Lankamuslim.org

One World One Ummah

Archive for September 7th, 2009

2008 ஆம் ஆண்டில் அதிக ஆயுத விற்பனை செய்த நாடு அமெரிக்கா

leave a comment »

external-weapons

2008 ஆம் ஆண்டில்  உலகிலேயே அதிக ஆயுத விற்பனை செய்த நாடாக அமெரிக்காதான் என்று அமெரிக்க நாடாளுமன்ற குழு தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” வளரும் நாடுகளுக்கான மரபு ஆயுத பரிமாற்றங்கள் ” என்ற தலைப்பின் கீழ் அமெரிக்கா கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கொண்ட் ஆயுத விற்பனை குறித்து ஆய்வு செய்து, அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் மேற்கண்ட விவரம் இடம்பெற்றுள்ளதாகவும், உலகில் விற்பனையான மூன்றில் இரண்டு பங்கு ஆயுதங்களை அமெரிக்காவே விற்பனை செய்துள்ளதாகவும், ஏறக்குறைய 55.2 பில்லியன் டாலருக்கு இந்த் ஆயுத விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

September 7, 2009 at 11:09 pm

படையினரின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

leave a comment »

RFB063 OPT

புலிகளுடனான யுத்தத்தின் போது வடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக அங்கு கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளன. கிளிநொச்சி, ஆனையிறவு, முல்லைத்தீவு மற்றும் புதுமாத்தளன் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது உயிரிழந்த  படையினரின் நினைவாக அங்கு நினைவுத் தூபிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவுத்தூபிகள் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவால் நேற்றுத் திறந்து வைக்கப்படவிருந்தன. சரத்பொன்சேகா வடபகுதிக்கு நேரில் சென்று தூபிகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்க இருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இத்திறப்பு விழாக்கள் கடைசி நேரத்தில் மறுதிகதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒத்திவைப்புக்கான காரணம் இன்னமும் வெளியிடப்படவில்லை. பகிரங்க பிரசாரம் கிடைக்கக்கூடிய எந்த நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளைப் முக்கியப்படுத்த வேண்டாம் என்று கோட்டாபய  ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்றும் இதனடிப்படையிலேயே இந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றும் படை வட்டராங்களிலிருந்து தெரிய வருகிறது.

Written by lankamuslim

September 7, 2009 at 10:56 pm

TNA-இவர்கள் முஸ்லிம்கள் சமந்தமாகவும் கலந்துரையாடுவார்களாம்

leave a comment »

TNA_in_Delhi200

யாழ்ப்பாண முஸ்லிம் MP இமாம் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழு  இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. இதன்போது பிரதானமான ஐந்து விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதென கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, இமாம், தங்கேஸ்வரி மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரே இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

வன்னி அகதிகளின்   மீள்   குடியமர்வுப்   பிரச்சினைக்கு    முதலிடம் அளிக்கப்படும்
இனப் பிரச்சினைத் தீர்வுக்கான இலங்கை அரசின் உத்தேசத் திட்டm தை மேலும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக முன்வைக்குமாறும் வலியுறுத்தப்படும் என்றும் தமிழத்தேசியக் கூட் டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்படாத இடங்களில் மக்களை பகுதி பகுதியாக மீள்குடியேற்றம் செய்யவேண்டும். அங்கு அவர்களுக்கு தற்காலிகமான இருப்பிடங்களை அமைத்துக் கொடுப்பதன் மூலமாக அம் மக்களுக்கு ஓரளவு நிம்மதி ஏற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியிடம் தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.

வன்னி மக்களின் மீளக்குடியமர்வைத் துரிதப்படுத்துதல், 1990 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம்,
சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம்,வடக்குக் கிழக்கில் நடைபெற்றுவரும் அத்துமீறிய குடியேற்றம் வடக்குக் கிழக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது

Written by lankamuslim

September 7, 2009 at 5:33 pm

இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவல்

leave a comment »

brutal-second-world-war-001காஷ்மீரில் லடாக் பிராந்தியத்தில்  22 ஆயிரத்து 420 அடி உயர மவுண்ட் கயா என்ற குன்று உள்ளது. அது, காஷ்மீரின் லடாக்கும், இமாசலபிரதேசத்தின் ஸ்பிடியும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லை, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் வரையறுக்கப்பட்டது. இதையே சர்வதேச எல்லையாக இந்தியாவும், சீனாவும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், மவுண்ட் கயா அருகே இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் 1 1/2 கி.மீ. தூரம் உள்ளே நுழைந்தனர். அங்குள்ள பாறைகளில் சிவப்பு நிற பெயிண்டால் `சீனா’ என்று திரும்பும் திசையெங்கும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர்.

Written by lankamuslim

September 7, 2009 at 5:18 pm

யூனிசெஃப் அதிகாரி வெளியேற இலங்கை அரசு உத்தரவு

leave a comment »

logo-unicef

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தின் போது யூனிசெஃப்ன் அமைப்பின் சார்பில் பேசவல்லவரான  ஜேம்ஸ் எல்டர் அவர்கள் ஊடகங்களிடம் வெளியிட்ட கருத்துக்களுக்காக அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். ஜேம்ஸ் எல்டர் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் நிரந்தர செயலரான பாலித்த கோஹன்ன கூறுகையில், ஜேம்ஸ் எல்டர் விடுத்த அறிக்கைகள் உண்மையை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை என்றும், அவை ஆராய்ந்து விடுக்கப்படவில்லை என்றும், அவை விடுதலைப் புலிகளின் கோணத்தை பிரதிபலிப்பதாகவே இருந்ததாகவும், தங்களை பொறுத்தவரை அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரையை மேற்கொண்டார் என்று எண்ணுவதாகவும் கூறினார்.

இது தொடர்பாக யூனிசெஃப் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், பலவீனமான நிலையில் இருக்கின்ற இலங்கை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பக்கச்சார்பற்ற வகையில் குரல் கொடுத்து வரும் ஜேம்ஸ் எல்டர் தொடர்ந்து அதனை முன்னெடுக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக கூறியுள்ளது.

இது தொடர்பாக யூனிசெஃப் அமைப்பின் தெற்காசிய தகவல்தொடர்பு இயக்குநர் சாரா க்ரோ கூறும்போது, தாங்கள் ஜேம்ஸ் எல்டர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்த தகவல்களை உறுதிப்படுத்த முயற்சித்து வருவதாக கூறினார்.

BBC

Written by lankamuslim

September 7, 2009 at 7:00 am

ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிப்பு

leave a comment »

gotabhaya_rajapaksa_tamilnational

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு பல்கலைக்கழகத்தினாலேயே இந்த பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 6/9/2009  நடைபெற்ற வைபவமொன்றிலேயே கௌரவ பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சட்டம் தொடர்பில் கௌரவ கலாநிதி பட்டமும் ,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு தர்ஷன சூரி என்ற கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டன

Written by lankamuslim

September 7, 2009 at 6:25 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers