Lankamuslim.org

One World One Ummah

ஆகஸ்ட் 3-இன்று 19 ஆம் சுஹதாக்கள் தினம் M. ஷாமில் முஹம்மட்

with one comment

1990  ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே மஸ்ஜிதுகளிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள்  மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள்  ஸுஹதாகள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

12-07-1990 மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை  குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ பாசிசப் புலி பயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர்
03-08-1990 காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும்  ஹுசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 104 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலி பயங்கரவாதிகளால் சராமாரியாக சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் எல்லோருமாக 116 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளினால் வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

1915 ம் ஆண்டு தொடங்கிய இலங்கை முஸ்லிம்களின் துன்ப காலம் இன்று வரை தீர்வில்லாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1915 ம் ஆண்டு சிங்கள பேரினவாதம் தம்முடைய கோரமுகத்தை முஸ்லிம்களின் மீது தான் முதன்முதலில் காட்ட தொடங்கியது. முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் என்றாலும் அன்று முஸ்லிம்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகிய போது வேறு எந்த ஒரு தமிழ் அமைப்புமோ அல்லது தமிழ் குழுக்களோ முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. அதைத்தான் பின்னரும்  பாசிச பயங்கரவாத புலிகளால் முஸ்லிம்கள் வடக்கிலும் கிழக்கிலும் கொதரப்படும்போதும் எந்த ஒரு தமிழ் அமைப்பும் புலி பயங்கரவாத பாசிசத்துக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை  ஒரு சிலரை தவிர அவர்கள் 1 வீதத்திகும் குறைவானவர்கள் அதே போன்றும் அன்றும்  முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை முன்னின்று நடத்திய  சேனநாயக சகோதரர்களுக்கு காவல் அரணாக இருந்து அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியது அன்றைய தமிழின தலைவராக இருந்த சேர் இராமநாதன் அவர்கள் தான்.
1915 ம் ஆண்டு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கனக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களின் கடைகளும் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்களின் வாழ்வாதாரங்கள் திட்டமிட்டு நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களை பலிவாங்கியது அந்த கலவரம். அந்த கலவரத்தை முன்னின்று நடத்திய மனித குல விரோதிகள் சிங்கள பேரினவாதிகள். அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காத்தவர்கள் தமிழ் மேலாதிக்க மனோபாவம் கொண்டவர்கள். அன்று கூட்டணி போட்டு இலங்கை முஸ்லிம்களை அழித்தவர்கள் பிற்காலத்தில் தனித்தனியாக அத்தகைய ஈனச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சம்பவங்களும் , வடக்கில்லிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி , யாவகற்சேரி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் முஸ்லிம்களின்  துயர வரலாற்றின் தொடர்ச்சியாகும். அகதிகளாய் புத்தளத்தில் நடைபிணங்களாய் வாழ்ந்து வரும் அவர்களின் ரணங்கள் வார்த்தைகளில் வடிக்க இயலாது.
அந்த வரலாற்று தொடரின் உச்ச கட்டத்தைதான் பாசிச பயங்கரவாத புலிகள் 1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இக்கால பகுதில் பல பாசிச கொலை வெறியாட்டங்கள் அரங்கேறின ஆனால்   இன்று பல கொலை வெறியாட்டம் போட்ட பாசிச பயங்கரவாத கும்பல் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கபட்டனர், பயங்கரவாத கொட்டம் அடங்கியது நாட்டில் அமைதியை விரும்பிய அனைவரும் மகிழ்ந்தனர்  தமிழ் புலி பயங்கரவாதிகளை ஆதரித்தவர்கள்  மாற்று சமூகத்துடன் நற்பண்புடன் இனியாவது பழக கற்றுகொள்ளவேண்டும்   குறிப்பாக தமிழ்பேசும் முஸ்லிம்களுடன்.

Written by lankamuslim

August 3, 2009 at 12:01 am

One Response

Subscribe to comments with RSS.

  1. ஷாமில் மிகவும் தேவையான ஆக்கம் தொடர்ந்து எழுதுங்கள்- கல்முனை சலீம்

    Saleem

    September 28, 2009 at 9:37 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers