.us/bm712.JPG

சவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களை மீட்டு இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பாக சவூதி அரேபியா அரசாங்கத்தடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹூஸைன் பைலா தலைமையிலான விசேட தூதுக்குழு ஒன்று இன்று சவூதி அரேபியா நேக்கிப்பயணமானது.

சவூதியில் தொழில் வாய்ப்பை இழந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஜித்தா நகரின் பாலம் ஒன்றுக்கு அடியில் தங்கியுள்ளனர் என வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களை மீட்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லயின் ஆலோசனைக்கு இணங்க இந்தத் தூதுக்குழு செல்கிறது.

Written by lankamuslim

November 17, 2009 at 12:27 pm

பௌத்த மத குருமாருக்கான கல்வி நிலையங்களில் தமிழ் மொழி

leave a comment »

http://www.topnews.in/files/Thai-Monks.JPG

பௌத்த மத குருமாருக்கான  கல்வி நிலையங்களில் தமிழ் மொழியை ஓர் பாடமாக கற்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் பௌத்த பிக்குகளாக பயிற்சி பெற்றுக் கொள்ளும் தேரர்களுக்கு தமிழ் மொழி ஓர் பாடமாக புகட்டப்படவுள்ளதென அரசியல் சாசன அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சார்த்த நடவடிக்கையாக கண்டி மல்வத்து பீடத்தை அண்டி பிரிவென் உள்ளிட்ட 50 பிரிவென்களில் தமிழ் மொழி ஓர் பாடமாக கற்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ் மொழி கற்றுக் கொண்ட சில பௌத்த பிக்குமார் தமிழ் மொழியில் தர்ம விரிவுரைகளை நடத்தி வருவதாக அரசியல் சாசன அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பிரிவென்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படவுள்ளது.

தமிழ் மொழியை பௌத்த தேரர்கள் கற்றுக் கொள்வதனால் விஹாரைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான தொடர்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், தமிழ் மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Written by lankamuslim

November 17, 2009 at 12:01 pm

முஸ்லிம் கல்வி பிரிவு உருவாக்க பட்டுள்ளது கண்டியில் புதிய ஆண்கள் முஸ்லிம் பாடசாலை உருவாகும்!

leave a comment »

கண்டி நகர முஸ்லிம்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கியுள்ள முஸ்லிம் ஆண்கள் பாடசாலை இல்லாப் பிரச்சினை விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா    தெரிவித்தார்.

அதேநேரம், மத்திய மாகாண முஸ்லிம்களின் நிண்ட கால   பிரச்சினையாக இருந்த  முஸ்லிம் கல்வி பிரிவு உருவாக்க பட்டுள்ளது இந்த முஸ்லிம் கல்வி பிரிவு இலங்கையின் முதல் முஸ்லிம் கல்வி பிரிவு என்பது குறிபிடதக்கது  இலங்கையின் எந்த மாகாணத்திலும்  முஸ்லிம் கல்வி பிரிவு இல்லை என்பதும் , முஸ்லிம் கல்வி பிரிவு உருவாக்க படுவதற்கான பாரிய தேவை இருந்தாலும் இன்னும் அதற்கான முயற்சிகள் ஆரம்ப கட்டத்தில்தான் இருந்து வருகின்றது, Read the rest of this entry »

Written by lankamuslim

November 17, 2009 at 10:25 am

முஸ்லிம் வாலிபர்களுக்கான இஸ்லாமிய விழிப்பூட்டும் நிகழ்ச்சி

leave a comment »

IMG0234A(2)SNP0055A

SNP0060ASNP0062ASri lanka Muslim youth forum:

புத்தளம் தில்லையடியில் முஸ்லிம் வாலிபர்களுக்கான இஸ்லாமிய அறிவியல்  விழிப்பூட்டும் நிகழ்ச்சி  ஒன்று நேற்று  தில்லையடி அல் அன்ஸார் பாடசாலையில் நடைபெற்றது   இந்நிகழ்ச்சியை முஸ்லிம் யூத் போரம் Muslim youth forum ஏற்பாடு செய்திருந்தது இந்நிகழ்சி ம.முஹம்மத்தின் தலைமையில் நடைபெற்றது   நடைபெற்ற இந்நிகழ்சியில் 80கும்  அதிகமான  வாலிபர்கள் கலந்து கொண்டனர் இங்கு உரையாற்றிய மௌலவி மின்ஹாஜ் இஸ்லாஹி முஸ்லிம் வாலிபர்கள் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கிகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கினார்     மேலும் “லா இலாஹ இல் அல்லாஹ்” என்பதை விரிவான  விளக்கினார்   முஸ்லிம் யூத் போரம் முஸ்லிம் வாலிபர்களுக்கான இஸ்லாமிய அறியியல்  விழிப்பூட்டும் நிகழ்சிகளை நடாத்தி வருகின்றது என்பது குறிபிட்டதக்கது-இந்த தகவலும் படங்களும்  Muslim Youth Forum எமக்கு Email மூலமாக அனுப்பியவை.

