Lankamuslim.org

One World One Ummah

Archive for September 3rd, 2009

அம்பாறை தமிழ்ப் பிரதேசங்களில் ஜனநாயக விரோதச் செயல்கள்

leave a comment »

thurairatnam

துரைரத்தினம் குற்றச்சாட்டு:

அம்பாறை மாவட்டத்திலுள்ள  தமிழ் பிரதேசங்களில் ஜனநாயக விரோதச் செயல்கள் தொடர்வதாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தியுள்ளார்.

“இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களைப் பாதுகாப்பு தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

“கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிரதேசங்களில் மக்களின் வாழ்வு நிலை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் தொடரும் அரசியல் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இயல்பு நிலைக்குத் தடையாக உள்ளன.

அரசியல் செல்வாக்குமிக்க சில குழுக்களினால் தொடரும் இப்படியான வன்முறைகள் ஜனநாயக சக்திகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதால் கிழக்கு மாகாண  முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் சபை ஆகியோர் தம் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையே அங்கு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இம்மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேசங்களுக்குச் செல்லும் போது சந்தேகத்திற்குரிய நபர்கள் தம்மைப் பின் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் இணைப்பு அலுவலகமொன்று அங்கு திறப்பதற்கு அக்குழுவினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜா, தனது பாதுகாப்பின் நிமித்தம் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வீட்டில் தங்கியிருந்த வேளை, அவரது வீட்டுக்கு முன்பாகக் கூடிய குழுவொன்று வன்முறைகளில் ஈடுபட முற்பட்டு, அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துள்ளது.

இவ்வாறு தமிழ்ப் பிரதேசங்களில் சில ஆயுத வன்முறைகள் தொடர்ந்து வருவதும், ஒரு சிலருக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வழங்குவதும், கப்பம் பெறுவதும் தொடர்கின்றன.

எனவே இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, ஒரு சமாதான ஜனநாயக சூழலை ஏற்படுத்த வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களில் பொது மக்கள் என்ற போர்வையில் செயல்படும் சில குழுக்களின் வன்முறைச் சம்பவங்களைத் தீவிர விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதன்மூலமே அப்பிரதேசங்களில் முழுமையான ஜனநாயகத்தையும் அமைதியான சூழலையும் உருவாக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

வீரகேசரி

Written by lankamuslim

September 3, 2009 at 10:44 pm

ஒருவருடத்தின் பின்னர் உப மாநகர சபை முதல்வராக யாழ் முஸ்லிம்

leave a comment »

jaffna_library2

யாழ் மாநகர தேர்தலில் U.P.F.A யுடன் இணைந்து போட்டியிட்டிருந்த E.P.D.P மற்றும் A.C.M.C இடையே முதல்வர், பிரதி முதல்வர் தொடர்பாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது

இவர்களிற்கிடையாக காணப்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பாக அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களிடம் கேட்கப்பட்டபோது. ஒரு வருடம் வரை பிரதி முதல்வர் பதவியை ஈ.பி.டி.பி கொண்டிருக்கும் என்றும், அதன் பின்னர் பிரதி முதல்வர் பதவி தமது கட்சியை சேர்ந்த உறுப்பினருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன். இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டு டகள்ஸ் தேவானந்தாவுக்கும் தனக்குமிடையிலான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப் பட்டுள்ளதாகவும் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

September 3, 2009 at 10:31 pm

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் புதிய கிளை ஜனநாயகத்தை மறுக்கும் சில தமிழ் இனவாத குழுக்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பியுள்ளது

leave a comment »

pillayan and hisbullah

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள்  விடுதலைப் புலிகள் புதிய கிளை ஜனநாயகத்தை மறுக்கும் சில தமிழ் இனவாத குழுக்கள்  மத்தியில் அதிருப்தியை கிளப்பியுள்ளது

எமது காரியாலயத்திற்கு தமிழர்கள் வரவேண்டும் என நான் எதிர்பார்க்க வில்லை. இக்காரியாலயம் அமைக்கப்பட்டதன் நோக்கம் முஸ்லிம் மக்களுக்கு சேவை புரியவே என்கின்றாராம் முதலமைச்சர் பிள்ளையான் எனக் கூறும் ஜனநாயகத்தை மறுக்கும் சில தமிழ் இனவாத குழுக்கள்

