Lankamuslim.org

One World One Ummah

Archive for October 26th, 2009

அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம் ஹனிபா (மதனி) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு

leave a comment »

Haniffa Mathani-2

கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரும், பிரபல சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனிபா மதனீ அவர்கள்அக்கரைப்பற்று பிரதேசத்தில்   ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு  அறிவுறுத்தலின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட தொடர்பாக  அமைச்சர் அதாவுல்லா உட்பட மூவருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை சட்டத்தரணி ஜெயம்பதி விக்ரமரட்ண மூலமாக பதிவு செய்துள்ளார்

ரமழான்  மாதமான செப்டம்பர் மாதம் 16ம் திகதி அஷ்ஷெய்க் நோம்பிருந்த சமயத்தில் அவரது வீட்டிற்கு வெள்ளை வான் ஒன்றில் வந்த அமைச்சர் அதாவுல்லாவின் ஆட்கள் என குற்றம் சுமத்தபட்டுள்ள  ஆயுததாரிகள் அஷ்ஷெய்க்  ஹனிபாவை பலவந்தமாக கடத்திச் சென்றனர்.

இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அஷ்ஷெய்க்  ஹனிபாவால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோது அக்கரைப்பற்று பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அஷ்ஷெய்க் ஹனிபாவினால் கூறப்படுகின்றது.

இதையடுத்து சட்டத்தரணி ஜெயம்பதி விக்ரமரட்ண அவர்கள் அஷ்ஷெய்க் ஹனிபா சார்பாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கின் பிரதிவாதிகளாக அமைச்சர் அதாவுல்லா ,அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவில் சட்டத்தரணி ஜெயம்பதி விக்ரமரட்ண தனது கட்சிக்காரார் கடத்தப்பட்டது

(1) அடிப்படை மனித உரிமை மீறல் என நீதி மன்று    தெரிவிக்கவேண்டும் எனவும்
(2) கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும்
(3) கட்சிக்காரருக்கு நஸ்ட ஈடு
(4) வழக்கு மற்றும் ஏனைய செலவுகளும் வழங்கப்படவேண்டும்

எனவும் மனுவில் கோரியுள்ளார் இன்று வெளியான செய்திகள் குறிபிடுகின்றன அகில இன நல்லுறவு ஒன்றியம் தேசிய ரீதியில் நடத்தும் 14வது சாமஸ்ரீ பாராட்டு விழாவின்போது அஷ்ஷெய்க் ஹனிபா மதனீ அவர்கள் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்காகவும், பொதுப்பணிகளுக்காகவும் ‘சாமஸ்ரீ தேசமான்ய’ மற்றும் ‘சமூகஜோதி’ என இரட்டைப்பட்டங்கள் வழங்கி கௌரவித்தது  என்பது குறிபிடதக்கது

இவர் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக கலைத்துறைப் பட்டதாரியும், சவூதி அரேபிய மதீனா பல்கலைக்கழக அரபு இலக்கியத்துறை விஷேட பட்டதாரியுமாவார்.

அரபுமொழி மூல பல்கலைக்கழகமொன்றில் அரபு மொழி மூலம் அரபு இலக்கியத்தைக் கற்று பட்டம் பெற்ற இலங்கையின் முதல் பட்டதாரியான இவர் என்பது குறிபிடதக்கது

Written by lankamuslim

October 26, 2009 at 4:55 pm

இலங்கை முஸ்லிம்களின் கல்வி பிரச்சினை தொடர்பாக அறிக்கை

leave a comment »

இலங்கை  முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் அமைச்சில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கலாநிதி ஏ. ஜி. ஹுசைன்  இஸ்மாயில், எஸ். எச். எம். ஜமீல், தேசபந்து  இஸ்மாயில் ஆகிய கல்வியியலாளர்களைக் கொண்ட குழுவை கல்வி அமைச்சு நியமித்திருந்தது.

Written by lankamuslim

October 26, 2009 at 12:53 pm

வடமாகாண முஸ்லிம் அகதி வாழ்வுக்கு வயது 19 முடிந்து 20 ஆரம்பம் !

with 4 comments

ஒக்டோபர் 1990ஆம் ஆண்டு  முஸ்லிம்களுக்கு நீண்ட அகதி வாழ்கை ஆரம்பித்த ஆண்டாகும். முஸ்லிம்களின்  பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு பத்தொன்பது  ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. இந்த மாதத்துடன் இருவதாம் வருடம் ஆரம்பித்து விட்டது

வடமாகாணத்தின் யாழப்பாணம் முல்லைதீவு வவுனியா மன்னார் கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலட்சதுக்கும் அதிகமான   முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்த நடவடிக்கைக்கு முன்னர்  வடக்கில் இஸ்லாமிய துடிப்புள்ள பல வாலிபர்கள் புலிகளால் கடத்தபட்டனர் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் பல முஸ்லிம் வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் , கடத்தப்பட்டு கானாமல் போனார்கள்     அக்டோபர் மாதம் 22ஆம்திகதி வட புல  முஸ்லிம்கள் . உடமைகள் எல்லாம் அபகரிகப்பட்டு தமது தாய் மண்ணை விட்டு  வெறும்கையோடு விரட்டப்பட்டனர். யாழ்பாண முஸ்லிம்களுக்கு வெறும் இரண்டு மணித்தியால அவகாசமே வழங்கப்படது. கோடிக்கணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள் வெறும் இரண்டு மணித்தியால அவகாசத்தில் அனைதையும் இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர்    ஏனைய மாவட்ட முஸ்லீம்களுக்கு 24 மணித்தியாலம் தொடக்கம்  48மணித்தியால அவகாசம் வழங்கப்பட்டு அகதிகளாக ஆக்கப்பட்டனர்.

யாழ்பாண முஸ்லிம்களை விரட்டி வெளியேற்றும் நோக்கோடு 35 முஸ்லிம் வர்தகர்களை புலிப்பயங்கரவாதிகள் கடத்திசென்றனர். இவர்களில் புலிகளுக்கு இலச்சக்கணக்கில் கப்பம் வழங்கிய 18 முஸ்லீம் வர்தகர்கள் சிலமாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் சித்திரவதை செய்து கொல்லபட்டனர்  சித்திரவதை செய்து கொல்லபட்டவர்களில்  பிரபல வர்தகர் மிக வயதானவர் இவர் தலை கீழாக கட்டப்பட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டார்  ஏணையோர்  பற்றிய தகவல்கள் கொல்லபட்டனர் என்பதை தவிர வேரு எதுவும்    இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. வடமாகாணத்தில்   இருந்த முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள்

ஒருபாரிய கொடுரத்துக்கு வடக்கு முஸ்லிம் முகம்கொடுத்து பத்தொன்பது  வருடங்கள் ஓடிவிட்டன. வடக்கை விட்டு விரட்டப்பட்ட முஸ்லிம்கள்  இன்னமும் சிறிய பெறிய  அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மன்னாரிலிருந்து விரட்டப்பட்டு புத்தளம் அகதி முகாமில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அகதிகளின் அவலங்கள் சொல்லமுடியாதவைகள். இவர்கள்  பறிகொடுத்து விவசாயக்காணிகள் வாழ்நிலங்கள்  தோட்டங்கள் பலவகை விவசாய காணிகள் என்ற பாரிய கிராமிய பொருளாதாரமாகும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இழந்தது கோடிக்கணக்கான மிக  பாரிய நகர பொருளாதாரம் என்றால் மன்னார் ,முல்லைதீவு  கிழிநொச்சி முஸ்லிம்கள் இழந்தது கோடிக்கணக்கான கிராமிய , நகர பொருளாதாரமாகும்  இழந்தவை இழந்தவைதானா இழந்தவை மீண்டும் கிடைக்குமா ? அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டவர்களின் கைகளை விட்டும் மீண்டும் அதிகாரம் பறிக்கபட்டுள்ளது  இந்த பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகள் வேருடன் புடுங்கி எறியபட்டுள்ளனர் எனிலும்    வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீகளில் எண்பது சதவீதமானவர்கள் இன்னமும் தமது தாய் மண்ணுக்கு திரும்பவில்லை.

Written by lankamuslim

October 26, 2009 at 11:59 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers