Archive for October 2009
கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்:
![]() |
மனோகணேசன் எம்பி, மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் அழைப்பு
கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.
மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமையிலான முஸ்லிம் உரிமைகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தமது ஒத்துழைப்பை இந்த அராஜகத்திற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மாகாணசபை உறுப்பினருமான எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 19 வருடங்கள் பூர்த்தி
![]() |
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன்(2009.10.30) பத்தொன்பது வருடங்கள் பூர்த்தியடைந்தன. 1990ஆம்ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும், இத்தினத்தை நினைவு கூறும் வகையிலும் முஸ்லிம் சமாதான பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
சமாதான செயலகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.சுஹைர் தலைமையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்,பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை வெளியிடப்பட்டது.
அவை வருமாறு :
1) இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து, ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளுடன், அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
2) பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு, இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும்,வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டயீடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.
3) மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம்,தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
4) மீள்குடியேற்றத்தின் போது 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு,முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
5) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு PRESCRIPTION ORDINANCE எக்காரணம் கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.
6) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்.
7) 1990இல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாகக் காணிகள் வழங்கப்பட வேண்டும்.
8பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும், நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்து வருகின்றது. சுமார் 19 வருடகாலப் பகுதியில், ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.
9) அரச நியமனங்கள், வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக, நிறைவாக வழங்கப்பட வேண்டும்.
10) யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரை காலமும் தகவல் இல்லாத முஸ்லிம் குடும்பங்களுக்குத் துரிதமாக நஷ்டஈடு வழங்கப்படுவதுடன், மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.
11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் நிமித்தம் புத்தளம் பிரதேச பூர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு, கல்வி, அரச நியமனங்கள், தொழில்வாய்ப்பு, சுகாதாரம், பல்கலைக்கழக அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான, இழப்புகளும் அவசரமாக உரிய முறையில் ஈடு செய்யப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகள் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
virakesari
மறக்கமுடியுமா வடமாகாண முஸ்லிம் பட்ட ரணங்களை அகதிக்கு வயது 19 முடிந்து 20 ஆரம்பம் !
காட்சிகள் யா- டிவி
ஒக்டோபர் 1990ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு நீண்ட அகதி வாழ்கை ஆரம்பித்த ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பயங்கரவாதம் முஸ்லிம்கள் மீது வெறித் தாண்டவம் ஆடிய ஆண்டாகும். இந்த ஆண்டோடு பத்தொன்பது ஆண்டுகள் முடிந்து விட்டது . இந்த மாதத்துடன் இருவதாம் வருடம் ஆரம்பித்து விட்டது ஆனாலும் அகதி வாழ்கை தொடர்கிறது.
முடிவில்லாமல் இருபது வருடங்களாக தொடர்கின்றது புயலிலும் கொட்டும் மழையிலும் சேற்றிலும் கொடிய வெயிலிலும் அகதியாக இருபது வருடங்கள் சுமார் இரண்டு இலச்சம் முஸ்லிம் அகதிகளுடன் தொடர்கிறது சில மாதங்கள் முகாம்களில் தமிழர் படும் கஷ்டங்களை பூதாகரமாக பேசிய வர்கள் வடமாகாண முஸ்லிம்களை திரும்பியும் பார்க்கவில்லை
தப்பிக்க முயன்றவர் கடலில் மரணம் : பம்பலப்பிட்டியில் சம்பவம்
வாகனங்களுக்குக் கல் எறிந்த மேற்படி சந்தே நபரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இரு இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்குச் சென்ற போது அவர் கடலில் பாய்ந்து மரணித்ததாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபரும் பேச்சாளருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பு, குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
மேலதிக விபரத்துக்கு இங்கு கிளிக் செய்யவும்
இணைப்பு-2
சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு, இவரை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இடம்பெற்றபோது கடற்கரைக்குச் சென்றதாகக் கூறப்படும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
நாடு பூறாவும் முஸ்லிம் பிரதேசங்களில் ஹஜ் யாத்திரை செல்வோரை சந்திக்கும் நிகழ்ச்சிகள்

மாத்தளை டவுன் மஸ்ஜித்
காத்தான்குடி , நிந்தவூர் , கல்முனை ,புத்தளம் , கண்டி , மாத்தளை போன்ற பிரதேசத்திலிருந்து இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ்ஜாஜிகளை சந்தித்து முஸாபகா, சலாம் வழங்கும் மற்றும் தமக்காக பிராத்திக்க வேண்டியும் கூறும் வைபவம் இன்று
மஸ்ஜிதுகளில் இன்று நடைபெற்றுள்ளது .
காத்தான்குடி பிரதேசத்திலிருந்து இம்முறை 50இற்கும் மேற்பட்ட பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். என்பதும் இலங்கையில் இருந்து 5800 ஹஜ்ஜாஜிகள் ஹஜ் யாத்திரை செய்வார்கள் என்பதும் குறிபிட்ட படவேண்டிய விடையம்
‘சண்டேலீடர்’ ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்:விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு
![]() |
‘சண்டேலீடர்’ செய்திப் பத்திரிகையின் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
‘சண்டே லீடர்’ பத்திரிகையின் இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு, ‘சண்டேலீடரி’ன் பிரதம ஆசிரியர் பிரெடெரிக்கா ஜென்ஸ் மற்றும் செய்தி ஆசிரியர் முனாஸ் முஸ்தபா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனக் கோரியுள்ளது.
‘சண்டேலீடரி’ன் நிர்வாக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இந்த வருட ஆரம்பத்தில் அவரது அலுவலகத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டு விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜென்ஸுக்கும் முஸ்தபாவுக்கும் கடந்த வாரத்தில் பல அச்சுறுத்தல் கடிதங்கள் கிடைத்துள்ளன. அக்கடிதங்களில், “எழுதுவதை நிறுத்துமாறு” அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
virakesar
அன்று கருணா முஸ்லிம்கள் பற்றி குறிபிட்ட சில விடையங்கள்
அன்று கருணா அம்மான் இன்றைய அமைச்சர் புலிகளின் கிழக்கு தளபதியா இருந்த போது வெளிநாடு ஒன்றில் முஸ்லிம்கள் பற்றி குறிபிட்ட சில விடையங்கள்
சீனாவில் சிங்கியாங் பிரதேசத்தில் 6 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை

சீனாவில் சிங்கியாங் மாநிலத்தில் நிகழ்ந்த இன வன்முறைக் குக் காரணமா னவர்கள் என அரச நீதிமன்றம் 6 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இவர் கள் 6 பேரும் உய்கோ இன முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இனக் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் களாக உள்ள நிலையில் முஸ்லிம்களே கலவரத்தை தூண்டியவர்கள் என்று குற்றம் சுமத்தியிருப்பதும் அரசாங்கத்தின் பாராபட்சத்தைக் காட்டுகின்றது என உய்கோ முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவர் எனக் கருதப்படும் லிபியா கதீர் குறிப்பிட்டுள் ளார். சீனாவில் பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கதீர், இந்நடவடிக்கை சர்வதேச சட்டங்களை சீனா மீறுவதை எடுத்துக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் நாடுகளில் நிலவும் வன்முறைகள் வெளிநாட்டு முகவர்களால் திட்டமிடப்படுகின்றன
முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் வன்முறைகள், தாக்குதல்களை வெளிநாட்டு முகவர்கள் மறைமுகமாகத் திட்டமிட்டு நடத்துவதாக ஈரான் ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமய்னி தெரிவித்தார்.ஈரானிலிருந்து இம்முறை புனித ஹஜ்ஜிக்குச் செல்வோருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆயதுல்லா அலி கொமய்னி இதைக் கூறினார்.
பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் மோதல்களால் முஸ்லிம் சகோதரர்கள் பலியாகின்றனர். ஷியா சுன்னி முஸ்லிம் பிளவுகளை ஆழமாக்கி எமது எதிரிகள் முஸ்லிம் சமூகத்தைக் கூறுபோடுகின்றனர்.அண்மையில் ஈரானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலும் வெளிநாட்டு முகவர்களின் கைவரிசையென்றும் ஆயதுல்லா அலி கொமய்னி சுட்டிக்காட்டினார்.
புனித ஹஜ் கடமைக்காக மக்கா செல்வோர் எமது எதிரிகளுக்கு நமது ஒற்றுமையைக் காட்டவேண்டும். முஸ்லிம் உலகுக்கெதிராகப் புரியப்படும் சதித் திட்டங்களை முறியடிக்கும் உள்ளுணர்வும் ஒற்றுமையும் ஹஜ் கடமைகளில் வெளிவரவேண்டுமென்றும் ஆயதுல்லா அலி கொமய்னி குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 120 முஸ்லிம்கள் வபாதானார்கள் 200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 120 முஸ்லிம்கள் வபாதானார்கள் 200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பெஷாவர் நகரில் உள்ள யாட்கர் சவுக் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மீன பஜாரில்,இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை என்றபோதிலும்,தற்கொலை தாக்குதல் மூலமே இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு குறித்த தாலிபான் மற்றும் அல் கைதா தரப்பில் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கபட்டுள்ளது இஸ்லாமிய போராட்டத்தில் பொது மக்களை இலக்கு வைக்கும இப்படியான தாக்குதல்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் குழப்ப நிலைகளைத் தூண்டுவதன் மூலம் உலகளாவிய இஸ்லாமிய போராளிகளை முஸ்லிம் சமுகத்தில் இருந்து தூரப்படுத்தி இஸ்லாத்தை பலவீன படுத்தும் செயல்பாட்டில் இதுவும் ஒரு கட்டம் என விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன அமெரிக்காவின் மத்திய புலனாய்வுக் பிரிவு (சி.ஐ.ஏ), பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் இணைந்து தாலிபான்களை உருவாக்கியதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி அண்மையில் கூறியுள்ளமை குறிபிடதக்கது
எங்கும் தலைமை! எதிலும் தலைமை!

“லா இஸ்லாம இல்லா பி ஜமாஅதின்
லா ஜமாஅத இல்லா பி இமாரதின்
லா இமாரத இல்லா பி இதாஅதின்”
கூட்டமைப்பு இல்லாமல் இஸ்லாம் இல்லை
தலைமை இல்லாமல் கூட்டமைப்பு இல்லை
கீழ்ப்படிதல் இல்லாமல் தலைமைத்துவம் இல்லை!”
“முஸ்லிம்கள் எங்கிருந்த போதிலும் சரி, எப்படிப்பட்ட சூழலில் இருப்பினும் சரி, சுதந்திரமாக வாழ்ந்தாலும் சரி, அடிமைப் படுத்தப் பட்டிருப்பினும் சரி, ஒரு சிறிய பணியைச் செய்து முடிப்பதாயினும் சரி, மிகப் பெரும் போர் ஒன்றை வழி நடத்துவதாயினும் சரி – அவர்களுக்குத் தலைமை அவசியம்.
சுருங்கச் சொன்னால் தலைமை என்று ஒன்று இல்லாத நேரம், இல்லாத சூழல், இல்லாத நிலைமை – முஸ்லிம் சமுகத்திற்கு இருக்கவே முடியாது. இதனை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை மூலமாக நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். விரிவாக பார்க்க
தமிழ் முஸ்லீம் கட்சிகள் கூட்டமைப்பு

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தலைமையில் அண்மையில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லீம் கட்சிகள் கூட்டமைப்பு ஒன்றினை அமைப்பது தொடர்பாக சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளன. ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரா.சம்பந்தன், த.வி.கூ தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர் குமார், ஜனநாயக மக்கள் முன்னணி மனோ கணேசன் ஆகியோர் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அடிப்படை விடயங்களில் ஒர் பொது இணக்கப்பாடு காணப்படல் போன்ற விடயங்களில் இணைந்து செயலாற்றுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் பேசும் கட்சிகளிடையே அடிப்படையில் ஒர் ஒற்றுமைப்பாடு இருக்கவேண்டும் என்பதை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேலும் சந்திப்புக்களை மேற்கொள்வது என்று இணக்கம் காணப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்று குறிபிட்டால் சிங்களம் பேசும் முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலம் பேசும் முஸ்லிம்கள் என்ற பிரிவினைக்கு வழிவகுக்கும் , முஸ்லிம் கட்சி , தமிழ் கட்சி என்ற பிரயோகம் சரியானதாக எமக்கு தெரிகின்றது .
யாழ்.மாநகர சபையின் முதலாவது அமர்வும்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதலாவது கூட்டமும், அதற்கான ஆரம்ப வரவேற்பு நிகழ்வும் நேற்று சிறப்பாக நடைபெற்றன.
ஆரம்ப நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. சபையின் முதலாவது அமர்வு மாலை 6.30 மணியளவில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் அவரின் புதிய அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது இதில் ஐந்து முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்களும் சமுகமளித்திருந்தனர் இந்த நிகழ்வுகளை பார்பதற்கு யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலர் அங்கு கூடி இருந்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புத்தர் சிலை பிரதிஷ்டை

