Lankamuslim.org

One World One Ummah

Archive for August 31st, 2009

மொஹமட் சலீம் என்ற ஒரு முஸ்லிம் புலி சந்தேக நபர் இரண்டு தடவைகள் மீடியாக்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்

leave a comment »

LTTE

புலிகளின் செயற்பாட்டாளர்  ஒருவர் இன்று பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மன்னார் மற்றும் வில்பத்து காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் புலி இயக்க உறுப்பினர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வந்தவரென்று தெரிவிக்கப்படுகிறது. இவர் புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லுப் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் வில்பத்துப் பகுதியில் 2002ம் ஆண்டு வேட்டைக்குச் சென்றிருந்தபோது புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு பின்னர் இறுதி சண்டையின்போது வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து தப்பி வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்  25, 2009 அன்று கைதுசெய்யப்பட்டு வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட மொஹமட் சலீம் என்ற  இளைஞர் பற்றிய தகவல் மீண்டும் இன்று  ஆகஸ்ட்  31, 2009 இன்று இரண்டாவது தடைவையாக வெளிவந்துள்ளது  ஆக மொஹமட் சலீம் என்ற நபர் இரண்டு தடவைகள் மீடியாக்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்    உண்மை என்னெவன்றால்  ஆகஸ்ட்  25, 2009 அன்று கைதுசெய்யப்பட்டு இன்று அந்த கைது பற்றி உத்தியோக பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது என்பதுதான்.

Written by lankamuslim

August 31, 2009 at 9:42 pm

கிழக்குமாகாண ஆளுனரின் பதிலுக்கு பாராளுமன்ற உறுப்பினறும் முஸ்லிம் காங்ரஸ் தலைவருமான ரவூப் ஹகீம் அளித்த பதில்கள்

leave a comment »

Written by lankamuslim

August 31, 2009 at 4:06 pm

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை

leave a comment »

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களை குடியேற்றும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அங்கு முன்னர் வாழ்ந்துவந்த மக்கள் சகல வசதிகளுடனும் அவர்களது இடங்களி லேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள்.
ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
மீட்கப்பட்ட பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என ஸ்ரீ.சு.க. மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்தை மறுத்துள்ளார் ஊடகத்துறை அமைச்சர்.

Written by lankamuslim

August 31, 2009 at 1:01 pm

இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் விசா இல்லாமல் பிரிட்டன் பயணம்

leave a comment »

இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் விசா இல்லாமல் கொழும்பிலிருந்து பிரிட்ட னுக்குச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் உதவி செய்தமை தெரியவந்திருப்பதாக இலங்கை அரசு தெரி வித்திருக்கின்றது.
குறித்த யுவதி பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவரா, பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு மேலும் பலருக்கு விஸா இன்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கி யுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை கள் நடைபெறுகின்றன.

அங்கையற்கன்னி கிருஸ்ணபிள்ளை என்ற 40 வயது பெண்ணுக்கே பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு உதவியுள்ளது என வாராந்த அமைச்சரவை மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்ததுடன் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சரைப் பணித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட பெண் பிரிட்டனின் ஹீத்ரு விமான நிலையத்துக்குச் செல்வதற்கு உதவுமாறு பிரிட்டிஷ் விமான நிலைய அதிகாரிகளைக் கோரும் கடிதமொன்றை, கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரிட்டன் எல்லை முகவர் அமைப்பைச் சேர்ந்த இராஜதந்திர அந்தஸ்துள்ள சோர்னா குருக்ஸ் என்னும் அதிகாரியே குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த  பெண்ணுக்கு விசாவை பிரிட்டிஷ் தூதரகம் வழங்கவில்லை. அதேவேளை, அவர் நேரடி விமானத்தில் அந்த நாட்டுக்குச் செல்வதற்கான உதவிகளைத் தூதரகம் செய்துள்ளது. அவருக்கு உதவுவதற்காக இராஜதந்திரியொருவரைத் தூதரகம் விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Written by lankamuslim

August 31, 2009 at 12:56 pm

ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் உயர் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை தீர்ப்பு

leave a comment »

பயங்கரவாதத் புலனாய்வு   பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள  ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.

வழக்கு விசாரணையையடுத்து  உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் புலனாய்வு பிரிவினால்  கைது செய்யப்பட்ட இவர் , விசாரணைக்காக  ஒரு வருடத்துக்கு மேலாக  தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

உயர்நீதிமன்றம் அவருக்கு விதித்த 20 வருட கால சிறைத்தண்டனை எதிர்த்து அவரின் குடும்பம் மேல்  முறையீடு செய்ய தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது

Written by lankamuslim

August 31, 2009 at 12:33 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers