மாத்தளை மாநகரசபையால் விடுவிக்கப்படும் அறிவித்தல்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு!
மாத்தளை மாநகரசபையினால் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்படும் அறிவித்தல்கள் அனைத்திலும் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு மூவின மக்களும் வாழ்வதால் மாநகரசபையின் சிங்கள மொழி மூலமான அறிவித்தல்களை விளங்கிக் கொள்வதில் மக்கள் சிரமப்படுவதாக தமிழ்பேசும மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சிறுபான்மை இனத்தவரான மாத்தளை மாநகரசபை மேயருக்கு அறிவித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தம் மாநகரசபை உறுப்பினர்கள் தமிழ் மொழியிலும் அறிவித்தல்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாத்தளை மாநகர மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
athirady.org







