Lankamuslim.org

One World One Ummah

Archive for September 1st, 2009

மதுரங்கேணி விவசாய காணி பிரச்சினை.

leave a comment »

img_3794மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மதுரங்கேணிக்குள காணிப்பிரச்சினை பல நெடுங்காலமாக இருந்துவந்த ஒன்றே 1986ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் அங்கு வாழ்ந்து வந்ததாகவும் அதேநேரம் அங்கு ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து அம்மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் முஸ்லிம்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர், அதேபோல் 1986ம் ஆண்டுக்கு முற்பட்ட காலம் முதல் இற்றைவரைக்கும் அப்பரதேசத்தில் தாங்களே பூர்வீக குடிகளாக இருந்து வருவதாகவும் தமிழ் மக்கள் சார்பில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்  பிரதேச சபை தவிசாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தீர்க்கமான முடிவினை எடுக்க முற்பட்டபோதும் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தீர்க்கமான முடிவினை  எடுக்கமுடியாமல் போனது.
இறுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இது தொடர்பான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையி;ல்15 பேர் கொண்ட விசேட குழு ஒன்றினை நியமித்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பித்து அதனூடாக பெறப்படுகின்ற முடிவுகளின் அடிப்படையில் இரு சாராருக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் காணி பகிர்ந்தளிக்கப்படும் எனவும், இத்தீர்மானம் எடுக்கும் வரை எவரும் குறித்த காணி தொடர்பான பிரச்சனைகளில் தலையிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் பசீர் சேகுதாவுத், மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம், மாசிலாமணி,சசிதரன்,ஜவாகீர்சாலி,முபீன் வாகரை பிரதேச செயலாளர், வாகரைப்பிரதேச தவிசாளர் கணேசன்(சூட்டி), பிரதி அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரன், ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர், காணி தொடர்பான அதிகாரிகள், மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள், மற்றும் தமிழ் முஸ்லிம் விவசாயப்பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
img_3815img_3790

img_3848img_3786

படங்களும் தகவலும்- மீன்மகள்.நெட்

Written by lankamuslim

September 1, 2009 at 1:33 pm

ஜனாதிபதி நேற்று லிபியா பயணமானார்

leave a comment »

001

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று  லிபியா பயணமானார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

லிபிய விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. லிபியத் திட்டமிடல் அமைச்சர் அப்துல் ஹபீட் அல்-ஸ்லட்னி ஜனாதிபதியை வரவேற்றார்.

லிபிய புரட்சியின் 40 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்குபற்றச் சென்றிருக்கும் ஜனாதிபதி லிபியாவின் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் இவ்விழாவில் கலந்து கொள்ளும் பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி

Written by lankamuslim

September 1, 2009 at 11:25 am

விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறலாம் சர்வதேச புலனாய்வு இணையத் தளம் எதிர்வுகூறல்

leave a comment »

LTTEarmyதமிழீழ விடுதலைப் புலிகள்  இயக்கம் இலங்கையில் மீண்டும் புத்துயிர் பெறலாம் என்று “Strategy Page” என்கிற பிரபல சர் வதேச புலனாய்வு இணையத்தளம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கைப் படையினருடனான இறுதி யுத்தத்தில் தப்பிச்
சென்ற விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்கள் தமது இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பார்கள் என்றும், இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இவை தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
இலங்கை இராணுவத்துடனான இறுதிக் கட்ட யுத்தத்தின்போது சுமார் 30 ஆயிரம் புலி உறுப்பினர்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றார்கள். அவர்கள் ஆயுதமற்ற புலிகள் ஆவர். ஆனால், மிகவும் ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்குபவர்கள். அவர்கள் தற்போது புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு முயற்சித்து வருகின்றார்கள். இலங்கை இராணுவம் இவர்களைப் பிடிப்பதற்கு வலைவிரித்துள்ளது.

Written by lankamuslim

September 1, 2009 at 11:15 am

“தமிழர்களை முஸ்லிம்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க முயற்சிக்கும் ரி.எம்.வி.பி. கட்சி வாக்குக் கேட்டு வரக்கூடாது”

leave a comment »

இந்த ஆர்ப்பாட்டம்  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் இடம் பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு
பொலிஸார் வானைநோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்சி அலுவலகத்தை நோக்கி கற்களை வீசினர் என்றும் தெரியவருகிறது.
அக்கரைப்பற்று, சின்ன முகத்துவாரம் பிரதான வீதியிலிருந்து நேற்றுக்காலை 10 மணிக்கு ஊர்வலமாகச் சென்றவர்கள் ரி.எம்.வி.பி. அலுவலகத்துக்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாதர் சங்கத்தினர், வேலையற்ற பட்டதாரிகள், விதவைகள் உட்பட சில அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
“ஒரு மாட்டுக்கு ஒரு சூடு, தமிழர்களைக் காட்டிக்கொடுக்க முயற்சித்தால் உனக்கும் சூடு” , “கிழக்கு மாகாண முதலமைச்சர் அம்பாறையில் கால் பதிக்கக் கூடாது”, “தமிழர்களை முஸ்லிம்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க முயற்சிக்கும் ரி.எம்.வி.பி. கட்சி வாக்குக் கேட்டு வரக்கூடாது”, “பெண்ணினத்தைக் கேவலப்படுத்தும் ரி.எம்.வி.பி. கட்சியினரின் மூச்சுக் காற்றுக்கூட எம்மீது படக்கூடாது”, “சுதந்திரக் காற்றைப் பறிக்க முயற்சித்தால் ரி.எம்.வி.பி. கட்சியை எரித்துச் சாம்பராக்கி விடுவோம்.” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் தாங்கியிருந்தனர்.
அக்கரைப்பற்றில் அமைக்கப்பட்ட ரி.எம்.வி.பி. கட்சியினரின் அலுவலகத்தை அகற்றுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கையொப்பங்கள் பெறப்பட்ட மகஜர் ஒன்று அக்கரைப்பற்று பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரியிடம் வழங்கப்பட்டது.
அந்த மகஜர் தொடர்பான முடிவை மூன்று தினங்களுக்குள் தெரிவிப்பதாகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மூன்று நாள்களில் முடிவு அறிவிக்கப்படாவிட்டால் மீண்டும் மக்கள் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

உதயன் பத்திரிகையில் இருந்து

Written by lankamuslim

September 1, 2009 at 11:06 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers