Lankamuslim.org

One World One Ummah

Archive for July 24th, 2009

1ம் இணைப்பு-10 முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து ஐந்து இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று விடுதலை

leave a comment »

உடதலவின்ன 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை

கண்டி உடதலவின்ன பகுதியில் 2001 ஆம் ஆண்டு 10 முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து ஐந்து இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இவர்களுடன், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுரத்த ரத்வத்தை அவரது மகன்களான சானுக மற்றும் ரொஹான் ஆகியோரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். எனினும் அவர்கள் கண்டி நீதிமன்றத்தினால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டனர்.
உடதலவின்னவில் வைத்து 10 முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்  ஆஜர் செய்யப்பட்ட 15 சந்தேக நபர்களில் 10பேர் விடுதலை செய்யப்பட்டதோடு ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்தத் தீப்பை அட்சேபித்து ஐந்து கைதிகளும் மேன்முறையீடு செய்திருந்தனர் ஐந்து இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்  .

அப்படியானால் 10 முஸ்லிம் இளைஞர்கள் யாரால்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.??????????

Written by lankamuslim

July 24, 2009 at 10:56 pm

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியமைக்காக தயான் ஜயதிலகவின் ஐ.நா. சபையின் இலங்கைப் பிரதிநிதிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது

leave a comment »

இஸ்ரேலிய வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதி தயான் ஜயதிலக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் றஹ்மானின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், இலங்கைக்கு கீர்த்தியை பெற்றுக் கொடுக்கும் முகமாக செயற்பட்ட ஒரு மனிதர் என சில ஊடகங்கள் அவரை புகழாரம் சூட்டியுள்ளதாகவும், இவ்வாறான ஒருவர் பலஸ்தீன மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளைகளையும், அம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியமையே அவருக்கு எதிரான குற்றச் செயலாக கூறப்படுவதாகவும் அவ்வூடக அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும், இஸ்ரேலுக்கும் – பலஸ்தீனத்திற்குமிடையே முரண்பாடு காணப்படுவது யாவரும் அறிந்த விடயமாகும். ஆயினும், பலஸ்தீன நற்புரவுச் சங்கத்தின் ஆரம்ப தலைவரும், பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுப்பேன் என கூறி வருபவருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இஸ்ரேலின் வேண்டுகோளுக்கு இணங்க தயான் ஜயதிலக அவர்களை பணீ நீக்கம் செய்தமை கவலைக்குரிய விடயமாகும்.

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் பின்னிற்கப் போவதில்லை என்று கூறிவரும் இந்த அரசாங்கம், கடந்த காலங்களில் பிரதமர், அமைச்சர் ஷமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் இஸ்ரேலுக்கான உத்தியோகப் பூர்வ விஜயங்களை மேற்கொண்டதுடன், இஸ்ரேலுடனான பல்வேறு உடன்படிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்த உடன்படிக்கைகள் என்ன? என்பதை, இதுவரை இந்நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.

இஸ்ரேலுடனான உறவை மென்மேலும் பலப்படுத்துவதுடன், அரேபிய நாடுகளையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றி, இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் இரட்டைவேடத்தை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

muslimguardian

Written by lankamuslim

July 24, 2009 at 10:20 pm

வேலணையிலும் சடலம் கரை ஒதுங்கியது

leave a comment »

வேலணை செட்டிப்புலம் கடற்கரைப் பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கரையொதுங்கிய சுமார் 30 வயது மதிக் கத் தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று போதனா வைத்தியசாலையில் ஒப்படைக் கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகாதேவன் சடலம் கரை யொதுங்கிய இடத்தில் விசாரணையை மேற்கொண்டார்.
மேற்குறித்த சடலத்துடன் இதுவரை தீவுப்பகுதியில் கரையொதுங்கிய சடலங் களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள் ளது. குறித்த கடற்கரைப்பிரதேசத்தில் இந்திய

மீனவர்களின் மூன்று அடையாள அட் டைகளும் கரையொதுங்கியுள்ளன. அவை நீதிவானிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன.
இதேவேளை கடந்த செவ்வாய்க் கிழமை புங்குடுதீவிலும், எழுவைதீவிலும் கரையொதுங்கிய இரண்டு சடலங்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுடை யவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
புங்குடுதீவில் கரையொதுங்கிய சட லம் செந்தில்குமார் நடராஜா என்பவரது என்றும் எழுவை தீவில் கரையொதுங்கிய சடலம் கணேஷ் முனியராஜ் என்பவரு டையது என்றும் அடையாளம் காணப்பட் டுள்ளன.

uthayan

Written by lankamuslim

July 24, 2009 at 9:59 pm

நாமல் ராஜபக்ச மீது சேறு வீசப்பட்ட செய்தி தவறானது மீள்குடியேற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

leave a comment »