![]() |
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள அரச மரத்திற்கு முன்பாக புத்தர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி நாவற்குடாவிலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமொன்றும் நடைபெற்றது. பொலிஸ், இராணுவம் உட்பட பாதுகாப்பு தரப்பினரும்,பௌத்த பிக்குமார்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரும் இதில் கலந்து கொண்டனர்
முதலாவது ஹஜ் குழு இன்று மக்கா பயணம் இலங்கையர் 5800 பேருக்கு அனுமதி
முதலாவது இலங்கை ஹஜ் பிரயாணிகள் குழு இன்று ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்குச் செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.இம்முறை இலங்கையைச் சேர்ந்த 5800 ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகச் செல்ல உள்ளனர். இதன் அடிப்படையில் முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 50 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு இன்று செல்லவுள்ளனர்.
ஹஜ் யாத்திரிகர்களை வழியனுப்பிவைக்கும் உத்தியோகபூர்வ வைபவம் எதிர்வரும் முதலாம் திகதி காலை 10.30 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறும். அன்றைய தினம் 210 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர்
இலங்கை – இந்திய முஸ்லிம்கள் குறித்த ஒரு காரசாரமான சம்பாஷனை-

இஸ்லாம் போதிக்கும் மானிட தேசியத்தை இஸ்லாம் , முஸ்லிம் என்ற அடையாளத்துக்குள் இருந்து போதித்தால் சிரப்பானது என்பது எமது கருத்து
இலங்கை – இந்திய முஸ்லிம்கள் குறித்த ஒரு காரசாரமான சம்பாஷனை சுவிஸ் தமிழ் ரேடியோ ஒன்றில் 07 ஜுன் 2009 அன்று ஒளிபரப்பானது இதில் இலங்கை அரசியல், இலங்கை தமிழரும் இலங்கை முஸ்லீம்களும் பற்றிய விடையம் அதாவது முஸ்லிம் அடையாளம் பற்றிய விடையம் புலிகளின் இன வாதம் படுகொலைகள் , முஸ்லிம்களின் வெளியேற்றம் ,முஸ்லிம்களின் பூர்வீகம் , முஸ்லிம்களின் தாய் மொழி இவை குறித்த கலந்துரையாடல் இதில் எஸ்.எம்.எம்.பஷீர் சட்டத்தரணி – முஸ்லீம் தகவல் நடுவம் (லண்டன்) கவிஞர் ஆங்கில தமிழ் எழுத்தாளர் மற்றும் ஆரூர் புதியவன் ( ஹாஜா கனி) தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (மாநில துணைச் செயலர்)சென்னை காயிதே மில்லத் கல்லூரி ( தமிழ் துணைத் தலைவர்) மக்கள் உரிமை பத்திரிகை (இணை ஆசிரியர்) கவிஞர் ஆகிய இருவரும் பங்குபற்றினர்
இதில் எஸ்.எம்.எம்.பஷீர் அவர்கள் முஸ்லிம் என்ற அடயாளத்தை மிக ஆணித்தனமாக முன்வைக்க ஹாஜா கனி அவர்கள் தமிழ் என்ற அடயாளத்தை முன்வைக்கிறார் -இதில் வேடிக்கை என்னவென்றால் இஸ்லாமிய இயக்கம் ஒன்றின் அரசியல் கட்சியின் மாநில துணைச் செயலர் தமது பிரதானஅடையாளத்தை இன்னும் விளங்காமல் இருப்பதுதான் இந்திய தமிழ் நாட்டு தமிழ் பேசும் முஸ்லிம்கள் தம்மை தமிழர்கள் என்றுதான் பிரதானமாக அடையாள படுத்துகின்றனர் , கஷ்மீர் முஸ்லிம்கள் பெண்கள் பாலியல் கொடூரங்களுக்கு உட்படும்போது கூட ஆர்பாட்டம் செய்யாத தமிழ்நாடு முஸ்லிம்கள் இலங்கையில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வீதிக்கு இரங்கி ஆர்பாட்டம் செய்தனர் இது ஒரு நல்ல உதாரணம் இவர்கள் எப்படி தம்மை அடையாள படுத்துகின்றார்கள் என்பதற்கு தம்மை இவர்கள் முஸ்லிம்களாக அடையாள படுத்தினால் இந்தியாவில் முஸ்லிம்கள் மீண்டும் தலைநிமிர்த்து வாழமுடியும் மிக பிரமாண்டமான அரசியல் பலத்துடன் கூடிய பாதுகாப்புடன் வாழமுடியும் கஷ்மீர் குஜராத் கோவை போன்ற படுகொலைகளையும் கூட தவிர்த்து விடலாம் இலங்கை முஸ்லிம்கள் தம்மை முதலில் முஸ்லிம் என அடையாள படுத்தியதன் பலன் இன்றுள்ள அரசில் மத்திய அமைச்சர்களாக 18 முஸ்லிகள் இருக்கிறார்கள் இலங்கையில் முஸ்லிம்கள் 7.6 வீதம் ஆனால் இலங்கையின் நிர்வாக இயந்திரத்தில் மிக பலமான நிர்ணய சக்தியாக இருகின்றனர் ஆனாலும் இலங்கை முஸ்லிம்கள் அடைய வேண்டியவை நிறையவே இருக்கிறது இந்த இருவரின் சம்பாஷனையை கேற்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
புத்தளம் தனியார் பயணிகள் பஸ் சேவை பணிப் பகிஷ்கரிப்பு
புத்தளம் கொழும்பு வீதி சேவை மற்றும் கற்பிட்டி புத்தளம் வீதி சேவையில் ஈடுபட்டிருந்ததனியார் பயணிகள் பஸ் சாரதிகள் மேற்கொண்டிருந்த பணிப் பகிஷ்கரிப்பு நேற்று இடம் பெற்றது
கடந்த சனிகிழமை கற்பிட்டி புத்தளம் வீதி சேவையில் ஈடுபட்டிருந்ததனியார் பயணிகள் பஸ் நடத்துனரை ஒரு குழுவினர் தாக்கி காயபடுத்தியுள்ளனர் இது போலீசில் முறைபாடு செய்யபட்டும் இது வரை சம்மந்த பட்டவர்கள் கைது செய்பட வில்லை என்பதை கண்டித்து சம்மந்த பட்டவர்கள் கைது செய்பட வேண்டும் எனக் கோரியும் இந்த பணி பகிஷ்கரிப்பு நடத்தபடுகின்றது இந்த பணி பகிஷ்கரிப்பால் புத்தளம் கொழும்பு வீதி புத்தளம் கற்பிட்டி சேவையில் ஈடுபட்ட பல பஸ் வண்டிகளின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
கி.மா.முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்து;மூவர் பலி
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் பயணம் செய்த வாகனமொன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்திலேயே பலியானார்கள் .
வாகன திருத்த வேலைகளுக்காக குறித்த இராணுவ வீரர்கள் இவ் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை குருநாகல் மாவட்ட கோக்கரல்ல என்னுமிடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனம் பாதைய விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளதாக சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிசார்
கந்தளாய் முஸ்லிம்களுக்கு லங்கா மரக்கல என்ற அடையாளம்
![]()
கந்தளாய் பிரதேசதில் பிறப்பு சான்றிதல் லங்கா மரக்கல என பதியபடுகிரது இலங்கையில் பொதுவாக அந்த பகுதியிலும் வைத்திய சாலையில் பிறக்கின்ற முஸ்லிம் குழந்தைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் தகப்பன் சாதி, தாய் சாதி எனக் கோரப்படும் இடத்தில் தமிழ் பதிவில் இலங்கை சோனகர் என்றும் சிங்கள பதிவில் லங்கா சோனகர் என்றும் பதியப்பட்டு வருகின்றன.
ஆனால் கந்தளாய் பிரதேசதில் மட்டும் அங்கு வைத்தியசாலையில் பிறக்கின்ற முஸ்லிம் குழந்தைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் அண்மைக் காலங்களாக தகப்பன் சாதி, தாய் சாதி எனக் கோரப்படும் இடத்தில் லங்கா மரக்கல எனக் பதிவு செய்படுகிறது லங்கா மரக்கல என்பது கட்டுமரம் அல்லது கள்ள தோணி எனக் தெரிவிக்க படுகிறது என்பதால் இலங்கை முஸ்லிம்கள் “கள்ள தோணி” என்று சாதி பெயர் பதிய படுவதாக அந்த பிரதேச முஸ்லிம்கள் தெரிவிப்பதாக பத்திரிகை செய்தி ஒன்று குறிபிடுகின்றது ஆனால் உண்மயில் தகப்பன் சாதி, தாய் சாதி எனக் கோரப்படும் இடத்தில் “இலங்கை முஸ்லிம்”என்பதுதான் மிகசரியான பதிவாகவும் அடையாளமாகவும் இருக்கும்
அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம் ஹனிபா (மதனி) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு

கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரும், பிரபல சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனிபா மதனீ அவர்கள்அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு அறிவுறுத்தலின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட தொடர்பாக அமைச்சர் அதாவுல்லா உட்பட மூவருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை சட்டத்தரணி ஜெயம்பதி விக்ரமரட்ண மூலமாக பதிவு செய்துள்ளார்
ரமழான் மாதமான செப்டம்பர் மாதம் 16ம் திகதி அஷ்ஷெய்க் நோம்பிருந்த சமயத்தில் அவரது வீட்டிற்கு வெள்ளை வான் ஒன்றில் வந்த அமைச்சர் அதாவுல்லாவின் ஆட்கள் என குற்றம் சுமத்தபட்டுள்ள ஆயுததாரிகள் அஷ்ஷெய்க் ஹனிபாவை பலவந்தமாக கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அஷ்ஷெய்க் ஹனிபாவால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோது அக்கரைப்பற்று பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அஷ்ஷெய்க் ஹனிபாவினால் கூறப்படுகின்றது.
இதையடுத்து சட்டத்தரணி ஜெயம்பதி விக்ரமரட்ண அவர்கள் அஷ்ஷெய்க் ஹனிபா சார்பாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கின் பிரதிவாதிகளாக அமைச்சர் அதாவுல்லா ,அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவில் சட்டத்தரணி ஜெயம்பதி விக்ரமரட்ண தனது கட்சிக்காரார் கடத்தப்பட்டது
(1) அடிப்படை மனித உரிமை மீறல் என நீதி மன்று தெரிவிக்கவேண்டும் எனவும்
(2) கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும்
(3) கட்சிக்காரருக்கு நஸ்ட ஈடு
(4) வழக்கு மற்றும் ஏனைய செலவுகளும் வழங்கப்படவேண்டும்
எனவும் மனுவில் கோரியுள்ளார் இன்று வெளியான செய்திகள் குறிபிடுகின்றன அகில இன நல்லுறவு ஒன்றியம் தேசிய ரீதியில் நடத்தும் 14வது சாமஸ்ரீ பாராட்டு விழாவின்போது அஷ்ஷெய்க் ஹனிபா மதனீ அவர்கள் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்காகவும், பொதுப்பணிகளுக்காகவும் ‘சாமஸ்ரீ தேசமான்ய’ மற்றும் ‘சமூகஜோதி’ என இரட்டைப்பட்டங்கள் வழங்கி கௌரவித்தது என்பது குறிபிடதக்கது
இவர் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக கலைத்துறைப் பட்டதாரியும், சவூதி அரேபிய மதீனா பல்கலைக்கழக அரபு இலக்கியத்துறை விஷேட பட்டதாரியுமாவார்.
அரபுமொழி மூல பல்கலைக்கழகமொன்றில் அரபு மொழி மூலம் அரபு இலக்கியத்தைக் கற்று பட்டம் பெற்ற இலங்கையின் முதல் பட்டதாரியான இவர் என்பது குறிபிடதக்கது
இலங்கை முஸ்லிம்களின் கல்வி பிரச்சினை தொடர்பாக அறிக்கை
இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் அமைச்சில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கலாநிதி ஏ. ஜி. ஹுசைன் இஸ்மாயில், எஸ். எச். எம். ஜமீல், தேசபந்து இஸ்மாயில் ஆகிய கல்வியியலாளர்களைக் கொண்ட குழுவை கல்வி அமைச்சு நியமித்திருந்தது.
வடமாகாண முஸ்லிம் அகதி வாழ்வுக்கு வயது 19 முடிந்து 20 ஆரம்பம் !
ஒக்டோபர் 1990ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு நீண்ட அகதி வாழ்கை ஆரம்பித்த ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு பத்தொன்பது ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. இந்த மாதத்துடன் இருவதாம் வருடம் ஆரம்பித்து விட்டது
வடமாகாணத்தின் யாழப்பாணம் முல்லைதீவு வவுனியா மன்னார் கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலட்சதுக்கும் அதிகமான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்த நடவடிக்கைக்கு முன்னர் வடக்கில் இஸ்லாமிய துடிப்புள்ள பல வாலிபர்கள் புலிகளால் கடத்தபட்டனர் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் பல முஸ்லிம் வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் , கடத்தப்பட்டு கானாமல் போனார்கள் அக்டோபர் மாதம் 22ஆம்திகதி வட புல முஸ்லிம்கள் . உடமைகள் எல்லாம் அபகரிகப்பட்டு தமது தாய் மண்ணை விட்டு வெறும்கையோடு விரட்டப்பட்டனர். யாழ்பாண முஸ்லிம்களுக்கு வெறும் இரண்டு மணித்தியால அவகாசமே வழங்கப்படது. கோடிக்கணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள் வெறும் இரண்டு மணித்தியால அவகாசத்தில் அனைதையும் இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர் ஏனைய மாவட்ட முஸ்லீம்களுக்கு 24 மணித்தியாலம் தொடக்கம் 48மணித்தியால அவகாசம் வழங்கப்பட்டு அகதிகளாக ஆக்கப்பட்டனர்.
யாழ்பாண முஸ்லிம்களை விரட்டி வெளியேற்றும் நோக்கோடு 35 முஸ்லிம் வர்தகர்களை புலிப்பயங்கரவாதிகள் கடத்திசென்றனர். இவர்களில் புலிகளுக்கு இலச்சக்கணக்கில் கப்பம் வழங்கிய 18 முஸ்லீம் வர்தகர்கள் சிலமாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் சித்திரவதை செய்து கொல்லபட்டனர் சித்திரவதை செய்து கொல்லபட்டவர்களில் பிரபல வர்தகர் மிக வயதானவர் இவர் தலை கீழாக கட்டப்பட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டார் ஏணையோர் பற்றிய தகவல்கள் கொல்லபட்டனர் என்பதை தவிர வேரு எதுவும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. வடமாகாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள்
ஒருபாரிய கொடுரத்துக்கு வடக்கு முஸ்லிம் முகம்கொடுத்து பத்தொன்பது வருடங்கள் ஓடிவிட்டன. வடக்கை விட்டு விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்னமும் சிறிய பெறிய அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மன்னாரிலிருந்து விரட்டப்பட்டு புத்தளம் அகதி முகாமில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அகதிகளின் அவலங்கள் சொல்லமுடியாதவைகள். இவர்கள் பறிகொடுத்து விவசாயக்காணிகள் வாழ்நிலங்கள் தோட்டங்கள் பலவகை விவசாய காணிகள் என்ற பாரிய கிராமிய பொருளாதாரமாகும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இழந்தது கோடிக்கணக்கான மிக பாரிய நகர பொருளாதாரம் என்றால் மன்னார் ,முல்லைதீவு கிழிநொச்சி முஸ்லிம்கள் இழந்தது கோடிக்கணக்கான கிராமிய , நகர பொருளாதாரமாகும் இழந்தவை இழந்தவைதானா இழந்தவை மீண்டும் கிடைக்குமா ? அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டவர்களின் கைகளை விட்டும் மீண்டும் அதிகாரம் பறிக்கபட்டுள்ளது இந்த பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகள் வேருடன் புடுங்கி எறியபட்டுள்ளனர் எனிலும் வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீகளில் எண்பது சதவீதமானவர்கள் இன்னமும் தமது தாய் மண்ணுக்கு திரும்பவில்லை.
சீனாவுடன் பாதுகாப்பு உறவுகள் இல்லை என்கிறது இலங்கை
![]()
இலங்கை அரசாங்கம் சீனாவுடன் அன்னியோன்னிய தொடர்பை பேணி வந்தாலும், பீக்கிங்கிற்கும் கொழும்புக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான உறவுகள் எவையும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் செய்தித்தாள் (ஸ்ட்ரெயிட் டைம்ஸ்) ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே இதனை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, மிகவும் விசேடத் தன்மை வாய்ந்ததாகவே தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நிகழ்ச்சி திட்டங்களில் ஒத்துழைப்பது மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அரசியல் ரீதியாக உதவி செய்தமை தொடர்பில் சீனாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மிகவும் விசேடமான இந்த உறவு, மேலும் வளர்ச்சி அடையக்கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சீனாவின் கப்பல் தளமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக்கப்பட்டு வருவதாக எழுந்துள்ள செய்திகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், கட்டுக்கதைகளுக்கும் கற்பனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை சீனாவுடனான பாதுகாப்பு உறவாக எடுத்துக் கொள்ளலாமா என அவரிடம் கேட்ட போது, இலங்கையின் பாதுகாப்பு விடயங்களை இலங்கையே பார்த்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு குறித்து அவர் விபரிக்கையில், இலங்கையின் அண்மித்த நண்பன் இந்தியாவாகவே காணப்படுகிறது.
அதுவும் நிகரற்ற ஒரு உறவாகவே இலங்கை பார்க்கிறது.
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை கொண்டு வரும் பொருட்டு இந்திய நிகரற்ற உதவிகளை வழங்கி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில, யாழ்ப்பாண சமூகம் மற்றும் அவர்களின் வெளிநாட்டு உறவினர்கள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததும், இலங்கையின் பங்காளிகளாக பரிணமிப்பதற்காக, வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
போர்குற்றங்கள் இடம்பெற்றதா? என்பதை கண்டறிய விசாரணை தேவை
ஐ.நா மனித உரிமை தலைமையலுவலகம்:
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் போர்குற்றங்கள் இடம்பெற்றதா என்பதை கண்டறிய விசாரணை தேவையாகவிருக்கிறது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை சார்பில் பேசிய பிரதிநிதி, சில குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை பார்க்கும்போது, காசா சண்டை குறித்து சமீபத்தில் நடைபெற்ற விசாரணைபோல ஒரு விசாரணை தேவையாகயிருப்பதாக கூறியுள்ளார். முன்னதாக இவ்வாரத்தின் முற்பகுதியில் அமெரிக்க ராஜாங்கத்துறை போரின் இறுதியில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருருந்தது. இவற்றில் மனித உரிமை மீறல் குற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறியிருந்தது.
மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் – 14

எஸ்.எம்.எம்.பஷீர்
எல்லோராலும் அறியப்பட்ட அஸ்ரபின் ” அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் அடையாவிட்டால் தம்பி நான் தமிழ் ஈழம் அடைவேன்” என்ற முழக்கம்
” அடைந்தால் கிழக்கிஸ்தான் அடையாவிட்டால் கபுரிஸ்தான்” அதாவது முஸ்லிம்களுக்கு என ஒரு தேசமாக “கிழக்கிஸ்தான்”
நான் முன்னர் குறிப்பிட்டதுபோல் வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் முயற்சியில் கிழக்கில் முதல் முஸ்லிம் கட்சியான முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை உள்வாங்கி அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்ட சம்சுதீன்- அஸ்ரபின் “முஸ்லிம் ஐக்கிய முன்னணி”யின் முக்கிய பிரச்சாரகரான அஸ்ரப் ஒருபுறம்; தமிழர் கூட்டணியின் மூதூர் சட்டத்தரணி மஹரூப் மறுபுறம் என தனிநாட்டுப் பிரச்சாரங்கள் அன்றைய அரசியலில் முன்னேடுக்கப்பட்டன. எல்லோராலும் அறியப்பட்ட அஸ்ரபின் ” அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் அடையாவிட்டால் தம்பி நான் தமிழ் ஈழம் அடைவேன்” என்ற முழக்கமும் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப்பெறவில்லை அதனால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மட்டுமல்ல அதற்கு ஒத்தூதிய முஸ்லிம் தலைமைகளையும் கிழக்கு முஸ்லிம்கள் நிர்த்தாட்சண்யமாக நிராகரித்தனர்.
இந்தக்கால கட்டத்தில்தான் முக்கியமாக முதன்முதலாக கிழக்கில் வேறு ஒரு அரசியலும் அரங்கேறியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1977 பொதுத் தேர்தலின் போது முன்னாள் கல்வி அமைச்சரான மறைந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூது அவர்களின் தேர்தல் மேடைகளை அலங்கரித்த அன்றய பிரபல அரசியல் பேச்சாளரான காத்தன்குடியை சேர்ந்த ரசூல் ஆசிரியர்
கிழக்கிலே ஒரு புதிய அரசியல் கோசத்தை காரணகாரியமின்றி எதுகை மோனையாய் முஸ்லிம்களை கவருவதற்காக முன்வைத்தார். அதுதான் ” அடைந்தால் கிழக்கிஸ்தான் அடையாவிட்டால் கபுரிஸ்தான்” அதாவது முஸ்லிம்களுக்கு என ஒரு தேசமாக “கிழக்கிஸ்தான்” அடையப்பட வேண்டும்; அவ்வாறு அடையாவிட்டால் அடக்கஸ்தலத்தை அடையவேண்டும். ( மரணம் அடையவேண்டும்). இதே காலகட்டத்தில் தான் அஸ்ரப் அவர்களின் தமிழ் ஈழ தனினாட்டுக் கோசமும் அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுள்ள மாவட்டத்தில்) எதிர் எதிராக ஒலித்தது.
மெதுவாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அஸ்ரப்பை ஓரங்கட்டும் தொடர் செயற்பாபாடுகள் காரணமாக அஸ்ரப் தமது கூட்டணியை முறித்துக்கொண்டதுடன் கிழக்கில் முஸ்லிம்களின் முதல் முஸ்லிம் அரசியல் கட்சியாக பரிணமித்த முஸ்லிம் ஐக்கிய முன்னணி விலாசம் இழ்ந்து போனது. மெதுமெதுவாக கிழக்கின் தமிழ் தலைமைகளும் தமிழர் விடுதலை கூட்டனியிலேருந்து வெளியேறினர். கூட்டணியினரின் யாழ் மேலாதிக்க கெடுபிடிகள் தாங்காமல்தான் மட்டுநகரின் முடிசூடா மன்னன் என அழைக்கப்பட்ட சொல்லின் செல்வன் சி. ராஜதுரை அவர்களும் பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினரான கனகரெத்தினம் அவர்களும் (1977) தேர்தலின் பின்னர் ஐ.தே.கட்சியில் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.
இக்கால கட்டத்தில் யாழ் மேலாதிக்க தமிழர் கூட்டணியின் தேசியவாத அரசியலை எதிர்த்து நின்ற இன்னுமொரு முக்கிய அரசியல்வாதிதான் ராஜன் செல்வநாயகம் இவரின் பூர்வீகம் ராஜதுரையை போலவே யாழ்ப்பாணம்தான். ராஜதுரையின் தந்தை சுருட்டுச் சுத்தும் தொழில் புரிபராக மட்டக்களப்புக்கு வந்தவர்;பின்னயவரின் தந்தை வியாபாரியாக வந்தவர்) எனினும் தங்களின் இளமைக்காலத்தை கிழக்கிலே கழித்ததால் தங்களை கிழக்கை சேர்ந்தவர்களாகவே நினைத்து செயற்பட்டவர்கள். கிழக்கு மக்களாலும் கிழக்கு பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள்.
இளமையில் இராஜதுரை பகுத்தறிவு (திராவிட கழக) அமைப்பில் மட்டக்களப்பில் அங்கத்துவம் வகித்து தீவிரமாக செயற்பட்டவர்; பிற்காலத்தில் சாய் பாபாவின் பக்தனாகவும் இந்து கலாச்சார அமைச்சராகவும் பதவி வகிக்த்தவர் . ராஜன் செல்வநாயகம் அன்று நிர்வாகத்தில் உயர் பதவி வகித்த யாழ் அரச அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து யாழ் எதிர்ப்புவாதிய அடையாளம் காணப்பட்டவர். விளிம்புநிலை மக்களின் விருப்பத்திற்குரியவ்ராக விளங்கியவர். மறுபுறத்தில் ராஜதுரையும் சாமான்ய மக்களின் மதிப்பை பெற்றவர்.
தனக்கு தெரிந்தவர்களை என்றுமே இலகுவாக அடையாளம் கண்டு பழகுபவர். இவர்கள் இருவரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் செயற்பாடு குறித்த விமர்சனங்களை இங்கு நான் வைக்கவில்லை; அது எனது கட்டுரையின் நோக்கமுமல்ல. அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எதிப்பினை மட்டக்களப்பில் ராஜன் செல்வநாயகமும்; கல்குடாவில் முன்னாள் அமைச்சர் தேவனாயகமும் மாறுபட்ட தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளாக முன்னெடுத்தவர்கள்.
குறிப்பு – 1976ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் அமைப்பு திரு அமிர்தலிங்கம் அவர்களின் பிறப்பிடமான பன்னாகத்தில் உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பின் உருவாக்கத்தின்போது அன்றைய கல்குடா பிரதிநிதியான ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு எஸ்.டபிள்யூ தேவநாயகம் அவர்களும் அக்கருத்தரங்கில் பங்குகொண்டிருந்தார். அன்று உருவாக்கப்பட்ட த.வி.கூட்டணி வடகிழக்கிலும் மலையகத்திலுமுள்ள தமிழ் அரசியல்வாதிகளை ஒன்றிணைக்கும் கருத்தரங்காகவே தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவ்வமைப்பு தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்தமையினால் எற்கனவே அவ்வமைப்பில் அங்கம்வகித்த திரு தேவநாயகம் மற்றும் எஸ் தொண்டமான் ஆகியோர் அமைப்பைவிட்டு வெளியேறினர். இந்நிலையில் தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து த.வி.கூட்டணியினரால் நடாத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் பினஇவருமாறு அமைந்தன.
வட மாகாணத்தில் ஆதரவாக 41% மானவர்களும்
கிழக்கு மாகாணத்தில் ஆதரவாக 26% மானவர்களும் வாக்களித்திருந்தனர்.
மேலதிக விபரங்கள் அறிவதற்கு (S.J Tambiah அவர்களால் எழுதிய Srilanka Ethinic Fratricide And The Dismantling of Democracy) என்னும் நூலினை வாசிக்கவும்.
(குறிப்பு: இக்கட்டுரைத தொடரினை தொடர்வதற்கு எனக்கு தொலைபேசி ஈ-மெயில் நேரடிச்சந்திப்பின் மூலமும் ஊக்கமளிக்கும் வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இக்கட்டுரையினை ஆங்கிலத்தில் எழுதுமாறும் முக்கியமான எனது பத்திரிகையாளரான நண்பரின் வேண்டுகோளும் என்னை இக்கட்டுரையினை தொடர தூண்டுதலாக அமைந்தது..இங்கு ஆங்கிலத்தில் நான் முன்னரே எழுதிய கட்டுரைகளிலுள்ள பல சம்பவங்களை -விடயங்கள்- தமிழில் மீண்டும் எழுதப்படவேண்டி நேரிட்டுள்ளது. ஆகவே சொன்னதை மீண்டும் சொல்லலாக அவை (தமிழில் மட்டுமே வாசிக்கும் அல்லது வாசிக்கக்கூடியவர்களுக்கு) அமையாது என்று நம்புகிறேன்.) ….தொடரும்…….
இறுதித் தூதரையும் அவரின் தோழர்களையும் குண்டர்கள் , ரவுடிகள் எனக் குறிபிட்டு முஸ்லிம் வீடுகளுக்கு வரும் மடல்கள்

இறைவனின் இறுதித் தூதரையும் அவரின் தோழர்களையும் குண்டர்கள் , ரவுடிகள் எனக் குறிபிட்டு முஸ்லிம் வீடுகளுக்கு வரும் முகவரி இல்லாத மடல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும கலந்து காணப்டுகிறது.
இந்தமடல் வெளியீடு முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதற்கென்றே மேற்கொள்ளப்பட்ட ஒரு கீழ்த்தரமான செயற்பாடாகதான் கருத முயும் இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு சகிக்க முடியாத ஜீரணிக்க முடியாத தினமும் பல கோடி டாலர்களை இஸ்லாத்திற்கு எதிராக செலவு செய்தும் தோற்று போகும் மேற்கு உலகம் அறிவியல் ரீதியாக முஸ்லிம்களிடம் தோற்று போன கிறிஸ்தவ உலகம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தாக்குதல்களை வலுபடுத்தியுள்ளது.
2008 இல் அமெரிக்க எழுத்தாளரான ஸெர்ரி ஜோன்ஸின் Jewel of Medina என்ற புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் மேலும் ஒரு போரை தொடுத்தான் . இஸ்லாத்துக்கு எதிரான Londonistan என்கின்ற நூலை கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட்ட பிரித்தானிய வெளியீட்டகமே இந்த நூலையும் வெளியிட்டது. அல்லாஹ்வில் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையும் அவரின் தோழர்களையும் அவர்களின் மனைவியான, விசுவாசிகளின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களையும் திட்டமிட்டு அவமதிக்க மேற்குலகு முயற்சிக்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது.
இந்த Jewel of Medinaஎன்ற ஆங்கில நூலின் சில பகுதிகள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யபட்டு இலங்கைக்கு இறக்குமதியாகியுள்ளது இதன் முகவர்களாக இலங்கையில் இயங்கும் கிறிஸ்தவ மிசனரிகள் இதற்கு பின்னால் இருப்பதாக நம்பப்டுகிறது எனினும் இதன் சூத்திரதாரிகள் அடையாளம் காணபடவில்லை ஹதீஸ்கள் பற்றிய விளகங்கள் இல்லாத ஒரு பாமரனை இலகுவில் குழப்பமடைய செய்துவிடும் அளவுக்கு அதில் திரிக்கபட்ட விளக்கங்கள் முன்வைக்கபட்டுள்ளது .
ஹதீஸ்களை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும், ஹதீஸ்கள் சொல்லபட்ட சுழ்நிலை என்ன எதை ஏற்றுக் கொள்ளலாம், எதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதை விளங்க முடியாத மனிதர்களை உடன் குழப்பதில் ஆழ்த்திவிடும்.
இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளால் நேரடியாக நியாயமான விமர்சனங்களால் இஸ்லாத்துடன் மோதமுடியாது எந்த அறிவுபூர்வமான விமர்சனங்களும் இஸ்லாமிய அறிஞர்களினால் அறிவுபூர்வமான விவாதிக்க படும் அதில் தாம் வெற்றி பெர முடியாது என்று உறுதியாகி விட்ட பின்னர்தான் இப்டியான கிழ் தரமான நிலைக்கு இஸ்லாத்தின் எதிரிகள் இறங்கியுள்ளனர் இது இஸ்லாத்துக்கு புதிய விடயம் இல்லை ஆனால் இலங்கை முஸ்லிம்களுக்கு இது புதிதான விடையம் மேற்கின் கையாலாகாத தனத்தின் ஒரு வடிவம்தான் இதுவும் - கண்டி மாத்தளை பிரதேசங்களில் இருந்து எமக்கு (www.lankamuslim.org க்கு) அந்த விசமத்தனமான மடலின் பிரதி ஒன்று அனுப்பி வைக்கபட்டுள்ளது இது பற்றிய மேலதிக தகவல் தொடரும்
சம்மாந்துறையில் உலக விஞ்ஞானதின கண்காட்சி
விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு 2009ம் ஆண்டிற்கான உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திற்கான உலக விஞ்ஞானதின கண்காட்சி நேற்று சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சிக் கூடங்களை திறந்து வைத்தார்.
இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை
இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதுடன் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார ஒப்பமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அரசியல் ஈடுபாடு கொண்ட சில தனி நபர்கள் அச்சு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் இராணுவ அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு இராணுவ அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்துவது குற்றமாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று இராணுவ அதிகாரிகளும் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று வெளியான தகவல்கள்
இரா.சம்பந்தனின் சட்டவிரோத குடியேற்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் -அமைச்சர் பஞ்சிநிலமே
திருமலை மாவட்டத்தில் எந்தவிதமான சட்டவிரோத குடியேற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்றையதினம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக எவரும் குடியேறியிருந்தால் அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர், காணிகள் இல்லாதவர்களாக இருந்தால் நாட்டின் சட்டத்தின்படி அவர்களின் பிரச்சினை அணுகப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திருமலை மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி இரா.சம்பந்தன் நேற்று சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசு உதவியுடன் கிழக்கில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டு நடைபெறுவதாக சம்பந்தன் தெரிவிப்பு
திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறு பான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும்,அரச காணிகளையும் பெரும் பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியது.
இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார்.
கல்முனை, அக்கரைப்பற்று, தம்பட்டை பிரதேசங்களில் ஆடைத் தொழிற்சாலைகள்

அம்பாறை மாவட்டத்தில் அடுத்த வருட ஆரம்பத்தில் நான்கு இடங்களில் பாரிய ஆடைத் தொழிற்சாலைகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைக்கவிருக் கின்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அமுலாக்கல் அமைச்சர் பி. தயாரெத்தினா மஹிந்த சிந்தனை வேலைத திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே ஆடைத் தொழில் மேற்கொள்ளப்பட்டு யுத்த சூழ்நிலையால் கைவிடப்பட்ட அக்கரைப்பற்று தம்பட்டை ஆடைத் தொழிற்சாலைகள் புனரமைப்புச் செய்யப்படுவதுடன் கல்முனை, மகாஓயா ஆகிய இடங்களில் புதிய தொழிற் சாலைகளுக்கான கட்டிடங்கள் அமைக்கப்படவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹஜ் நிறைவேற்ற மேலதிகமாக 3000 பேருக்கு அனுமதி

இவ்வருடம் ஹஜ் நிறைவேற்ற மேலதிகமாக 3000 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்தாக தகவல்கள் வெலியாகியுள்ளது .இலங்கைக்கான அனுமதிக்கப்பட்ட தொகை 2800 ஆகும். இந்த வகையில் கடந்த காலங்களில் இந்த 2800 தொகையை விட மேலதிகமாக மூவாயிரம் தொடக்கம் நாலாயிரம் ஹாஜிகள் வரை சென்று வர அனுமதி கிடைப்பது வழமையாக இருந்தது.
எனினும் இத்தொகையை கூட்டித் தரும்படி அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி சவூதி அரேபியா ஹஜ் விவ காரங்களுக்குப் பொறுப்பான அமைச்ச ருடன் தொடர்பு கொண்டதற்கிணங்க மேற்படித் தொகை கிடைத்துள்ளதால் இலங்கை ஹாஜிகள் எந்தவிதமான சலசலப்பும் இன்றிச் செல்ல முடியு மென பணிப்பாளர் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
பயிரிடுவோம் திட்டத்தின் மூலம் மூதூர் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்படுகின்றது

‘பயிரிடுவோம் நாட்டைக் காப்போம்’ எனும் திட்டத்தில் மூதூர் முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு பறிக்கப்படுவதை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் இப்பிரதேசத்தில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டு பறிக்கப்படவுள்ள எம் பூர்வீக நிலங்கள்
புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு வெற்றி கொள்ளப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பாக எமது மூதூர் மக்களுக்கு ஏற்பட்டிருந்த சந்தேக முடிச்சுகள் தற்போது ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பித்திருக்கின்றன. (ஏனைய மக்களைப் போன்று நமது மக்களும் ‘பயிரிடுவோம் நாட்டைக் காப்போம்’ என்ற எண்ணத்தில் பயிரிட முன்வந்த இந்தவேளையில்) எமது மக்களின் பூர்வீக நிலங்கள் மிகவும் கபடமாகத் திட்டமிட்டு பேரின சமூகத்தவர்களுக்கு கொடுக்கப்படவிருக்கின்றன என்பது தெளிவாகியுள்ளது இதனால்; பாதிக்கப்பட்டுள்ள இந்த ஏழை விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
விவசாயத்தை மட்டுமே தமது வாழ்வதாரமாகக் கொண்ட மூதூர் விவசாய சமூகம் யுத்த சூழலில் அனைத்தையும் இழந்து தற்போது எஞ்சியிருந்த தமது விவசாயக்காணிகளையும் அநியாயமாக இழக்கும் அபாய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில் சம்பாட ஆறு, உப்பு அடசல், முறிவு, கட்டைவிழுந்தான், வெள்ளைநாவல், மரைக்கான் ஹாஜி வெட்டை, 15ம் வாய்க்கால், 14ம் வாய்க்கால், படுகாடு, வவுணாவில்லு போன்ற பகுதிகளில் உள்ள வயற்காணிகளும், மேட்டுநிலத்தோட்டக் காணிகளும், அடங்கும்.
கடந்த மாதம் பிரதேச செயலகத்தில் தேசத்தின் அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ‘யானைகளுக்கு வேலி அமைக்கும்’ போர்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சதி காரணமாகவே மேற்குறிப்பிட்ட முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு காணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள யானை வேலிக்குள் திட்டமிட்டு உள்ளடக்கப்பட்;டு கபளீகரம் செய்யப்பட்டு பெரும்பான்மை சமூக மக்களுக்கு சோளச் செய்கைக்காக வழங்குவதற்கான சதி இடம்பெற்றிருக்கிறது. இதனடிப்படையில் பிரதேச செயலகத்தில் அனைத்து விவசாய சங்கங்களினாலும் தீர்மானிக்கப்பட்ட பாதுகாப்பான குறுகிய யானை வேலி எல்லைகள் இரவோடிரவாக மாற்றப்பட்டு எமது மக்களின் காணிகளைக் கைப்பற்றும் நோக்கில் மிக நீண்ட அவசியமில்லாத புதிய எல்லைகள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது முஸ்லிம் அப்பாவி விவசாய சமூகம் சதிமோசமாக ஏமாற்றப்பட்டுள்ளது. இக்காணிகள் எமது மக்களின் விவசாயச் செய்கைக்காக மட்டுமன்றி கால்நடைவளர்ப்பு, நன்னீர்மீன்பிடி, விறகுத்தொழில் போன்றவற்றுக்காக மட்டுமன்றி எதிர்கால குடியிருப்புத் தேவைகளுக்காகவும் மூதூர் பிரதேசமக்கள் இக்காணிகளையே நம்பியுள்ளனர் ஆனால் அத்தனையும் பார்த்திருக்க பறிபோகிறது.
மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது குடியிருப்புத் தேவைகளுக்காக பாரிய நிலப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள இன்றைய நிலையில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அவர்களால் காடழித்து, வேரெடுத்து, பண்படுத்திய விவசாய நிலங்கள் இக்காணிகளுடன் எந்த சம்மந்தமுமில்லாத புதியவர்களின் கைகளில் ஒப்படைக்க அதிகாரிகள் முனைந்திருப்பது பாதிக்கப்;பட்ட காணி உரிமையாளர்களின் ஆத்திரத்தையும், வேதனையையும் கிளறியுள்ளது. இம்மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் இந்த அநீதியைத் தட்டிக்கேட்க யாருமில்லையா? என மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.
அன்பான மூதூர் வாழ் மக்களே! நடந்துள்ள இக்காணி அபகரிப்பு குறிப்பிட்ட விவசாயிகளின் பிரச்சினை மாத்திரமன்று. இச்செயல் எமது முழு சமூகத்தினதும் எதிர்கால இருப்பையும் பாதுகாப்பையும் மிக மோசமாகப் பாதிக்கப்போவது நிச்சயம். எனவே நம் எமது எதிர்கால சமூக நன்மை கருதி அரசியல், சமூக, பிரதேச பேதங்களுக்கு அப்பால் இவ் அநீதிக்கெதிராக ஒன்றிணைந்தாகவேண்டும் இன்றேல் நம் எதிர்கால சந்ததி தவிக்க நேரிடுவது நிச்சயம்.
மதிப்புக்குரிய அரசியல், சமூகத்தலைவர்களே! உங்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்திருந்த மக்கள் இன்று நட்டாற்றில் விடப்பட்டுள்ளார்கள். எனவே சகல வேறுபாடுகளையும் மறந்து இம்மக்களின் தீர்வுக்காக விரைந்து செயற்படுங்கள். எதிர்காலத்தின் பாரிய அபாயத்திலிருந்து இம்மக்களை மீட்க நீங்கள் எவ்வாறு செயற்படப்போகிறீர்கள் என்பதை முழு மூதூர் மக்களும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி
- பாதிக்கப்பட்ட விவசாயிகள் -
முஸ்லிம்காடியன்
ரஷ்யா வெளிநாட்டு அமைச்சர் 26 ஆம் திகதி இலங்கை வருகிறார்
![]() |
ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்கி லாவ்ரோ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அமைச்சின் பேச்சாளர் ஹென்றி நெஸ்டெரேன்கோ கூறுகையில்,
“சர்வதேச ரீதியில் போதைவஸ்து பாவனையால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட உள்ளது.
அத்துடன் ரஷ்யா, இலங்கைக்கிடையில் விமான சேவை தொடர்பிலும் கலந்துரையாடப்படும். குற்றவியல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் இரு நாடுகளும் ஒரே திட்டத்தின் கீழ் செயற்படுவதுடன், பொருளாதார ரீதியிலும் நட்புறவைப் பேணிவருகின்றது.
வெளிவிவகார அமைச்சர் லாவ்ரோ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார்” என்றார்
virakesari
பலபக்க அடிகளை சுமக்க முஸ்லிம் உம்மாஹ் தயாராக வேண்டும்

M.ஷாமில் முஹம்மட்: இரண்டு மஸ்ஜிதுகளில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில்,70 பேர் வபாத்தானார்கள் யார் உண்மையான சூத்திரதாறி ?
அமெரிக்காவின் ஒட்டு மொத்த கொத்தடிமையாகி விட்டது 1000 கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள் .
ஏன் பல இஸ்லாமிய இயக்கங்களை இஸ்லாமிய போராட்டங்கள் பற்றி பேசுவதில் இருந்து தூர படுத்தி உலகில் இஸ்லாமிய ஆட்சி உதயமாவதைத் தடுப்பதே அதன் பிரதான நோக்கமாக இருக்கிறது.
காஷ்மீரை சீனாவும் சிங்கியாங்கை இந்தியாயும் தமது அரசியல் இராணுவ லாபங்களுக்கு பயன்படுத்தி இரு முஸ்லிம் தேசங்களையும் இரு ஆப்கானிஸ்தான்களாக்க முயற்சிசெய்து வருகின்றன இப்படித்தான் ஆப்கானிஸ்தானை அமெரிக்கவும் ரஷ்சியாவும் தமது அரசியல் இராணுவ லாபங்களுக்கு பயன்படுத்தி இஸ்லாமிய சக்திகளை தமக்குள் மோதவிட்டு இன்றுவரையும் அழிவுகளை மட்டும் அந்த மக்கள் அறுவடை செய்யும் சமுகமாக உலகுக்கு காட்டி அதனுடாக இஸ்லாமிய புரட்சிகளை அழிவுகளின் ஊற்றாக தோற்றம் செய்து அதில் வாகையும் சூடிவருகிறது
காஷ்மீரிலிருந்து விசா கோரி விண்ணப்பிப்போருக்கு தனியான விசாவைத் கொடுத்து இந்தியாவை சீண்டி வரும் சீனா காஷ்மீர முஸ்லிம் தேசத்தின் உண்மையான நண்பன் அல்ல, தற்போது சீனா காஷ்மீரை தனி நாடாக காட்டி இந்தியாவை எரிச்சல்படுத்தியுள்ளது. திபெத்துக்கு வரும் பத்திரிக்கையாளர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சீன அரசின் சார்பில் ஒரு கையேடு கொடு்க்கபடுகிறது . அதில் காஷ்மீரை தனி ஒரு தேசமாக சீனா குறிப்பிட்டுள்ளது.
அந்த ஆவணத்தில் திபெத்தின் எல்லைகளாக இந்தியா, நேபாளம், மியான்மர், காஷ்மீர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காஷ்மீரை தனி நாடாக அது சுட்டிக் காட்டியுள்ளது. அதேபோல, சீனாவில் கிடைக்கும் வரைபடங்களிலும் கூட காஷ்மீர் இல்லாத இந்தியாதான் காணப்படுகிறது இந்த இரு நாடுகளும் அமெரிகாவையும் ரஷசியாவையும் போன்று இஸ்லாமிய புரட்சியில் எதிரிகள்தான் ஆனாலும் சீனா காஷ்மீரை ஆதறிப்பதற்கும் இந்தியா சிங்கியாங்கை ஆதறிப்பதற்கும் போக்கை கடைபிடிக்க முனைவற்கும் துய்மையான எந்த மனிதாவிமான காரணகளும் இல்லை தமது பொருளாதார இராணுவ காரணங்களை தவிர
இந்நிலையில் இந்தியா சீனாவில் சிங்கியாங் என்கிற முஸ்லிம் தேசம் பற்றி அதிக அக்கறை காட்ட தொடங்கியுள்ளது சிங்கியாங் சீனாவின் அதிகமாக அறியபடாத முஸ்லிம் தேசம் ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் (6/1 ) ஆறில் ஒரு பங்கு. இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி இது இலங்கை போன்று 27 மடங்கு பெரியது அங்கு முஸ்லிம்கள் பேசமுடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நெறிக்கபட்டுள்ளது இங்கு இந்தியா தனது உளவு நிறுவங்களை இறக்கியுள்ளது இந்திய மாணவர்கள் 7,000 பேர் சீனாவில் பயில்கின்றனர் என்பது குறிபிடதக்கது.
இரு பிரமாண்டங்களின் இராணுவ அரசியல் விளையாட்டில் பந்தாட படுவது முஸ்லிம் தேசங்கள்தான் எதிரிக்கு எதிரி நன்பன் என்ற வகையில் முஸ்லிம்கள் உதவிகளை பெற்றாலும் இறுதியில் பாதிக்க படுவது முஸ்லிம்கள்தான் தமது இராணுவ பொருளாதார அடைவுகளை பெற்று கொள்ளும் முயட்சியின் இறுதியில் அழிவுகளை சுமப்பது முஸ்லிம்கள் மட்டுமாகத்தான் இருக்கும் ஏன் என்றால் காஷ்மீர், சிங்கியாங் போராளிகளை தூண்டும் புரட்சிகர விடுதலை சக்தியாக இருப்பது அவர்களால் சகிக்க முடியாத இஸ்லாம் என்ற மாபெரும் சக்தி உலகின் பெரும் பகுதியை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்து மிக பிரமாண்டமான இஸ்லாமிய அரசை நிறுவி இருண்டு கிடந்த ஐரோப்பாவை தட்டி எலுப்பி அறிவியலையும் நாகரிகத்தையும் முதல் முதலில் உலகுக்கு கற்று கொடுத்த நாகரிக வல்லரசு, இந்த மனித நாகரிக இஸ்லாமிய புரட்சியை தடுப்பதற்கு எல்லாவிதமான அநாகரிக வழிமுறைகளையும் எதிரி செய்கின்றான் முஸ்லிம் உம்மாஹ் முழுமையாக அதன் வலையில் சிக்கி விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
நேற்று முன்தினம் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக மொன்றில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் வபாத்தானதுடன் 12 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் யார் கொல்லப்பட்டது முஸ்லிம்கள் யார் செய்ததாக காட்டப்பட்டது முஸ்லிம் தீவிரவாதிகள் உண்மையான சூத்திரதாறி இஸ்லாத்தின் எதிரி ?.
அண்மையில் பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் இரண்டு மஸ்ஜிதுகளில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில்,70 பேர் வபாத்தானார்கள் யார் கொல்லப்பட்டது மஸ்ஜித் இமாம் உட்பட முஸ்லிம்கள் யார் செய்ததாக காட்டப்பட்டது முஸ்லிம் தீவிரவாதிகள் இங்கும் உண்மையான சூத்திரதாறி ?.
ஈராக்கில் பல தடவைகள் மஸ்ஜிதுகளில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் பல நூறு மனிதர்கள் வபாத்தானார்கள் யார் கொல்லப்பட்டது மஸ்ஜித் இமாம் உட்பட முஸ்லிம்கள் யார் செய்ததாக காட்டப்பட்டது முஸ்லிம் தீவிரவாதிகள் உண்மையான சூத்திரதாறி இங்கும் ?.
ஆப்கானிஸ்தானில் இதை போன்று பல தடவைகள் மஸ்ஜிதுகளில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் பல நூறு மனிதர்கள் வபாத்தானார்கள் இங்கும் அந்த கேல்வி அந்த பதில் ஆனால் உண்மையான சூத்திரதாறி இங்கும் அவர்கள்தான்
அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் 93 இல் மேற்கொண்ட பாகிஸ்தான் விஜயத்தை அடுத்து பாகிஸ்தான் அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்துடன் இணைந்து செயற்பட முன்வந்தது. இன்று பாகிஸ்தான் அமெரிகாவின் ஒட்டு மொத்த கொத்தடிமையாகி விட்டது 1000 கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள் அமெரிக்காவுக்கு உளவு பார்கின்றனர், அமெரிக்கா இடும் கட்டளைகளை விசுவாசமாக அடிமைத்தனத்தை வெளிபடுத்தி செய்து முடிகின்றனர். அவர்கள் மஸ்ஜிதுகளில் குண்டும் வைப்பார்கள் முஸ்லிம் பாமரர்களின் உணர்வுகளை தூண்டி தமக்கு தேவையான மனித வெடிகுண்டுகளையும் உருவாக்குவார்கள்.
இதன்படி அமெரிக்காவைத் திருப்திப்படுத்த எண்ணிய பாகிஸ்தான் அமெரிக்காவின் அனைத்து ஆணைகளுக்கும் அடிபணிந்தது. அமெரிக்க உளவு நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் அரச இயந்திரத்தின் மூலம் உலகில் இஸ்லாமிய ஆட்சி உதயமாகப் போகின்றது என்ற கனவுகளைச் சுமந்திருந்த இஸ்லாமிய போராட்டத்தை திசை மாற்றுவதே இவர்களின் நோக்காக இருந்தது அதன் படி செய்தும் காட்டினார்கள்.
இஸ்லாமிய போராட்டத்தில் பொது மக்களை இலக்கு வைக்கும இப்படியான தாக்குதல்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் குழப்ப நிலைகளைத் தூண்டுவதன் மூலம் உலகளாவிய இஸ்லாமிய போராளிகளை முஸ்லிம் சமுகத்தில் இருந்து தூரப்படுத்தி ஏன் பல இஸ்லாமிய இயக்கங்களை இஸ்லாமிய போராட்டங்கள் பற்றி பேசுவதில் இருந்து தூர படுத்தி உலகில் இஸ்லாமிய ஆட்சி உதயமாவதைத் தடுப்பதே அதன் பிரதான நோக்கமாக இருக்கிறது.
இந்த சதி நாசகார வேலைகளின் ஏகபோக உரிமை அமெரிகா ரஷ்சியாவிடமும் இருந்து இப்போது இந்தியா, சீனாவும் பெற்றுகொண்டுள்ளது பலபக்க அடிகளை சுமக்க முஸ்லிம் உம்மாஹ் தயாராகவேண்டும்-
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (இறை ) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை நிச்சயமாக முழுமைப்படுத்தி வைப்பான் . (அல்குர்ஆன் 9:32)
முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா?
![]()
சினிமா என்பது ஒரு பொழுது போக்கு என்ற நிலை தாண்டி மிக சக்தி படைத்த மக்களின் உள்ளங்களை திசை திருப்பும் ஊடகமாக மாறிவிட்டது என்பதால் அதையும் அவதானிப்பது எமக்கு தவிர்க்க முடியாத விடையமாகி விட்டது உலக வரலாற்றில் குறிப்பிட்ட சமூகத்தின் மீது தங்களுடைய ஆதிக்கத்தை நிறுவ விரும்பும் தனிநபர்கள், குழுக்கள் வன்முறையை மட்டும் கைக்கொண்டு அதை நிறைவேற்றுவதில்லை. பல்வேறு கருத்தோட்டங்களைத் தங்களுக்குச் சாதகமான பின்னணியாகக் கைக்கொள்வதும் உண்டு. அத்தகைய கருத்தோட்டங்களில் சில உண்மைகள் திரித்தும் கலந்துமிருக்கும். சில முற்றிலும் வதந்திகளாகவும் இருக்கும். நம்முடைய சமகாலத்திற்கான எடுத்துக்காட்டாக இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், இந்து பாசிசத்தையும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்னும் பிரச்சாரத்தையும் கூறலாம்.
இத்தகைய கூற்றுகள் பல அழிவுகளை நிகழ்த்தகூடியது அப்படிபட்ட கருத்தோட்டங்களைத் உருவாக்க முனையும் படம்தான் உன்னைப் போல் ஒருவன் இதனால் http://www.lankamuslim.org இதையும் அவதானிக்கிறது.
உன்னைப் போல் ஒருவன் – இந்துப் பாசிசத்தின் இன்னொரு பிரதி:
ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.
இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.
இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும்,ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன். விரிவாக பார்க்க
புலிகளை ஒடுக்க உதவிய எங்களை விமர்சிப்பதா? இலங்கைக்கு பாகிஸ்தான் கண்டனம்!

கொழும்பு, அக். 18: பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக ஸ்திரமற்ற நிலை நிலவுவதாக இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கூறியதற்கு பாகிஸ்தான் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக ஸ்திரமற்ற, குழப்பமான நிலை நீடிப்பதாக பிரேமஜெயந்த கூறியதாக டெய்லி மிர்ரர் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டது. பாகிஸ்தானில் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த ஜியா உல்-ஹக், ஜுல்பிகர் அலி புட்டோவிடம் இருந்து 1977-ல் ஆட்சியைக் கைப்பற்றினார். அன்று முதல் பாகிஸ்தானில் ஸ்திரமற்றநிலை தொடங்கி இந்த நிமிடம் வரை நீடித்து வருகிறது.
பாகிஸ்தானில் எந்த இடத்திலும், எந்த நிமிடமும் குண்டு வெடிக்கலாம், பயங்கரவாதிகள் தாக்கலாம் என்ற அச்சமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரமாக நடமாடுவது என்பதுகூட பாகிஸ்தான் மக்களுக்கு சாத்தியமில்லை. பாகிஸ்தானை ஆட்சி செய்த எந்த ஒரு தலைவராலும்
அந்நாட்டில் அமைதியை நிலைநாட்டி, ஸ்திரமான நிலையை உருவாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இது ஒருபுறமிருக்க, அங்கு நிலவும் ஸ்திரமற்ற தன்மையால் நாட்டின் பொருளாதாரமும் நசுங்கிக் கிடக்கிறது. இதுவும் அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தங்களது நாட்டில் இதுபோன்ற மோசமான சூழல் நிலவுவதை பாகிஸ்தான் மக்கள் துளியும் விரும்பவில்லை என்று பிரேமஜெயந்த கூறியதாகவும் டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் பிரேமஜெயந்த தங்களது உள்நாட்டு விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரேமஜெயந்தவின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு துணை அமைச்சர் மாலிக் அமத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாலிக் அமத் கான் சன்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பிரேமஜெயந்தவின் கருத்து அர்த்தமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். புலிகளை ஒடுக்க ஜியா உல்-ஹக் ஆட்சிக் காலத்தில் இருந்தே பெருமளவு ஆயுத உதவி செய்த தங்களை விமர்சிப்பதா என்றும் அவர் கூறியுள்ளார்.
நினைத்ததையெல்லாம் பேசியுள்ள பிரேமஜெயந்த, பாகிஸ்தானின் ராணுவத் தலைவர்கள் ஆட்சியில்தான் இலங்கை அதிகப் பலனை அடைந்தது என்பதை மறந்திடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்க ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அரசுக்கு ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்து வந்தது பாகிஸ்தான்.
இதுதவிர்த்து, இலங்கை கேட்டபோதும், கேட்காத போதும் நிதி உதவியையும் அளித்து அந்நாட்டுடன் தாங்கள் நெருக்கமாக உள்ளதை இந்தியா உணர்ந்து கொள்ளும் விதத்தில் நடந்து கொண்டது பாகிஸ்தான்.
thenee
ரூ. 5000 கோடியில் லிபியாவில் 2500 வீடு

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் ரூ. 5000 கோடி ரூபா பெறுமதியான 2500 வீடுகளை லிபியாவில் நிர்மாணிக்க உள்ளது.
இதன் மூலம் 2 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிர்மாண மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-
அரசாங்க நிறுவனமொன்று வெளிநாட்டில் மேற்கொள்ளும் மிகப்பெரிய திட்டம் இது. இந்தத் திட்டம் ஜனாதிபதியின் முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
அமைச்சரவையின் அனுமதிக்காக இந்த யோசனை இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்.
டிசம்பர் மாதத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரு வருடங்களில் பூர்த்தி செய்யப்படும். மேற்படி வீடமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தால் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 7500 வீடுகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தமும் இலங்கைக்கு கிடைக்கும்.
லிபிய வீடமைப்புத் திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.
இலங்கையில் மிக நீளமான கிண்ணியா பாலம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது
கடலுக்கு குறுக்காக சுமார் 400 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்ட கிண்ணியா பாலம் நேற்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட புதிய பால மாகும் கிண்ணியா சீனன்கடா பாலம் அமைப்பதற்காக சவுதி அரேபிய அரசாங்கம் 789 மில்லியன் ரூபாவை நிதி உதவியாக வழங்கியது
இலங்கையில் மிக நீளமான பாலம் என கருதப்படும் கிண்ணியா சீனன்குடா பாலம் கடலுக்கு குறுக்காக அமைக்கப்பட்ட முதலாவது பாரிய பாலமாகும்
இந் நிகழ்வுகளில் மத்திய அமைச்சர்கள் எம்.என்.அப்துல் மஜீத். ஏ.எல்.அதாவுல்லா ,எஸ்.எச். அமீர் அலி டி.பி.ஏக்கநாயக்கா . டபிள்யு.பி. ஏக்கநாயக்கா ,விநாயகமூர்த்தி முரளீதரன் ,சுசந்த புஞ்சிநிலமே மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மாகாண அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ,எம்.எஸ். உதுமா லெப்பை உட்பட பலரும் கலந்து கொண்டனர்
கெக்கிராவயில் மினி சூறாவளி : 40 வீடுகள் பலத்த சேதம்
அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய சூறாவளியால் பல வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகப் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மொரகொல்லாவ, ஹோராப்பொல பகுதிகளிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 40 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சேத விபரங்களைக் கண்டறிய கிராம அதிகாரிகள், மற்றும் சமூக சேவைகள் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அதேவேளை, பாதிப்புக்குள்ளானவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சூறாவளியால் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் வீழ்ந்துள்ளதால், மின்சாரம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்
இலங்கையின் முதலாவது ஹஜ் குழு 28 ஆம் திகதி மக்கா பயணம்

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் முதலாவது இலங்கை ஹஜ்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி மக்கா பயணமாக உள்ளது.
இதேவேளை ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் யாத்திரிகர்களை வழியனுப்பும் உத்தியோகபூர்வ வைபவம் நவம்பர் முதலாம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற உள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.
இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்று வதற்காக இலங்கையில் இருந்து 2800 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர். இந்தத் தொகையை 5300 ஆக அதிகரிப்பது குறித்து சவுதி அரேபிய அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக வும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களை வழியனுப்பும் வைபவம் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் சுமார் 300 யாத்திரிகர்கள் மக்கா பயணமாக உள்ளனர்.
இந்த நிகழ்வில் மத விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இறுதி ஹஜ் குழு நவம்பர் 20 ஆம் திகதி மக்கா செல்லும்.
இலங்கை யாத்திரிகர்களுடன் மூவரடங்கிய மருத்துவ குழுவொன்றும் மக்கா செல்ல உள்ளது. முதலாவது ஹஜ் குழு டிசம்பர் 2 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளது.
பத்திரிகையில் வெளியான செய்தி
ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு செயலாளராக கமல்?

