Archive for July 9th, 2009
சட்ட விரோத ஆயுத ங்களை களைவதற்கு சட்ட திருத்தம்
சட்ட விரோத ஆயுத ங்களை களைவதற்கு சட்ட திருத்தம் மேற் கொள்ள ஜனாதிபதி நட வடிக்கை எடுத்து வருவ தாக ஊடகத்துறை அமை ச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-
யுத்தம் முடிவடைவதோடு ஆயுத கலாசா ரம் தலைதூக்கியுள்ளது. சட்ட விரோத ஆயு தங்களை களைய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். சமா தான சூழல் ஏற் பட்டுள்ளதால் ஆயு தக் கலாசாரம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டியுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஜனாதிபதி யின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப் பட்டுள்ளன. நீதி சட்ட மறு சீரமைப்பு அமைச்சு சட்ட திருத்தத்துக்கான நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் மற்றும் சட்ட விரோத ஆயுதக் குழுக்களிடம் உள்ள ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இது தவிர பாதாள உலகத்தினை ஒழிக்கவும் போதைப் பொருள் பாவனையை தடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரதான பிரச்சினையாக இருந்த பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.