வீரகேசரி இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மீள்குடியேற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

20 நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களிற்கு தேவையான குடிநீர், சுகாதார, மருத்துவ, உணவு வசதிகளை அரசாங்கம் வழங்கிவருவதுடன், அங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை புத்தகங்கள், சீருடைகள், அப்பியா புத்தகங்களியும் அரசு வழங்கிவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று ஊடகவியலாளர் மாநாட்டு இடம்பெற்றது . இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் நிவாரண கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் இருந்து ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டு விசேட வகுப்புகளுடன் பயிற்சிகளும் வழங்க்கப்பட்டு வருகின்றன.அவர்களிற்க்கான பரீட்சை நிலையங்கள் அவ் நிவாரண கிராமங்களில் அமைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.நேற்று முன் தினம் வவுனியா நிவாரண கிராமங்களிற்கு விஜயம் செய்த கல்வி அமைச்சர் அங்கே கணணி நிலையம்,வதிவிட பயிற்சி நிலையம் ஒன்றையும் ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் அம்மக்களுக்கு தேவையான மருத்துவ சேவையினை வழங்குவதற்காக 100 வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியமாக நிவாரண கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது தவறான செய்தியாகும்.மூன்று இலட்சம் மக்கள் பராமரிக்கப்படும் இடத்தில் சாதாரணமாக ஒரு நாளைக்கு ஐந்து , அல்லது ஆறு பேர் உயிரிழக்கின்றனர். இவை அனேகமாக இயற்கை மரணமாகவே காணப்படுகின்றது.என அமைச்சர் தெரிவித்தார்.

ஜானாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ நிவாரண கிராமங்களிற்கு விஜயம் செய்த போது அவர் மீது சேறு வீசப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் முற்றிலும் தவறானதென தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் தானும் நிவாரண கிராமங்களிற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

அம்மக்கள் நாமல் ராஜபக்ஷவுடன் மகிழ்ச்சியுடன் உரையாடியதுடன், அங்குள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பந்து வீச அவர் துடுப்பட்டம் செய்து விளையாடியதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது ‘இளைஞர்களுக்கு நாளை ‘ நிதியத்தின் தலைவரும், ஜனாதிபதியும் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ அங்குள்ள 500 இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

From வீரகேசரி

Written by lankamuslim

July 24, 2009 at 9:55 pm

மாணவியை பாலியல் வன்முறைக்குட்படுத்தி கொலைசெய்த கிருஷ்ணகுமார் 35 என்பவரை பொதுமக்கள் அடித்துகொலை

leave a comment »

அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவி மதுனுஸ்கா கிருஷ்ணகுமார் என்பவரால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலணி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மதுனுஸ்கா (வயது 12)கடந்த 22ம் திகதி புதன்கிழமை அன்று குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கிருஷ்ணகுமார் 35 என்பவரால்  கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது;

பிற்பகல் 2 மணியளவில் இந்த மாணவி தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

மாலை 6 மணியளவில் அந்தப் பகுதியில் வீதியோர மதகொன்றின் கீழ் கிடந்த இவரை கண்டவர்கள் உடனடியாக அவரை மத்திய முகாம் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குற்றுயிராகக் கிடந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துவிட்டார். இவரது கழுத்திலும் வயிற்றுப்பகுதியிலும் ஆழமான கத்திக் குத்துக் காயங்களும் காணப்பட்டன.

இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குரிய உபகரணங்கள் இல்லாததால் உடல் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

இவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்ன கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் பின் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தெரியவரவே பொதுமக்கள் கடும் சினமடைந்ததுடன் இதற்கு காரணமானவனெனக் கூறப்படும்  கிருஷ்ணகுமார் வயது 35  என்பவரை தேடத் தொடங்கினர்.

மாணவியின் படுகொலையை அடுத்து அவர் கல்விகற்ற பாடசாலையும் நேற்று மூட்பட்டிருந்தது.

நேற்றுக் காலை சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்த மத்திய முகாம் பொலிஸார் பிரதான குற்றவாளியெனச் சந்தேகிக்கப்பட்ட ரவுடி பாவாவைத் தீவிரமாகத் தேடினர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் 4 ஆம் கொலனி வயல் பகுதியில்கிருஷ்ணகுமார் வயது 35 மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு திரண்டு சென்ற மக்கள் அவனை மடக்கிப் பிடித்ததுடன் அவனை மிகக் கடுமையாகத் தாக்கி கொலைசெய்தனர்

Written by lankamuslim

July 24, 2009 at 4:48 pm

முஷாரப்பை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அழைப்பாணை

leave a comment »

