குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரிப்பு
| ஜெருசலேமில் புதிய குடியேற்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.1967 இல் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் பகுதியில் 20 அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களை அமைக்கும் முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இது அரேபியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிராந்தியமாகும்.
ஆனால், இந்நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கடந்தவாரம் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலிய தூதரிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ள நெதன்யாகு; |







