Archive for August 2009
மொஹமட் சலீம் என்ற ஒரு முஸ்லிம் புலி சந்தேக நபர் இரண்டு தடவைகள் மீடியாக்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்

புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் இன்று பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மன்னார் மற்றும் வில்பத்து காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் புலி இயக்க உறுப்பினர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வந்தவரென்று தெரிவிக்கப்படுகிறது. இவர் புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லுப் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் வில்பத்துப் பகுதியில் 2002ம் ஆண்டு வேட்டைக்குச் சென்றிருந்தபோது புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு பின்னர் இறுதி சண்டையின்போது வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து தப்பி வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 25, 2009 அன்று கைதுசெய்யப்பட்டு வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட மொஹமட் சலீம் என்ற இளைஞர் பற்றிய தகவல் மீண்டும் இன்று ஆகஸ்ட் 31, 2009 இன்று இரண்டாவது தடைவையாக வெளிவந்துள்ளது ஆக மொஹமட் சலீம் என்ற நபர் இரண்டு தடவைகள் மீடியாக்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார் உண்மை என்னெவன்றால் ஆகஸ்ட் 25, 2009 அன்று கைதுசெய்யப்பட்டு இன்று அந்த கைது பற்றி உத்தியோக பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது என்பதுதான்.
கிழக்குமாகாண ஆளுனரின் பதிலுக்கு பாராளுமன்ற உறுப்பினறும் முஸ்லிம் காங்ரஸ் தலைவருமான ரவூப் ஹகீம் அளித்த பதில்கள்
வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை
வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களை குடியேற்றும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அங்கு முன்னர் வாழ்ந்துவந்த மக்கள் சகல வசதிகளுடனும் அவர்களது இடங்களி லேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள்.
ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
மீட்கப்பட்ட பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என ஸ்ரீ.சு.க. மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்தை மறுத்துள்ளார் ஊடகத்துறை அமைச்சர்.
இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் விசா இல்லாமல் பிரிட்டன் பயணம்
இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் விசா இல்லாமல் கொழும்பிலிருந்து பிரிட்ட னுக்குச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் உதவி செய்தமை தெரியவந்திருப்பதாக இலங்கை அரசு தெரி வித்திருக்கின்றது.
குறித்த யுவதி பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவரா, பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு மேலும் பலருக்கு விஸா இன்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கி யுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை கள் நடைபெறுகின்றன.
அங்கையற்கன்னி கிருஸ்ணபிள்ளை என்ற 40 வயது பெண்ணுக்கே பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு உதவியுள்ளது என வாராந்த அமைச்சரவை மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்ததுடன் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சரைப் பணித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட பெண் பிரிட்டனின் ஹீத்ரு விமான நிலையத்துக்குச் செல்வதற்கு உதவுமாறு பிரிட்டிஷ் விமான நிலைய அதிகாரிகளைக் கோரும் கடிதமொன்றை, கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரிட்டன் எல்லை முகவர் அமைப்பைச் சேர்ந்த இராஜதந்திர அந்தஸ்துள்ள சோர்னா குருக்ஸ் என்னும் அதிகாரியே குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த பெண்ணுக்கு விசாவை பிரிட்டிஷ் தூதரகம் வழங்கவில்லை. அதேவேளை, அவர் நேரடி விமானத்தில் அந்த நாட்டுக்குச் செல்வதற்கான உதவிகளைத் தூதரகம் செய்துள்ளது. அவருக்கு உதவுவதற்காக இராஜதந்திரியொருவரைத் தூதரகம் விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் உயர் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை தீர்ப்பு
பயங்கரவாதத் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.
வழக்கு விசாரணையையடுத்து உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பயங்கரவாதத் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட இவர் , விசாரணைக்காக ஒரு வருடத்துக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
உயர்நீதிமன்றம் அவருக்கு விதித்த 20 வருட கால சிறைத்தண்டனை எதிர்த்து அவரின் குடும்பம் மேல் முறையீடு செய்ய தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது
கி.முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மீண்டும் ஒரு பொது மன்னிப்புக் காலம்
வீரகேசரியில் இன்று வந்த தகவல் இதன் உண்மை தன்மை தேடப்படுகிறது:

கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மற்றுமொரு பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பிலான புலனாய்வு விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடம் பெருமளவு ஆயுதங்கள் உள்ளன எனவும், சொற்ப அளவிலான ஆயுதங்களே இதுவரையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வீரகேசரியில் இன்று வந்த தகவல் இதன் உண்மை தன்மை தேடப்படுகிறது முன்னரும் தமிழ் சிங்கள பத்திரிகைகள் கிழக்கில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆயுத குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற பொதுவான அரச படையினரின் அறிவித்தலை முஸ்லிம் ஆயுத குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க அரச படையினர் கால எல்லை விதித்துள்ளதாக பரப்புரை செய்தமை குறிபிடதக்கது.
“நாங்கள் தமிழர்கள் ,நாங்கள் சிங்களவர்கள் ,நாங்கள் முஸ்லிம்கள் எனக் கூறி இனி இனவாத அரசியல் செய்ய முடியாது”
அக்கரைப்பற்றில் ஜனாதிபதி மஹிந்த

படம்:- தினகரன் -இந்திரஜித் பெரேரா
“நாங்கள் தமிழர்கள் ,நாங்கள் சிங்களவர்கள் ,நாங்கள் முஸ்லிம்கள் எனக் கூறி இனி இனவாத அரசியல் செய்ய முடியாது. இதனைத் தவிர்த்து நாட்டை முன்னேற்றக் கூடிய தீர்மானங்களை சிந்தித்து மேற் கொள்ள வேண்டும்.
அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று அக்கரைப்பற்று பொது விளையாட்டரங்கில் நடைபெற்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா விருது வழங்கி கெளரவித்தார். மாநாட்டில் கட்சியின் இதழான ‘பரிவட்டம்’ உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். நாம் எல்லோரும் ஒரு தாயின் மக்கள் எம்மத்தியில் எந்தவித பேதமும் இருக்க முடியாது. நாட்டில் சிறுபான்மையினர் என எவரும் இனி இல்லை.இந்த தேசத்தின் மீது அக்கறை காட்டும் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் தான் என்னைப் பொறுத்த வரை நான் முதலாவது இரண்டாவது மூன்றாவது என நேசிப்பது தாய் நாட்டைத் தான். அது போல் சகலரும் விசுவாசகமாக நடந்து கொள்ள வேண்டும் புத்தியுடன் செயல்பட வேண்டும் .குறுகிய எண்ணம் இருக்கக் கூடாது.என்றும் குறிப்பிட்ட அவர் முஸ்லிம்கள் தொடர்ந்தும் தன் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
முப்பது வருடகால பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்று நாட்டில் சந்தேகமின்றி அச்சமின்றி சகலரும் வாழும் நிலை உருவாகியுள்ளது. காத்தான் குடி பள்ளிவாசலில் இடம்பெற்றது போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் இனி எங்கும் நடக்காது.
கிழக்கில் வயலுக்குத் தொழிலுக்குப் போகின்றவர்களும், பாடசாலைக்குப் போகின்ற மாணவர்களும் கூட அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்ந்த காலம் இருந்தது. இன்று அந்நிலை இல்லை.
முஸ்லிம் மக்கள் என்னிடம் கேட்டதை யெல்லாம் நான் நிறைவேற்றியுள்ளேன். இன்று எமது அரசில் உள்ள சகல முஸ்லிம்களும் அமைச்சர்கள் என்பதை மறக்கக் கூடாது.
கிழக்கில் தனியான மாகாண சபையொன்று இப்போது இயங்குகிறது. ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இது உங்களுக்கான பெரும் வரப்பிரசாதம் ஆகும்.
நான் முஸ்லிம்களின் மத வழிபாட்டுக்குத் தடைபோடுவதாக பலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை நீங்கள் நம்பவேண்டாம். இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஐந்து தட வைகள் ‘பாங்கு’ சொல்வதற்கு வழிவகை செய்தவன் நானே என்பதை மறந்துவிட வேண்டாம். நான் உங்கள் உற்றதோழன் நீங்கள் என்னை நம்பலாம்.
இந்த மாகாணம் 30 வருடங்களாக பாதிக்கப்பட்டு இன்று முழு மாகாணத்தி லும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளின் வெற்றியும் நாட்டின் வெற்றியுமாகும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
செய்திகளின் தொகுப்பு
கிழக்கு மாகாண சபை முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு விழா நடத்தத் தீர்மானம் : ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண சபை முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு விழா நடத்தத் தீர்மானம் : ஹிஸ்புல்லாஹ்
கிழக்கு மாகாண சபை அடுத்த வருடம் முதல் மூவினங்களுக்குமான கலாசார விழாக்களைத் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.
“முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு ,ஆடிப்பெருவிழா, மற்றும் பொசன் ஆகியனவே மூவின மக்களுக்குமான கலாசார விழாக்களாக நடத்த மாகாண சபை தீர்மானித்துள்ளது.
இதற்கென மாகாண சபையினால் விசேட நிதியிலிருந்து ரூபா 30 மில்லியன் ஒதுக்குவது என்றும் அமைச்சர்கள் வாரியம் முடிவெடுத்துள்ளது”என்று குறிப்பிட்டார்
திருகோணமலை முஸ்லிம்களை தொடரும் கஷ்டங்கள்

திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று டஸ் பிரிவில் அமைந்துள்ள உப்பூறல் கிராமத்தை சார்ந்த 81 முஸ்லிம் குடும்பங்கள் தமது பூர்வீக இடத்துக்கு மீள்குடியேற முட்பட்டுள்ளனர் ஆனால் அப் பிரதேசவாசிகளினால் முஸ்லிம் குடும்பங்கள் அங்கு வர வேண்டம் எனக் கூறி விரட்டப்பட்டுள்ளனர் உப்பூறல் கிராம முஸ்லிம் குடும்பங்கள் 1888 கால பகுதில் இருந்து அங்கு வாழ்தவர்கள் என்பதுடன் உப்பூறல் கிராம முஸ்லிம்களில் சிலர் 1933 ஆம் ஆண்டு உரிமையாக்கப்பட்ட காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வைத்திருக்கிறார்கள் என்பது குறிபிடதக்கதாகும்.
மற்றுமோர் தகவலின்படி இந்த மீள்குடியேற்றம் அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நஜீப் A மஜீத்தினால் இந்த மாதம் 13 ஆம் திகதி சிவில் மற்றும் பாதுகாப்பு படைகளின் சரியான ஒத்துழைப்பு பெறப்படாமல் முன்னெடுக்க பட்டதால் திருப்பி அனுப்பபட்டார்கள் எனக் குறிபிடுகிறது.
இந்த தகவல் ஆங்கிலத்தில் www.peacemuslims.org என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தீர்மானம்

காலி, மாத்தறை மாவட்டங்களில்:
தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது. அதேவேளை, தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது இம் மாகாண சபைத் தேர்தலில் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது அதன் வேட்புமனுக்களை நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது. இம் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கட்சி ஆதரவாளர்களிடையே பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இவ்விரு மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கின் ஒவ்வொரு கிராமத்துக்கும் சுமார் 50 சிங்களக் குடும்பங்கள்
மங்கள சமரவீர:
வடக்கு கிழக்கில் வசித்து வரும் அனைத்துத் தரப்பினரதும் நிலங்கள் தொடர்பான உறுதிகளை பரிசோதிப்பதற்கு அரசாங்கத்தால் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை அம்மக்களின் சொத்துக்களைப் பறித்துக் கொள்வதற்கான சதியாகவே மேற்கொள்ளப்படுகிறது என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர் தெரிவித்தார்.
அந்தக் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது.
வடக்கில் உள்ள நிலப்பிரப்பில் 85வீதமானவை அரசாங்கத்துக்கே சொந்தமானவை என்று கூறப்பட்ட கருத்து இந்த கொள்ளைக்கு அடித்தளமாகும். இந்தப் பொதுமக்கள் புதிதாக மீளக் குடியமர்த்தும் போது ஒவ்வொரு கிராமத்துக்கும் சுமார் 50 சிங்களக் குடும்பங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் எனும் கருத்து தொடர்பான உண்மை நிலைவரத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறான பல திட்டங்களுடன் அரசாங்கம் செயற்பட்டு வருமாயின் அதனால் பாரியதொரு பின் விளைவை எதிர்ப்பார்க்க நேரிடும் என்றும் சமரவீர் எம்.பி. அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி
தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது. அதேவேளை, தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது.
அதேவேளை, தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
நேற்று நண்பகல் வரை 16 அரசியல் கட்சிகளும் 13 சுயேச்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய் திருந்தன.
தென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக் கும் திகதியும் நேற்றுடன் நிறைவடைந் தது எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரி வித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்தவைச் சித்திரித்து 90 கோடி ரூபா செலவில் திரைப்படம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் வெற்றிகளைச் சித்திரிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றைத் தயா ரிக்க அரச தொலைக்காட்சிக் கூட்டுத்தா பனத்தின் தலைவர் ஆரியரட்ண ஆதுகல ஏற்பாடு செய்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு முன்னோடியாக இரண்டாம் இராஜசிங்க மன்னனை ஒத்த கதாபாத்திரத்தில் மஹிந்த ராஜபக்ஷவைச் சித்திரித்து இறுவட்டு CD தயாரிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புத்தி கீர்த்தி சோ இத்திரைப்படத்தின் தயாரிப் பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறியவந்தது.
இத்திரைப்படத்திற்கு 90 கோடி ரூபா செலவிடப்படும் என்றும் மேலும் அறியமுடிகிறது.
அக்கரைப்பற்றில் நாளை தேசிய காங்கிரஸின் வருடாந்த மாநாடு
நீர் வழங்கல் அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசின் வருடாந்த மாநாடு நாளை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.
இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.
ஜனாதிபதியின் வருகை காரணமாக அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக பொலிசாரும், இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும் தற்போது அப்பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்தாண்டின் தெ.கி.பல்கலைக்கழக அனுமதி : 413 பேர் பதிவு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எதிர்வரும் கல்வி ஆண்டுக்கான அனுமதி பெற்றுள்ள 478 மாணவர்களில் இன்று வரை 413 பேர் பதிவு செய்துள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்படி பல்கலைக்கழகத்தில் அடுத்தாண்டும் சிங்கள மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கலை – 94, விஞ்ஞானம் – 64, நிதி முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் – 195, அரபு மற்றும் இஸ்லாம் – 125 என்ற எண்ணிக்கையில் 478 மாணவர்கள் அனுமதி பெற்றுள்ள போதிலும் கலை – 92, விஞ்ஞானம் – 28, நிதி முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் – 177, அரபு மற்றும் இஸ்லாம் – 116 என்ற எண்ணிக்கையில் 413 மாணவர்களே பதிவு செய்துள்ளதாகப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீரகேசரி
புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை பெற முயற்சி – வெளிவிவகார அமைச்சர்
புலிகளின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கி அவற்றை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
இது தொடர்பாக உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்;.
சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து வெளிநாடுகளின் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொள்ள உதவ முன்வர வேண்டுமென சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரக்கை விடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்பட்டு வருகின்றது. அதனை தடை செய்து வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்குவது குறித்து தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் அதற்கு உலக நாடுகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.
அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளினூடாக காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.
இன்று அதிகாலை முஹமட் பாஜி, சாதிக்,பாரித் ( டோஜி ) என்ற மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டனர்
இணைப்பு-2
இன்று அதிகாலை மாளிகாவத்த பகுதியில் முஹமட் பாஜி, சாதிக்,பாரித் ( டோஜி ) என்ற மூன்று வாலிபர்கள் அதிரடி படை பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர் இன்று அதிகாலை 3.00 மணி அளவில் மாளிகாவத்தையில் ஜும்மா மஸ்ஜித் விதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்த சமையம் சுற்றி வலைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர் இவர்கள் பல இடங்களில் இடம்பெற்ற கொலை கொள்ளை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதால உலக கும்பலைச்சேர்ந்தவர்கள் என போலீஸ் தெரிவிக்கிறது.
உயர் நீதிமன்ற பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம்
கொழும்பு உயர் நீதிமன்ற பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதனால் எவரும் காயமடையவில்லை எனவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
மாளிகாவத்தயில் மூன்று வாலிபர்கள் சுட்டு கொலை
சற்று முன் கிடைத்த தகவல்
இன்று அதிகாலை மாளிகாவத்த பகுதியில் முஹமட் பாஜி என்ற 30 வயது மதிக்கதக்க வாலிபர் மற்றும் அவருடன் இருந்த இரு வாலிபர்களும் பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர் இன்று அதிகாலை தமது மாளிகாவத்த வீட்டில் இருந்த சமையம் சுற்றி வலைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்- விபரம் கிடைத்தவுடன் தகவல் தொடரும்.
காட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸாரை அனுமதிக்க முடியாது. நீதவான்.
அங்குலான பிரதேசத்தில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அங்குலான பொலில் காவல் சாவடியின் பொறுப்பதிகாரி நீயுட்டன் மற்றும் 8 பொலிஸாரும் கல்கிஸை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அச்சட்டத்தை மீறி செயற்படும் போது அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் பொலிஸார் காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கல்கிஸை நீதிவான் தெரிவித்தார்.
நீதிமன்றில் ஆஜராகியிருந்த குற்றபுலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ரஞ்சித் குணசிங்க, இளைஞர்களின் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெற்றுத்தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களை கொலை செய்வதற்கு கூட்டிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து கொல்லப்பட்டுள்ள இளைஞர்களின் இரத்த மாதிரிகள் மீட்கப்பட்டள்ளதாகவும், இளைஞர்கள் காணமல்போயுள்ளதாக பெண் ஒருவரால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டு பிரதி பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தான் குறிப்பிட்ட தினம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது நேரில் கண்ட சம்பவங்களை சாட்சி சொல்ல முன்வந்துள்ளதாகவும், அதே நேரம் மேலும் 16 நபர்கள் சம்பவம் தொடர்பாக சாட்சி சொல்ல முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களில் அனேகமானோர் குறிப்பிட்ட பொலிஸ் காவல் நிலையத்தில் பணி புரிந்த பொலிஸ்காரர்கள் என தெரியவருகின்றது. சாட்சிகளில் இரு இளைஞர்களும் பொலிஸாரால் குறிப்பிட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுவதை கண்டவர்களும் அடங்குகின்றனர்.
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸிற்கு ஐந்துஆண்டு சிறைத்தண்டனை!
1989ம் ஆண்டு கடத்தல் தொடர்பான குற்றம் புரிந்த முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸிற்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டு இரண்டு சகோதரர்களை கடத்திச் சென்ற குற்றத்திற்காக பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் மற்றும் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பரிசீலனை செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் அளிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட நீதவான் சமன் விக்கிரமாராச்சியினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காமனி ரட்நாயக்க ஜயரத்ன ரணதுங்க மற்றும் ரஞ்சித் ஜயசேகர ஆகியோரே தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய காவல்துறை உத்தியோகத்தர்கள் எனவும் தெரிவிக்கப் படுகிறது
அமெரிக்காவும் பாலியல் பலாத்காரமும்
லூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு அண்மையில் 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது.
அதில்,பணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.
7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,
62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்
இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும்
59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்
41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்
பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :
43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்
8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
கல்விக் கூடங்களில் :
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :
85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்
18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்
13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்
அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,
25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்
10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றத
அமெரிக்காவில் உள்ள American Psychological Association என்ற அமைப்பு பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்
12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்
21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்
11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்
3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள Minnesota high school students (reported by Susan Strauss, Sexual Harassment and Teens) அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :
பள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்
இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்
50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.
மீண்டும் மரணதண்டனை சட்டம் !

குற்றச் செயல்கள் மிக மோசமாக அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மரணதண்டனையை நிறைவேற்றுவதை நோக்காக கொண்டு நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தலைமையில் உயர்மட்ட செயலணி அமைக்கப்பட்டது இக்குழு அரசுக்கு மரணதண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யவுள்ளதுசெய்யவுள்ளது . மனித உரிமைக் குழுக்கள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளபோதிலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
தமிழ்-முஸ்லிம் மக்கள் உறவில் அங்காடி வியாபாரம் முக்கியத்துவமிக்கது: யு.எல்.எம்.முபீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான உறவில் அங்காடி வியாபாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் கூறினார்.
புனித ரமழானை முன்னிட்டு காத்தான்குடி அங்காடி வியாபாரிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உதவிப் பொருட்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“மட்டக்களப்பு மாவட்டததைப் பொறுத்த வரை தற்போது தமிழர்களும் முஸ்லிம்களும் விரும்பிய இடங்களுக்குச் சுதந்திரமாக சென்றுவரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது குறித்து சகலரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
அல்லைப்பிட்டி, மண்குப்பான் வாழ்த முஸ்லிம்களின் கவனத்துக்கு
யாழ்ப்பாண முஸ்லிம் மாணவர் போரம்

மண்குப்பான் பீச்
யாழ்ப்பாணத்தில் அல்லைப்பிட்டி, மண்குப்பான் ஆகிய பகுதிகளில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதினொராம் திகதி இடம் பெயர்ந்த 221 குடும்பங்களைச் சேர்ந்த 754 பேர் மூன்று வருடங்களின் பின்னர் இன்று அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.
வேலணைப் பிரதேச செயலர் மு.நந்தகோபாலன் இத் தகவலைத் தெரிவித்தார்.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 157 குடும்பங்களைச் சேர்ந்த 520 பேரும்
மண்குப்பானைச் சேர்ந்த 64 குடும்பங்களைச் சேர்ந்த 234 பேரும் இன்று குடியமர்த்தப்படவுள்ளனர்.
பிரதேச செயலகத்தில் ஏற்கனவே பதிவுகளை மேற்கொண்ட பிரஸ்தாப குடும்பங்களை இன்று காலை 8.30 மணிக்கு யாழ்.துரையப்பா விளையாட்டரங்குக்கு வருமாறு அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.
அல்லைப்பிட்டி, மண்குப்பான் வாழ்த முஸ்லிம்களின் கவனத்துக்கு 1990 ஆம் ஆண்டு புலி பயங்கரவாதிகளினால் பலவந்தமாக வெளியேற்றபட்ட முஸ்லிம்களின் காணிகள், வீடுகள், பள்ளிவாயல்கள் என்பன இன்னும் முஸ்லிம்கள் சென்று குடி அமர முடியாதவாறு காணப்டுகின்றது என்பது குறிபிட்டதக்கது இது சமந்தமான விபரங்களை யாழ்ப்பாண மாநகர சபை உறுபினர்களான மொவ்லவி B.A.S. சுபியான் மற்றும் சட்டதரணி ரமிஸ் போன்றோருடன் தொடர்பு கொண்டு கேட்குமாறு யாழ்ப்பாண முஸ்லிம் மாணவர் போரம் -Jaffna Muslim Students Forum- தெரிவிகிறது .
மட்டக்களப்பு, படுவான்கரைக்கென தனியான கல்வி வலயம்
மட்டக்களப்பு மாவட்ட, படுவான் கரைப் பிரதேசம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. இதனைக் கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் அமைச்சரவையும் 24.08.2009 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கியது.
தற்பொழுது மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு வலய அலுவலகங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. பிரயாணக் கஷ்டங்கள் காரணமாக இவற்றை நகரிலிருந்து நிர்வகிப்பது சிரமமாய் இருந்து வந்துள்ளது.
படுவான்கரை பிரதேசத்திலையே கல்வி வலய அலுவலகத்தைத் தாபித்து அங்கிருந்து படுவான்கரையிலுள்ள பாடசாலைகளை நிர்வகிப்பதனால் அப்பாடசாலைகளின் கல்வித்தரத்தை வெகு விரைவில் விருத்தி செய்வதுடன் சமூகத்தின் கல்வித்தரத்தினையும் உயர்த்த முடியும் என அமைச்சரவை தீர்மானித்தது.
மட்டக்களப்பு கல்வி வலயத்துள் அடங்கும் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 27 பாடசாலைகள், பட்டிருப்பு கல்வி வலயத்துள் அடங்கும் மண்முனை வடமேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 பாடசாலைகள், மட்டக்களப்பு கல்வி வலயத்துள் அடங்கும் ஏறாவூர் பற்றிலுள்ள 20 பாடசாலைகளில் 11 பாடசாலைகளையும் கல்குடா கல்வி வலயத்துள் அடங்கும் ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள 24 பாடசாலைகளுள் 7 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய கல்வி வலையமான ‘படுவான்கரை’ கல்வி வலயத்தை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான வலய அலுவலகம் வவுணதீவில் இருக்கும்.
புதிய ‘படுவான்கரை’ வலயம் தாபிக்கப்பட்டதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வலயங்கள் பின்வருமாறு பாடசாலைகளின் தொகையினைக் கொண்டு இயங்கும்.
- மட்டக்களப்பு வலயம் 66 பாடசாலைகள்
- மட்டக்களப்பு மத்தி வலயம் 64 பாடசாலைகள்
- படுவான்கரை வலயம் 63 பாடசாலைகள்
- கல்குடா வலயம் 71 பாடசாலைகள்
- பட்டிருப்பு வலயம் 66 பாடசாலைகள்
வீரகேசரி
தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்லுறவைப் பேணுவதற்கு தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஆக்க பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்-ரவூப் ஹக்கீம்
எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.இதற்கிடையில் அண்மையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட பின் இத் தேர்தல்கள் இடம்பெறுமாயின் அது நீதியானதும், நேர்மையானதும் மக்கள் ஆணையைப் பெற்றதுமான தேர்தலாக அமையுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இன்று காலை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் நிவாரண கிராமங்களில் உள்ள மக்களை மிக விரைவாக சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவோம் என ஜனாதிபதியும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளனர்.நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
யாழ் தீவகற்பத்திலிருந்து விடுதலை புலிகள் வெளியேறும் போது அவர்களால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் விரைவாக மீள்குடியேற்றப்படின் இப்பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக ஒழுங்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும்.எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே இடம்பெயர்ந்த இம்மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட்ட பின்னர் தேர்தல்கள் நடத்தப்படின் அது நீதியான மக்கள் ஆணையைப் பெற்ற தேர்தலாக அமையும்.
அதேவேளை சமாந்தரமாக ஏறத்தாழ 20 வருடங்களிற்கு முன் விடுதலை புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றத்தில் ஆர்வமாக காணப்படுகின்றனர். இவ்விடயத்தில் அரசாங்கம் அசமந்தப் போக்கை காட்டுவதாக நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்ததன் பின்னணியில், கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் ரிசாட் பதியுதீன் 14 பஸ்களில் 450 குடும்பங்களை அழைத்துச் சென்று முஸலி பிரதேசத்திலுள்ள கிராமங்களில் தொட்டம் தொட்டமாக மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இது உண்மையில் அப்பகுதியை பார்த்துவருவதற்கு சென்ற மக்களை கூடாரங்களை அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ள முயற்சியானது அம்மக்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக பாஸ் நடைமுறை அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை தருகிறது.அங்குள்ள பாதுகாப்பு தரப்பைச் சார்ந்த அதிகாரிகள் அம்மக்களை வெளி இடங்களிற்கு செல்ல அனுமதிப்பதில்லை.இப் பாஸ் நடைமுறை அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்ட தமிழ் மக்களிற்கு காணப்படுவதில்லை, தமக்கு மட்டுமே காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதை விட அவர்களுக்கு இருக்கின்ற வாழ்வாதார பிரச்சினை குறிப்பாக கடற்படையினர் மீனவர்களுக்கு கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை.தற்போ மீன் பிடிப்பதற்கு உகந்த காலமாதலால் சிலாவத்துறை , முஸலி பிரதேச மீனவர்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.எனினும் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை.
வாழ்வாதாரத்திற்காக மீள்குடியேற்றத்தை விரும்பும் ஆண்களையாவது அங்கு சென்று விவசாயம், கடற்றொழில் செய்வதற்கான உரிமைகளையும், அனுமதியையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அம்மக்கள் ஊக்கத்துடன் காணப்படுவர்.வெறும் அரசியல் பிரசாரத்திற்காக மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பெறும் அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்கின்றனர்.எனவே அதிகாரிகள் மக்களுடனான தொடர்பாடலில் நெகிழ்வு போக்கை கடைப்பிடிக்க வேணுமென நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
அதேவேளை மிகப்பெரிய முகாம்கள்,பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மீளக்குடியேறப் போகின்றவர்கள் அங்கு சென்று பார்த்த போது தமது சொந்த வதிவிடங்களை தாம் இழக்க நேரிடும் என அச்சத்துடன் விசனம் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக சிலாவத்துறையில் மக்கள் வாழ்ந்த இடங்களி சுற்றி வளைத்து கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று முல்லைத்தீவிற்கு அண்மையில் சென்ற பள்ளிவாசல் சம்மேளன தலைவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் தற்போது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மக்க்ளில் பூர்வீக இடங்களை எவ்வாறு விரைவாக கையளிப்பது என இடம்பெயர்ந்த மக்களிடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும் திருகோணமலை பிரதேசம் வெருகல் பகுதியில் உப்பூறல் பகுதியில் அண்மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் 70 முஸ்லிம் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்காக அழைத்துச் சென்றார். 5 நாட்களின் பின் ஈச்சிலாம்பற்று பிரதேச செயலாளர் அங்கு சென்று அம்மக்களிடம் மீள் குடியேறுவதற்காக அனுமதிக்கப்படவில்லை,இதில் பல பிரச்சினைகள் உள்ளது எனத் தெரிவித்து மீண்டும் அழைத்து வந்தார்.இது ஓர் அடிப்படை உரிமைப் பிரச்சினை.
எனவே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்லுறவைப் பேணுவதற்கு தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஆக்க பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றப்படுவதில் கூட பிரச்சினைகள் காணப்படுவதால் எதிர்காலம் முறித்த எதிர்பார்ப்புகளிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே இனங்களுக்கிடையேயான உறவு சம்பந்தப்பட்ட விடயத்தில் மிகக் கவனமாகவும், தூரநோக்குடனும் செயற்படுகின்ற கட்சி என்ற அடிப்ப்டையில் இவ்விடயத்தில் நாம் தமிழ் தலைமைகள் உணர்வு பூர்வமாகவல்லாது நியாய பூர்வமாக சிந்தித்து சொற்பமான இம் முஸ்லிம் குடுமபங்களின் மீள் குடியேற்றத்தை அணுக வேண்டும்” என அவர் தெரிவித்தார்
முஸ்லீம்கள் எதுவித தவறும் செய்யவில்லை தவறு மேற்கொள்ளப்பட்டது தலைவரால்தான்

எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான்
இலங்கையில் யுத்தம் உக்கிரமாக இருந்த காலகட்டத்தில் எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அங்கு சென்றிருந்தார். தன் நண்பர் ஒருவரின் மகளின் திருமணத்துக்காகச் சென்றிருந்தவர் இலங்கை தமிழ் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், முன்னாள் போராளிகளையும் என பலரையும் இப்பயணத்தில் சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களில் யாராவது ஒருவரையாவது சந்தித்துவிட வேண்டும் என்னும் தோப்பிலின் முயற்சி, அவர்கள் யுத்தப் பகுதியில் இருந்ததால் நிறைவேறவில்லை. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருந்த, விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இருந்து பிரிந்து அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கருணாவையும் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கிறார்.
இஸ்ரேலில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட சிலர் வந்து கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.
தோப்பில்: யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் முஸ்லீம் மக்கள் வெளி யேற்றப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் பெருமளவு முஸ்லீம்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? முஸ்லீம்கள் செய்த தவறு என்ன?
கருணா: முஸ்லீம்கள் எதுவித தவறும் செய்யவில்லை, ஐயா. தவறு மேற்கொள்ளப்பட்டது தலைவரால்தான். யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முஸ்லீம்கள் நல்ல ஆதரவு வழங்கி வரவேற்றார்கள். தங்களுக்கும் உரிமை வேண்டுமென்று தமிழர்களோடு சேர்ந்து அவர்களும் ஒத்துழைத்தார்கள். ஆனால், புலிகள் இயக்கம் இதை சரிவர கையாளவில்லை. அப்பொழுது இருந்த சில போராட்ட அமைப்புகள் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த சில சதித் திட்டங்களை மேற்கொண்டது. இந்த நோக்கத்தில் 18 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட சிலர் வந்து கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.
அந்த சதிகள் எல்லாம் பிற்காலத்தில் அம்பலமாகியிருக்கிறது. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ராணுவத்தை ஆங்காங்கே குவிப்பதற்காக புலிகளால் நிறைய படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில்தான் முஸ்லீம்களும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். முஸ்லீம் மக்கள் தாக்கப்படுவது அதிகரித்த பொழுது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. அவர்கள் வேறு வழியில்லாமல் அரச படைகளால் உருவாக்கப்பட்ட சில ஊர்க்காவல் படை என்ற பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்பட்டார்கள். இதனால், முஸ்லீம் மக்கள் தங்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கிறார்கள் என்று புலிகள் கருதினார்கள். எனவே, யாழ்ப்பாணத்தில் எவரும் இருக்க இயலாது என்று வெளியேற்ற முற்பட்டார்கள். அந்த நேரத்திலும் நான் அதை எதிர்த்தேன். நான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் கதைக்கிற ஒரு சகோதர இனத்தை வெளியேற்றுவது இயலாத விடயம் என்று நான் சொல்லிப் பார்த்தேன். அதை யாரும் கேட்கவில்லை. முஸ்லீம்களை, சகல உடமைகளையும் பறித்துப் போட்டு உடுத்தியிருந்த உடுப்போடு அனுப்பிவைத்தார்கள் யாழ்ப்பாண மக்கள். அந்நேரம் நான் மட்டக்களப்பில் இருந்தேன். அதை நாங்கள் எதிர்த்தோம் என்றாலும் அதை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு வலு இருக்கவில்லை. ஆனாலும், முஸ்லீம்கள் வெளியேற்றம் சரித்திரத்தில் ஒரு அழியாத வடுவாக வரப்போகிறது என்று எங்கள் ஆலோசனைகளை சொன்னோம்.
இக்காலகட்டத்தில், இந்த வெளியேற்றத்தின் ஊடாக வெளி நாட்டில் இருந்து பயிற்றுவிக் கப்பட்டு வந்திருந்தவர்கள் தங்கள் சதித் திட்டங்களை செயல்படுத்தி கலவரங்களை உண்டாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் தொழுது கொண்டிருந்தவர்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியேற்றப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். உண்மையில் அதையெல்லாம் செய்தது வெளிநாட்டு சக்திகள். 85ஆம் ஆண்டு இது மேற்கொள்ளப்பட்டது.
தோப்பில்: கிழக்கு மாகாணத்தில் பெரும்பகுதி தமிழர்கள் இருக்கிறார்கள் அடுத்து முஸ்லீம்களும் அதற்கடுத்து சிங்களவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்று இனங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத இனங்கள். இந்த மூன்று இனத்தவர்களையும் இணைப்பது மாதிரியான ஒரு ஆட்சி முறையை ஏன் ஏற்படுத்த முடியாது?
கருணா: நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; பிரபாகரன் ஏற்றுக்கொள்ள மாட்டார், ஐயா. கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கும் வட மாகாணத் தமிழர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளையர்கஷீமீ வந்த காலத்தில் யாழ்ப்பாண ராச்சியம், கண்டி ராச்சியம், கோர்ட் ராச்சியம் என்று மூன்று ராச்சியமாக இருந்தது.
வெள்ளையர்கள் காலத்தில் யாழ்ப்பாண தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களின் கல்வியறிவை வளர்த்துக்கொண்டார்கள். அப்பொழுது கிழக்கு மாகாண மக்கள் கொஞ்சம் பின்தங்கி இருந்தாங்க. கிழக்கு மாகாணத் தமிழர்கள் விவசாயத்திலும் முஸ்லிம்கள் வர்த்தகத்திலும் ஈடுப்பட்டிருந்தார்கள். கல்வியறிவு பெற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது அதிகார மையங்களின் முக்கியமான பதவிகளில் இருந்தார்கள். நீதிமானாக, மருத்துவராக, வக்கீலாக எல்லாமாக இருந்தார்கள். அதனால் கிழக்கு மாகாண மக்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்தியம் அவர்களிடம் இருந்தது. இந்தியாவில் பிராமணர்கள்தான் எல்லா அதிகார மையங்களிலும் இருக்கிறார்கள்; மலையாளிகள்தான் இருக்கிறார்கள் என்ற பிரச்சினை இருப்பது போல், இங்கும் இருந்தது. எங்கட அப்பாவுக்கு அப்பா அதைப் பற்றி கதைப்பார். எங்கட காலத்தில் அது கொஞ்சம் குறைவாக இருந்தது. அப்படியான எண்ணக்கரு இப்பொழுதும் இருக்கிற ஏகாதிபத்திய பழமைவாதிகள், மாகாணம் பிரிவதை விரும்பமாட்டாங்க. மாகாண சபை பிரிந்து இருப்பதால் எதுவித பாதிப்பும் வரப்போவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
தோப்பில்: புலிகள் அமைப்புக்கு இன்று ஏற்பட்டிருக்கிற பின்னடைவுக்கு, நீங்கள்தான் காரணம் என ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது, நீங்கள் அவர்களது யுத்த வழிமுறைகளையும் மறை பிரதேசங்களையும் காட்டிக் கொடுக்கிறீர்கள் என்று.
கருணா: அது எனக்கு தெரியும், ஐயா. நான் காட்டிக்கொடுக்கிற ஒரு ஆளாகத்தான் இன்று சுட்டப் படுகிறேன். விடுதலைப் புலிகளை எதிர்க்கிற ஆட்களை துரோகிகள், காட்டிக் கொடுக்கிறவர்கள் என்று சொல்வது இயக்கத்தில் ஒரு மரபு. ஏன் ஒருவன் வெளியேறுகிறான் என்று தளத்தில் உள்ள மக்கள் பிரச்சினையைப் பற்றி ஆராயமாட்டாங்க. கிழக்கு மாகாணத்தவர்கள் துரோகம் செய்து போட்டார்கள் என்று வடக்கு மாகாணத்தவர்கள் சொன்னார்கள். உண்மையில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. யுத்தத்தில் அழிந்து கொண்டிருக்கிறதுக்கு ஒரு முடிவு வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெளிக்கிட்டோம், ஐயா.
நன்றி
அம்ருதா செப்டம்பர் இதழ் -இந்தியா
ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை

ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவுக்கு அடைமானமாக இருக்கிறது தனது ஏழாம் நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்படும், அந்த குழந்தையின் தலை முடி இறக்கபடும், பெயர் வைக்கப்படும்
நபிமொழி
நூல்: நஸயீ, -4149
அல்லாஹ்வின் தூதரின் சுன்னாக்கள்
ஏழாம் நாளில் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு
ஒரு ஆடு கொடுப்பது போதுமானது .
ஏழாம் நாளில் குழந்தையின் தலை முடி இறக்குவது
ஏழாம் நாளில்பெயர் வைப்பது
ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இஸ்லாம் அனுமதிக்காதவை
1.குழந்தை பிறந்தவுடன் அதனை கணவனின் தாயே முதலில் தூக்க (ஏந்துதல்)வேண்டும்.
2. குழந்தையின் காதில் பாங்கு, இகாமத் சொல்லி ஊத வேண்டும்.
3.குழந்தை கண்னை திறக்கும் போது அதன் தந்தை முன்னே நிற்கக் கூடாது.
4.குழந்தை பிறந்து 19வது அல்லது 30வது நாளில் தலை முடியை மழிப்பது.
5.விழுந்த தொப்புள் கொடி, தாயின் தலை முடி, களைந்த நகம் ஆகியவற்றை நாற்பதாவது தினத்தன்று புதைத்து தொடக்கைக் கழிப்பது.
6.நெருப்பினால் சுட்ட இரும்பைக் கொண்டு குழந்தையின் தலைக்கு மேல் சுற்றுவது.
7.குழந்தைக்கு பாலூட்டும் போது தாய் கணவனை நினைப்பது.
8.குழந்தை சிரிக்கும் போது மலக்குகள் பூக் கொத்தைக் காட்டி சிரிக்க வைக்கின்றார்கள் என நம்புவது.
9.குழந்தை அழுதால் மலக்குகள் பூவைப் பறித்துக் கொண்டார்கள் எனப் பேசுவது.
10.குழந்தைக்கு பெயர் சூட்டுவதை தனியான விழாவாகக் கொண்டாடுவது.
11.சூட்டிய பெயரை கணவனின் தாய் தான் முதலில் அழைப்பது.
12.குழந்தையின் பெயரை மூன்று தடவைகள் கூப்பிடுவது.
13.குழந்தையை ஜெய்லானி, தெவட்டகஹ போன்ற தர்ஹாக்கள் நிறைந்த இடத்திற்கு எடுத்துச் சென்று கப்ரில் கிடத்துவது.
14.குழந்தைக்கு பாவா பெயர் சூட்டுவது.
15.பிறந்து நாற்பதாம் நாள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் விருந்தளிப்பது.
16.நாற்பது நாள் வரை குழந்தையின் தாய் தொழாமல் இருப்பது.
17. 40ம் நாளைக்கு முதல் நாளன்று தாய் உபயோகித்த அனைத்து பொருட்களுடன் சுவரைக் கூட தேய்த்துக் கழுவுவது.
18. 40வது அன்று குழந்தையுடன் சேர்ந்து தாயும் குளித்தால்தான் கடமை நீங்குமென்று நம்புவது.
19. குழந்தைக்கு பேய், பிசாசின் தீங்கிலிருந்து காக்க ஹஸ்ரத்மார்களை வைத்து துஆ ஓதி மந்திரித்து தாயத்துக் கட்டி விடுவது.
20. குழந்தை அழுதால் பீங்கான்களில் இஸ்ம் எழுதி அவற்றை கரைத்துக் குடிக்கக் கொடுப்பது.
21.குழந்தை பிறந்தால் அவ்வீட்டிற்கு புதிய ஷைத்தானும் கூட வருவதாக நம்புவது.
22.குழந்தை பிறந்த வீட்டினுடைய முன் கதவில் வேப்ப இலைகளைக் கோர்த்து வைப்பது.
23.குழந்தை பிறந்து 40 வது தினத்தில் தாய், குழந்தை புத்தாடை அணிந்து விழாக் கொண்டாடுவது.
24.குழந்தையின் இடுப்பில் நாடா அணிவிப்பது.
இன மத பெயர்களை கொண்ட கட்சிகளை தடைசெய்யும் சட்டமுலம் வாபஸ்
,dk; kw;Wk; kjq;fspd; ngau;fspy; Muk;gpf;fg;gLk; fl;rpfis Vw;Wf;nfhs;tjw;F jil tpjpf;FkhW Nju;jy; kW rPuikg;G njhlu;ghd ghuhSkd;wj; njupTf; FOtplk; tpLf;fg;gl;Ue;j Nahridia ePf;Ftjw;F Nkw;gb ghuhSkd;wf; FO jPu;khdpj;Js;sjhfj; njuptpf;fg;gLfpwJ.
,e;epiyapy; Fwpj;j kWrPuikg;Gf;F vjpuhf Nky; ePpjpkd;wj;jpy; mbg;gil cupik kPwy; kDf;fs; gyTk; Kd;itf;fg;gl;Ls;s NghjpYk; me;j kDf;fs; njhlu;gpy; vt;tpj jPu;g;Gk; ,Jtiuapy; toq;fg;gltpy;iy. ,t;thW ePjpkd;w jPu;g;G fpilf;Fk; tiuapy; Nkw;gb jfty;fs; cs;slf;fg;gl;l kWrPuikg;G rl;lk; njhlu;ghd thjj;ij ghuhSkd;wj;jpy; vLj;Jf; nfhs;shjpUf;f jPu;khdpf;fg;gl;Ls;sJld; Nky; ePjpkd;wj;jpd; jPu;g;gpid mLj;J GjpanjhU rl;l kWrPuikg;gpid Vw;gLj;j eltbf;if vLg;gJ njhlu;gpy; ftdk; nrYj;jg;glTs;sJ
,e;epiyapy; Fwpj;j kWrPuikg;Gf;F vjpuhf Nky; ePpjpkd;wj;jpy; mbg;gil cupik kPwy; kDf;fs; gyTk; Kd;itf;fg;gl;Ls;s NghjpYk; me;j kDf;fs; njhlu;gpy; vt;tpj jPu;g;Gk; ,Jtiuapy; toq;fg;gltpy;iy. ,t;thW ePjpkd;w jPu;g;G fpilf;Fk; tiuapy; Nkw;gb jfty;fs; cs;slf;fg;gl;l kWrPuikg;G rl;lk; njhlu;ghd thjj;ij ghuhSkd;wj;jpy; vLj;Jf; nfhs;shjpUf;f jPu;khdpf;fg;gl;Ls;sJld; Nky; ePjpkd;wj;jpd; jPu;g;gpid mLj;J GjpanjhU rl;l kWrPuikg;gpid Vw;gLj;j eltbf;if vLg;gJ njhlu;gpy; ftdk; nrYj;jg;glTs;sJ.
கொள்ளையில் ஈடுபட்ட விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கைது.
அனுராதபுரம் பிரதேசத்தில் வங்கி ஒன்றிற்கு பெருந்தொகைப் பணத்தை எடுத்துச் சென்ற நபர் ஒருவரை இடைமறித்து ஆயுதமுனையில் பணத்தை கொள்ளையடிக்க முற்றப்பட இருவர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும் மற்றயவர் விமானப்படைச் சிப்பாய் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, மகசின்கள் 2, தோட்டாக்கள் 30 என்பன மீட்கப்பட்டுள்ளது.
சப்பரகமுவ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைக் ரியுசன் வகுப்புகள் தடைசெய்யப்படுகின்றது.
ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் போயா தினங்களில் சப்பரகமுவ மாவட்டத்தில் இடம்பெறுகின்ற பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்வதற்கான சட்டமுலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்டவரைவு வரையப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ முதலமைச்சர் ஜனக்க பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
புத்த மத வழிபாடுகளுக்கு தடையாக இருக்கும் ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் போயா தினங்களில்இடம்பெறுகின்ற வகுப்புக்களை இந்த சட்டமுலம் தடைசெய்யப்படும்.
இந்தியக் கடலில் சீன நடமாட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்: அமைச்சர் தகவல்
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.
சீனாவின் செயல்பாடுகளை அடுத்து அதை எதிர்கொள்ள நாமும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார். தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். சீனா இந்த பிராந்தியத்தின் வல்லரசாக உருவாகி வருவது உண்மைதான். அதன் பிரதிபலிப்பாக அந்நாட்டின் நடவடிக்கைகளும் உள்ளன. சீனாவின் நடவடிக்கைகள் நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று நாம் உணரும் நிலையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும்.பாதுகாப்பு அடிப்படையில் இந்தியப் பெருங்கடலில் சீனா சில நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்தான். எனவே சந்தேகத்தின் பலனை வழங்கி சீனாவின் செயலை பகையாக கருத வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தில், புத்தளத்தில் முஸ்லிம் இளைஞர் கைது
புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தார் என்ற சந்தேகத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் சலீம் என்ற இந்த இளைஞர் தற்போது வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவர் வில்பத்து மற்றும் வண்ணாத்திவில்லு பிரதேசத்தின் வரைபடங்களை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சில இணயதளங்களில் இத் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
‘பலஸ்தீனச் சிறுவர்களின் அவயவங்களை இஸ்ரேல் இராணுவம் திருடுகின்றது’
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களின் உடலுறுப்புகளை அறுவடை செய்வதாக சுவீடன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டது பலஸ்தீனர்களின் முறைப்பாடுகளை ஆதாரமாக வைத்து சுவீடன் பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டது.
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களின் அவயவங்களைக் களவாடுவதாகவும், துண்டித்து விடுவதாகவும் அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இதை நிராகரித்ததுள்ளது
இதற்குப் பதிலளித்த சுவீடன், பத்திரிகைச் சுதந்திரம் அனைத்து விடயங்களையும் மதிப்பளிக்க வேண்டியுள்ளதாகவும் பிரதிபலிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சுவீடன் பத்திரிகையில் இச் செய்தி வெளியானதுடன் பதட்டமடைந்த இஸ்ரேல் அவசரமாக பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டியது இஸ்ரேல் பிரதமர், இவ்வாறான விடயங்களை எவ்வாறு கையாள வேண்டுமென்பது இஸ்ரேலுக்குத் தெரியும். சுவீடன் அரசாங்கம் இச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை இஸ்ரேல் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
வடபுல முஸ்லீம்கள் மீள்குடியேற்றம் உடன் பதிவு செய்யுமாறு வேண்டுகோள்.
தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய -( புலி பயங்கரவாதிகளினால் பலவந்தமாக வெளியேற்றபட்ட )- மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா பாராட்டியுள்ளது. மீள்குடியேற்றுகை மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரம் தொடர்பாக முஸ்லிம் இயக்கத்தின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேற்படி விளம்பரத்தின்படி பத்தொன்பது வருடத்திற்கு முன் (1990) சொந்த இடங்களிலிருந்து- ( புலி பயங்கரவாதிகளினால் பலவந்தமாக வெளியேற்றபட்ட ) -வெளியேறி இதுகால வரை மீள்குடியேறும் வாய்ப்பை இழந்திருக்கும் வடபுல முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் கால்பதிப்பதற்கும் அவர்களது காணிகள் வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அல்லது அவற்றுக்கான நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் சரியான சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றிருப்பதனால் வடபுல முஸ்லிம் குடும்பம் ஒவ்வொன்றும் உரிய காலத்திற்கு முன்னர் விண்ணப்பித்து தங்கள் குடும்ப, மற்றும் காணி விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்சில் வடபுல முஸ்லிம்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
நீங்கள் மீள்குடியேறுகிறீர்களோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகக் குடியேறாது விடுகிறீர்களோ, இவற்றில் எதுவாக இருந்தாலும் உங்களது ஒவ்வொரு குடும்பத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பதிவின் ஒரு பிரதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்குமாறும் முஸ்லிம் கவுன்சில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக் கேட்டுள்ளது. முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, இலக்கம் 05, மந்தி ரோட், கொழும்பில் 5. ஈமெயில் muslimcouncilsl@gmail.com தொலைநகல் 011 7393883.
வடபுல முஸ்லீம்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும்போது பலவந்தமாக வெளியேற்றபட்ட முஸ்லிம் மக்கள் என்ற பதத்தை பயன்படுத்துமாறு www.lankamuslim.org அனைவரையும் அன்போடு பணிவாக வேண்டுகின்றது.
புலிகளின் சர்வதேச வலையமைப்பை இலக்கு வைத்து இலங்கை எரித்திரியாவில் தூதரகம்.
புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியான கே.பி எனப்படும் குமரன் பத்தமநாதன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் அவ்வமைப்பின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குவதாக நம்பப்படுகின்றது. கே.பியின் தகவல்களின் அடிப்படையில் எரித்திரியா நாட்டில் புலிகளின் செயற்பாடுகள் மிக அதிகமாக காணப்படுவதாகவும் புலிகளின் ஆயுதக்கப்பல் போக்குவரத்து மையமாக எரித்திரியா விளங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
கே.பி யின் மேற்படி தகவல்களின் அடிப்படையில் எரித்திரியாவில் உள்ள பல ஆயுத அமைப்புக்களுடன் புலிகள் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பாக அல்கைதா அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஆயுதக்குழு ஒன்றுடனும் அவர்கள் உறவை பேணிவருவது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் புலிகளின் தலவர் வே. பிரபாகரன், எரித்திரிய நாட்டு ஜனாதிபதி இற்கு கடந்த 24 மே 2006 தனது கையொப்பமிட்ட தொலைநகல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமையும் வெளிவந்துள்ளது.
இத்தகவல்களின் அடிப்படையில் எரித்திரியாவில் இருந்து செயற்படக்கூடிய புலிகளின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்துவன் பொருட்டு அங்கு இலங்கை தூதரகம் ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எரித்திரியா அரசு புலிகளுடன் உறவைப் பேணுவதுடன் அவர்களுக்கான நேரடி உதவிகளைப் புரிந்து வருவதாக கடந்த 15 டிசம்பர் 2006 இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளோரின் பெயர்ப்பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பப்படுகின்றது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படால் உள்ளோரது பெயர்ப்பட்டியல் இவ்வார இறுதிக்குள் ஜனாதிபதியின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. மரண தண்டைனை நிறைவேற்றும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி இறுதி முடிவை அறிவிப்பார் என அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கைநெட்
சாய்ந்தமருது பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பயிற்சிகள்
சாய்ந்தமருது பிரதேச மீன்பிடி கூட்டுறவுச் சங்கம், யூ.என்.ஹெபிடாட் மற்றும் இபாட் அமைப்பின் அனுசரணையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மீனவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உதவிகளை வழங்கியுள்ளது.
இதன்போது தையல், நெல்குற்றல், இடியப்பம் அவித்தல், கோழி வளர்ப்பு, சில்லறைக் கடை போன்றவற்றுக்காக 10 பேருக்கும் சுகாதார சேவைகளைப் பேணுதல், வீட்டுத்தோட்டம், கழிவுகளை சேதனப் பசளையாக மாற்றுதல் போன்றவற்றுக்காக 120 பேருக்குமாக மொத்தம் 130 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதிக்கு எதிராகசுவரொட்டிகளை ஒட்ட முயன்ற இருவர் கைது
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சுவரொட்டிகளை எழுதி ஒட்டுவதற்கு முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இரு இளைஞர்களை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து பெயின்ற், கடதாசிகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.கொஸ்கமபாதுக்க பகுதிகளைச் சேர்ந்த இவ்விருவரும் நாடு முழுவதும் இச் சுவரொட்டிகளை ஒட்டத் திட்டமிட்டிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தினக்குரல்
தோப்பூர் வைத்தியசாலை அபிவிருத்தி!
தோப்பூர் வைத்தியசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சுகாதார சமூக நல விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டு வருகின்றார்.
தோப்பூர் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர் அண்மையில் அமைச்சர் ஹிஸ்புல்லாவை அவரது அமைச்சில் சந்தித்து விடுத்த வேண்டுகோளையேற்ற அமைச்சர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
அத்துடன், வைத்தியசாலையின் சுற்றுமதில் நிர்மாணம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளும் அமைச்சரால் மேற்கொள்ளப்படவுள்ளது.
மலையக சிறுமிகளின் மர்ம மரணம் குறித்து இதுவரை தேசிய ரீதியில் எந்த அமைப்புகளும் குரல் கொடுக்கவில்லை
கொழும்பில் மர்மமான முறையில் மரணமான சிறுமிகள் தொடர்பில் மலையக அமைப்புகள் மாத்திரம் குரல் கொடுத்து வருவதாகவும் இது தொடர்பில் இலங்கையிலுள்ள சிறுவர் சார்ந்த தேசிய சர்வதேச அமைப்புகள் எவ்வித அறிக்கைகளையும் விடவில்லையெனத் தெரிவித்துள்ள “பிரிடோ’ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் மரணமான சிறுமிகளை “யுவதிகள்’ என அழைப்பது சிறுவர் உரிமையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தொடர்பான பிரசாரங்கள் மற்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள் என்ற தலைப்பில் பொகவந்தலாவை பிரிடோ காரியாலயத்தில் பிரிடோ பணியாளர்களுக்காக நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அக்கரைப்பற்றுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி விஜயம்
அக்கரைப்பற்றுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை விஜயம் செய்வதை முன்னிட்டு பிரதேசத்தில் படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய காங்கிரஸின் 5 ஆவது மகாநாடு அமைச்சர் அதாவுல்லா தலைமையில் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு பிரதேசத்தின் வீதிகள், சந்திகள், முக்கிய இடங்களில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையிலும் வீதிரோந்து நடவடிக்கைகளிலும் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
25 வருடங்களின் பின்பு முஸ்லிம்கள் தமது சொந்த நிலத்தில் சேனைப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளனர்

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் 25 வருடங்களின் பின்பு முஸ்லிம்கள் தமது சொந்த நிலத்தில் சேனைப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த கால புலி பயங்கரவாதம் முஸ்லிம்கள் மீதான பயங்கரவாதம் காரணமாக குறித்த பகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறியிருந்ததுடன் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலையிலும் இருந்தனர்.
இந்த ஆண்டு சேனைப் பயிர்ச் செய்கையை மேற் கொள்ளும் நோக்கில் 54 குடும்பங்கள் நேற்று அதற்கான ஆயத்தங்களுடன் சென்று தற்போது காடுகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள புனானை கிழக்க விவாசாயிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான ஐ.எல்.எம். முஸ்தபா ” ‘ஜப்பார் ” திடலிலுள்ள காணியிலேயே சேனைப் பயிரச் செய்கையை இந்த ஆண்டு ஆரம்பிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்காவின் அதிபராக பராக் ஹுசைன் ஒபாமாவின் உண்மை முகம்
அங்கிலம்:
அமெரிக்காவின் அதிபராக பராக் ஹுசைன் ஒபாமாவின் ரமழான் வாழ்த்துக்கள்!
அங்கிலம்
இந்து வெறி பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் பல்வந்த்சிங் சுட்டுக் கொல்லப்பட்டதால்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் நிலையத்துக்குள் இந்து வெறி பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் பல்வந்த்சிங் சுட்டுக் கொல்லப்பட்டதால் பல்வந்த்சிங் உயிரைக் காப்பாற்ற தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரக்காரர்கள் போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்து, எரியும் தீக்குள் ஒரு போலீஸ்காரரை தூக்கிப் போட்டு உயிரோடு எரித்துக் கொன்றனர்.
கலவரக்காரர்கள் தாக்கியதில் 3 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். போலீசார் நடத்திய தடியடி மற்றும் வானத்தை நோக்கி சுட்டதில், ஒரு பெண் உள்பட பலர் காயம் அடைந்தனர். இதற்கிடையே, இந்த சம்பவம் பற்றி அறிந்த முதல்-மந்திரி ரமேஷ் பொக்ரியால், பா.ஜனதா தலைவர் போலீஸ் நிலையத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட போது பணியில் இருந்த அனைத்து போலீசாரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்
புலிகள் அணு ஆயுதங்களை வாங்க முயற்சி-கே.பி தகவல்!
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் அணு ஆயுதங்களை வாங்க முயற்சி மேற்கொண்டதாக அரச படையினரின் பிடியில் உள்ள புலிகளின் ஆயுத முகவரும் தற்போதைய தலைவருமான குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
மேற்கத்தை நாடு ஒன்றிடம் இருந்து அணு ஆயுதம் மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டதாக தெற்கு ஆசிய நாடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் தகவல்களை வெளியிட்டு வருகின்றார். பணம் எவ்வாறு சேகரித்து ஆயுதங்களை எவ்வாறு கொள்முதல் செய்தது, அமெரிக்க ஆயுத முகவரிடம் இருந்து விமான எதிர்ப்பு ஆயுதங்களை எவ்வாறு கொள்முதல் செய்தமை போன்ற விடயங்களையும் கே.பி. வெளியிட்டுள்ளார்.
காவல்துறையினரிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய சூழ்நிலை
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் எச்.எம்.ஜீ.பி. கொடதெனிய:
காவல்துறையினர் மக்களை பாதுகாக்கும் காலம் போய், காவல்துறையினரிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகியுள்ளதென முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் எச்.எம்.ஜீ.பி. கொடதெனிய தெரிவித்துள்ளார். நாட்டின் காவல்துறை சேவை மிகவும் சீர் குலைந்துள்ளதாக கம்பஹா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான கொடதெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளின் போது அரசியல் தலையீடுகள் காணப்படுவதனால் காவல்துறை சேவையில் பல முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்த அவர், 30 ஆண்டு காலமாக நீடித்த பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஜனாதிபதிக்கு காவல்துறை சேவையை சீர்படுத்துவது சிக்கலாக அமையாதென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
பிரபாகரன் உருவத்தில் விநாயகர் சிலை
இந்து மதம் ஒரு இறைவன் என்ற அடிப்படை கோட்பாட்டை விட்டும் எப்படி கண்டவன் எல்லாம் கடவுள் என்ற கோலத்துடன் அடிப்படையை விட்டும் தூர விலகி அடிப்படை ஒன்றும் நடைமுறை ஒன்றுமாக இருக்கிறது அன்பத்துக்கு இது ஓர் நல்ல உதாரணம்:
வருடந்தோறும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி விநாயகர், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்த பக்தர்கள் இவ்வருடம் ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு விநாயகர் சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா, திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பிரபாகரன் உருவத்தோடு ஈழ விநாயகர் சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூசை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் திருப்பூர் போலீசாரும், உளவுத்துறையினரும் விழிப்போடு அந்த சிலை நிறுவப்படுவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், காவல்துறையின் கண்காணிப்பையும் மீறி ஈழ விநாயகர் சிலையை நிறுவி அர்ச்சனை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்
இவ்வாறே ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் இலங்கையை நோக்கி ஈழ விநாயகர் சிலையுடன் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முயற்சியை முறியடித்து அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கையில் பயிற்சிக் கல்லூரி!
gaq;futhjj;ij Kwpabg;gJ vg;gb vd;W ru;tNjr ehLfspd; gilapdUf;F gapw;rp toq;Ftjw;fhf ,yq;ifapy; tpNrl gapw;rpf; fy;Y}up xd;W mikf;fg;glTs;sjhf ,uhZtj; jsgjp nyg;bdz;l; n[duy; [fj; [aR+upa njuptpj;Js;shh;.
,J Fwpj;J mth; NkYk; njuptpf;ifapy;> ,yq;ifg; gilapdu; gaq;futhjj;ij cs;ehl;by; ntw;wpfukhf Kwpabj;Js;sdu;. ,e;epiyapy;> ,yq;ifg; gilapduhy; Aj;j eltbf;iffspd; NghJ gad;gLj;jg;gl;l ,uhZt je;jpNuhghaq;fisAk; ,uhZt cj;jpfisAk; mwpe;Jnfhs;tjpy; ru;tNjr ehLfs; kpFe;j Mu;tk;fhl;b tUfpd;wd என்றார்.
“தமிழ் இனத்தின் பூர்விக சொத்து மீண்டும் எம்மால் மீட்கபட்டுள்ளது ” – மேதகு பிரபாகரன்

ஒஸ்மானியா முஸ்லிம் கல்லூரியை
யாழ்ப்பாணத்தில் புலி பயங்கரவாதிகளினால் பலவந்தமாக வெளியேற்றபட்ட முஸ்லிம்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு வாய்ப்பு நிலைகள் குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் யாழ்ப்பாண அரசாங்க அதிபருடன்

"தமிழ் இனத்தின் பூர்விக சொத்து மீண்டும் எம்மால் மீட்கபட்டுள்ளது " - மேதகு பிரபாகரன் அன்று ஒஸ்மானியா முஸ்லிம் கல்லூரியின் சுவரில் புலிகள் இவ்வாருதான் எழுதி வைத்திருந்தனர்
ஆலோசித்துள்ளார் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியா முஸ்லிம் கல்லூரியை -Jaffna Osmaniya college -மறுசீரமைப்பது குறித்து அறிக்கை ஒன்றையும் அரசாங்க அதிபரிடம் இருந்து கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இனத்தின் பூர்விக சொத்து மீண்டும் எம்மால் மீட்கபட்டுள்ளது “ – மேதகு பிரபாகரன் அன்று ஒஸ்மானியா முஸ்லிம் கல்லூரியின் சுவரில் புலிகள் இவ்வாருதான் எழுதி வைத்திருந்தனர் அதுதான் இந்த செய்தியின் தலைப்பும்.
முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!
பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை:
புனித ரமழான் நோன்பு காலத்தின் போது விசேட சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வசதியாக அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரச நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான விபரங்களை அமைச்சு சகல திணைக்களங்களுக்கும்; அனுப்பி வைத்துள்ளது.
அதன்படி அதிகாலை 3.30 மணி தொடக்கம் காலை 6.00 மணி வரையும், பிற்பகல் 3.15 மணி தொடக்கம் 4.15 மணிவரையும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதேவேளை, மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணி வரையும், இரவு 7.30 மணி தொடக்கம் 10.30 மணிவரையும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு 14 நாட்களுக்கு முன்பதாகவே விசேட விழா முற்பணக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அரச நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது.
அரசின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் இருந்து.
அக்கரைப்பற்றில் கட்டிடம் ஒன்று தீக்கிரை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கைவரிசையாம்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடடத்தின் தொகுதி தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமது காரியாலயம் ஒன்றை திறப்பதற்கு குறிப்பிட்ட கட்டிடத்தை தெரிவுசெய்திருந்தாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு வருவதை எதிர்க்கும் பொதுமக்கள் அக்கட்டிடத்தை தீயிட்டு கொழுத்தியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், தமது வரவிற்கு பிரதேச மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புவதை உணர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தாம் திறக்கவுள்ள காரியாலயத்திற்கு பொலிஸ்பாதுகாப்பு கேட்டிருந்தாகவும், மக்களின் எதிர்ப்புக்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு பரிசீலனை செய்து வந்தபோது தமக்கு சாதகமான பதில் கிடைக்காது என அச்சம் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமை, தமக்குள்ள அச்சுறுத்தலை ஊர்ஜிதப்படுத்தி பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட கட்டிடத்தொகுதிக்கு நெருப்பு வைத்துள்ளதாக பிறிதொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இலங்கைநெட்
தற்கொலை தாக்குதல், படுகொலை சம்பவங்களுடன் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நேரடித் தொடர்பு
ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் படுகொலை சூழ்ச்சி சம்பவங்களுடன் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி மீது நடத்தப்பட்ட மற்றும் நடத்தப்படவிருந்த தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுடன் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தொடர்பு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் புலனாகியுள்ளது.
அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை படுகொலை செய்யும் விடுதலைப் புலிகளின் முயற்சிகளுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலர் நேரடியாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த பாதுகாப்புத் தரப்பின் உயர் அதிகாரிகளில், ஒரு காவற்துறை அத்தியட்சகர், இரண்டு இராணுவ கேர்ணல்களும், மேஜர்கள் சிலரும் இருப்பதாகவும், இதனை தவிர மேஜர் தரத்திற்கு கீழ் உள்ள பலர் இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அத்துடன் விமானப் படையின் சிப்பாய் ஒருவரும் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கொலை சதியின் பின்னனியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க, அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே ஆகியோர் மீதான தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலை குண்டு தாரிகளுக்கு பாதுகாப்பு தரப்பினரே உதவியுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேக்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு எதிரான தற்கொலை தாக்குதல் முயற்சிகளுடனும் இந்த பாதுகாப்பு தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு உதவி ஒத்துழைப்புகளை வழங்கிய பல பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், மேலும் சில பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்யப்பட உள்ளனர். இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு பாதுகாப்பு தகவல்களை வழங்கியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
லங்காஸ்ரீ