Written by lankamuslim

November 16, 2009 at 9:05 pm

அட்டாளைச்சேனை கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தபோது காணாமல்போன இரண்டு மீனவர்களில் ஒருவர் மீட்பு

leave a comment »

http://image1.oktatabyebye.com/picture-gallery-images-large/lgbeach287200701765.jpg

இரண்டு மீனவர்களும் நேற்று முந்தினம் மாலை அட்டாளைச்சேனை கடலில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று நேற்று முற்பகல் வரை கரைக்குத் திரும்பாததால் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது . கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தபோது காணாமல்போன இரண்டு பேரில் ஒருவர் நேற்றுப் பகல் மீட்கப்பட்டதாக  தெரிவிக்கபடுகிறது  மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கபடுகிறது

Written by lankamuslim

November 16, 2009 at 8:43 pm

புத்தளம் நாகவில்லு பகுதியில் ஹெரோயின் போதைப் பொருட்கள்

leave a comment »

http://www.instablogsimages.com/images/2008/12/03/340x_ibP84_17659.jpg

புத்தளம் நாகவில்லு பகுதி வீடொன்றில் இருந்து 4இலட்சம் பெறுமதியான ஹெரோயின்  போதைப் பொருட்களை கல்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று திங்கள்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து திடீர் சோதனை மேற்கொண்ட போதே இப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளது. இப்போதைப்பொருள் இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்ட விதம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 2கிலோ 40கிராம் எனவும் தெரிவித்த பொலிஸார் பிரஸ்தாப  சந்தேகநபரை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Written by lankamuslim

November 16, 2009 at 8:18 pm

அமைச்சர் றிஸாத் பதியுதீனின் வாகனம் விபத்திற்கு உள்ளானதில் அமைச்சர் காயமடைந்தார்!

leave a comment »

http://www.telonews.com/sritelo/wordpress/wp-content/uploads/2009/05/n21.jpg

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிஸாத் பதியுதீன் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்திற்குள்ளானதில் அமைச்சர் காயமடைந்துள்ளார். மனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்தின்போது வாகனம் பலத்த சேதமடைந்துள்ளபோதும் அமைச்சர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வீதியின் குறுக்கே பாய்ந்த சிறுவனை தவிர்ப்பதற்கு சாரதி முயற்சி மேற்கொண்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Written by lankamuslim

November 16, 2009 at 8:08 pm

கூட்டுப்படைகளின் பிரதானியாக ரொஷான் குணதிலக நியமனம்

leave a comment »

விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவை கூட்டுப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கூட்டுப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் தனது பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்ததையடுத்து, ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமையாற்றும் அதேவேளை விமானப்படைத் தளபதியாகவும் ரொஷான் குணதிலக கடமையாற்றுவார் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Written by lankamuslim

November 16, 2009 at 2:52 pm

சரத் பொன்சேகா அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தை ஏற்க முடியாது: தேசிய பிக்குகள் முன்னணி

leave a comment »

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா திட்டமிட்ட வகையில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.அண்மையில் களனிப் பிரதேசத்தில் வைத்து ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பப்பட்டது.

இந்தச் சம்பவம் முழு இனத்திற்குமே ஏற்பட்ட அவமானமாக கருதப்பட வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொடிய தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பணிகளில் முக்கிய பங்காற்றிய இராணுவத் தளபதியை கௌரவத்துடன் நேசிக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லதொழித்த சரத் பென்சேகா என்றென்றும் போற்றப்பட வேண்டிய நபர் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு சேவை ஆற்றியிருந்த போதிலும் கட்டளைகளுக்கு அடிபணியாதவர்களுக்கு இவ்வாறான ஓர் கதியே ஏற்படும் என்பதனையே சரத் பொன்சேகாவின் விவகாரம் எடுத்தியம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இணையத்தள செய்தி

Written by lankamuslim

November 16, 2009 at 2:48 pm

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!

leave a comment »

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. விரிவாக பார்க்க

Written by lankamuslim

November 16, 2009 at 1:07 pm

20 வருடங்களின் பின் யாழ்-மன்னார் பஸ் சேவை

leave a comment »

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ஏ9 விதியூடான போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிகப்பட்டிருப்பதாக இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலைக்கான அதிகாரி தெரிவித்தார்.

மன்னாரில் இருந்து நாளாந்தம் காலை 6 மணிக்கு மன்னாரி அரச பஸ் தரிப்பிடத்தில் இருந்து பஸ்ஸொன்று இச்சேவையில் ஈடுபடும்.மன்னாரில் இருந்து புறப்படும் பஸ் வவுனியா சென்று சோதனை நடவடிக்கைகளின் பின் ஏ 9 வீதியூடாக நேரடியாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.

பயணிக்கும் ஒவ்வொருவரும் தேசிய அடையாள அட்டையின் 3 பிரதிகளை எடுத்துவருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 20 வருடங்களின் பின் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 வீதியூடான நேரடி போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Written by lankamuslim

November 16, 2009 at 12:40 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers