Lankamuslim.org

One World One Ummah

Archive for September 2009

கோபால்சாமி வைகோ ஒரு இந்திய தேசத் துரோகி இல்லையா ?

leave a comment »

புலிகளுடன் தொடர்பு கொண்டு இந்திய இராணுவத்துக்கு எதிராக செயல்பட்ட கோபால்சாமி  வைகோ ஒரு இந்திய தேசத் துரோகி இல்லையா ?
ஒரு இந்திய முஸ்லிம் கஷ்மீருக்கு சுற்றுலா சென்று வந்தாலே முஸ்லிம் பயங்கரவாதி இந்திய தேசத் துரோகி என முத்திரை குத்தும் தமிழ் நாட்டு இனவாத  ஊடகங்களுக்கும் சினிமாத் (கூத்தாடிகள்)  துறைக்கும் இந்திய பாசிச பாதுகாப்பு படைக்கும்  இது  ஒரு இந்திய தேசத் துரோகமாக தெரியவில்லையா ?

1.

2.

3.

Written by lankamuslim

September 30, 2009 at 11:50 am

யாழில் பொலிஸ் சேவைக்கு 880 பேர் முதற்கட்டத் தெரிவு

leave a comment »

http://nimg.sulekha.com/Others/original700/sri-lanka-police-2009-6-12-10-24-14.jpg

யாழ். மாவட்டத்தில்   இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவைக்கு இணைக்கும் செயற்றிட்டத்தில் 880 பேர் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை யாழ். செயலகத்தில் நேர்முகத் தேர்வும் எழுத்துப் பரீட்சையும் இடம்பெற்றன.

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவையில் இணைவதற்கு 400 பெண்கள் அடங்கலாக 6500 பேர் விண்ணப்பித்த போதும் 880 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மற்றையவர்கள் வயது கூடியவர்கள் மற்றும் திருமணமானவர்கள் என்பதால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சர் மாரப்பன தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் இணைப்பதற்காக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையங்களில் முதற்கட்ட தேர்வு இடம்பெற்றது. யாழ். குடாவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு 500 இளைஞர், யுவதிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

virakesari

Written by lankamuslim

September 30, 2009 at 11:21 am

M.L.A.M ஹிஸ்புல்லாஹ் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பிற்போடப்படவுள்ளது.

leave a comment »

கிழக்கு மாகாணசபையில் நேற்று   சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை .

கட்சி தலைவர்களுக்கு இடையில் இணக்கமின்மை காரணமாக இந்த விவாதம் இன்று நடைபெறவில்லை. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தின் பிறிதொரு தினத்திற்கு அந்த விவாதம் பிற்போடப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமன விடயத்தில் தலையிட்டமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தப்பட்ட நிலையில் அவர் மீது ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.

Written by lankamuslim

September 30, 2009 at 10:33 am

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த சதி – நவமணி

leave a comment »

TigerJumping

  • கல்முனை நகரின் ஹிஜ்ரா வீதியை பாரதி வீதி என  பெயர் மாற்றம்
  • பெரிய நீலாவணையில்  கல்முனை வரவேற்கின்றது என்ற வரவேற்பு போட்டு நீக்கம்

அம்பாறை  மாவட்டத்தில் வளர்ந்து வரும் தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்குலைப்பதற்காக இனக்கலவரமொன்றைத் தூண்டி விடுவதற்கான மறைமுகமான சதியொன்று இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராளிகளாக இருந்து ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்துள்ள தேசிய அரசியல் கட்சி ஒன்றில் அங்கம் வகிக்கும் ஒரு குழுவினரின் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான சம்பவங்களே இச்சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் செயற்பட்டு வருவதனை விரும்பாத சக்திகள் அவரை அம்பாறை மாவட்டத்துக்கு வரக்கூடாதென்றும் அவரது கட்சி அலுவலகங்கள் திறக்கப்படக்கூடாது எனவும் கூறி மாவட்டத்தில் பேரணி ஹர்த்தால்களை நடத்தி மாவட்டத்தில் குழப்ப நிலையை உருவாக்கி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சாராதவர்கள் தலைமைத்துவம் வழங்கி நடத்தும் இந்தச் செயற்பாடுகளில் முக்கியமாக கல்முனை நகரின் ஹிஜ்ரா வீதியை பாரதி வீதி என  மாற்றியுள்ளதோடு பெரிய நீலாவணையில் போடப்பட்டிருந்த கல்முனை வரவேற்கின்றது என்ற விளம்பரப் பலகையும் இவர்களால் சில தினங்களுக்கு முன் உடைத்தெறியப்பட்டுள்ளது. (கருணா அவர்கள் முன் நின்று இதனை அகற்றினார்-என மீன்மகள் என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது ) ஹிஜ்ரா வீதி பாரதி வீதி என மாற்றப்பட்டது தொடர்பான கல்முனை மேயர் எம்.எச்.எம். ஹரிஸிடம் நவமணி வினவியபோது இது தொடர்பாக மாநகர சபையில் எத்தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் இது தொடர்பாக பொலிசில் தான் முறைப்பாடு செய்திருப்பதாகவும் கூறினார்.

பெரிய நீலாவணையில் போடப்பட்டிருந்த வரவேற்பு பலகை உடைக்கப்பட்டது தொடர்பாகவும் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக மேயர் ஹரிஸ் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டிச் செயற்பட்டதில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கல்முனையில் வாழும் 30சதவீதமான தமிழர்களுக்கு அவர்களது விகிதாசாரத்திற்கேற்ப நிதி மற்றும் வளங்கள் ஒதுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் சாட்சி பகர்வர் என்றும் கூறினார்.
இரு சமூகங்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய நிலையில் பிரிவினையை உருவாக்க முயற்சிப்பது ஏன் என்று புரியாததாகவுள்ளதாகவும் அவர் கூறினார். இக்குழுவின் இம் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளை பலவந்தமாக மூடச்செய்வதுடன் எழுச்சிக் கூட்டமென்ற பெயரில் முஸ்லிம்களுக்கெதிரான நச்சு விதைகளை விதைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.

அவ்வாறான மிக முக்கிய கூட்டமொன்று கடந்த 17ம் திகதி நாவிதன் வெளி பிரதேசத்தில் உள்ள விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் நடத்தப்பட்டதாகவும் இதில் அரச உயர் அதிகாரிகள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு உரையாற்ற வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

30 வருடகால யுத்தத்தின் பின்னர் கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பிரதான வீதிகள் கார்பட் இடப்பட்டு வீதி அமைப்பு முற்றாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில் இக் கூட்டம் நடாத்திய ஹர்தால் காரணமாக வீதிகளில் டயர் போட்டு எரிக்கப்பட்டமையால் வீதிகள் யாவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர் என அறிய முடிகிறது. அதன் காரணமாக வீதியால் செல்லும் முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் இவ் வன்முறைகள் தொடர்பாக தமிழ் புத்தி ஜீவிகள் கருத்து தெரிவிக்கையில் முப்பது வருடமாக இடம்பெற்ற வன்முறைகள், இனமுறண்பாடுகள், சந்தேகப்பார்வைகள் என்பவற்றில் இருந்து மக்கள் விடுபட்டு சந்தோசமாக இருந்து வருகையில் அரசியல் இலாபத்திற்காகவும் அதிகார மோகத்திற்காகவும் இனங்களை பிரித்துவைக்கும் நாடகமொன்று அரங்கேற்றப்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மிகவும் நல்லவர். ஆவரிடம் இன ரீதியான சிந்தனை இல்லை அவ்வாறான ஒருவர் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இணைந்து மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்ள போராடுகின்றார். ஆனால், அவரது முனனைய சகபாடிகள் அவரை குறை கண்டு தூசிக்கின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கின்றது.

Written by lankamuslim

September 29, 2009 at 8:52 pm

சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது

leave a comment »

http://farm4.static.flickr.com/3164/3048639468_a1b5e38d06.jpg

உலகின் வல்லரசு   நாடான அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாத சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. -அமெரிக்கா சர்வதேச மட்டத்தில் மனித உரிமை மிரல்களை சிறப்பாக செய்து வரும் நாடு ஈராக்கில் மட்டும் பத்து லச்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்களை கொலை செய்த பொறுமை அமெரிக்காவையே   சாரும்-         கடந்த காலங்களில் யுத்தக் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், யுத்த குற்ற நீதிமன்றத்தினை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

September 29, 2009 at 11:09 am

புத்தளம் பிரதேச செயலளார்,மாவட்ட செயலகத்திலிருந்து பணியாற்றுகின்றார்

leave a comment »

புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.நபீலுக்கு,மாவட்டத்தின் பிரதி அமைச்சர் ஒருவரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்து திங்கட்கிழமை முதல் பிரதேச செயலகத்துக்கு வருவதை தவிர்த்து புத்தளம் மாவட்ட செயலகத்தில் தமது வரவை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

Written by lankamuslim

September 28, 2009 at 11:39 pm

ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் மோதல்

leave a comment »

http://media.artdiamondblog.com/images2/HavanaEyeHospital.jpg

திருகோணமலை கிண்ணியா ஆதார  வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு பெண் நோயாளியின் உறவினர்களுக்கும், ஆண் தாதிகளுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில்  இருவர் காயமடைந்தர். கருச்சிதைவு ஏற்பட்ட பெண் யொருவரை கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக சென்றபோது அங்கு எந்தவொரு வைத்தியரும் கடமையில் இருக்கவில்லை. இந்நோயாளி பின்னர் தனியார் மருத்துவ நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு போதிய வசதியின்றி மீண்டும் மருத்துவமனையில் மயக்கமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் வைத்தியர்கள் இருக்கவில்லை. இந்நிலையில், கோபமுற்ற நோயாளியின் உறவினர்களுக்கும் அங்கு கடமையிலிருந்த ஆண் தாதிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில்  இருவர் காயமடைந்தர் பின்னர்  நோயாளியின் உறவினர் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Written by lankamuslim

September 28, 2009 at 8:58 pm

யுத்தக் குற்றசாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை கைது செய்ய திட்டம்

leave a comment »

http://tamilnational.net/images/2009/personal/Chandrika_Kumaratunge_TamilNational.jpg

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றசாட்டில்    முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கைது செய்ய சர்வதேச மனித உரிமைகள் பேரபை- The International Human  rights Organization- திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடு ஒன்றில் வைத்து முன்னாள் இலங்கையை  கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆங்கில  இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்சியிலிருக்கும் நாட்டுத் தலைவர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தினால்  பதவி காலத்தின் பின்  சந்திரிக்காவை கைது செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் 231 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆட்சியிலிருக்கும் நாட்டுத் தலைவர் ஒருவருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையைத் தவிர வேறு எந்த அமைப்பினாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென சுட்டிக்காட்டப்படுகிறது.

Written by lankamuslim

September 28, 2009 at 12:06 pm

புத்தளத்தில் C-4 வெடிமருந்து மீட்பு!

leave a comment »

http://www.digitaljournal.com/img/2/5/7/7/3/3/i/4/8/3/o/Uruzgan_bomb_from_tipoff_population_Pic_ResizerHandlerDutchMinistryDefence.jpg

புத்தளம்- மன்னார் வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சி-4 வெடிமருந்தினை குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஜ.ஜி.நிமால் மெடிவகே தெரிவித்துள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரமே 750 கிராம் நிறையுடைய சி-4 வெடிமருந்தினை இன்றையதினம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

September 28, 2009 at 10:45 am

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்ட போது எந்த உலகத் தலைவர்களும் அது பற்றிப்பேசவில்லை.

leave a comment »

LTTE Kattankudi Muslim Mosque Massare 20

ஜனாதிபதி மஹிந்த

எமது பதவிக்காலத்தில்  இடம்பெயர்ந்த கிழக்கு மக்கள் அனைவரையும் நாம் மீளக்குடியமர்த்தியுள்ளோம். யாழிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களையும் மீளக்குடியேற்றுவோமென ஜனாதிபதி மஹிந்த  தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஜனாதிபதியை சந்திக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மெதமுலனவில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்த அரசாங்கத்துடனேயே நாம் இணைந் துள்ளோம் என்பதை தென்மாகாணத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் உலகுக்குக் காட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் சகலரும் சமநிலை யில் வாழும் உரிமை உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாகத் தொழில் செய்யவும், கல்வி கற்கவும், மதவழிபாடுகளை மேற்கொள்ளவும் சுதந்திரம் உள்ளது. நாட்டில் மனித உரிமை இல்லை என்போருக்கு இது சிறந்த உதாரணம்.

இலங்கையைப் பொறுத்தவரை இன ரீதியாக எத்தகைய பாகுபாடோ உரிமை மறுப்போ இடம்பெறவில்லை என்பது மனித உரிமை பாதுகாக்கப்படுவதற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

உலகில் பல்கலைக்கழகக் கல்வி இலவசமாக வழங்கப்படும் ஒரே நாடு இலங்கைதான். சீனா போன்ற நாடுகளில் கூட இவ்வாறில்லை.

இடம்பெயர்ந்த கிழக்கு மக்களை எமது பதவி காலத்தில் மீள்குடியேற்றியுள்ளோம்

இது எமது தாய்நாடு. இங்குதான் நாம் பிறந்து வளர்ந்தோம். இந்த பூமியில்தான் நாம் புதைக்கப்படப் போகிறோம். இது தவிர வேறு தாய்நாடு எமக்குக் கிடையாது. இந்த நாட்டைத் துண்டாட இடமளிக்காது, நாம் இந்த நாட்டை நேசிப்பவர்களாக சகலரும் இணைந்து பாதுகாப்போம்.

அம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்ட போது எந்த உலகத் தலைவர்களும் அது பற்றிப்பேசவில்லை. இவர்கள் 18 வருடங்களாக புத்தளம் போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

அத்துடன் காத்தான்குடிப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது பற்றியும் எவரும் பேசவில்லை. எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் வாய்திறக்கவில்லை.

அக்காலத்தில் மக்கள் தமது வழிபாடுகளையோ தமது கடமைகளையோ நிறைவேற்றக்கூடிய சூழல் இருக்கவில்லை.

சில நாடுகளுக்குள்ளே விசாரணையின்றி எவரும் போக முடியாத நிலை உள்ளது. இலங்கையில் முஸ்லிமா, தமிழரா, சிங்களவரா என எங்கும் பார்ப்பதில்லை. யாரும் எங்கும் செல்லக்கூடிய சுதந்திரம் உள்ளது. இந்த நாட்டிற்கு எம்மால் செய்யக்கூடியதைச் செய்வோம்.

நாட்டில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகியுள்ளது. பல துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இது வர்த்தக முயற்சிகளுக்க சிறந்த வாய்ப்பாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ஏ. எச். எம். பெளஸி, எம். எச். மொகமட், பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

September 28, 2009 at 10:04 am

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம் -11)

leave a comment »

http://www.taxidermy4cash.com/mouthtiger.jpg

எஸ.எம்.எம் பஷீர்

ராஜிவ்காந்திக்கு கிட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்து, 03 .அக்டோபர் 1988  ம் ஆண்டு, எழுதிய கடிதத்தில், இந்திய, இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். புலிகள் வழக்கமாகவே  ஒப்பந்த மீறுதலை எதிர்தரப்பினரிடம் சுமத்தி, தங்களது நிலைப்பாட்டிற்கான நியாயப்படுத்தலை சர்வதேசமயப்படுத்தி  தமது ஆதரவு தளத்தினை தக்கவைப்பதற்குமான காரணங்களை முன்வைத்தே , இந்த ஆதரவு கோரிக்கையும் வழக்கம்போல் மறைமுகமாகவே வழங்கப்பட்டது. சமாதானப்படையினை, சண்டைப்படையாக்கிய பின்னர் எவ்வாறு தமது யுத்தநிறுத்த கடமையை தாங்கள் என்றுமே மீறவே இல்லை என காலத்துக்கு காலம் இலங்கை அரசுடன் தமது அழிவின் விளிம்புவரை செய்துவந்ததுபோல் புலிகள் தாங்கள் யுத்த நிறுத்தங்களுக்கு ஆதரவாக பின்னோக்கி கூறுகின்ற வகையில்தான், இவ்வாறு கிட்டுவினாலும் சூசகமாக இந்திய அரசிடம் கடிதத்தில் ஆதரவு வழங்குவதாக கூறப்பட்டு இருந்தது. இக்கடிதத்தில் கிட்டு “தொடர்ந்து நாம் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டோம். பேச்சுவார்த்தைகளில் எமதுஇயக்கத்தில் பிரதிநிதிப்படுத்திய என்னை கைதுசெய்து, சிறையில் அடைத்ததின் மூலம், சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டன. பின்னர், இந்திய அரசு தன்னிச்சையாக, 10 நாள் போர்நிறுத்தம்  அறிவித்தமை மாத்திரம் இணக்கமான தீர்வு ஒன்று உருவாவதற்கு  போதுமானதாகவும் இருக்கவில்லை. இதுவரையில் என்னுடன் சிறையில் இருக்கும் சக தோழர்களையும், விடுதலை செய்ய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு; எமது தலைவர் வே.பிரபாகரன் அறிவித்திருந்தார் .

இது தொடர்பாக, எவ்வித  நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படாமலேயே  போர்நிறுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.. நாம் சமாதானத்துக்கு எதிரானவர்கள் அல்ல. நிரந்தர சமாதானம் ஒன்றையே நாம் வேண்டி நிற்கிறோம். சமாதான தூதுவனாக, அழைத்து செல்லப்பட்ட எமது தோழர்  ஜொனி  அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டார். சமாதான தீர்வொன்றை காண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்த, நானும், எனது தோழர்களும், காரணம் எதுவுமின்றி  கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டோம். எம்மீது ஆதாரமற்ற பொய்யான , கற்பனையான, குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இருந்தன. மேலும் அக் கடிதத்தில் குறிப்பிடுகையில் நாம் ஒருபோதும் இங்குள்ள எமது அலுவலகத்தை  மூடி விடும்படியோ, அல்லது இங்கு இருந்து வெளி ஏறும்படி , கேட்கப்படவில்லை. மேலும், 1987 ம் ஆண்டு, அக்டோபரில் இந்திய இராணுவத்துடனான தூரதிர்ஷ்ட வசமான மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து நாம் வெளியேற முடியாதவாறு, வீடுகளை சுற்றி பொலிஸ்காவல் போடப்பட்டு இருந்தது.” மேலும் குறிப்பிடுகையில், தமது விடுதலைக்காக, சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக தாங்கள் தீர்மானித்து இருப்பதை அறிவித்து; இரண்டு கோரிக்கைகளை இந்திய அரசுக்கு, விட்டிருந்தார்.

1 இந்திய மண்ணில்  நாம் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அக்குற்றம் என்ன என்பதை வெளிப்படுத்தி  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவேண்டும்..
2 அவ்வாறு வழக்கு தொடர முடியாதாயின் , எம்மை விடுதலைசெய்து தமிழீழத்தின் எமது போராளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்., என கோரியிருந்தார்.

அந்நிகழ்வு குறித்து  “தினமணி” பத்திரிக்கை, இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, விடுதலைப்புலிகளை ஒதுக்கிவிட்டு,  தேர்தல் நடத்திவிடலாம்  என்று, ராஜிவ்காந்தி கூறுகிறார்.  இலங்கையின் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில், போட்டியிட வேட்புமனுத்தாக்கல், திங்கள் அன்று துவங்கியது.. ஆனால், ஈழ  புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, எட்டு மாவட்டங்களில் , ஆறு மாவட்ட அதிகாரிகள், தேர்தல் பணியில் பங்கேற்க முன்வரவில்லை. மேலும், அப்பத்திரிகையானது இந்திய- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் சமீபத்திய பத்துநாள் போர்நிறுத்தம் வரை, இந்தியஅரசு தன்னிச்சையாக எடுத்த  நடவடிக்கைகள் எல்லாம், வெற்றிபெறாமல் போனதற்குரிய காரணம், எதிராளியின் செயலை சரிவர கணிக்க தவறியதாகும்., இந்திய அரசு அறிவிக்கும் சலுகைகள் எல்லாம், , ஈழப்புலிகளை சிறுமைபடுத்துவதாக இருக்கின்றது.” மேலும், இப்பத்திரிகை “காலவரையறையற்ற போர்நிறுத்தத்தை அறிவித்து, கிட்டு முதலான விடுதலைப்புலிகளை விடுவித்து, நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும்.”  இதில் முக்கியஅம்சம் என்னவென்றால், “தினமணி” த.வி. கூ முன்வைத்துள்ள திட்டத்தை இந்திய அரசு பரிசீலிப்பது உதவியாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டி இருந்தது.

தமிழகத்தில் பல்வேறுபட்ட  தொப்புழ்கொடி ஆதரவினைதிரட்டும், நடவடிக்கைகளுக்கும் தமிழீழ ஆதரவாளர்களால் முடுக்கி விடப்பட்டன.. ஆனால், இந்த பின்னணியில் கட்டுரையாளர், புலிஅல்லது இந்திய இலங்கை ஒப்பந்த தொடர்பான செயல்பாடுகள் குறித்து, வரலாற்றுரீதியாக, விரிவாக இதை ஆய்வுசெய்கின்ற, நோக்கத்திற்காக,  எழுதவில்லை. மாறாக, அன்றைய கால கட்டத்தில் இங்கு நடைபெற்ற சம்பவங்களில்  சிலவிடயங்கள் தவிர்க்க முடியாமல், சொல்லப்படவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டிருப்பது என்பதினாலேயாகும். 1985  இல் ஒரு பின்னோக்கிய நிகழ்வாக கிட்டுவினுடைய செயல்பாடு ஒன்று பார்க்கப்பட வேண்டியுள்ளது.  சுதுமலையில் இலங்கைராணுவம் புலிகளுடைய ஆயுதகிடங்கை அழிப்பதற்கு முற்பட்டவேளையில், டெலோ உறுப்பினர்கள் ராணுவத்தோடு போரிட்டு அவைகளை பாதுகாத்து கொடுத்ததாகவும், அவ்வாறு புலிகளின்உயிர்களையும், ஆயுதங்களையும்,  பாதுகாத்ததாகவும், அவ்வாறு பாதுகாத்ததிற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், கிட்டு, “எங்கள் உயிரை காக்க தோளோடு  தோள் நின்ற டெலோவை வாழ்நாளில் மறக்கமாட்டோம்” என்று  பத்திரிக்கை அறிக்கையில் பல நாட்கள் குறிப்பிட்டதாகவும், யாழ்ப்பாண செய்திஒன்று கூறுகின்றது. இவ்வாறான கிட்டுத்தான் பின் ஈவு, இரக்கமின்றி, டெலோ உறுப்பினர்களையும், அதன் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தையும், சுட்டுக்கொன்றவராகும்.  கிட்டுவின் நன்றி தெரிவித்தல் டெலோவை அழிப்பதாகவே அமைந்தது.

முக்கியமாக, 1988 ஜனவரியில், பிரபாகரன் இந்திய இலங்கை உடன்பாடுகுறித்து; இந்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோள், இந்த நிலைப்பாட்டினுடைய ஆரம்பகாலம் 1987  அக்டோபர் தொடக்கி, ஒருவருடத்தின் பின்னர் ஏற்பட்ட பல்வேறுபட்ட புலிகளுக்கும், இந்தியப்படைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை, கோடிட்டுகாட்டுகின்ற, பலஅம்சங்களை கொண்டிருந்தது.  ஜனவரி 13 இல் இந்திய அரசுக்கு பிரபாகரன்  விடுத்த மனுவில் எல்லாவித ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, சமாதான பேச்சு வார்த்தையை தொடருமாறு கோரியிருந்தார்.

அம்மனுவில் தாங்கள் ஏற்றுக்கொண்டதுபோல்  இடைக்கால நிர்வாக சபை  (Interim Adminsitrative Council) தமது பெரும்பான்மை உறுபினர்களை கொண்டு நிறுவப்பட்டால்  தங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதாக கூறியிருந்தார். மேலும் எதிர்கால பேச்சு வார்ததைகளில் தாமே முக்கிய பாத்திரத்தினை வகிக்க வேண்டுமென்றும், ஏனைய தமிழ் குழுக்களின் கட்சிகளின் பிரதிநித்துவத்தினை புறம்தள்ளும் , ஏகபோக உரிமையினை வலியுறுத்தும் கோரிக்கைனை வெளிப்படையகவே முன்வைத்திருந்தார்.ஆனால் மறுபுறம் இந்திய அரசும் புலிகளும் பேசவேன்றுமேன்றும்;அமைக்கப்படும் இடைக்கால நிர்வாக  சபையில் எல்லா தமிழ் குழுக்களும் அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்றும்  த.வி கூ. தலைவர் . அமிர்தலிங்கம் அவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் இடைக்கால நிர்வாக சபை தொடர்பில் எட்டப்பட்ட .(  28.09.1987)  ஒப்பந்தத்திற்கு ஒருபடி மேலே சென்று தமது கட்சிக்கு வழங்கப்பட்ட இரண்டு இடங்களை விட  ஏனைய தமிழ் குழுக்களை உள்வாங்கியதாக இடைக்கால நிர்வாக  சபையில் சபை அமையவேண்டும் என்பதாகும்.

(தொடரும்)

Written by lankamuslim

September 27, 2009 at 11:59 pm

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம்-பாகம் 10

leave a comment »

எஸ்.எம்.எம் பஷீர்

  • முப்பத்தி ஒன்பது-39 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை
  • மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் படுகொலை
  • மூதூர் MP A.L.அப்துல் மஜீத் படுகொலை

1998 ஏப்ரல் மாதத்தில் கிட்டு –பதியுதீன் சென்னைச் சந்திப்பின் குழுவினரின் பின்னரும் முன்னருமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை . அவற்றில் குறிப்பாக 1987 இறுதிப்பகுதியும், 1988 இன்  முற்பகுதியும் புலிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்கு உட்படுத்தின. 1987 நவம்பரில் ஓட்டமாவடியிலும் 30 டிசம்பர் 1987ல் காத்தான்குடியிலும் முறையே ஒன்பது-9  பேர் மற்றும்  முப்பது-30   பேருமாக முப்பத்தி ஒன்பது-39 இளைஞர்கள் ஊர்காவல்படையினர் எனக்கூறப்பட்ட இளைஞர்களை ஜிஹாத் உறுப்பினர்கள் எனக்கூறி புலிகள் தாங்கள் செய்த படுகொலைகளையும் அவர்கள்மீது சுமத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர். காத்தான்குடியில் நான்கு  அப்பாவித் தமிழர்களையும் தங்களது முஸ்லிம் புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் குற்றஞசாட்டியது தவிர தாங்களே 1987 செப்டம்பர் 3 இம்  திகதி சுட்டுக்கொன்ற மூதூரின் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மட்   மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியான நிர்வாகத்தின் கீழேயே செயற்படவேண்டுமென்னும் கருத்தினை முன்வைத்த மூதூர் MP A.L.அப்துல் மஜீத் அவர்களையும் 1987 நவம்பர் 13 ந் திகதி புலிகள சுட்டுக்கொன்றனர்.

இந்தத் தாக்குதலின் பின்னர் இதுதொடர்பில் புலிகள் பத்திரிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களின் கொலையை நியாயப்படுத்தியதுடன் மேலும் அந்த அறிக்கையில் புளொட்(PLOT) ரொலோ (TELO) , ஈ.பி.ஆர்.எல்.எப் (EPRLF) ஆகிய இயக்கங்களையும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் தமிழ்பேசும் முஸ்லிம், மக்களுடன் ஈடுபடுவதாகவும் துரொகத்தனமான செயல்களில் ஈடுபட்டு தங்களது சுயதேவைகளைப்  பூர்த்தி செய்ய மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எனவே தாங்கள் அவ்வியக்கங்களை தடைசெய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த அறிக்கையில் அதிகமாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து இயங்குவதாகவும் அவர்களின் வேண்டுகோளிலும், வற்புறுத்தலிலும். தீவிர பங்கேற்பிலுமே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்கள் முஸ்லிம் மக்களின் வெறுப்பினையும், அதிருப்தியினையும் சம்பாதித்தவர்கள் என்றும் ஆடுகள் நனையும்போது ஒநாய்கள் அழுகின்ற கதைபோல் அறிக்கை விட்டனர்.

கிழக்கில் பரவலாக முஸ்லிம்கள்மீது பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோதும் சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நபர்கள் வேட்டையாடப்பட்டபோதும் வடமாகாணத்திலும், யாழ்பாணத்தில் பிறந்த இரண்டாவது அரச அதிபரான மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை சென்ற முஸ்லிம் குழுவினர் இவையெல்லாம் குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக கல்முனையில் கொல்லப்பட்ட 17 பேரும் புலிகளால் கொல்லப்படவில்லை என்று மட்டும் சான்றுதல் வழங்கினர். திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற முக்கிய இரு பிரமுகர்களின் படுகொலைபற்றி இவர்கள் வாய்திறக்கவில்லை. இந்த சென்னை விஜயத்திற்கு முன்னர் திரு பதியுதீன் அவர்கள் ஐலண்ட் THE ISLAND பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறான சந்தாப்பத்தில் இலங்கை –இந்திய ஒப்பந்தத்தினை முஸ்லிம் மக்கள் இயல்பாகவே நிராகரிப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் கிழக்கிலே வாழத்தான் வேண்டுமென்ற கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் சிலவருடங்களாக நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

வடகிழக்கு இணைந்த இலங்கை –இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் எவ்வாறான அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதே முஸ்லிம்களின் கேள்வியாகுமெனவும் குறிப்பிட்டிருந்தார். சென்னை சென்ற குழுவினரின் அரசியல் அடையாளமாக விளங்கிய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலியும் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்பதுபற்றி பிரபல பத்திரிகையாளரான தராகி எனப்படும் சிவராம் எழுதுகையில் IPKF னாலும் EPRLF னாலும் கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் அதிகபட்ச கட்டுப்பாடுகள் ஏற்பட்டதனால் தங்களுடைய (புலிகள்) இருத்தலுக்கு பாரிய அளவில் முஸ்லிம்கள்மீது தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு செயற்பாட்டு உறவினை புலிகள் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் ஏற்படுத்தினார்கள். புலிகளைப் பொறுத்தவரை இந்திய அனுசரணை கட்சியாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை கருதியதுடன் முஸ்லிம்களுக்காக (இஸ்லாமியத் தமிழர்கள) எனத் தாங்கள் குறிப்பிடும் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கென தனித்தொரு ஸ்தாபனத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடாகவே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினரை முஸ்லிம் காங்கிரஸினருக்கு மாற்றாக புலிகள் திட்டமிட்டிருக்கலாமென தோன்றுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

IPKF வெளியேற்றம் குறித்த கோரிக்கை முஸ்லிம் மக்களுடாகவும் வெளிப்படவேண்டுமென்பதில் புலிகள் அக்கரையாக  இருந்தனர். 13 ஆம்  திகதி ஜனவரி 1988 இல் பிரபாகரன் இந்திய சமாதானப்படை தங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமெனவும் சமாதானப் பேச்சுவாத்தை தொடரவேண்டுமெனவும் இந்திய அரசுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறான வேண்டுதலையே தமிழர் விடுதலை கூட்டணியின் செயலதிபரான அமிர்தலிங்கம் அவர்களும் இந்திய அரசுக்கு விடுத்தார்.  இந்தக் கால கட்டத்தில்தான் புலிகளுக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவுகள் அதிதீவிரமான நெருக்கடிக்குள்ளானது.  1037 IPKF படையினர் புலிகளால் கொல்லப்பட்டதாக புலிகளினால் உரிமை கோரப்பட்டது. இவ்விழப்புக்கள் குறித்து அன்றைய ஜனாதிபதியான ஜெயவர்தனா அவர்கள் வடகிழக்கில் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்படுவதில் உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் IPKF தொடர்ந்து ஈடுபட்டு வருவதனை பாராட்டியும், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் தமிழ்,சிங்கள, முஸ்லிம் படையினர் ஒருவரும் சாகவில்லை எனவும் அவர்களின் இடத்தினை இந்தியப் படையினர் எடுத்துவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் 1987 இறுதிப்பகுதியிலும், 1988 ஆரம்பகால பகுதியிலும் இந்தியாவில் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த கிட்டு மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கும் மறுக்கப்பட்டிருந்தார் 1988 ஏப்ரல் மாதம் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவாத்தையின்போது வெளிப்படையாக செயற்படக்கூடியதாக இருந்ததுடன் 1988 இன் பிற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலிடப்பட்டார். அக்கால கட்டத்தில் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தம்மை விடுதலை செய்யுமாறும் சில வேண்டுகோள்களை முன்வைத்து கடிதம் வரைந்திருந்தார்.

தொடரும்

Written by lankamuslim

September 27, 2009 at 9:13 pm

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் சிறுவர் உரிமை. சிறுவர் பாதுகாப்பு கூட்டம்

leave a comment »

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில்:

சிறுவர் உரிமை. சிறுவர் பாதுகாப்பு, மேம்பாடு தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் இடம் பெற்றது.கல்விக்கும் சமாதானத்திற்குமான அமைப்பான ஒபெட் இந்த கூட்டத்தை எற்பாடு செய்திருந்தது. பேராதனை பல்கலைக்கழக மெய்யில் துறை தலைவரும். சிரேஷ்ட விரிவுரையாளமான கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்,காசிமிய்யா அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி அப்துல்லா, இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி எம்.முனீர் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் பிரதி அதிபர்.எம்.நதீர்,கிராம அதிகாரி என்.எம்.ரஸ்மி,சமுர்த்தி அபிவிருத்திஅதிகாரி எம்.எஸ்.எம்.முனீர், ஊடகவியலாளர் ஹிஷாம் சுசைன், ,பலரும் இந்த கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். ஓபெட் அமைப்பின் தலைவர் எம்.நபீல் இக்கூட்டதின் முக்கியத்துவம்; குறித்து விளக்கமளித்தார். ஆரம்ப இடைநிலை மாணவர்கள் குறித்த கூடிய கவனத்தை செலுத்த வேண்டியநிலை உள்ளதாகவும், புத்தளம் நகரத்தை மையப்படுத்தி முதற்கட்டமாக இப்படிப்பட்ட மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். அடுத்தகட்ட நகர்வாக புத்தளம் தொகுதினையும், பின்னர் மாவட்ட மட்டத்திலான செயற்பாடகளை முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Written by lankamuslim

September 27, 2009 at 11:23 am

“புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்” இழப்பு -2

with 2 comments

lost2

சமூகம் என்ற வகையில் ஒரு  முஸ்லிம் சமூகம் தனது ஈட்டல்களையும் இழப்புகளையும் கணக்கில் வைத்துகொள்ள வேண்டும் என்பதால் இந்த இழப்பையும்  எமது இணைய தளம் பதிவேற்றி கணக்கில் வைத்துகொள்கிறது- www.lankamuslim.org

“புலியில் சேர்ந்து தம்மை அழித்துக்கொண்ட சில முஸ்லிம் இளைஞ்ர்கள் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும்

எஸ்.எம்.எம்.பஷீர்

“பகை ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்;  முளைத்தபின் இன்னா வித்து ஆகிவிடும்.” (விளம்பி நாகனார்)

எனது “புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்” என்ற கட்டுரையின் முதல் பகுதி முஸ்லிம் இளைஞ்ர்கள் புலியின் கொள்கைகளால் கவரப்பட்டோ அல்லது சமூக ஆதிக்க சக்திகளாக மாறும் போது ஆயுதம் தாங்குவதால் அனுபவிக்கும் அதிகாரம் சமூக  மேலாதிக்க நிலவுடமை சமூகத்தின் மீதான உள்ளார்ந்த வெறுப்பு என்பனவும் அவர்கள் புலிகளில் இணைந்ததற்கான  காரணங்களாகவும் இருக்கலாம் சென்ற கட்டுரையில் நான் அக்கரைப்பற்று புலி உறுப்பினரின் (கப்டன் பாரூக்) இயக்க ஈடுபாடும் இறப்பும் குறித்து புலிகளின் வரலாறு எழுதிய அதகான பணியில் ஈடுபட்ட புலி வரலாற்றாளரின் மூலப்பதிவிலிருந்தே மறுபதிப்பு செய்தேன். இம்முறை காத்தான்குடி கான்கேயநூடை சேர்ந்த இன்னுமொரு முஸ்லிம் புலி பற்றிய வரலாறு உங்களின் வாசிப்புக்கு:-    ….

மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் இணைந்து கொண்டவன் வீரவேங்கை கபூர்

முகம்மது அலியார் – முகம்மது சலீம், காங்கேயன்ஓடை ஆரையம்பதி மட்டக்களப்பு.

வீர உயிர்ப்பு: 1972. வீரச்சாவு: 1990.06.11.

மதம் இனம் இவைகள்தான் எங்களைப் பிரித்திருக்கின்றது. ஆனால் மொழியால் இணைக்கப்பட்டவர்ளாகின்றோம். அதனால் இலங்கைவாழ் இனங்களுக்கிடையில் இஸ்லாமியத் தமிழர்களே அவர்களின் தாய்மொழி அரபு மொழியாக இருந்தாலும் பேச்சு மொழியாக தமிழையே கொண்டவர்கள்.

இலங்கை சுதந்திரம் அடையவேண்டும் எனக் குரல் எழுப்பியவர்களில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்களும் அடங்குவர் இருந்தபோதிலும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இலங்கைச் சுதந்திரத்தினால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. மேலும் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இனங்கள் சிங்களவர்களுக்கும் அடிமையாக வாழவேண்டி ஏற்பட்டது.

உலக நாடுகளில் வாழ்ந்த இலங்கையர்கள் உரிமைக்காகவும் மொழிக்காகவும் போராடினார்கள். வென்றார்கள் இது வரலாறு சொல்லும் பாடங்கள் ஆனால் இலங்கையில் குறிப்பாக தமிழீழத்தில் வாழ்ந்த இஸ்லாமியர் “விடுதலை உணர்வோடு விடுதலைப் புலிகளில் இணைந்து போராடி மாண்டனர்” என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் இளைஞர்கள் சிங்கள இராணுவத்தால் மட்டுமல்ல இந்திய இராணுவத்தால் மட்டுமல்ல இனத்துரோகிகளாலும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. அதேபோன்றுதான் இந்தியப்படைகள் நேசக்கரம் நீட்டி தமிழீழ மண்ணில் அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த வேளைகளில் இந்தியச் சிப்பாய்களினாலும் இனத்துரோகிகளினாலும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள்.

அடி, உதை பட்டு எத்தனை காலம் எவன்தான் வாழுவான் ஆக மானமே பெரிதெனக் கொண்டவன் அடிமையாக வாழ விரும்பமாட்டான் அதற்கு இந்த முகம்மதி அலியார் முகம்மது சலீம் மட்டும் சளைத்தவனாக இருக்கமாட்டான்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியப்படைகளும் இனத்துரோகிகளும் செயற்படுகின்றார்கள். ஒரு லெட்சம் இந்தியத் துருப்புகள் தமிழீழ மண்ணில் வந்து இறங்கிவிட்டது. வீதிக்கு வீதி தெருவுக்குத் தெருவாகவும் படையினர் வருகின்றார்கள். சந்தேகம் கொண்டவர் யாராக இருந்தாலும் இந்தியச் சிப்பாயின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாவான். விடுதலைப் புலிவீரர்கள் அன்று மட்டக்களப்பு அம்பாறை மண்ணிலிருந்து உயிர் தப்பிப் பிழைப்பதென்பது மிக அரிதிலும் அரிது.

அதனால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மீது இரக்கம் காட்டத் தொடங்கினார்கள். பகல்வேளைகளில் முஸ்லிம் வீடுகளில் தங்குவதும் இரவுவேளைகளில் ஆயுதங்களுடன் தங்கள் கடமைக்குச் செல்லப் புறப்படுவதும் புலிவீரர்களின் செயற்பாடாக இருந்தமையினால் இஸ்லாமியத் தமிழர் மனங்களில் விடுதலைப் புலிகள் போராட்டம் சம்பந்தமான கருத்துக்கள் விதைக்கப்படலானது.

1988ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதி தமிழர் வாழ்ந்த பகுதி, இடையிடையே முஸ்லிம் குடும்பங்களும் தமிழர்களுடன் ஒட்டி உறவாடி வாழத் தொடங்கினார்கள். அந்த வேலையில்தான் மேஜர் வள்ளுவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம், வளர்ச்சி மக்களின் பங்களிப்பு இருந்தும் இஸ்லாமிய இளைஞர்களின் பங்களிப்பு சம்மந்தமான கருத்துகளை இஸ்லாமிய இளைஞர்களின் மனங்களில் விதைத்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி மறக்கமுடியாத கிராமம், தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்த் துருவலும்போல் வாழ்கின்றார்கள். கைத் தொழிலுக்கே முதன்மையான இடம். கல்வியிலும் சழைத்தவர்கள் அல்லர்,வெள்ளிக்கிழமைகளில் மதிய வேளைத் தொழுகை முடிந்ததும் அந்தக் காத்தான்குடி ஆரையம்பதிப் பிரதான பாதையில் தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளோடு பெரியோர்கள் சிறியோர்களும் நின்று கூடிக் கதைத்துப் பேசி அன்பை பரிமாறிக் கொள்வார்கள். இடையிடையே மனக் கசப்புக்கள் வந்து இரு இனங்களுக்கிடையிலான கலவரங்களாக. மாறிவிடுவதும் உண்டு. சூறாவழியடித்து ஓய்ந்ததுபோல் மீண்டும் அன்பைப் பரிமாறுதல் தொடரும்.

இப்படியான பாசப் பிணைப்புகளின் வலையில் பின்னப்பட்டுக் கிடக்கும் வேளையில்தான். மேஜர்வள்ளுவனின் கருத்தில் இணைந்து விடுதலைப்புலிகளின், அவர்களுக்கான செயற்திட்டங்களில் இந்த முகம்மது சலீம் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.

எப்படியான வேலைகள் இருந்தாலும் மதம் என்ற ஒன்றை உயிரெனக் கொண்டிருப்பவன். இறைவணக்க வேளை வந்ததும் பள்ளிவாசலை நாடத் தவறாதிருந்தான். புலிகளின் செயற்திட்டங்களையும் மறைமுகமாகக் செய்துவந்தான். இரகசியங்களைக் கையாழுதல் அக்கால வேளைகளில் இந்தியப்படையினதும் இனத்துரோகிகளினதும் நடமாட்டங்களை வேவுப்பணிமூலம் ஊருக்குள் நின்று கண்காணித்து செயற்படுத்துபவன்.

அதுமட்டுமின்றி இவனால் பல முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் பாசறையில் புகுந்து கொள்வதற்கு வழிகாட்டியாக இருந்தவன். இரவுவேளைகளில் துப்பாக்கியைத் தோளில் சுமந்துகொண்டு இந்தியப்படைகளுக்கு எதிராகப் போரிட்டவன். அன்று அவை சிறுசிறு தாக்குதல்களாக இருந்தாலும் அது பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்ததென்றே சொல்லலாம்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானதும் இந்தியப்படைகள் தமிழீழ மண்ணைவிட்டு வெளியேறிய வேளைகளில் புலிகள் அமைப்பில் இனைந்திருந்து பல முஸ்லிம் புலிவீரர்கள் தாங்களாகவே ஓய்வு எடுத்திருந்தனர். ஆனால் இந்த சலீம் மட்டும் புலிகள் இயக்கத்தைவிட்டோ, புலி உறுப்பினர்களைவிட்டோ விலகிச் செல்லாதிருந்தது களமாடுவதற்காகவன்றோ.

புலிகளுக்கும்  அரசபடைகளுக்குமிடையில் போர் மூண்டது. தமிழீழ மண்ணில் குண்டு வீச்சு விமானங்களாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் எறிகணை வீச்சுகளினாலும் தாக்கித் தகர்த்தான் தமிழீழ மண் ரணகளமாக மாறியது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. அடுத்துள்ள விசேட அதிரடிப்படை முகாம்மீது 10.06.1990 அன்று புலிவீரர்கள் மனோ மாஸ்ரரின் தலைமையில் தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். சங்கரின் திட்டப்படி இந்த வீரவேங்கை கபூரும் தாக்குதலை மேற்கொள்ளுகின்றான். சென்றல்கேம்ப் பொலிஸ்நிலையத்திலிருந்து சிங்கள இராணுவத்தினர். வீசும் ஆட்லறி எறிகணைகள் பதுங்கிக்கிடந்து தாக்குதலைத் தொடுக்கும் புலிகள் பக்கம் வீழ்ந்து வெடிக்கின்றது. கப்டன் சங்கரின் அணியில் நின்று இந்த கபூர் மிக வேகமாகச் செயற்படுகின்றான்.

11.06.1990 அன்று களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்டைமீது மிக வேகமான தாக்குதல்கள் புலிவீரர்களினால் தொடுக்கப்படுகின்றது. நேரத்திற்கு உணவு கிடைத்தாலும் உறக்கமின்றி எதிரியை விரட்டத் தாக்குதலை மேற்கொள்ளுகின்றனர்.

அளவான உடலோடு பின்னால் வாரி விடப்பட்ட தலைமுடிக்கு அழகைக் கொடுக்கும் அந்த வட்டமுகம் சிவந்த மேனி கூரிய விழி கொண்ட வேங்கையாக கபூர் தாக்கினான் தாக்கிக் கொண்டே சென்றான் முகாமினுள் இருந்த பகைவனுக்கு மிக அருகில் நின்று தாக்கினான். அது அவனுக்கு மிக இலகுவாக இருந்தது.

இருந்தபோதிலும் அன்று அனைத்தும் மிக வேகமாக செயற்பட்டு முன்னேறி இவன் தாக்குதலைத் தொடுத்தான். அந்தவேளை தம்பலவத்தையைச் சேர்ந்த  சபேசன், கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த நவயுகன, கொத்தியாபுலையைச் சேர்ந்த கீறோ, கோயில் போரதீவைச் சேர்ந்த  வசந்தராஜ், மகிழவட்டுவானைச் சேர்ந்த  விமலநாதன் ஆகியோர்களுடன் இந்த  கபூரும் வீரச்சாவைத் தழுவிக் கொள்ளுகின்றான்.

(மீண்டும் பொழிப்புரை அவசியமில்லை இலத்தீன் மொழியில் Res ipsa loquitur   என்று “அதுவேஅதற்கு பேசும்” (the thing speak for itself) என்று சொல்லுவத்போல இதனையும் உங்களின் வாசிப்புக்கு விட்டு விடுவிடுகிறேன் . இனிமேலும் இன்னொரு தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞ்ர்கள்  இனமுரன்பாட்டுக்காக அழிவதை நிறுத்துவோம்)

Written by lankamuslim

September 27, 2009 at 9:40 am

யால காட்டுப் பகுதியில் ஆயுதம் தரித்த நபர்கள்

leave a comment »

http://3.bp.blogspot.com/_otWn2PlEOdY/RxwVfphOT3I/AAAAAAAACAE/draNCwgAGjg/s400/tiger.jpg

யால காட்டுப் பகுதியில் ஆயுதம் தரித்த நபர்கள் நடமாடுவதாக  முறைப்பாடு யால வனப் பகுதியில் ஆயுதம் தரித்த நபர்கள்  நடமாடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்தத் தகவல்களை அடுத்து யால காட்டுப் பகுதியை அண்மித்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீண்டும் பீதியடைந்துள்ளனர்.

கறுப்பு நிற ஆடைகள் அணிந்த குழுவினர் ரி 56 ரக துப்பாக்கிகளுடன் காட்டுப் பகுதியில் சஞ்சரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப்  பயங்கரவாதிகளாக  இருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை கண்டு பிடிக்கும் நோக்கில் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

புலிப்  பயங்கரவாதிகள்  யால காட்டுப் பகுதியில் நடமாடுவதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து எல்லைப் புறங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை குறித்த பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ராம் மற்றும் கேணல் நகுலன் ஆகியோர் யால காட்டுப் பகுதியில் தங்கியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொனராகலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசேட தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு இணைய தகவல்

Written by lankamuslim

September 26, 2009 at 12:33 pm

பலவந்தமாக வெளியேற்றபட்ட முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

leave a comment »

http://1muslimnation.files.wordpress.com/2007/02/sri-lankan-north-east-muslims.jpg?w=138&h=110

வட மாகாணத்திலிருந்து  1990ம் ஆண்டு  பலவந்தமாக வெளியேற்றபட்டடு முகாம்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் வாழ்ந்து வருகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக் கையை மேற்கொள்ள அர சாங்கம் நடவடிக்கை எடு த்து வருகிறது. இதற்காக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவை கள் அமைச்சினால் விண்ண ப்பம் கோரப்பட்டுள்ளது.

மீளக்குடியேறவிருக்கும் மன்னார் மூர்வீதி மக்கள் தொடர்பான விபரங்களை

மீள்குடியேற்ற அமைச்சிற்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இவ்விடயம் சம்பந்தமாக மன்னார் மூர்வீதி மக்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம், 126/1 ஏர்னோல்ட் ரட்நாயக்கா மாவத்தை, கொழும்பு-10 (டீன்ஸ் றோட் சந்தி) யுனிக் சர்வதேச பாடசா லையில் இதற்கான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதால் இந்த கலந்துரையாடலில் அனைத்து மன்னார் மூர்வீதி மக்களம் தவறாது கலந்து கொள்ளுமாறு அமைப்பினர் கேட்டுள்ளனர்.

இதன்போது, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சால் கோரப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படவுள்ளது. கீழ்வரும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்ட மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைப்பினர் கேட்டுள்ளனர். தொலைபேசி இல: 0774162311, 0773223930, 0714293668, 0777330928

Written by lankamuslim

September 26, 2009 at 11:57 am

வட மாகாண முஸ்லிம்கள் 20 வருடங்களாக அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்

leave a comment »

http://www.alaikal.com/news/wp-content/pdudin.jpg
முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் பற்றி  அமைச்சர் றிசாத்

புத்தளம் தில்லையடி  அல்-ஜித்தா மீள்குடியேற்ற கிராமத்திற்கான தொழில் பயிற்சி நிலையம், மற்றும் அல்-ஜித்தா பள்ளி வாசலுக்கான தண்ணீர் விநியொகம் என்பனவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (2009.09.25)இடம்பெற்றது. அதில அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும போது இன்றைய சூழலில், எமது மக்களின் மீள்குடியேற்றம் குறித்து தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமது பிரதேசங்களுக்கு மக்கள் செல்லும்போது அவர்களுக்கான உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் அவசியம் தேவைப்படுகின்றன எனக் குறிபிட்டார்

பள்ளி பரிபாலன சபைத் தலைவர்.எம்.முஹைமின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கில் பயங்கரவாதத்தின் பின்னர் எத்தனையோ அபிவிருத்திகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. வட மாகாண முஸ்லிம்கள் 20 வருடங்களாக அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் இழந்தவற்றுக்கு நியாயமான நஷ்ட ஈடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய தேவை எமக்குள்ளது.

தமிழர்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று கூறி வந்த அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள், இன்று மக்களது மீள்குடியேற்றம் குறித்து மட்டுமே அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

எமது சகோதர தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களில் மீள்குடியேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இவர்கள் இந்த முகாம்களில் தற்காலிகமாகவே குடியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் எம்.பியாக இருப்பதற்கு உதவி செய்தவர்களில் இப்பகுதியைச் சேர்ந்த மர்ஹூம்களான அன்சாரி, ஆப்தீன் ஆகியோரை மறக்க முடியாது. அவர்களின் தியாகமே இன்று இந்த மீள்குடியேற்றக் கிராமம் அபிவிருத்தி அடைவதற்கு முக்கிய காரணம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைச்சர் 18 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் எம்.அமீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் டபிள்யூ.எஹியான், பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன், கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான், யாழ். மநாகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

Written by lankamuslim

September 26, 2009 at 11:23 am

அமைச்சர் பாயிஸின் வாகனம் மீது துப்பாக்கி சூடு

leave a comment »

http://tamilwin.easyms.com/photos/thumbs/srilanka/MP/baizen.jpg

புத்தளம் நூர்  வீதியில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று இரவு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் K .A பாயிஸின் வாகன சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே ஏ பாயிஸ் முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக இருந்து பின்னர் ஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்  இணைந்து அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் இன்றைய சம்பவத்திற்கும் பாதாள உலக குழுவுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது

Written by lankamuslim

September 25, 2009 at 11:09 pm

பொலநறுவையில் பொலிஸாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல்

leave a comment »

வடமத்திய  மாகாணத்தின் பொலநறுவை தம்பாலை கல்வெல சந்தியில் இன்று அந்த பகுதி முஸ்லிம்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பள்ளிவாசலுக்கு சொந்தமான வியாபாரஸ்தலங்களை பிரதேசசபை பொலிஸாரின் உதவியுடன் அகற்ற முற்பட்ட வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வியாபாரஸ்தலங்கள், பிரதேசசபையின் காணியில் கட்டப்பட்டிருப்பதாக கூறியே அவற்றை அகற்ற பிரதேசசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் இவற்றை அகற்றக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு உள்ளதாக தெரிவித்துள்ள முஸ்லிம்கள், இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டமையை அடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் செய்தனர்.

இந்தநிலையில் பிரதேசத்தில் பதற்றநிலை தோன்றிய அதேவேளை பொலிஸாரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

எனினும் இந்த வியாபார ஸ்தலங்களை அகற்றுவதற்கு நீதிமன்ற ஆணை தமக்கு கிடைத்துள்ளதாக பிரதேசசபை தலைவரான மஞ்சஸ்ரீ அலுத்வத்த தெரிவித்துள்ளார்’

இந்தநிலையில் வியாபாரஸ்தலங்களை அகற்ற இன்று சென்றபோது முஸ்லிம்கள் தமது அதிகாரிகளை தாக்கியதாகவும், வாகனங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Written by lankamuslim

September 25, 2009 at 11:04 pm

கஷ்மீர் முஸ்லிம்களுடன் நாம்.

leave a comment »

கஷ்மீர் முஸ்லிம்கள்  இந்திய ஹிந்து பாசிச பயங்கரவாத்தால் வதைக்கபடுவதை கூறும் இலங்கை பாடல்.

காஷ்மீரை  தனி நாடாக அறிவிக்க வேண்டும் என லிபியா அதிபர் கேர்னல் முஅம்மர் கடாபி, ஐ.நா.பொதுச் சபையில் உரையாற்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா., பொதுச்சபையில் முதல் முறையாக பேச அனுமதிக்கப்பட்ட அவர், தனக்கு அளிக்கப்பட்ட 15 நிமிடம் என்றிருந்த போதும் 100 நிமிடங்கள் உரையாற்றியள்ளார். இதனால் அவையில் சற்று குழப்பநிலை தோன்றியது.

இந்தியாவுக்கும் சரி, பாகிஸ்தானுக்கும் சரி, இருவருக்குமே சொந்தமாக காஷ்மீர இருக்கக்கூடாது. அது தனிநாடாகவே இருக்க வேண்டும்.

அதே போல அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஐ.நா., பாதுகாப்பு சபையில் இடம் பெற அனுமதிக்கக் கூடாது.

ஐ.நா.இ பாதுகாப்பு சபையில் அதிக அளவில் பெரிய நாடுகள் அனுமதிக்கப்படுவது அதிக ஏழ்மைஇ அதிக அநீதியை உலகில் உருவாக்கும். இன்றைக்கு இருக்கும் ஐ.நா.இ பாதுகாப்பு சபையே ‘பயங்கரவாத கவுன்சிலாக’ இருக்கிறது. இவ்வாறு கடாபி பேசினார்.

Written by lankamuslim

September 25, 2009 at 9:56 pm

அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை ஒன்றிணைத்து ஐ.நா.வில் பிரேரணை கொண்டுவர வேண்டும்

leave a comment »

http://www.principalspage.com/theblog/wp-content/uploads//2008/08/laughing_horse.jpg
ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தல்

உலகிலுள்ள  அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை ஒன்றிணைத்து அந்த நாட்டின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நாவில் பிரேரணை ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து அமெரிக்காவின் ‘கைப்பொம்மை ஆட்சியை’ உருவாக்கும் சதித்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது. கொழும்பு தேசிய நூலக ஆவணங்கள் சபை கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர், கட்சியின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில ஆகியோரே மேற்கண்டவாறு கூறினர்.

Written by lankamuslim

September 25, 2009 at 8:37 pm

U.N பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரான்சு ஆதரவு

leave a comment »

http://static.nacional.hr/img/71a98fcbf1062f875c7ac88a42aaad6c_large.jpg

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்கவேண்டும் என்று பிரான்சு அதிபர் சர்கோசி வலியுறுத்தி இருக்கிறார். 100 கோடி மக்கள் தொகையுடன் உள்ள இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் கொடுக்காமல் விட்டுவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா. பொதுச்சபையில் பேசியபோது அவர் இதை குறிப்பிட்டார்.

Written by lankamuslim

September 25, 2009 at 9:42 am

மாவனல்லையில் பணம் திருட்டு கடைக்கு தீவைப்பு

leave a comment »

http://www.priscus.info/wp-content/uploads/2009/06/a2.jpg

மாவனல்லை  கிருங்கதெனியாவில் கடையொன்று கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன எம்.ஜ.லாபீர் என்பவரின்  கடையை உடைத்து உளளே நுழைந்த திருடர்கள் ரூபா பத்தாயிரம் பணத்தையும் பொருட்களையும் திருடி விட்டு கடைக்கு தீ வைத்துள்ளனர் இதனால் கடையில் கதவுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன இத்திருட்டுத் தொடர்பில் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் கடை உரிமையாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Written by lankamuslim

September 25, 2009 at 9:33 am

தொழில் படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

leave a comment »

http://www.debtconsolidationbonds.co.za/UserFiles/Image/Remove%20Blacklistings.jpg

செயல்பாட்டு  அரசியலில் ஈடுபடாமல் பெயரளவில் இருக்கும் கட்சிகளின் பதிவை ரத்துச் செய்யும் வகையில் பாராளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நேற்று (24) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இந்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையில், அரசியல் கட்சிகளின் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவதற்கு ஏதுவாக இந்தச் சட்டமூலம் வழிவகுக்குமெனத் தெரிவித்தார். விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கட்சிகள் பெருகிவிட்டன. சுமார் 60 கட்சிகள் இருந்தும் சுமார் 15 மட்டும்தான் செயற்படுகின்றன.

Written by lankamuslim

September 25, 2009 at 9:12 am

ஹாஜிகளின் நலன்கருதி விசேட கடவுச்சீட்டு அலுவலகம்

leave a comment »

http://1.bp.blogspot.com/_morrrIKNJ04/SLOPsBNfOfI/AAAAAAAAAww/baP-HmOdGCI/s400/Haj_Meead.jpg

புனித மக்கா செல்லும்,  ஹாஜிகளின் நலன்கருதி குடிவரவு குடியகல்வுத் திணைக்களதில் விசேட கடவுச்சீட்டு கருமபீடமொன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இன்று காலை 10மணிக்கு இந்தக் கருமபீடம் திறந்து வைக்கப்படவுள்ளதென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஹாஜிகள் எதுவித சிரமமுமின்றி கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிகழ்வில் பெற்றோலிய வளஅமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, மத அலுவல்கள், ஒழுக்க மேம்பாட்டு அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க, மேல்மாகாண ஆளுநர்  அலவி மௌலானா மற்றும் ஹஜ் முகவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவ்வருடத்திலிருந்து ஹஜ் கடமைக்குச் செல்லவிருப்பவர்கள் தமது கடவுச்சீட்டுக்களை சகல நாடுகளுக்குமானதாக பெற்றுக் கொள்வதுடன் முன்பு ஹஜ் கடமைக்கு மட்டுமென பெற்றுக்கொண்டவர்களும் ஏனைய மத்தியகிழக்கு நாடுகளுக்கென கடவுச்சீட்டுக்களைப் பெற்றவர்களும் தத்தமது கடவுச்சீட்டுக்களை சகல நாடுகளுக்கு மானதாக மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Written by lankamuslim

September 24, 2009 at 7:57 pm

மேற்குக் கரையில் யூதக் குடியேற்றத்தை நிறுத்துவதற்கான கோரிக்கையை அமெரிக்கா தளர்த்துவதாக பாலஸ்தீன் விசனம்

leave a comment »

http://henryjenkins.org/obama%20spock%202.jpg
மத்திய கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் யூதக் குடியேற்ற நடவடிக்கை அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை அமெரிக்கா தளர்த்திக்கொள்வதாய்த் தோன்றுவதையிட்டு தாங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களைச் சந்தித்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேல் தனது கட்டுமானப் பணிகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினாரே ஒழிய, குடியேற்றம் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தவில்லை.

அமைதியை விலைகொடுத்துவிட்டு அமெரிக்கா தனது நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளது என்று பாலஸ்தீன அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

யூதக் குடியேற்றங்கள் தொடர்பாகத் தரப்பட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு இஸ்ரேல் பணிந்துவிடவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லியபெர்மன் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

BBC

Written by lankamuslim

September 24, 2009 at 7:47 pm

ஈரான் தாக்கபட்டால் பதிலடி கொடுக்கும்

leave a comment »

http://2.bp.blogspot.com/_QfVWU-2pVL4/SGpb5zNOcyI/AAAAAAAACnk/YeAoy8ydB5w/s400/Iranian+President+Mahmoud+Ahmadinejad.jpg

இராணுவ  தாக்குதல்  நடத்தப்படும் பட்சத்தில், ஈரான் அதற்கு எதிராக பதிலடி கொடுக்கும் என ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் ஆரம்பமான ஞாபகார்த்த தினத்தையொட்டி தெஹ்ரானில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க எந்தவொரு நாடும் நினைக்க முடியாது  எனத் தெரிவித்த அஹ்மடி நஜாத், இன்று ஈரான் பலம் பொருந்தியதாக உள்ளது” என்று கூறினார்

Written by lankamuslim

September 24, 2009 at 5:31 pm

கிரிபாவ பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

leave a comment »

gun shooting10

கிரிபாவ பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இப்பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் குற்றச் சேயல் பலவற்றடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே விடுதலையாகியுள்ளார் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது இச்சம்பவம் தொடர்பில் கிரிபாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Written by lankamuslim

September 23, 2009 at 8:34 pm

உலகில் 100 கோடி பேர் பட்டினி,நாயை மூன்று கோடி ரூபா செலவில் வாங்கிய சீனர்

leave a comment »

சுடானில் எடுக்கப்பட்ட படம் பட்டினியால் மரணிக்க போகும் இந்த சிறுவனை உண்பதற் காக  காத்திருக்கும் கழுகு -ஒன்று  இன் னொன்றுக்கு உணவாகின்றது

சுடானில் எடுக்கப்பட்ட படம் பட்டினியால் மரணிக்க போகும் இந்த சிறுவனை உண்பதற் காக காத்திருக்கும் கழுகு -ஒன்று இன் னொன்றுக்கு உணவாகின்றது

நாய்க்கு மூன்று கோடி ரூபா செலவழித்து, அதை வரவேற்க 30 விலையுயர்ந்த கார்களையும் அமர்தியுள்ளார்  ஒரு சீனர் .

மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனப் பொருளாதாரத்தின் அபரிமித சுரண்டல் வளர்ச்சியால் அந்நாட்டில் நிறைய கோடீஸ்வரர்கள் உருவாகி வருகின்றனர்.இந்த அபரிமித வளர்சிக்கு சிங்கியாங்  என்ற சீனாவால் ஆக்கிறமிக்கப்பட்ட   முஸ்லிம்  தேசம் ஒரு முக்கிய காரணமாகும்   நிறைவான தாதுக்களும் நிறைந்த கனிய வளங்களும் அளவற்ற எண்ணெய் வளமும்  மற்றும் எரிவாயு உற்பத்தியை  பூதாகரமாக கொண்ட முஸ்லிம்  தேசம். ஷாங்காய் நகருடன்  எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது இந்த வளம் கொழிக்கும் சிங்கியாங் பலாத்காரமாக சீனாவுடன் இணைக்கப்பட்டுள்ளது  . தன்னுடைய இயற்கை வளங்களாலும்  பெரிய நிலப்பரப்பினாலும் சிங்கியாங்  சீனாவுக்கு ஒரு பெரும் தூனாக  விளங்குகிறது .

2009 ஏப்ரல் வரை கணக்கிட்டதில் எட்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் அங்கு கோடீஸ்வரர்கள். இப்படி வகை தொகையில்லாமல் சீனாவின் சுரண்டல் வளர்ச்சி இருப்பதால் அந்நாட்டினர் பணத்தைத் வீனாக  செலவழிக்கவும் தயங்குவதில்லை.
ஆனால்  அதே நேரம்   உலகில் 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது உலக ஏழை மக்களின் பட்டினியை போக்க  33 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதிக்கு பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து உள்ளது. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை தவிர்க்க முடியாத விடையமாகி விட்டது

ஆனால்  ‘வாங்’ என்ற சீன பெண், நாய் வாங்க மூன்று கோடி ரூபா செலவழித்துள்ளார்.

Written by lankamuslim

September 23, 2009 at 12:28 pm

சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் 28 ஆம் திகதியே 3 ஆம் தவணைக்கு திறக்கப்படும்

leave a comment »

muslim girls

புனித ரமழான் மாத விடுமுறைக்குப் பின்னர்  மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படவிருந்த சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 28 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன.

முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் 28 ஆம் திகதியே இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

நோன்புப் பெருநாளைக்கு மறுதினம் ஆரம்பிக்கும் ஆறு நோன்பை நோற்பதற்கு வசதியை கருத்திற்கொண்டு மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முதலமைச்சின் செயலாளர் ஹேரத், பி.குலரத்ன, மாகாணச் செயலாளர் பீ.கொடிதுவக்கு, சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கிணங்க முஸ்லிம் சமூகத்தின் சமயக் கடமைகளுக்கு மதிப்பளித்து முதலமைச்சர் இப்பாடசாலைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க இப்பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்புக் கடிதங்களை இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 4 சனிக்கிழமைகளிலும் இந்தப் பாடசாலைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டுமெனவும் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Written by lankamuslim

September 22, 2009 at 10:30 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெருநாள் வாழ்த்து செய்தி

leave a comment »

mahinda2

உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்  மக்கள் இன்று பேருவகையுடன் கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய மாதங்களில் புனிதமிகு மாதமான ரமழான் மாதத்தின் மிக முக்கியமான மார்க்கக் கடமையான ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்து ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாட்டங்களில் உலகெங்கிலும் வாழும் தமது  சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றார்கள்.

புனித அல்குர் ஆனினதும் இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கேற்ப ஓர் உயர்ந்த மார்க்கக் கடமையை நிறைவேற்றி முடித்ததன் பின்னர் மகிழ்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் உள்ளது.

இலங்கையில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் -சிங்களவர்கள், தமிழர்கள், பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்த நாட்டை தாய் நாடாகக் கொண்டிருக்கும் ஏனைய எல்லா சமூகத்தவர்களுடனும் நட்புறவுடன் வாழ்ந்து வந்துள்ளதோடு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

கடந்த வருட ஈதுல் பித்ர் கொண்டாட்டத்தின்போது நாம் கிழக்கு மாகாணத்தையும் அங்கு வாழும் பெருந்தொகையான முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்திருந்தோம்.

இன்று முழு நாடுமே பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு வட மாகாணத்தில் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு மீளச் சென்று சுதந்திரமாக தமது மார்க்க கடமைகளை  மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விசேடமான சந்தர்ப்பத்தில் ஐக்கியம், சமாதானம், சகிப்புத்தன்மை, நட்புறவு என்பவற்றுடன் கூடிய ஒரு புதியதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் நாட்டின் சமாதான முன்னேற்றங்களுக்கான பங்களிப்பையும் நாம் இலங்கை முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Written by lankamuslim

September 21, 2009 at 11:36 am

இலங்கைக்கு ஈரான் மேலும் கடன் உதவி

leave a comment »

4-iran-president

வட்டியில்லாக் கடன்  அடிப்படையில் மேலும் ஒரு வருட காலத்திற்கு மசகு எண்ணெயை இலங்கைக்கு வழங்குவதற்கு ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  அறிவுறுத்தலின் பேரில் ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணியான எம். எம். ஸ¤ஹைர் ஈரானிய அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரானுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருந்த போது ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பயனாக 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையும் இலங்கைக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் ஈரான் மசகு எண்ணெயை வழங்கியது.

இந்த வசதியை மேலும் நீடித்துச்  கொள்ளுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானியத் தூதுவரான ஸ¤ஹைர் ஈரானிய எண்ணெய் அமைச்சின் தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

Written by lankamuslim

September 21, 2009 at 11:16 am

அணைத்து முஸ்லிம்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

with one comment

இன்று ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.பெருநாள் தினத்தின் முக்கிய கடமைகளுள் பிரதானமான நோன்புத் பெருநாள் தொழுகைகள் புத்தளம்  சாஹிரா தேசிய கல்லூரியின் திறந்த வெளி மைதானத்தில் மௌலவி M.H.M.மின்ஹாஜ்-(இஸ்லாஹி)-தலைமையில் இடம்பெற்றது.

pic: virakesari

Written by lankamuslim

September 21, 2009 at 10:58 am

விடுதலைப் புலிகளுக்கு ரஷ்ய விசேட படையினர் பயிற்சி: இலங்கை புலனாய்வு பிரிவு

leave a comment »

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு  கடந்த காலத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த விசேட படையினரால் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக  இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004 ம் ஆண்டு சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிக்குப் பயணம் செய்த ஓய்வுபெற்ற ஐந்து ரஷ்யாவைச் சேர்ந்த   விசேட படை அதிகாரிகள், துப்பாக்கி சுடுதல், வாகனங்களை ஓட்டுதல், சொற்ப நேரத்திற்குள் வாகனங்களை பொருத்துதல் மற்றும் வாகனங்களை கூறுகளாக அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியதாக இலங்கை புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளில் தமிழீழ தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணியை சேர்ந்த முப்பத்தைந்து பேர் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

lankasri

Written by lankamuslim

September 20, 2009 at 11:50 pm

வாகனம் வித்துக்குள்ளானதில் அமைச்சர் முரளிதரனுக்கு காயம்

leave a comment »

தேசிய நல்லிணக்க அமைச்சர்  விநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும் அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் முரளிதரன் அங்கிருந்து ஹெலிக்கெப்டரில் கொழும்பிற்கு வருகைதந்துள்ளார்.

ஹெலிகெப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கியது அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அமைச்சரின் வாகனத்தின் மீது எதிரே வந்த பஸ் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அமைச்சருக்கு கால்களிலும் தலையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் மெய்பாதுகாவலர் மற்றும் சாரதிக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது

Written by lankamuslim

September 20, 2009 at 11:26 pm

இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள்

leave a comment »

eid-mubarak.gif image by lil-mz-sexc-2013

ரமழான்   பெருநாளை நாளை திங்கட்கிழமையே கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் நேற்று தலைப்பிறை காணப்படாததையடுத்தே இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகப் பெரிய பள்ளிவாசல் சம்மேளனம் தெரிவித்துள்ளது இஸ்லாமிய கிளாபத் மீண்டும் உலகில் ஏற்படுத்த  படும் வரை பிறை காணும் முறை பலவாராக இருப்பது தவிர்க்க முடியாதது இன்ஷா அல்லாஹ் கிளாபத் மீண்டும் உலகில் ஏற்படுத்த  படும் கிளாபத் ஏற்படுத்த  பட்டால் உலகில் உள்ள முழு முஸ்லிம் சமூகமும் ஒரு அமீருல் மூமினீன், என்ற ஒரு உலக தலையின் கீழ் ஒன்று படுத்தப்படும்  பிறை காணும் முறை மட்டுமல்ல முஸ்லிம் உம்மாஹ் எதிர் கொள்ளும் அணைத்து பிரச்னைக்கும் தீர்வு காணப்படும்  கிளாபத் உலகில் தானாக ஏற்படாது அதை ஏற்படுத்துவது அனைவர் மீதும் கட்டாய கடமை என்பதுடன் ஒவ்வருவரும் தமது நேர காலங்களை ஒதுக்கி கிளாபத் மீண்டும் உலகில் ஏற்படுத்த படும் நாள் வரை உழைக்கவேண்டும்.

Written by lankamuslim

September 20, 2009 at 2:35 pm

மரத்தில் தொங்கிய நிலையில் இரு எலும்புக் கூடுகள் மீட்பு

leave a comment »

death.jpg hang image by Once_fallen

துன்ஹிந்த நீர் வீழ்ச்சிக்கு  மேல் காட்டுப் பகுதியில் மரமொன்றில் தொங்கிக் கொண்டி ருந்த இரண்டு எலும்புக் கூடுகளை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

இவை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இருவரது சடலங்கள் என பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துன்கிந்த காட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவரினால் பதுளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலொன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் விரைந்து இவ்விரு எலும்புக்கூடுகளையும் மீட்டுள்ளனர்.

பதுளை-சிரிமல்கொட கிராமத்தில் வசித்து வந்த இருபத்தொன்பது வயது நிரம்பிய டி. எம். சமந்த கெலும் என்ற இராணுவ சிப்பாயினதும் ஆலி-எலைப் பகுதியில் ரோக்கத்தன்னை தோட்டத்தில் வசித்து வந்த இருபத்தி நாலு வயதினையுடைய முத்துக்குமார் கீதா என்ற தமிழ் யுவதியுமே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களென இனம் காணப்பட்டுள்ளது. இத் தற்கொலைகள் ஒரு மாதத்திற்கு முன் இடம்பெற்றிருக்கலாமென்று பொலிஸார் தெரிவித்தனர்.

நைலோன் நூலினால் கழுத்துக்கள் சுருக்கிடப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சடலங்கள் அருகே இருந்த உடைப்பைகள் இரண்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ் விருவரின் தற்கொலைகள் என்ன காரணத்தினால் ஏற்பட்டதென்பது குறித்து பதுளைப் பொலிஸார் தீவிரப் புலன் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Written by lankamuslim

September 19, 2009 at 4:06 pm

கருணா மற்றும் சந்திரகாந்தன் குழுவினருக்கு இடையிலான மோதல்கள் உக்கிரம்

leave a comment »

தேச நிர்மாண அமைச்சர்  முரளிதரன் குழுவினருக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் குழுவினருக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று வருவதாக பிரதேச பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களான  குறித்த இருவரும்  அரசாங்கத்துடன் இணைந்து முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

September 19, 2009 at 3:21 pm

புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

leave a comment »

மட்டக்களப்பு  மாவட்டம் தொப்பிகலை பிரதேசத்திலுள்ள நாரக்கமுல்லையில் விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்கள் விசேட பொலிஸ் குழுவொன்றினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா இடைத் தங்கல் முகாம் ஒன்றில் கைதாகிப் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்தே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று அந்தப் பகுதிக்கு சென்றிருந்த பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் மறைவிடம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த பெருந் தொகையான இந்த ஆவணங்களில், விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள், சுமார் 10 ஆயிரம் பயிற்சி பெற்ற அங்கத்தவர் விபரம், வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆவணங்களுடன் தகவல் கருவிகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட லண்டனிலிருந்து வெளியாகும் ‘ ஜேன்ஸ் டிபென்ஸ்’ பிரதியும் காணப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தும் பொறுப்பு பொலிஸ் குற்றப் புலனாய்வத் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Written by lankamuslim

September 19, 2009 at 3:12 pm

இடம்பெயர்ந்தோர் ஜனவரி மாதத்திற்குள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள்

leave a comment »

xin_3820506170047234205215

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள்  இடம்பெயர்ந்தோர் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வரும் 300,000 பேரை எதிர்வரும் நான்கு மாதத்திற்குள் குடியமர்த்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட அரசியல் பிரதிநிதி லியான் பெஸ்கோவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக தருவிக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் மூலம் கண்ணி வெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும், இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் அகதிகள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் வரையில் மக்களை மீள் குடியேற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருக்கக் கூடும் எனவும், அவர்களை கண்டறியும் வரையில் அவர்களை முழுமையாக விடுவிக்க முடியாது எனவும் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடைத்தங்கல் முகாம்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 20000 இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

September 18, 2009 at 10:58 pm

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

leave a comment »

pillayan and hisbullah

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம் .எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 4 காரணங்களை முன் வைத்து எதிர்வரும் சபை அமர்வின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான சேகுதாவூத் பஷீர்(ஸ்ரீ.ல.மு.கா.), ஐ.தே.க. உறுப்பினர் அ.பரசுராமன் மற்றும் அ.சசிதரன் ஆகியோர் ஒப்பமிட்டு இப் பிரேரணையை எழுத்து மூலம் அவைத் தலைவரிடம் முன் வைத்துள்ளனர். இது தொடர்பாகப் பிரேரணையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:

கிழக்கு மாகாண அமைச்சு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பலதரப்பட்ட வைத்தியசாலைகளிலும் கடந்த பல வருடங்களாக தொண்டர் அடிப்படையில் சுகாதார சேவை ஊழியர்களாகப் பணிபுரிந்து வந்தவர்களை நிரந்தர சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினாலும், மாகாண ஆளுனரினாலும் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டமை, இந் நியமனங்கள் சம்பந்தமாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு சுகாதாரத் தொண்டர்களை ஏமாற்றியது, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நியமன விடயங்களில் நீதியற்ற முறையில் தலையிட்டு எவ்வித்திலும் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றாத பல புதியவர்களை சுகாதார தொண்டர்களாக பணி புரிந்தவர்கள் என்ற தவறான தகவலை அமைச்சின் செயலாளருக்கு வழங்கியதோடு அவர்களையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்குமாறு எழுத்து மூல உத்தரவு வழங்கியமை, குறிப்பிட்ட அமைச்சர் எவ்வித நியமன விதிகள் நடைமுறைகள் என்பவற்றைப் பின்பற்றாது நியமனங்கள் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை, வைத்தியசாலைகளில் சேவைகளை மேம்படுத்த வேண்டிய குறித்த அமைச்சர் நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற நிரந்தர நியமனத்திற்கு தகுதியானவர்கள் என்று கணிப்பீடு செய்யப்பட்ட 249 பேரின் நியமனங்களை வழங்காமல் கடந்த 9 மாதங்களாக இழுத்தடித்தமை. இதனால் மாகாண வைத்தியசாலைகளில் மக்களுக்கு கிடைக்கவிருந்த 249 பேரின் அத்தியாவசிய சேவையை சொந்த அரசியல் லாபங்களுக்காக துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய விடயங்களை முன் வைத்தே மேற்படி பிரேரணையை குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர். எதிர்வரும் 29ஆம் திகதி மாகாண சபையின் அடுத்த அமர்வு கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

September 18, 2009 at 10:47 pm

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு சந்திரகாந்தன் கடும் எதிர்ப்பு

leave a comment »

Chandrakanthan-eng-190-6aug08கிழக்கு மாகாணசபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய 60 வயதான பாலசிங்கம் என்பவரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி எடுத்தத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளரின் நியமனம் தொடர்பில் முதலமைச்சரின் கருத்து கோரப்பட வேண்டும் என்ற போதிலும், பாலசிங்கம் விடயத்தில் இந்த விதிமுறைப் பேணப்படவில்லை என முதலமைச்சர் சந்திரகாந்தன் விசனம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மாகாணசபை விதிகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  சந்திரகாந்தன்  ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையின் பொதுச் செயலாளராக பணியாற்றி வரும் பாலசிங்கம், மாகாண ஆளுனருக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக  சந்திரகாந்தன்  குற்றம் சுமத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனருக்கும், முதலமைச்சருக்கும் இடையில் நீண்ட காலமாக மனக் கசப்பு நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

September 18, 2009 at 5:33 pm

இன்று முஸ்லிம்களுக்குத் தேவையானது அரசியல் அதிகாரமா? உரிமைத்துவ அரசியலா?

leave a comment »

27.07.2009 அன்று தினக்குரல் வெளியான ஆக்கத்தை இங்கு பதிவு செய்கின்றோம்
http://rlv.zcache.com/i_will_fight_for_my_rights_embroidered_hat-p233234028084528772ag1xg_400.jpg

எம்.எம்.எம். நூறுல்ஹக்

அரசியல் அதிகாரம் குவிந்திருக்கும் பக்கம் மக்கள் திரட்டி அணிதிரள்வது இயல்பானது. அதேபோன்று அரசியல் அதிகாரம் இல்லாத இடத்திலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறிச் செல்வதும் தவிர்க்க முடியாத ஒரு பண்பாக வளர்ந்து காணப்படுகின்றது.

அபிவிருத்தி கலாசாரம் விருத்தி பெறுவதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்கின்ற ஒரு பிழையான கோட்பாட்டுக்குள் நமது மக்களை கட்டி வைத்து அரசியல் செய்கின்ற ஒரு செயற்பாட்டினையும் நமது அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

மேற்படி கூறுகள் அராங்கத்தின் பால் சார்ந்து நின்றால் தான் எதனையும் சாதிக்கலாம் என்கின்ற பதிவை பரவலாக நமக்குள் விதைக்கும் பாதைகளின் திறப்பு பெருகிவரும் ஒரு சூழலும் நமக்குள் வெகுவாக ஆட்சி புரியத் தொடங்கி இருக்கின்றது.

நமது அரசியல் தலைமைகள் காட்டும் பந்தாக்களின் பின்னால் அள்ளுப்பட்டுச் செல்லும் ஒரு சமூகமாக நாமிருக்கும் வரை நமது சமூகத்தள மேம்பாட்டை நோக்கிய நகர்வுகள் கொண்ட ஓர் அரசியல் முறைமை நமக்குள்ளிலிருந்து விடை பெற்றுச் செல்வதும் தவிர்க்க இயலாது.

ஒரு சமூகத்தின் இருப்பில் கட்டிட வளர்ச்சி, பௌதிக வளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற நலன்கள், தொழிலில்லாப் பிரச்சினை இன்றி இருத்தல் போன்ற பக்கங்கள் முக்கிய பாத்திரத்தைக் கொண்டதாகும்.

ஆனால், இவைகளைப் பார்க்கிலும் அதிக கூடிய முக்கியத்துவம் கொண்ட சில பக்கங்கள் ஒரு சமூகத்தின் இருப்பையும் எழுச்சியையும் வலியுறுத்துவதிலும் நிலைப்படுத்துவதிலும் பங்கு கொள்கின்றன.

அவற்றினை தக்கவைத்துக் கொள்வதில் தான் நமது இருப்பு அசையாது வேரூன்றிக் கொள்ளும். இல்லையேல் ஆட்டம் கொண்ட அத்திவாரமாகவே நமது சமூக கட்டிடம் எழுந்திருக்கும். அது உறுதியான பிடியிலிருந்து அகன்று உருக்குலைவை நோக்கிய நகர்ச்சிக்குள் இலகுவாக அகப்பட்டுவிடக்கூடும்.

உரிமத்துவம், தனித்துவமான செறிவான குடியிருப்பு, ஒற்றுமை போன்ற உயரிய கூறுகளை மிகவும் வலுவாக பற்றிக் கொள்ள வேண்டிய தேவைகள் பெருக்கெடுத்துக் காணப்படும் தருணத்தில் வெறும் அபிவிருத்தி அரசியல் நகர்வே இன்றைய அவசியம் எனப் பிதற்றுவது அர்த்தமுள்ள நகர்வல்ல.

வீதி அபிவிருத்தி, கட்டிட வளங்கள், தொழில் வாய்ப்பு போன்ற விடயங்கள் இயல்பாக நடைபெறும் ஒரு கோணத்தை நமது நாட்டு அரசியல் போக்குகள் நிர்ணயித்து வைத்திருக்கின்றது. ஆதலால் இவைகள் இயல்பாக நடைபெறுவதற்கான ஏதுக்கள் நிறையவே உள்ளன.

சமூக இருப்பு அரசியல் என்பது இயல்பாக நிகழ்ந்து விடக்கூடிய ஒன்றல்ல. அதற்கென்று கடுமையாகப் பாடுபடவேண்டிய சூழலில் தான் தங்கி இருக்கின்றது. ஏனெனில், ஆளுந்தரப்புக்கள் கைக்கொள்ளும் ஆதிக்க வன்முறைகள்தான் பாதிப்புக்களையும், இழப்பீடுகளையும் ஒரு சமூகத்தின் மீது குறிப்பாக்கி பாய்ச்சும் போதே இந்நிலை தொடர்கின்றது அல்லது படிகின்றது.

இங்கு இருந்துதான் ஒரு சமூகத்தின் உரிமத்துவ அரசியல் தொடங்கப்பட காரணமாகின்றது. தனித்துவப் பதிவை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்தை சுமத்துகின்றது. இதன் வழியில் பயணிக்கும்போது சில துன்பங்களையும் இழப்புகளையும் அனுபவிக்க நேரிடுவது யதார்த்தமானது.

அரசியல் அதிகாரமுடையோர்களுக்கு எதிராகவே உரிமத்துவ அரசியல் கூறுகள் அநேகமாக அமைந்திருக்கின்றன. இவற்றினை கட்டுடைப்பு அல்லது அறுத்தெறிந்து கொள்வதில் தான் நமது உரிமத்துவ அரசியல் போராட்டம் வெற்றியை நோக்கியதாகவும் அதனை அடைந்து கொண்டதாகவும் மாறும்.

இதற்கு சில விலைகளை நாம் செலுத்த நேரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனைப் பொறுப்பெடுக்க நமது சமூகம் தயார் இல்லையாயின் அரசியல் அதிகார வன்முறைகளுக்கு அடங்கி, கட்டுண்டு வாழ்வது தவிர வேறு வழியிருக்காது.

இதுதான் நமக்குச் சாதகமானது என உறுதியாக நாம் நம்பத் தொடங்கிவிட்டால், நமது பிரச்சினைகள் என்று கதையாட வேண்டிய தேவையிலிருந்து எம்மை விடுதலையாக்குகின்றது. அரசியல் அதிகாரம் இருக்கும் பக்கம் நமது மக்களின் பார்வையும், விருப்பும் ஓட்டத் தொடங்கும்.

இந்த நெருக்கம் நமது பல பிரச்சினைகளில் சிலவற்றுக்குத் தீர்வாக அமையமுடியும். அதேநேரம் அடங்கி வாழ்ந்து சில சலுகைகளைப் பெறும்பேற்றைக் கொண்ட “சலுகை அரசியல் ‘ பண்பின் பின்னால் நமது செல்நெறியை மாற்றிக் கொள்ளவைக்கும். இதனை வேறுவார்த்தையில் செல்வதாயின் அடிமைப்பட்டவர்களாகவும் பாவப்பட்டவர்களாகவும் நமது மக்கள் வாழ்வதை வலியுறுத்தி நிற்கும்.

இன்று நாம் போராட வேண்டிய தேவையைக் கொண்டவர்களாக இல்லை என்கின்ற ஒரு மாயைத் தோற்றத்தினை நிஜமுகமாக நமது அரசியல் தலைமைகள் காட்டும் புள்ளியைத் தொடங்கி இருக்கின்றனர். அது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டதன் பின்னர்.

ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் ஆயுதப் போராட்டத்திற்கு உந்துதள்ளிய வடுக்கள் காயங்கள் அனைத்தும் இல்லாமல் போய் இனப்பிரச்சினைகள் யாவும் ஓந்து விட்டனவா என்கின்ற வினாவை எழுப்பினால் அதன் விடை “பிரச்சினைகள் இன்னும் தீர்வுக்குவரவில்லை’ என்றே காணப்படும்.

இவ்வாறான ஒரு நிலையில் சலுகை அரசியல், அபிவிருத்தி அரசியல் என்கிற வட்டங்களுக்குள் நம்மை சிறைப்படுத்தமுனைவது ஆரோக்கியமான பதிவுகளைத் தருமா? என்கின்ற கேள்வி இவ்விடத்தில் முக்கியப்படுகின்றது.

தனிக்கட்சிகளின் ஊடாக எதனையும் சாதிக்கும் வல்லமையைப் பெறமுடியாது என்றும், இனி நமக்கான கட்சிகளின் அவசியமில்லை என்போர்களின் வரவு சற்று கூடிச் செல்லும் பாங்கைப் பெற்றிருக்கின்றது. அதேநேரம் தனிக்கட்சிகள் இனிப்பயனில்லை என்போர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனிக்கட்சித் தாயிலிருந்து பிறந்து பிறழ்ந்தவர்களே.

தனிக்கட்சி நமக்கு அவசியமில்லை என்ற கூற்றை ஒரு இயக்கமாக முன்னெடுக்கும் எத்தனங்கள் நிறையவே காணப்படுகின்றது. ஆனால் இதன் பின்னால் நிற்போர்கள் ஏதோ ஒரு சிறிய கட்சியின் தலைமைத்துவத்தின் பின்னாலிருப்பதை அவதானிக்கலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ், ரிஷாட் பதியுதீன், அமீர் அலி போன்றோர்களும் கட்சிகளை அமைத்து நமக்கு மத்தியில் அரசியல் செய்வது பிரத்தியட்மானது. தனிக் கட்சியினால் இனிப் பயனில்லை எனில் ஏன் இவர்களுக்கு கட்சியும் தலைமைத்துவமும் என்கின்ற பெரும் வினா எழுவது தவிர்க்க முடியாது.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு தமிழர், சிங்களவர்களை குறிப்பிட்டளவு அங்கத்துவத்தைக் கொண்டும் கட்சியை அமைத்துவிட்டால் அது தேசிய கட்சி என்ற வரையறைக்குள் ஆகிவிடும் என்கின்ற புதிய ஓர் அரசியல் கலாசாரத்தின் துவக்கமாக இதனைக் கொள்ள வேண்டும் என்கின்ற பாடத்தை சொல்லித்தர இவர்கள் முனைகின்றனரா?

அவ்வாறாயின், இந்நாட்டின் ஆளுங்கட்சிகளாக வரக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய பெருங்கட்சிகளுடன் நமது நேரடி அங்கத்துவத்தை வைத்துக்கொள்வது சலுகை அரசியல் அல்லது அதிகார அரசியல் வெதற்கும் கூடிய பயனை நெருங்கி இருந்து பெறுவதற்கும் மிகவும் இலகுவான வழியாகும்.

இதுதான் நமக்கான தனித்துவ அரசியல் கட்சிகளின் தோற்றத்திற்கு முன்னிருந்த நிலையுமாகும். அதற்குள்தான் நாமின்றும் பயணிக்க விரும்புகின்றோம் என்றால், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளை கலைத்துவிடலாமே? அதனைச் செய்வதற்கு முன்வராத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மட்டும் குறிவைத்து குறைகூறி தேவையற்றது எனச் சாடுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் தமிழர், சிங்களவர் அங்கத்துவம் குறைவாகவும் முஸ்லிம்களின் பிரசன்னம் அதிகமாகவும் இருக்கின்றது. ஆகவே, இக்கட்சியை இலக்கு வைத்து விமர்சிப்பது முறையற்றதும் விமர்சிக்கத் தகுதியற்றதுமாகும். ஏனெனில், ஏனைய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கட்சிகளும் இதன் அங்கத்துவப் பாங்கையே கொண்டிருக்கின்றது.

ஆகவே,  தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தம்மிடமிருக்கும் அமைச்சுப் பதவியை வைத்து உருவாக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்படி அல்ல. மக்களின் தேவை குறித்து பேசி அதனை நமது மக்களும் ரிகண்டு பாராளுமன்ற உறுப்புரிமையை உறுதிப்படுத்தி, அதன் ஊடாக அமைச்சுப் பொறுப்புகளைப் பெறுவதற்கும் மக்களே காலாக நின்று உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரம் பேசும் ஆற்றலுடனும் நிபந்தனையுடனும் ஆட்சியமைக்கும் கட்சியோடு கைகோர்த்து சமூகநலன் சார்ந்து உழைப்பதும் பெயரளவில் இணைந்துகொண்டு முழுக்க முழுக்க பெருங்கட்சிக்கு இரையாகிக் கொண்டும் செயற்படுவதும் ஒரே அந்தஸ்து கொண்ட செயற்பாடுகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்வதில் அதிக சிரமமில்லை.

கட்சியின் தலைமைத்துவம், அங்கத்துவம் போன்ற உரித்தை வைத்துக்கொண்டு தனிக்கட்சி அவசியமில்லை என கர்ஜிப்பது வெறும் காழ்ப்புணர்வுகொண்ட கூப்பாடேயாகும். ஏனெனில், அவர்களின் கட்சி பங்கு பற்றுதலே நமக்கான கட்சியின் அவசியத்தை வலியுறுத்தப்போதுமானது. இன்றைய சூழலிலும் தனிக் கட்சி தேவை அற்றுப் போகவில்லை என்பதையும் இது புலப்படுத்துகின்றது.

அரசியல் அதிகாரத்தின் பக்கம் சாய்ந்து கொள்வதுதான் இன்றைய காலத்திற்கு பொருத்தமானது என்று கொண்டால், அதனைச் செய்ய வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் அதிகமிருக்கின்றது. ஏனெனில், இன்று நமக்குள் இருக்கும் அனைத்து அரசியல் பிரதிநிதித்துவத்திலும் முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவு நல்கப்பட்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் பிரதிநிதிகளுக்குமாகும்.

ஆகவே, சமூகத்தளத்தில் நின்று செயற்பட வேண்டிய தேவைகளும் அவசியங்களும் நமக்குள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த முன் நிபந்தனையுமின்றி அரசாங்கத்துடன் சேர வேண்டும் என எதிர்பார்ப்பது உகந்ததல்ல.

இன்றிருக்கும் சூழலில் அராங்கம் சார்ந்த போக்கு நமக்கு சிறந்ததென்று உன்னிப்பாக நோக்கி உணரப்படும் கருத்தாக நம்பப்படுமாயின் அதற்கான ஓர் அரசியல் காநகர்த்தலாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை உபயோகித்துக் கொள்ளும் கையாள்தலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவறவிடுமாயின் அது பாரிய வரலாற்றுத் தவறாக எம்மை நோக்கி பதிவுசெய்யத் தவறாது என்பதையும் கருத்திற்கொண்டு செயற்படுவோமாக!

Written by lankamuslim

September 18, 2009 at 4:18 pm

மன்னார், பேசாலையில் பெந்தகோஸ் கத்தோலிக்கர் மோதல்

leave a comment »

prote

மன்னார், பேசாலை, இலங்கை  பெந்தகோஸ் சபை நேற்றிரவு நடத்திய வருடாந்த ‘ஹன்வெசன்’ நிகழ்வு கத்தோலிக்கர்களுக்கு  இடைஞ்சலாக இருப்பதாக கூறி பேசாலையிலுள்ள பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர்  ஒன்றுதிரண்டு கத்தோலிக்கக் குருக்களுடன் யூட்சன் வீதியில் உள்ள இலங்கை பெந்தகோஸ் சபைக்குச் ஊர்வலமாக  சென்றுள்ளனர்.

அப்போது அங்கு பெந்தகோஸ் சபையினரால் வருடாந்த ‘ஹன்வெசன்’ நிகழ்வு நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு பாதுகாப்புக்காகப் பொலிஸாரும் குவிக்கப்படிருந்தனர்.

இந்நிலையில் அங்கு சென்ற பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள்   அருட்தந்தையர்களும் இணைந்து பெந்தகோஸ் சபையின் ‘ஹன்வெசன்’ நிகழ்வுகலை நிறுத்துமாறு கூறியுள்ளனர்

பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிசார்   இதனைத்  புரிந்து கொண்டு, அருட்தந்தை வன்முறையைத் தூண்டுகிறார் என கூறி  அவரைத் தாக்கியுள்ளார்.

இதனால் அப்பகுதி கத்தோலிக்கருக்கும் பொலிஸாருக்கும் இடையே , நேற்று இரவு 8.30 மணியளவில் முருகல் நிலை .

Written by lankamuslim

September 18, 2009 at 3:57 pm

அம்பாறையில் நேற்று காலை போக்குவரத்து தடை : அதிரடிப் படையால் நிலைமை சீரடைந்தது

leave a comment »

police

அம்பாறை மாவட்டம் அம்பாறை  மாவட்ட தமிழ் பிரதேசதில் திருக்கோவில் பொதுச்சந்தைக்கு முன்பாக நேற்று  உண்ணாவிரப் போராட்டம  இடம்பெற்றது. திருக்கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண முதல்வர் சி.சந்திரகாந்தனின் ரி.எம்.வி.பியின் (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்) உப காரியாலயத்தினை அகற்றுமாறு கோரியே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்களே இந்த போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன இந்தப் போராட்டத்தில் சுமார் 700பேர்வரை கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி திருக்கோவில் உள்ளிட்ட அம்பாறையின் பல்வேறு பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை அம்பாறையின் சில பிரதேசங்களின் வீதிகளின் குறுக்கே  டயர்கள் சில இடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில் மண்குவியல்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது இதன் காரணமாக காலையில் அக்கரைப்பற்று – கல்முனை வீதி, சம்மாந்துறை – நாவிதன்வெளி வீதி, அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.எனினும் விசேட அதிரடிப் படையினர் சில மணித்தியாலங்களுக்குள் இவற்றை அகற்றியதால் நிலைமை சீரடைந்தது.

Written by lankamuslim

September 18, 2009 at 1:44 am

இலங்கையில் 26 ஆவது முதலமைச்சர்களின் மாநாடு

leave a comment »

sri-lanka-map

மாகாண முதலமைச்சர்களின் மாநாடு இன்றும் (2009.09.18) நாளையும் (2009.09.19) ஹபரண ஜாயா விலேஜ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

மாகாண மட்டத்தில் நடைபெறும் 26 ஆவது முதலமைச்சர்களின் மாநாடு இதுவாகும்.

மாகாண சபை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளைத் துரிதப்படுத்தல், மாகாண சபை செயற்பாடுகளில் ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றல் என்பன குறித்து இந்த மாநாட்டின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக  வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநயக்க தெரிவித்தார்.

தற்போது கலைக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை தவிர்ந்த, ஏனைய மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் முதலமைச்சர் மேலும் கூறினார்

Written by lankamuslim

September 18, 2009 at 1:27 am

புத்தளம் மாவட்ட கிராம எழுச்சிக்கு 130 மில்லியன் நிதி ஒதுக்கீடு

leave a comment »

puttalam_cha_map

சமுர்த்தி வேலைத் திட்டத்தின் கீழ்  கிராம எழுச்சி திட்டத்திற்கென புத்தளம் மாவட்டத்துக்கு 130 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் எஸ்.பீ.சந்தநாயக்க தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 144 கிராமங்கள் இந்த அபிவிருத்தி திட்டங்களில் அடங்குகின்றன.

இதில் மின் விநியோகத் திட்டத்திற்கென 16 மில்லியனும், சமூக அபிவிருத்திக்கென தலா 8 மில்லியனும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென தலா 5 லட்சம் ரூபா வீதம் 72 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, இத்திட்டத்திற்கென மக்களது முழுமையான பங்களிப்பும் கிடைத்து வருவதாக உதவி சமூர்த்தி ஆணையாளர் தெரிவித்தார்

Written by lankamuslim

September 17, 2009 at 7:22 pm

புலிகளிடம் இருந்து கைபற்றபட்ட ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படுத்தப்படவுள்ளன :

leave a comment »

slkjagath-jayasuriya200x150-150x150

ஜகத் ஜெயசூரிய

மனிதாபிமான நடவடிக்கைகளில் தமிழீழ  விடுதலைப் புலிகளிடம் இருந்து கைபற்றபட்ட  ஆயுதங்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தப்படவிருப்பதா  இராணுவ தளபதி   ஜகத்  ஜெயசூரிய    தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி முதல் 7ம்   திகதி வரையில் BMICH பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் போது, மனிதாபிமான நடவடிக்கைகளின் போதும், அதன் பின்னரும் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைபற்றபட்ட ஆயுதங்களை காட்சிக்கு வைக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

September 17, 2009 at 2:21 pm

பிரித்தானிய நடிகர் மிஸ்டர் பீனின் கடன்அட்டையிலும் மோசடி: இலங்கையர் இருவர் கைது

leave a comment »

MR

பிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற  இலங்கையர் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இணையத் தளத்தைப் பயன்படுத்தியே இந்த மோசடியை மேற்கொள்ள இவர்கள் முயன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதிவக தெரிவித்தார்.

HSBC வங்கியின்  சர்வதேச  பணக் கொடுப்பனவு பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸார் இந்த இருவரையும் கைது செய்திருந்தனர்.

அத்துடன்  பிரித்தானியாவில் உள்ள தமது நண்பர்கள் மூலமாகவே இவர்கள் இருவரும் மிஸ்டர் பீனின் கடன்அட்டைக்குரிய இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மலையகப் பகுதியில் உள்ள ஒரு இணையத்தள ஸ்தாபனத்திலிருந்தே இந்த முயற்சியை மேற்கொண்டதாக அறியக்கிடைக்கிறது.

Written by lankamuslim

September 17, 2009 at 2:12 pm

அமைச்சர் முரளிதரனின் கருத்து, கிழக்கு மாகாண மக்களை அவமானப்படுத்துகின்றது

leave a comment »

ஹிஸ்புல்லா விசனம்:pillayan and hisbullah
கிழக்கு மாகாண சபையில் தகுதியற்றவர்களும், அறிவற்றவர்களும் இருப்பதாக அமைச்சர் வி. முரளிதரன் கருத்துத் தெவித்துள்ளமை கவலையளிப்பதுடன், கிழக்கு மாகாணசபைக்கு வாக்களித்த பல இலட்சம் மக்களையும் அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
தகுதியற்றவர்களும் அறிவற்றவர்களும் இருப்பதனாலேயே கிழக்கு மாகாண சபை முறையாக செயற்பட முடியாதுள்ளது என்று மட்டக்களப்பில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் முரளிதரன் கருத்துத் தெவித்திருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெவித்துள்ளதாவது,

கிழக்கு மாகாணசபையில் தெவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கல்விமான்களாகவும் சட்டத்தரணிகளாகவும் முன்னாள் எம்.பி.க்களாகவும் சக போராளிகளாகவுமே உள்ளனர்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண சபையில் தகுதியற்றவர்களும் அறிவற்றவர்களும் இருப்பதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்துத் தெரிவித்துள்ளமை கவலையளிக்கின்றது. இத்தகைய நிலைப்பாட்டினை அவர் கைவிட வேண்டும்.

அமைச்சர் முரளிதரனின் கருத்தானது கிழக்கு மாகாணசபைக்கு வாக்களித்த பல இலட்சம் மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிப்பவர்கள் அறிவற்றவர்கள் என்று அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளமை ஆழ்ந்த கவலையளிக்கின்றது.

இங்கு படித்தவர்களும் சக போராளிகளுமே நிறைந்துள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு ஜனநாயகத்துக்கு வந்த அமைச்சர் முரளிதரன் உண்மை நிலையினை தெரியாது பேசுவது ஆச்சரியத்துக்குரியதாகும்.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அமைச்சர்களுக்குமிடையில் பிரச்சினை இருக்கின்றது. இதுகுறித்து மத்திய அமைச்சராக இருக்கும் முரளிதரன் எங்களுடன் பேசியிருக்கலாம்.

ஆளுநருடன் பிரச்சினைகள் இருப்பதனாலேயே நாம் தொடர்ச்சியான முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றோம்.

இந்தநிலையில் ஆளுநர் சிறப்பாக இயங்குவதாகவும் உறுப்பினர்கள் அறிவற்றவர்களாக இருப்பதாகவும் அமைச்சர் கூறுவது மனவேதனையை தருகின்றது.

நாட்டிலுள்ள ஏழு மாகாண சபைகளைவிட கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்களே கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கிழக்கு மாகணசபை உறுப்பினர்கள் இரவுபகலாக பாடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சரின் கருத்து வேதனையளிக்கின்றது. கிழக்கு மாகாண சபைக்கு வாக்களித்த பல இலட்சம் மக்களையும் அமைச்சரின் கருத்து அவமானப்படுத்தியுள்ளது

Written by lankamuslim

September 17, 2009 at 1:50 pm

அக்கரைப்பற்றில் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு ஆர்பாட்டம்

leave a comment »

இணைப்பு -2
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ.) வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பிரதான வீதியூடாகப் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ.ல.மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 9ஆவது ஆண்டு கத்தமுல் குர் ஆன் மற்றும் புனித ரமழான் இப்தார் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம் இன்று மாலை அக்கரைப்பற்று செல்லவிருக்கின்றார்.

இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று நகர், தைக்கா நகர், பட்டியடிப்பிட்டி பாலம் ஆகிய இடங்களில் வீதியின் குறுக்கே டயர்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அக்கரைப்பற்றுக்கும் கல்முனைக்குமிடையில் நண்பகல் வரை போக்குவரத்துத் தடைப்பட்டிருந்த போதிலும் பொலிசாரின் தலையீட்டினால் ஒருசில பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஏனைய அலுவல்கள் வழமை போல் நடைபெற்றன.

ரவூப் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சில இடங்களில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

எனிலும் தாம் திட்ட மிட்டவாறு நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Written by lankamuslim

September 16, 2009 at 11:04 pm

அக்கரைப்பற்றில் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு ஆர்பாட்டம்

leave a comment »

சற்று முன் கிடைத்த தகவல்:

slmc

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வருகையை எதிர்த்து சிலர் வீதிகளில்  டயர்களை  போட்டும் கருப்பு கொடிகளை கட்டியும் வீதிகளில் எதிர்ப்பு செய்தனர் எனிலும் தாம் திட்ட மிட்டவாறு நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Written by lankamuslim

September 16, 2009 at 4:28 pm

முஸ்லிம் அரச ஊழியர்க்கு நாளை சம்பளம்

leave a comment »

money

அரசாங்க  முஸ்லிம்  ஊழியர்களின் இம்மாதத்துக்கான சம்பளத்தை புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாளை 17 ஆம் திகதி வழங்குமாறு திறைசேரி அறிவித்துள்ளது.

திறைசேரியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களுக்கும்  இது  தொடர்பாக  அறிவித்துள்ளார்.

Written by lankamuslim

September 16, 2009 at 3:48 pm

எதிர்க்கட்சித் தலைவர் நாட்டுக்கு எதிராக செயற்படுவதாக ஜனாதிபதி குற்றச்சாட்டு

leave a comment »

_44472353_aa_mahinda_ap

நம் நாட்டுத் தலைவர்கள் சிலர் சர்வதேச நாடுகளுக்குச் சென்று நாட்டை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருக்கின்றார்.  அவர் எதிர்க்கட்சிகளுக்கு தலைமைத்துவம் வழங்குவதில்லை. மாறாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களை எதிர்ப்பதற்கே எதிர்க்கட்சி தலைவர் இருக்க வேண்டும். நாட்டுக்கு எதிராகச் செயற்படக்கூடாது.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்கிழமை  அம்பாந்தேரட்டை மாவட்டத்தின்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்த நிகழ்விலேயே  ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டுக்கு உதவிகள் கிடைப்பதற்கு இடமளிப்பதில்லை. உதவிகளை வழங்கவேண்டாம் என்று கூறப்படுகின்றது. நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தை வீதியில் இழுத்துப் போடுவதற்கும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் முயற்சிக்கப்படுகின்றது இவ்வாறான எதிர்க்கட்சித் தலைவர் நாட்டுக்குத் தேவையில்லை.  வேறு நாடுகளில் என்றால் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  அரசியலை மறந்துவிடுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.

Written by lankamuslim

September 16, 2009 at 1:36 pm

அரசின் ஜனநாயக அடக்குமுறைக்கு எதிராக ஜேவிபி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

leave a comment »

jvp

அரசாங்கத்தின் ஜனநாயக அடக்கு முறைக்கு எதிராக இன்று ஜேவிபி, லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இதில் ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் நிலவும் ஊடக அடக்குமுறை மற்றும் சுயாதீன ஆணைகுழு ஒன்று நியமிக்கப்படாமை  போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமது கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்காவிட்டால் தமது போராட்டம் மேலும் தொடரும் எனவும் ஜேவிபி தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

September 16, 2009 at 1:25 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers