பிரிகேடியர்கள் மூவர் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு!

புலிகளை அழிக்கும் வன்னி படைநடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய பிரிகேடியர்கள் மூவருக்கு மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 58வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய பிரிகேடியர் சர்வேந்திர சில்வா, 55வது படை பிரிவுக்கு தலைமை வகித்த பிரசண்ணா டி.சில்வா, 59வது படையணிக்கு தலைமை வகித்த சார்ஜி கமலகே ஆகிய பிரிகேடியர்களே மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.