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது காரியாலயம் ஒன்றை கடந்தவாரம் நிறுவிய போது .  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பிரவேசம் அங்குள்ள ஜனநாயகத்தை மறுக்கும் சில தமிழ் இனவாத குழுக்கள்  மத்தியில் அதிருப்தியை கிளப்பியுள்ளது

அதே நேரம் தான் தமது கட்சியின் கிளை ஒன்றை அக்கரைப்பற்று முஸ்லிம் கிராம எல்லையில் நிறுவியுள்ளதன் பிரதான நோக்கம் அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு உதவி புரிவதற்காக எனவும், தமிழ் மக்கள் தமது அலுவலகத்திற்கு வரவேண்டும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தாகவும் முதல்வரை சந்தித்த ஜனநாயகத்தை மறுக்கும்  தமிழ் இனவாத குழுக்கள் தெரிவிக்கின்றன

அக்கரைப்பற்றில் திறக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கிளையில் கணிசமான அளவு முஸ்லிம்கள் காணப்படுவதாக தெரியவருகின்றது என்றும் . தமிழர் தாயகப் பிரதேசம் என குறிப்பிடப்படும் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களில், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அரசியலில் முஸ்லிம்களால் பலவகைப்பட்ட குறிக்கீடுகளும் வஞ்சகங்களும் இடம்பெற்றிருக்கின்றதென்பது வரலாறு. எனக் மேலும் குறிபிடும் இந்த ஜனநாயகத்தை மறுக்கும்  தமிழ் இனவாத குழுகள்

கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது முதலமைச்சர் பதவி என்பது தமிழர் ஒருவர் கைக்குச் செல்லக்கூடாது என பகிரங்கமாக இனவாதத்தை கிளப்பி முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்திருந்தனர். என்றும் முஸ்லிம்களின் பிரச்சாரங்களில் காணப்பட்ட தமிழர் விரோத கொள்கைளை தோற்கடிக்கும் பொருட்டே அம்பாறைத் தமிழ் மக்கள் தமிழர் சார்பாக தேர்தலில் குதித்திருந்த தமிழர் மூவரையும் வெற்றியடையச் செய்திருந்தனர். அவ்வெற்றிக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அக்கட்சியின் அன்றைய அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்டிருந்த இனியபாரதியின் பங்களிப்பு மிகவும் அமைந்திருந்து எனக் தொடரும் இந்த ஜனநாயகத்தை மறுக்கும்  தமிழ் இனவாத குழுகள்

முஸ்லிம்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லா விற்கே வழங்கப்படவேண்டும் என முரண்பட்டு நின்றிருந்தனர் என்றும் ஆனால் அரசியலில் தமிழ் மக்களுக்கு உள்ள படுகுழிகளை உணராத பிள்ளையான் தொடர்ந்தும் முஸ்லிம்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக செயற்படுவது துரதிஸ்டமாகவே உள்ளது என்றும் இறுதியாக இடம்பெற்று முடிந்துள்ள யாழ், வவுனியா தேர்தல் முடிவுகளை நோக்குகையில் தமிழ் மக்களின் மனநிலையையும் எதிர்வரும் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும் ( புலிகளுக்கு சாதகமாக காணப்டுகின்றது என்பதாக கூறுகின்றனர்  ). இப்படி இன வாதத்தை கக்கும் ஜனநாயகத்தை மறுக்கும்  தமிழ் இனவாத குழுகள் புலிகளுக்கு பின்னரும் தமிழ் இன வாதத்தை பேசி  தமிழ் முஸ்லிம் உறவை தொடர்ந்தும் படுகுழியில் தல்லும் கதைதான் தொடர்தும்  சொல்கின்றனர்.

ஜனநாயகத்தை மறுக்கும்  தமிழ் இனவாத குழுக்களை பிரதி பலிக்கும் கட்டுரையை பார்க்க:

இங்கு கிளிக் செய்யவும்

Written by lankamuslim

September 3, 2009 at 3:31 pm

பேருவளை மஸ்ஜிதுர் ரஹ்மான் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு தடுப்பு காவல் நீடிப்பு

leave a comment »

5

பேருவளை  மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசள்  வழக்கு நேற்று எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்களை  பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் அப்போது  களுத்துறை நீதிமன்ற நீதிவான் இவர்களை மேலும்  செப்டம்பர்  மாதம் 9ம்  திகதி வரை தடுப்புகாவலில் வைக்க  உத்தரவிட்டார்.

Written by lankamuslim

September 3, 2009 at 12:03 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers