Archive for October 13th, 2009
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் நாளை சுனாமி ஒத்திகை

உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் 18 நாடுகளில் இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்க உள்ளன.
உலக பேரழிவு குறைப்பு தினத்தை முன்னிட்டு அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளை காலை 6.30 மணிக்கு சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.
நாளை ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிகின்றன .
720 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக நீளமான கிண்ணியா பாலம்

சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதி உதவியில் 720 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிண்ணியா பாலம் இம்மாதம் 20 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பாலத்தின் மூலம் கிண்ணியா மக்களின் மிக நீண்டநாள் கனவு நனவாகியிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பாலத்தின் மூலம் மூதூரில் இருந்து பொத்துவிலுக்கான பொதுப் போக்குவரத்தும் இலகுவாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதே நேரம் ஓட்டமாவடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாலத்தின் நிர்மாணப்பணிகளும் முடிவடையும் கட்டத்தை அடைந்துள்ளன மட்டக்களப்பு நெடுஞ்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் இப்பாலம் பொதுமக்களிடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காதி நீதிமன்றில் மனைவியை கணவர் கத்தியால் குத்து

தலாக் பெற முயற்சித்த மனைவியை கணவர் காதி நீதிமன்றில் வைத்து கத்தியால் குத்திவிட்டு கத்தியுடன் பொலீசில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பொத்துவில் காதி நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. மனைவியை கணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றுப் பகுதியில் இரு இடங்களில் குத்தியுள்ளார். குடல் வெளியில் வந்து இரத்தம் பீறிட்ட நிலையில் அப்பெண் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலைக்குள்ளான நான்கு பிள்ளைகளின் தாயான அப்பெண் பொத்துவில் வைத்தியசாலையிலிருந்து அவசர சிகிச்சைக்காக அக்கரைப்ப்று மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். கத்தியால் குத்தியவர் பொத்துவில் பிரதான சந்தையில் மாட்டு இறைச்சிக்கடை நடத்துபவராவார் எனத் தெரிகிறது
யாழ்ப்பாண மாநகர சபையின் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்


|
|
யாழ்ப்பாண மாநகர சபையின் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர் முதல்வராக யோகேஸ்வரி பற்குணராசா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
அத்துடன், யாழ். மாநகரசபையின் பிரதி முதல் வராகக் துரைராசா இளங்கோவும் தெரிவான ஐந்து முஸ்லிம் உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர் என்பது குறிபிடதக்கது . அத்துடன் ஏனையஉறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
யாழ். மாநகரசபையின் முதல்வராகத்தாம் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் தமது சத்தியப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டமைக்கான காரணத்தை அதன்போது திருமதி பற்குணராசா யோகேஸ்வரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தவை வருமாறு: எமது சகோதர இனமான முஸ்லிம் மக்கள் 1990 ஆம் ஆண்டு முதல் புத்தளம், சிலாபம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இருப்பினும் கடந்த யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமது பங்களிப்பை அவர்கள் வழங்கியிருந்தனர்.
இதனால், உதவி மேயர் பதவியை தங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் பதவியேற்பு வைபவம் காலதாமதமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு கலந்துரையாடல்களின் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பேரில் ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர்களுக்கு உதவி மேயர் பதவி வழங்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் ஒன்று நாங்கள் போட்டியிட்ட ஐ.ம.சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த முன்னிலையில் கைச்சாத்தாகியுள்ளது. இதன் காரணமாகவே பதவியேற்பு வைபவம் கால தாமதமானது என்றார். இப்பதவியேற்பு வைபவத்தின்பின்னர் வட மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட புத்திஜீவிகள் நூறு பேரும் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினர்.
“முஸ்லிம்” -என்பது விட்டுகொடுக்க முடியாத எமது அடையாளம்: M.ஷாமில் முஹம்மட்

நமது சமூக அடையாளம் ?
நமது அரசியல் அடையாளம் ?
நமது வரலாற்று அடையாளம் ?
நமது கோட்பாட்டு அடையாளம் ?
நமது இஸ்லாமிய கிலாபத் அடையாளம் ?
இருப்பு சிந்தனையை தீர்மானிக்கிறது இருப்பு என்பது புறச்சுழல் சிந்தனை என்பது அகச்சூழல் . ஒரு முஸ்லிமை பொருத்தவரை சிந்தனைதான் இருப்பை தீர்மானிக்க வேண்டும் ஒரு முஸ்லிம் விவசாயியாகவும் தொழிலாளியாகவும் முதலாளியாகவும் மத்தியதர உயர்தர வர்க்கத்தவனாகவும் இருகிறான் இது வர்க்க அடையாளம் , ஒரு முஸ்லிம் வடக்கு சார்ந்தவனாக கிழக்கு சார்ந்தவனாக இருகிறான் இது பிரதேச அடையாளம், ஒரு முஸ்லிம் ஆணாகவோ பெண்ணாகவோ இருகிறான் இது பாலியல் அடையாளம் ஒரு குடும்பதுக்குள் தந்தையாக, தாயாக, மகனாக இருகிறான் இது உறவு முறை அடையாளம் .
இந்த அடையாளங்களைப் போன்ற ஒரு அடையாளம்தான் மொழி அடையாளம் மொழி ரீதியாக தமிழ் பேசுபவானாக, சிங்களம் பேசுபவானாக, அரபு பேசுபவானாக, சீன மொழி பேசுபவானாக இருகிறான் இது மொழிஅடையாளம் விரிவாக பார்க்க
இந்த அடையாளங்கள் எல்லாம் முஸ்லிம் என்ற சிந்தனை கோட்பாட்டு அடையாளத்தினுள் மிக சிறிய அடையாள அடுக்குகளாக இருக்கிறது இந்த சிறிய அடையாள அடுக்குகளை புறக்கணித்து முஸ்லிம் என்ற அடையாள முத்திரையை ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுதான் இஸ்லாமிய சித்தாந்தம் போதிக்கும் அடையாளமாகும் விரிவாக பார்க்க Read the rest of this entry »









