1ம் இணைப்பு-10 முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து ஐந்து இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று விடுதலை
உடதலவின்ன 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை
கண்டி உடதலவின்ன பகுதியில் 2001 ஆம் ஆண்டு 10 முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து ஐந்து இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இவர்களுடன், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுரத்த ரத்வத்தை அவரது மகன்களான சானுக மற்றும் ரொஹான் ஆகியோரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். எனினும் அவர்கள் கண்டி நீதிமன்றத்தினால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டனர்.
உடதலவின்னவில் வைத்து 10 முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜர் செய்யப்பட்ட 15 சந்தேக நபர்களில் 10பேர் விடுதலை செய்யப்பட்டதோடு ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்தத் தீப்பை அட்சேபித்து ஐந்து கைதிகளும் மேன்முறையீடு செய்திருந்தனர் ஐந்து இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .
அப்படியானால் 10 முஸ்லிம் இளைஞர்கள் யாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.??????????