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. 2007 இல் அவசரகால நிலையை அமுல்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்தமை குறித்த வழக்கு தொடர்பில் ஜூலை 29 ஆம் திகதி முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சௌத்திரி தலைமையிலான குழு உத்தரவிட்டுள்ளது.இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவரது தலைமைத்துவத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் விதமாகவே முஷாரப் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதையடுத்து சர்தாரி ஜனாதிபதியானதும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வலியுறுத்தலால் இப்திகார் சௌத்திரி உட்பட பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே முஷாரப் தனது ஆட்சியில் எடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றம் மறு ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முஷாரப் தற்போது பிரிட்டனில் உள்ளார். அவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதற்காகச் சென்றுள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை, முஷாரப் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டுமென்ப தில்லை. தனது தரப்பில் வழக்கறிஞரை ஆஜர் படுத்தி உரிய விளக்கத்தை அளிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thinakural

Written by lankamuslim

July 24, 2009 at 4:15 pm

பரசிற்றமோல் மாத்திரைகளை உட்கொண்ட 24 சிறுவர்கள் பங்களாதேஷில் மரணம்

leave a comment »

பங்களாதேஷில் பரசிற்றமோல் மாத்திரைகளை உட்கொண்ட 24 சிறுவர்கள் மரணமடைந்துள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டின் தனியார் மருந்தாக்கல் அமைப்பொன்றின் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன்,சிறுவர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக ஏழு பேரைக்கொண்ட குழுவொன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

விற்றமின் மற்றும் பரசிற்றமோல் மாத்திரைகளின் உற்பத்தியையும் சந்தைப்படுத்தலையும் இடைநிறுத்துமாறு தனியார் மருந்தாக்கல் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ள அரச நிர்வாகம் சந்தைகளிலுள்ள இக் கம்பனியின் உற்பத்திப் பொருட்களை மீளப் பெறுமாறும் தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

July 24, 2009 at 4:13 pm

சீனா அரசும் சீனா முஸ்லிம்களும் தொழுகை, நோன்பு , ஹிஜாப் தடை

leave a comment »

முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கும் மேற்கு சீனாவின் பாலைவனப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளானில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தடையையும் வரம்புகளையும் சீனா விதித்துள்ளது. இவை சீன அரசின் நான்கு இணைய தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சீன அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உலக மக்கள் அனைவருக்கும் திகைப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது.

புனித ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுடன் கொண்டுள்ள தொடர்பு நெருக்கமாக இருக்கும் என்பதை அனுமானித்து அதனைச் சீர்குலைக்கும் முகமாக இவ்வருட ரமளான் மாதம் முழுக்க பெய்ஜிங்கின் யிங்மெய்லி என்ற நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அரசு அலுவர்கள் அவ்வப்போது வந்து “பரிசோதனை” நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரமளான் மாதத்தில் சீன சமூகத்தில் சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்டவை நடைமுறைப் படுத்தப் படுகின்றன என்ற முன்னுரையுடன், ஸின்ஹே (Xinhe) அரசு இணையத் தளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பு கீழே:

  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களோ மாணவர்களோ நோன்பிருக்கக் கூடாது.

  • ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது. ரமளான் மாத வழிபாடுகளில் ஈடுபடக் கூடாது.

  • ஆண்கள் தாடியைக் களைந்து மழித்திட வேண்டும்.

  • பெண்கள் ஹிஜாபைக் களைந்திட வேண்டும்.

  • பள்ளிவாசல்களில் யாரும் இரவில் தங்கக் கூடாது (ரமளான் மாதத்தில் இஃதிகாஃப் எனப்படும் இறை வழிபாட்டிற்காக உலகமெங்குமுள்ள முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் இரவில் தங்குவது வழக்கம்).

  • நோன்பு நேரங்களில் உணவு விடுதிகளில் வழக்கம்போல் சாதாரணமாக உணவுகள் பரிமாறப்பட வேண்டும்.

Written by lankamuslim

July 24, 2009 at 12:53 am

அமெரிக்க அரசு வலைமனைகள் மீது சைபர் தாக்குதல்

leave a comment »

அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரப் பூர்வமான வலைத் தளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் விடுதலை நாளான ஜூலை 4 அன்று தொடங்கிய இத்தாக்குதல், சில தளங்களில் சேவை முறிவுக்கு வழிவகுத்ததாகவும், பின்னர் அவை மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.

அமெரிக்க அரசின் நிதித்துறை, உளவுத்துறை, போக்குவத்துத் துறை, மத்திய தொழில் குழு இவற்றின் தளங்களைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் ஒரே நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இத்தாக்குதல்களின் விபரங்களை அரசு வெளியிடவில்லை. இதே வேளையில் தென்கொரிய அரசின் பாதுகாப்புத் துறை, அதிபர் மாளிகை இவற்றின் அதிகாரப் பூர்வ வலைத் தளங்களின் மீதும் இதே போன்று சைபர் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

Written by lankamuslim

July 24, 2009 at 12:10 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,829 other followers