Archive for August 3rd, 2009
இன்று காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலையில் இறந்தவர்களின் நினைவுதினம்
![]() |
காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலையில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுவதால் பிரதேசத்தின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
03.08.1990ஆம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, 103 பேர் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர். இவர்களை நினைவுகூர்ந்து வருடாந்தம் ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஷுஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடி மீரா ஜும் ஆப் பள்ளிவாசலில் இன்று காலை கதமுல் குர் ஆன் ஓதப்பட்டு பிரார்த்தனைகளும் நடைபெற்றன. ஷுஹதாக்கள் தினத்தை அமைதியாகவும், பிரார்த்தனை நாளாகவும் கழிக்குமாறு ஷுஹதாக்கள் நிறுவனத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. காத்தான்குடிப் பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் ஷுஹதாக்கள் தினத்தை முன்னிட்டு பிரதான வீதிகளில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. வியாபார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதோடு சந்தைகள் இன்று கூடவில்லை. மாணவர் வரவின்மையால் பாடசாலைகளும் இயங்கவில்லை. அரசாங்க காரியாலயங்கள் திறந்திருந்த போதிலும் பொது மக்களின் வருகை வழமை நாட்களை விட குறைவாகவே காணப்படுகின்றது.


THANKS virakesari
யாழ்.மாவட்டத்திலிருந்து 500 இளைஞர்கள் விரைவில் பொலிஸ் சேவையில் சேர்க்கப்படுவர்
* அமைச்சர் மகிந்தானந்த
யாழ்.மாநகர சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் யாழ்.மாவட்டத்திலிருந்து 500 இளைஞர்கள் பொலிஸ் சேவைக்குச் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் பட்டதாரிகளாக இருப்பவர்களில் திறமையானவரெனத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பதவியும் வழங்கப்படவுள்ளது. இவர்கள் அனைவரும் யாழ்.மாவட்டத்திலேயே பணிக்கு அமர்த்தப்படுவார்களென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஆகஸ்ட் 3-இன்று 19ஆவது சுஹதாக்கள் தின நினைவாக









சிதறடித்த புலி பயங்கரவாதிகள் சிதறிபோனார்கள் :M.ஷாமில் முஹம்மட்
ஆகஸ்ட் 3-இன்று சுஹதாக்கள் தின நினைவாக
முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது
சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கரவாதபுலிகள் ஒரு மாதமே ஆன சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து தலை சிதறடிக்கப்பட்ட பின் வீசி எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்
104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
115 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் இதில் கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்
- ஏ. அப்துல் மஜீத் (1 வாரம்) ஆண்
- ஏ. எல். அன்சாரா (1 மாதம்) பெண்
- எம். ஐ. எம். சானாஸ் (05 மாதம்) பெண்
- ஏ. எஸ். பைரூஸ் (8 மாதம்) ஆண்
- எம். ஐ. பர்சான் (01) ஆண்
- எஸ். சனூஸியா (01) பெண்
- ஏ. றிபாகா (01) பெண்
- எச். எம். பஸ்மி (03) ஆண்
- எம். வை. எம். பசீர் (03) ஆண்
- யூ. லாபிர் (03) ஆண்
- எம். ஐ. பர்சானா (02) பெண்
- ஆர். எப். றம்சியா (06) பெண்
- எம். எஸ். றம்சுலா (07) பெண்
- எம். எஸ். சஹீலா (04) பெண்
- எஸ். எல் நஜீபா (04) பெண்
- எஸ். எல். நஸ்ரின் (06) பெண்
- எம். ஐ. சபீரா (06) பெண்
- எம். ஐ. எம். தாஹிர் (06) ஆண்
- எம். எல். எப். றிஸ்னா (05) பெண்
- எச். எம். ஹிதாயா (08) பெண்
- எம். எஸ். எம்.அக்ரம்(6)
- எம். எஸ். எம். தல்ஹான் (08)
- எஸ். ஏ. எம். இம்தியாஸ் (09)
- எம். சீ. எம். றிஸ்வான் (10)
- எம். ஐ. ஜரூன் (10)
- எஸ். செய்யது அஜ்மல் (10)
- எம். ஐ. அஸ்றப் (11)
- எம். ஐ. எம். ஆரிப் (12)
- எம். கமர்தீன் (12)
- எம். ஐ. எம். அஜ்மல் (12)
- ஏ. எல். மக்கீன் (12)
- எம். எஸ். எம். பௌசர் (12)
- ஏ. எல். அபுல்ஹசன் (12)
- வை. எல். எம். ஹரீஸ் (12)
- எம். எஸ். எம். ஜவாத் (13)
- எம். எஸ். பைசல் (13)
- எம். பீ ஜவாத் (13)
- யூ. எல். எம். அனஸ் (13)
- ஏ. எல் அப்துல் சமத் (14)
- எச். எம். பௌசர் (14)
- ஏ. ஜௌபர் (14)
- எம். எஸ். எம் சகூர் (14)
- ஏ. சமீம் (14)
- எம். இஸ்ஸதீன் (15)
- எம். எம். எம். பைசல் (15)
- எம். எஸ். ஜிப்ரியா (12) பெண்
- எம். எஸ். றமீஸா (10) பெண்
