Archive for July 16th, 2009
ஈரானில் விமானம் விபத்து : 168 பேர் பலி
ஈரானின் வடமேற்கு பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துள்ளானதில் 168 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.ஈரானின் குவாஸ்வின் நகர பகுதியில் வைத்து இவ்விமானம் விபத்துள்ளாகியுள்ளது.
விபத்தின் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பயணிகள் விமானம் ஈரானிலுள்ள குவாஸ்வின் நகருக்கு அருகில் நிகழ்ந்துள்ளதாக ஈரானின் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கின்றது.
அநேகமாக விமானத்தில் பயணித்த அனைவருமே மரணமடைந்துள்ளதாக குவாஸ்வின் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குவாஸ்வின் அருகிலுள்ள ஜன்னட்-அபாட் எனும் கிராமத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகின்றது
இடம்பெயர்ந்தோரை சொந்த இடங்களில் மீளக் குடியேற்றி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும் -எகிப்தில் ஜனாதிபதி
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அணிசேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு நேற்று எகிப்து, சார்ம் அல் ஷேக் நகரத்திலுள்ள மெரிரைம் மண்டபத்தில் நேற்று ஆரம்பமாகியது. 118நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைவர்கள் நேற்றைய மாநாட்டில் பங்கு கொண்டிருந்தனர். இங்கு, இலங்கை நேரப்படி இரவு 8மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றினார். தனதுரையில் அவர் கூறியதாவது, உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பொன்றை வேருடன் பிடுங்கி எறிவதற்கு எமது நாட்டால் முடிந்துள்ளது என்பதை முதலில் கூறிக் கொள்வதையிட்டு நான் பெருமையடைகிறேன். அது எவ்வகையிலும் விடுதலை அமைப்பு ஒன்று அல்ல. வன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட தேச விரோதம் உக்கிரமடைந் பிரிவினைவாத குழுவாகும். எனினும் இவ்வாறான பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பை சில நாடுகள் பிரச்சாரம் பண்ணுவதற்கு முன்வந்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறு செய்வதற்கு அவர்களால் முடிந்துள்ளமைக்கு காரணம் அசாதாரண அரசியல் நிலைமைதான் என்பது தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
athirady.org