என்னைப் போல் ஒருவனா நீ?
(சினிமா விமர்சனம் : ஞாநி)
உன்னைப் போல் ஒருவன் என்று படத்தின் தலைப்பு சொல்கிறது. பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப்போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப் படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம் தானா? படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?! நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன்.
என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்று விரும்பும் ஒருவன். விரிவாக பார்க்க
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை
எதிர்வரும் 26ம் திகதி கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது
இலங்கை முஸ்லிம்கள் கல்வித்துறையில் பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியிருப்பதாகவும் இந்த நிலைமைக்குத் தாம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனச் சில மாதங்கலுக்கு முனனர் சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ள கூற்று நினைவுக்கு வருகிறது
இந்தக் கல்வித்துறை பின்னடைவின் காரணமாக முஸ்லிம் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்
இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளை யதார்த்தபூர்வமாக இனங்காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் முஸ்லிம் தலைவர்கள் பல்வேறு போலி வாக்குறுதிகளை வழங்கி வாக்கு வேட்டையில் ஈடுபடுவதாகவும் மக்களின் அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார் . எப்படியோ இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய ஜனாதிபதியினால் ஆணைக்குழு ஒன்று அண்மையில் நியமிக்கபட்டது இந்த ஆணைக்குழுவின் சிபாரிசு அறிக்கை எதிர்வரும் 26ம் திகதி கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது . அதன் பின்னர் இவ் அறிக்கை ஜனாதிபதியிடமும் கையளிக்கப்படும்.
சுமார் 750 முஸ்லிம் பாடசாலைகள் இருப்பினும், அவை குறைந்த தரத்தையுடையனவாகவே காணப்படுகின்றன நாட்டின் உள்ள முஸ்லிம் பாடசாலைகள், ஆசிரியர்கள் பல்கலைக்கழக மெளலவி ஆசிரியர்களின் பிரச்சினைகள் என்று பல பிரச்சினைகள் ஆராய பட்டிருப்பதாக தெரிகிறது
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் 45வது ஆண்டு பூர்த்தி விழா

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் 45வது ஆண்டு பூர்த்தி விழாவும் அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எஸ். எல். எம். ஸாபிமரிக்காரின் நினைவு வைபவமும் கொள்ளுப்பிட்டி சஸாக்கா மண்டபத்தில் 24ம் திகதி நடைபெறவுள்ளது.
இவ் வைபவங்கள் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும், மலேசியா பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியுமான கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளதாக கல்விமாநாட்டின் செயலாளர் எம்.வை. பாவா தெரிவித்தார்.
இம்மாநாட்டிற்கு நாடுபூராவிலும் உள்ள 300 முஸ்லிம் புத்திஜீவிகள் கலந்துகொள்ள உள்ளனர். இம்மாநாட்டிற்கு பிரதம அதிதியாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம கலந்துகொள்ள உள்ளார். இது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு தெஹிவளையில் இடம்பெற்றது.
தமிழகக் குழு முஸ்லிம்களை உதாசீனம் செய்துவிட்டது : மக்கள் குற்றச்சாட்டு

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களை உதாசீனம் செய்துள்ளதாகத் தமிழக மற்றும் இலங்கை முஸ்லிம்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
20 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அறிக்கையில் எதனையும் குறிப்பிடவில்லை என முஸ்லிம் சமாதான செயலக இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ஓர் இன ரீதியான ஒடுக்குமுறையாகவே நோக்க வேண்டும் என புத்தளம் இடம்பெயர் முகாமில் தங்கியிருக்கும் சிரேஷ்ட முஸ்லிம் பிரஜை ஒருவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் இடம்பெயர் முகாமுக்கு விஜயம் செய்யுமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
முஸ்லிம் இடம்பெயர் மக்கள் தொடர்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும், இதன் மூலம் அவர்களின் பக்கச் சார்பான தன்மை புலப்படுவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
வன்னி இடைத்தங்கல் முகாம்களுக்கும், மலையகத்திற்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
virakesari
உச்சநிலையில் உள்ளக மோதல், புலிகளின் முக்கிய இணையத்தளம் புதினம் மூடப்பட்டுள்ளது

புலிகளின் முக்கிய இணையத்தளமான புதினம் திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை புதினம் வெளியிட்டுள்ளது ஆனாலும் உள்முரன்பாடுதான் இணையத்தளம் மூடியமைக்கான காரணமாக சொல்லபடுகிறது .
இந்த இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிமோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.
போரின் கடைசி நாளில் புதினம் தளத்தின் செய்தியாளர் ராணுவத்தின் கடைசி அகோர தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய நிலையிலும் கையடக்க தொலைபேசி மூலமாக கொடுத்த கடைசி செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் புதினம் இணையத்தள முகவரிக்கு போனால், ”தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம் என்ற தகவலை மட்டுமே காணமுடியும் .
புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிகிறது
அதிகரித்து வரும் வன்முறை அரசியல் போக்குகள்

புத்தளத்தில் இருந்து எமக்கு வந்த ஈமெயில் செய்தி:
முஸ்லிம் சமூகத்துக்குள் அண்மைகாலமாக அதிகரித்து வரும் வன்முறை அரசியல் போக்குகள் அவதானிக்க முடிகிறது குண்டர்களையும் ரவுடிகளையும் பயன்படுத்தி வன்முறை அரசியலை அணுகுமுறையாக கொண்ட அரசியல் வாதிகள் இவர்கள் தாம் முஸ்லிம்கள் என்ற அடையாளத்தை சற்றும் மதிக்காமல் முஸ்லிம் சமுகத்தின் தலைவர்களான இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுறுத்தல்களை மீறி தம்மை முஸ்லிம் சமுகத்தின் தலைவர்களாக கருதிக்கொண்டு முஸ்லிம் சமுகத்தை பாழ் படுத்தி வருகின்றனர் இவர்களை முஸ்லிம் சமுதாயம் கவனமாக அவதானிக்க வேண்டும் இவர்கள் தொடர்ந்தும் அனுமதிக்கபட்டால் இது முஸ்லிம் சமுகத்தின் அரசியல் அணுகு முறையாக மாறிவிடும் இதுதான் இன்று இலங்கையில் முஸ்லிம் பிரதசங்களில் நடைபெருகிறது நேற்று புத்தளத்தில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களும் அண்மையில் அக்கரைபற்றில் நடைபெற்ற சம்பவங்களும் இதைதான் சொல்கிறது இவ்வாறு புத்தளம் அமீர் தனது ஈமெயில் செய்தியில் குறிபிட்டுள்ளார்
இலங்கையின் மிக நீலமான கிண்ணியா பாலம் 20ம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது

72 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் மிக நீலமான கிண்ணியா பாலம் எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்ட இப்பாலத்தினை அமைப்பதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் நிதி உதவி வழங்கியிருந்தது.
கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேங்களுக்குச் செல்வதற்காக வள்ளங்களைப் பாவித்த மக்கள் எதிர்காலத்தில் இப்பாலத்தினுடாக சுயமாக சென்றுவரமுடியும். குறிப்பிட்ட பிரதேச மக்களின் பல நாள் கனவு நனவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதே நேரம் ஓட்டமாவடி பாலத்தின் வேலைத்திட்டங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி திணைகளத்தினால் அது மிகவிரைவில் மக்கள் பாவனைக்கு விடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உடன்பாடு
ஈரானில் இருந்து இலங்கைக்கு மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. இதற்கான ஒப்ந்தம் அலறிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது, ஒப்பந்தத்தில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முட்டாசி அவர்களும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் றோகித்த போகல்லாகம அவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இவ் ஒப்பந்தமரனது இருநாடுகளுக்கிடையான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகின்றது.
மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் – 13
எஸ்.எம்.எம்.பஷீர்

தமிழர் கட்சிகள் வளர்த்ததெல்லாம் இனவாதமே தவிர வேறில்லை.
“சுத்தி சுத்தி சுப்பருடைய கொல்லைக்குள்” என்று உங்களுக்குத் தோன்றினாலும் வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் வேறுபடாத தமிழ் தேசிய வாதத்தின் “ஜனநாயக” போராட்ட அரசியலில் முஸ்லிம்களை நசுக்கும்வதும் நாசூக்காக பாவிப்பதுமான விசச் சக்கரம் மாறுபடவே இல்லை; எனவேதான் சிலதை மீண்டும் மீண்டுன் நினைக்காமலோ, அதனை எழுதாமலோ இருக்க முடியவில்லை . மக்பூல் பற்றிய இச்ச்சம்பவமும் அத்தகையதே !
இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான தொடர்பாடல் குறை கண்டு, அதன வெளிப்படான தனது மதிப்பீடாக அவர் இவ்வாறு குறிப்பிட்டார் “ தன்னுடைய மதிப்பீடு என்னவென்றால் அதிகாரப்பகிர்வு செயற்பாடு தொடர்பாக நாங்கள் கலந்தாலோசிக்கும்போது முஸ்லிம்களின் அக்கறைகளை தாங்களே பிரதிநித்துவப்படுத்துவதாக ஆகக்குறைந்தது ஐந்து குழுக்கள் உரிமை கோருகிறார்கள் என்னுடனும் ஜனாதிபதி ஜெயவர்தனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நான் உண்மையில் எந்த குழுவினர் குறிப்பிட்ட பிரச்சினையில் நிஜமான அக்கறையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதனை தீர்மானிப்பதில் குழப்பமடைந்திருக்கிறேன். இந்த நிலைப்பாடு தோன்ற அன்று தெற்கு முஸ்லிம் தலைமைத்துவங்களின் வடக்கு -கிழக்கு தொடர்பான மாறுபட்ட அக்கறைகளும் மறுபுறம் கிழக்கிலேயும் வடகிலேயும் காணப்பட்ட வேறுபட்ட அரசியல் அபிலாசைகளுமாகும். இவ்வாறு மாறுப்பட்ட அரசியல் அக்கறைகளும் அபிலாசைகளும் டிக்ஸ்சிட்டை (Shri Dixit) குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கவேண்டும்.
ஜனாப் பதியுதீன் மஹ்மூத் அவர்களிடம் கொழும்பை மையமாகக்கொண்ட அரசியல் சக்திகள் முன்வைத்த எதிர் காரணங்களில் ஒன்று கிழக்கிலிருந்து வந்து தெற்கிலே இனவாத அரசியலை அஷ்ரப் ஸதாபிக்க முனைகிறார் என்பதாகும் இன்னுமொரு புறம் மட்டக்களப்பானுக்கு இங்கு என்ன வேலை என்ற பிரதேச வாத கருத்துமாகும். கொழும்பு மற்றும் தெற்கின் வேறு சில பிரதேசங்களை சேர்ந்த பிரபல முஸ்லிம் சட்டத்தரணிகள் சமூகப் பிரமுகர்கள் என ஒரு குழு ஹோட்டல் ரன்முத்துவில் ஒரு தடவை அமைச்சர் பதியுதீன் முஹம்மது மறைந்த சேர் ஏ. டபிள்யூ எம் அமீர் -ரண்முத்து ஹோட்டல் உரிமையாளர் – ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில் அஷ்ரப்பிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தபோது பதியுதீன் அவர்கள் மௌனமாக செவிசாய்த்ததுடன் அஷ்ரப் அவர்களின் தந்தைக்கும் தமக்குமுள்ள தொடர்புகள்பற்றி (?) குறிப்பிட்டதைத்தவிர வேறொன்றும் பெரிதாகக்கூறவில்லை. எனினும் தீவிர கிழக்கு அரசியல் எதிர்ப்பு கிழக்கிலேருந்து தனி முஸ்லிம் கட்சியின் மூலம் தெற்கில் உருவாக்கப்படும் தேசம் தழுவிய முஸ்லிம் அரசியல் பிரதிகூலங்கள் குறித்து கருத்தாடல்கள், விமர்சனங்கள் அங்கு காணப்பட்டது.
இந்த சூழலில் நான் ஒருதடவை 1980களின் இறுதிப்பகுதியில் அஷ்ரப்பை தற்செயலாக சந்தித்தபோது குறிப்பாக கொழும்பில் ஹுல்ஸ்டொர்ப் எனப்படும் நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதியில் தொழில் புரியும் சட்டத்தரணிகளிடம் பொதுவாக காணப்படும் கிழக்கு எதிர்ப்பு மனநிலையினை கூறியபோது; அவர்கள் யார் என்று அஸ்ரப் அறிய ஆவல் காட்டினார். நான் அவர்கள் யாரென்று கூறவில்லை, அவரது ஊகங்களுக்கும் நான் பதிலளிக்கவில்லை எனினும் அவர் மீதான அந்த விமர்சனங்கள் என்னையும் பாதித்தன என்பதை சுட்டிக்காட்டினேன். கிழக்கை பொறுத்தவரை அன்று காணப்பட்ட தமிழ் ஆயுதம் தாங்கிய போராட்ட குழுக்களின் ஆதிக்க சூழழில் முஸ்லிகளுக்கு மாற்று வழி இல்லை என்பதில் அவருடன் நான் உடன்பட்டேன். எனினும் பல்வேறு விடயங்களில் அவருடன் எனக்கு சிலசில முரண்பாடுகளும் இருந்தன; அவை இங்கு இப்போது எழுதப்பட அவசியமில்லை எனக் கருதுகிறேன்.
எனது வாசிப்புக்களில், அன்று காணப்பட்ட கிழக்கு அரசியல் எதிர்ப்பு என்பது அஷ்ரப எதிர்ப்பு அரசியலாக வெளிப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணமாக அஸ்ரப் பின் நண்பரான மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா எழுதிய “எனது நினைவுத்திரையில் அஷ்ரப்” எனும் நூலில் தான் அவரது நூல் வெளியீட்டு விழாவுக்கு ஹோட்டல் ரன்முத்துவில் நடத்துவதற்காக அதன் தவிசாளர் A.W.M அமீர் அவர்களிடம் விழா பற்றி கதைத்ததாகவும் அப்போது அவர் “ யார் யார் அதிதியாக வருகிறார்கள் எனககேட்டதும் நான் அஷ்ரபின் பெயரை சொன்னதுதான் தாமதம் அஷ்ரப வருவதேன்றால் நான் ஹோட்டலை தரமுடியாது…..” என்று குறிப்பிட்டதாக அவர் தனது நூலில் எழுதிஉள்ளார். இந்நூலசிரியரின் அஷ்ரப மீதான தனிமனித விசுவாசக் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. அவை இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு ஒத்திசைவாகவும் இல்லை; இவை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுத முனைகிறேன். “ இன்றைய தமிழ் .தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற முஸ்லிம் யாழ் மாவட்ட உறுப்பினராக செயற்படும் சட்டத்தரணி இமாம் சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் அஷ்ரபுடன் தான் மருதானை இல் ஒன்றாக தங்கி இருந்து படித்தார் என்றும் இவர்களுடன் அவ்வப்போது கொழும்பு வந்து தங்கும் இமாமின் யாழ்ப்பாண முஸ்லிம் நண்பர்களில் ஒருவர்தான் மறைந்த மன்னர் அரச அதிபர் மக்பூல். இதில் இருவர் புலிகளின் இரத்த வெறிக்கு பலியானபின்னர் இமாம் புலிகளின் “ஜனநாயக” பிரதிநிதிகளின் கட்சின் பிரதிநிதிக்கூட்டத்தில் ஒருவராக இணைந்ததுடன் பிரபாகரனை சந்தித்த யாழ்ப்பான முஸ்லிம் அரசியல் வாதியுமாகும்.
இந்த இமாம் குறித்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் (http://www.srilankaguardian.org/2008/03/will-imam-be-imamto-jaffna.html) குறிப்பிட்டவாறு இவர் நாடாளுமன்ற பதவிக்கு ஈழவேந்தனின் காலியான இடத்திற்கு நியமிக்கப்பட்டபின் விபத்தில் அகால மரணம் அடைந்த த. தே. கூ நாடளுமன்ற உறுப்பினரான சிவநேஷனின் மரணச்சடங்கில் கலந்துகொண்டபோது வன்னியில் பிரபாகரனை சந்தித்தார். அப்போது பிரபாகரன் அவரிடம் அவரின் நாடாளுமன்ற பிரவேசம் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே “உறவினை பலப்படுத்தும்” (“strengthen unity” ) என்று கூறியதாக இக்பால் அத்தாஸ் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இச்சம்பவத்தினை நினத்தபோது எனக்கு இந்து புராண கதை ஓன்று ஞாபகத்துக்கு வருகிறது. தனது இளம் பிராய தோழனான இந்து மத கடவுளர்களில் ஒருவரான கிருஷ்ணனிடம் வறிய குசேலர் தனது மனைவியின் வற்புறுத்தலின் பெயரில் உதவி கேட்பதட்காக கிருஷ்ணனின் அரண்மனைக்கு சென்றார். கிருஷ்ணனை சந்தித்தவுடன், அவரிடம் தனது மனைவி தயாரித்து தந்த அவல் பொதியை கொடுத்து, அளவளாவிவிட்டு எவ்வித உதவியினையும் வெட்கப்பட்டு கேளாமல் வீடு திரும்பிவிட்டார், ஆனால் கடவுளான கிருஷ்ணன் இவரின் வறுமை வாழ்வை இவரது விஜயத்தின் நோக்கத்தை தனது ஞானதிருஸ்டியினால் உணர்ந்து அவர் வீடு திரும்பமுன்னரே அவரது வாழ்விடத்தை வளம்படுத்தி வறுமையை ஒழித்ததாக கதை; ஆனால் எமது இமாம் புலிகள் கடத்திய முஸ்லிம்கள் பற்றி கேட்க மறந்து விட்டார் என்றும் அங்கததொனியில் நான் எழுதி இருந்தேன். பிரபாகரனையும் நான் அக்கதைமூலம் கிருஷணின் இடத்திற்கு உயர்த்தியதாக கொள்ளவேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தேன்
1989-1990 காலப்பகுதியில் வடா மாகாணத்தில் புலிகளால் கடத்தப்பட்ட முஸ்லிம்கள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரி யாழ் மாவட்ட பிரமுகர்கள் ஐவர் பகிரங்க அறிக்கை ஒன்றினை “ஒட்டி வாழ்ந்தோம் வெட்டி வாழவில்லை” என ஜுன் 1996ல் வெளியிட்டனர். பின்னர் கடத்தப்பட்டு தடுத்துவைத்திருப்பவர்கள் தொடர்பாக ஒரு தீர்மானத்தையும் 1997 ஜூலையில் வெளியிட்டனர்
அவர்களது தீர்மானத்தில் சொல்லப்பட்ட முக்கியமான விடயம் என்னவென்றால் புலிகளின் தலைவர்களை சந்தித்து புலிகள் கிழக்கு மாகாணத் தலைமைத்துவத்தை யாழ் முஸ்லிகளை ஏற்றுக்கொண்டதாக பிழையாக நம்பி விட்டதை (அவ்வாறு அல்லவென்று) விளக்குவதற்காகவும் ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டு இருந்தனர். முஸ்லிகளின் உறுதியற்ற நேர்மையற்ற அரசியலும் இங்கு நோக்கற்பாலது.
“சுத்தி சுத்தி சுப்பருடைய கொல்லைக்குள்” என்று உங்களுக்குத் தோன்றினாலும் வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் வேறுபடாத தமிழ் தேசிய வாதத்தின் “ஜனநாயக” போராட்ட அரசியலில் முஸ்லிம்களை நசுக்கும்வதும் நாசூக்காக பாவிப்பதுமான விசச் சக்கரம் மாறுபடவே இல்லை; எனவேதான் சிலதை மீண்டும் மீண்டுன் நினைக்காமலோ, அதனை எழுதாமலோ இருக்க முடியவில்லை . மக்பூல் பற்றிய இச்ச்சம்பவமும் அத்தகையதே !
ஜனாப். மர்கூம் மக்பூல் அவர்கள் 1966/67 அளவில்தான் நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் நிர்வாக சேவைக்கு தெரிவான இரண்டாவது முஸ்லிம் நபராவார். இவருக்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் முதன்முதல் சிவில் சேவைக்கு தெரிவான முஸ்லிம், கலாநிதி ஏ. எம். ஏ அஸிஸ் அவர்களின் பின்னர் இவர் தெரிவாகி இருந்தார் . மக்பூல் நிர்வாக சேவைக்கு தெரிவாகி சம்மாந்துறையில் பிராந்திய இறைவரி உத்தியோகத்தர் (DRO-–Divisional Revenue Officer) எனும் பதவிவகித்தபோது அரசியல் செல்வாக்குமிகு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரமுகர்களின் முயற்சியால் யாழ்ப்பான நிர்வாகத்தின் கீழிருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு , மாவட்ட காணி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார். அப்போது “தமிழ பேசும் மக்களின்” கட்சியாக தம்பட்டம் அடித்த தமிழ் அரசுக் கட்சியின் கட்சி பத்திரிகையான “சுதந்திரன்” தனது முதற்பக்க தலைப்புச் செய்தியாக முழு முஸ்லிம் இனவாதத்தினை கக்கி ” தமிழரின் பதவி முஸ்லிமுக்கு பறிபோவதா” என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த செய்தி சுதந்திரனில் வெளியானபின்னர் நடைபெற்ற தலித் சமூகத்தினரின் பகிரங்க கூட்டமொன்றில் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட போது, எனக்கு அறிமுகமான யாழ் முஸ்லிம் பிரமுகர் அக்கூட்டததில் கலந்துகொண்டு பதில் தர வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விட அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக விவுரையாளரும் பின்னாளில் இலண்டனிலுள்ள “தீபம்” தொலைக்காட்சி நிறுவனத்தின் செயதி தயாரிப்பாளராகவும் கடமையாற்றிய வித்தியானந்தன் “முஸ்லிம்களின் உள்ளக் குமுறலை கேட்டீர்கள்” என்றும் இதற்கான பதிலை அன்றைய கூட்டணி நாயகன் “”தளபதி” அமிர்தலிங்கம் வழங்குவார் என்று எதிர்பார்த்து கூற , அமிர்தலிங்கம் அலட்சியம் செய்து இது பற்றி மூச்சு விடாமல் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சென்று விட்டார் . இதுதான் யாழில் அன்று நிலவிய தமிழர் கூட்டணியின் முஸ்லிம்கள் மீதான ” அன்பு” கம்யூனிஸ்ட் கார்த்திகேசு ஆசிரியர் தான் முஸ்லிம் ஒருவர் மேயராக (சுல்தான்) 1955ல் வருவதற்கும் வழி வகுத்தவர், வரலாறு படைத்தவர். தமிழர் கட்சிகள் வளர்த்ததெல்லாம் இனவாதமே தவிர வேறில்லை. இவர்களது வெளிப்படையான சிங்கள இனவாதத்துள் முஸ்லிம் விரோதமும் கிழக்கு தமிழர் தலைமைகள் மீதான விரோதமும் மறைந்திருந்தது.
இவ்வாறுதான் தமிழரின் பிரதான அரசியல் கட்சியான ” ஈழத்து காந்தி” என அழைக்கப்பட்ட தந்தை செல்வா என்பவரின் பெயரால் வட்டுக்கோட்டையில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழீழக் கோரிக்கை இன்றைய அழிவுக்கு அன்றே வழிகோலியதுடன் தமிழர்களின் அரசியல் வரலாறும் முழுமையாக சிதைவுற வழிகோலியது.
ஆயுதப்போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட எஸ் ஜே வி. செல்வநாயகத்தின் சீடர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடுதான் இந்த சுதந்திரனின் தலையங்கம். மக்பூல் கிளிநொச்சியில் பணியாற்றிய போதுதான் அவரின் கீழ் புலிகளின் “மறைந்த” தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் காணி உத்தியோகத்தராக பணியாற்றினார். பின்னர் புலிகள் இவரை கொல்லுவதற்காக (மக்பூல்) இவரின் இல்லத்திற்கு (மன்னாரில் இவர் அரச அதிபராக இருந்தபோது) வந்து இவரை இரண்டாவது தடவை விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது தடுத்த தனது மனைவியிடம் “பொடியன்கள்” ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று அசாத்திய நம்பிகையுடன் சென்றவர் மீளவே இல்லை. கொடிய பகைவர்களையும் நமது பொடியன்கள் என்று ” பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே” என்று செயற்பட்ட மக்பூல் யாழ் முஸ்லிம் கல்வி சமூகத்திற்கு மாபெரும் இழப்பு என்பதை வரலாறு பதிவுசெய்யாமல் விடாது. . இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் முயற்சியில் கிழக்கில் முதல் முஸ்லிம் கட்சியான முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடுத்து முஸ்லிம் மக்களை உள்வாங்கும் யாழ் மேலாதிக்க தமிழ் இனவாத கைங்கரியத்துள் சிக்கியோர்களில் குறிப்பாக மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், தலைவருமான அஸ்ரப் அவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தூதுவராக கடமையாற்றிய மறைந்த சட்டத்தரணி சம்சுதீன் ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகும்.
வடகிலே முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் தனித்து போட்டிட முயன்றபோது அதற்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய பிரமுகரான முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான யோகேஸ்வரன் எம்.பி. போட்டியிடட முற்பட்ட முஸ்லிம் பிரமுகரை இமாம் மற்றும் சில முஸ்லிம் பிரமுகர்கள் மூலம் அணுகி அவ்வெண்ணத்தினை கைவிடுமாறு கேட்டதும் அதில் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். பி யான இமாம் எவ்வாறு செயற்பட்டார் என்பதும் யாழ்ப்பாணத்திலே ஒரு முஸ்லிம் வேட்பாளர்களை தமது கட்சியில் போட்டியிட வாய்ப்பளிக்காதது மட்டுமல்ல மிகவும் முக்கியமாக வடமாகணத்தில் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நடாத்தினர் என்பதற்கு இவை போன்ற பல சம்பவங்கள் உதாரணங்களாகும்
தொடரும்…….