- எம். பீ. சரீனா (14) பெண்
- எம். பீ. ஹபீபா (12) பெண்
- எஸ். எம். அஸ்மி (11) ஆண்
- எம். எல். சமீமா (10) பெண்
- எம். எஸ். ஐதுரூஸ் (11) ஆண்
- ஆர். எம். சித்தீக் (08) ஆண்
- ஆர். எப். றம்சியா (06) பெண்
- ஏ. எல். நயிமுதீன் (12) ஆண்
- ஏ. எல். பாத்தும்மா (10) பெண்
- ஜே. எம். நௌபர் (11) ஆண்
- யூ. எல். ஏ. சதார் (13) ஆண்
- ஆர். ஹிதாயா (10) பெண்
- ஜே. சுலைமாலெப்பை (38) ஆண்
- ஏ. எல் சமீர் (10) ஆண்
ஆகஸ்ட் 3-இன்று 19 ஆம் சுஹதாக்கள் தினம் M. ஷாமில் முஹம்மட்
1990 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே மஸ்ஜிதுகளிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள் மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஸுஹதாகள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
12-07-1990 மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ பாசிசப் புலி பயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர்
03-08-1990 காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும் ஹுசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 104 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலி பயங்கரவாதிகளால் சராமாரியாக சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் எல்லோருமாக 116 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளினால் வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
1915 ம் ஆண்டு தொடங்கிய இலங்கை முஸ்லிம்களின் துன்ப காலம் இன்று வரை தீர்வில்லாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1915 ம் ஆண்டு சிங்கள பேரினவாதம் தம்முடைய கோரமுகத்தை முஸ்லிம்களின் மீது தான் முதன்முதலில் காட்ட தொடங்கியது. முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் என்றாலும் அன்று முஸ்லிம்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகிய போது வேறு எந்த ஒரு தமிழ் அமைப்புமோ அல்லது தமிழ் குழுக்களோ முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. அதைத்தான் பின்னரும் பாசிச பயங்கரவாத புலிகளால் முஸ்லிம்கள் வடக்கிலும் கிழக்கிலும் கொதரப்படும்போதும் எந்த ஒரு தமிழ் அமைப்பும் புலி பயங்கரவாத பாசிசத்துக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை ஒரு சிலரை தவிர அவர்கள் 1 வீதத்திகும் குறைவானவர்கள் அதே போன்றும் அன்றும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை முன்னின்று நடத்திய சேனநாயக சகோதரர்களுக்கு காவல் அரணாக இருந்து அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியது அன்றைய தமிழின தலைவராக இருந்த சேர் இராமநாதன் அவர்கள் தான்.
1915 ம் ஆண்டு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கனக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களின் கடைகளும் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்களின் வாழ்வாதாரங்கள் திட்டமிட்டு நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களை பலிவாங்கியது அந்த கலவரம். அந்த கலவரத்தை முன்னின்று நடத்திய மனித குல விரோதிகள் சிங்கள பேரினவாதிகள். அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காத்தவர்கள் தமிழ் மேலாதிக்க மனோபாவம் கொண்டவர்கள். அன்று கூட்டணி போட்டு இலங்கை முஸ்லிம்களை அழித்தவர்கள் பிற்காலத்தில் தனித்தனியாக அத்தகைய ஈனச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சம்பவங்களும் , வடக்கில்லிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி , யாவகற்சேரி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் முஸ்லிம்களின் துயர வரலாற்றின் தொடர்ச்சியாகும். அகதிகளாய் புத்தளத்தில் நடைபிணங்களாய் வாழ்ந்து வரும் அவர்களின் ரணங்கள் வார்த்தைகளில் வடிக்க இயலாது.
அந்த வரலாற்று தொடரின் உச்ச கட்டத்தைதான் பாசிச பயங்கரவாத புலிகள் 1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இக்கால பகுதில் பல பாசிச கொலை வெறியாட்டங்கள் அரங்கேறின ஆனால் இன்று பல கொலை வெறியாட்டம் போட்ட பாசிச பயங்கரவாத கும்பல் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கபட்டனர், பயங்கரவாத கொட்டம் அடங்கியது நாட்டில் அமைதியை விரும்பிய அனைவரும் மகிழ்ந்தனர் தமிழ் புலி பயங்கரவாதிகளை ஆதரித்தவர்கள் மாற்று சமூகத்துடன் நற்பண்புடன் இனியாவது பழக கற்றுகொள்ளவேண்டும் குறிப்பாக தமிழ்பேசும் முஸ்லிம்களுடன்.










