Lankamuslim.org

One World One Ummah

Archive for July 2009

பலிபீடமாக மாறிய பள்ளிவாயல்! – எம். பி. எம். பைரூஸ்

leave a comment »

ஜேர்மனியில் நீதிமன்றினுள் வைத்து முஸ்லிம் பெண் ஒருவரை யூத இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குறித்து சில வாரங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளிலிருந்து மீள்வதற்கிடையில், இலங்கையின் பேருவளையில் பள்ளிவாசல் ஒன்றினுள் வைத்து முஸ்லிம்களை முஸ்லிம்களே வாள்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முனையாது கத்தியால் எதிர்கொள்ளத் துணிந்ததன் விளைவு இன்று இரு உயிர்களைப் பலியெடுத்து, 15 இற்கும் அதிகமானோரைக் காயப்படுத்தி, விலைமதிப்பிட முடியாத அல்லாஹ்வின் இல்லத்தை அடித்து நொருக்கித் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறது.

காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பேருவளை பள்ளிவாயல் படுகொலை சம்பவம் நடந்திருப்பது கவலைக்குரியது.

இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்குமே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்ற இச்சம்பவம், இந்நாட்டின் மும்மொழி ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊடகங்களும் இதனை ஒவ்வொரு விதமாக அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே அல்லது முஸ்லிம் அமைப்புகளிடையே அவ்வப் போது முரண்பாடுகள் எழுவதும் ஈற்றில் அவை வன்முறைகளில் முடிவதும் வழமையானவைதான். இருந்த போதிலும் இறுதியாக பேருவளையில் இரு தரப்பினரிடையே தோன்றிய கருத்து முரண்பாடு பள்ளிவாயலினுள் வைத்தே ஒரு சகோதரனை இன்னொரு சகோதரன் படுகொலை செய்யுமளவு பாரதூரமாக மாறியமை இதுவே முதற்தடவையாகும்.

உண்மையில் அங்கு என்னதான் நடந்தேறியது?

பேருவளை மஹகொட, மாளிகாச்சேனையில் அமைந்துள்ள “பைதுல் முபாறக் அல் முஸ்தபவிய்யா புகாரி தக்கியா’வின் 130 ஆவது வருடாந்த புகாரி கந்தூரி வைபவத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த பள்ளிவாயல் வளாகத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பள்ளிவாயலுக்கு மிகச் சமீபமாகவே தற்போது தாக்குதலுக்கு இலக்கான “ஜம்இய்யதுல் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா’ அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட “மஸ்ஜிதுர் ரஹ்மான்’ பள்ளிவாயல் அமைந்துள்ளது.

கந்தூரி நிறைவுற்ற நாளுக்கு மறுதினமான வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுர் ரஹ்மானில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி ஒருவர், புகாரி தக்கியாவில் நடைபெற்ற கந்தூரி குறித்து கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனமே குறித்த வன்முறையின் தோற்றுவாயாக அமைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி குத்பா நிறைவுற்று சில மணி நேரங்களின் பின்னர் அப்பகுதியில் சலசலப்பு தோன்றியுள்ளது. இரு தரப்பினதும் ஆதரவாளர்களிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 6 மணியளவில் “மஸ்ஜிதுர் ரஹ்மான்’ பள்ளிவாயல் வளாகத்தினுள் பிரவேசித்த சிலர் பள்ளிவாயலுக்கு சிறியளவில் சேதத்தை விளைவித்து விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து உடனடியாக பேருவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொலிஸார் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இச்சம்பவத்துக்குப் பின்னர் இரு தரப்பினரிடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளது. சிலவேளைகளில் மோதல்களும் நிகழக் கூடும் என அஞ்சிய பிரதேசவாசிகளில் சிலர் மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் புகாரி தக்கியா முக்கியஸ்தர்களுக்கு இது குறித்து அறிவித்ததுடன் பிரச்சினையை நிதானமாகக் கையாளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸாருக்கும் இதன் அபாயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் மீது தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என அஞ்சியதன் காரணமாக பள்ளிவாயலைப் பாதுகாக்கும் கடமையில் சுமார் 30 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் குறித்த இடத்திற்கு பொலிஸார் வந்து பாதுகாப்பு அளிப்பர் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில் இருந்தது. ஆனாலும் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை பொலிஸார் அங்கு வரவில்லை. வந்ததோ சுமார் 500 பேருக்கும் அதிகமான குண்டர் படைதான். கையில் கத்திகள், வாள்கள் மற்றும் சில கூரிய ஆயுதங்களுடன் மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் பிரவேசித்த அவர்கள் கையில் அகப்பட்ட சகலரையும் முடியுமானவரை தாக்கினர். பெரும் கூட்டத்தைக் கண்டு தப்பியோடியவர்களைத் தவிர மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் நின்றிருந்த சகலருமே தாக்குதலுக்கு இலக்காகினர். பள்ளிவாயலின் மலசல கூட பகுதிக்குள் ஒளிந்திருந்த முஹம்மது முஹைதீன் ( 37) முஹம்மது மாஹிர் (30 ) ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே கொலை செய்யப்பட்டனர். ஏனைய 15 இற்கும் அதிகமானோர் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு ஆளாகினர். அத்துடன் பள்ளிவாயலின் கதவுகள், யன்னல்கள், தளபாடங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாயல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கர வண்டிகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாயலுடன் இணைந்ததாக அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவும் மருத்துவ நிலையம் ஒன்றும் இதன்போது சேதமாக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் மரணமடைந்த இருவரினதும் ஜனாஸாக்கள் சனிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன. ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் நல்லடக்கத்தில் கலந்துகொண்டோர் பேருவளை பொலிஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பினர்.இதனையடுத்து அங்கு மீண்டும் பதற்ற நிலை தோன்றியதால் மஹாகொடை மற்றும் மாளிகாச்சேனை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலையும் பொலிசார் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.

இதற்கிடையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பலரை பொலிசார் கைது செய்தனர். சனிக்கிழமை காலை பேருவளை பகுதியிலிருந்து காலி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றைத் தடுத்து நிறுத்திய பொலிசார் அதிலிருந்த 28 பேரை கைது செய்தனர். இறுதியாக இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை 131 பேர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேருவளை புகாரி தக்கியா நிருவாகத்தினர் மேற்படி பிரச்சினையை தூண்டிய மௌலவி குறித்து தாம் பொலிசில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதனாலேயே மக்கள் கொந்தளித்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

“மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி மக்களின் மனம் புண்படும்படி பேசினார். இது தொடர்பாக தக்கியாவைச் சேர்ந்த மௌலவிமாரும் சட்டத்தரணிகளும் பொலிசில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து குறித்த மௌலவியை இரண்டு மணித்தியாலங்களுக்குள் பொலிசில் ஒப்படைப்பதாக மஸ்ஜிதுர் ரஹ்மான் நிருவாகிகள் உறுதியளித்தனர். இருப்பினும் இது நடக்காததால் ஆவேசமடைந்த மக்கள் மஸ்ஜிதுர் ரஹ்மானை நோக்கிச் சென்றனர். அங்கு இரு தரப்பினரிடையேயும் கைகலப்பு நடந்தது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் மார்க்கத்தின் பெயரால் எழுந்த முரண்பாடு முழு முஸ்லிம் சமூகத்தையுமே வெட்கித் தலைகுனியச் செய்யுமளவு வன்முறையில் முடிந்திருக்கிறது.மார்க்க விவகாரங்கள் மற்றும் தஃவா பிரசாரங்கள் தொடர்பில் போதிய கள அனுபவமும் தெளிவான சிந்தனையுமற்றவர்களாலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி மார்க்க முரண்பாடுகள் தோற்றம் பெறுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்வாறானதொரு அகோரம் நிகழ்ந்தேறிய பின்னரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கத்தின் பெயரால் பிளவுகளும் சண்டை சச்சரவுகளும் நிகழ்ந்தேறுவது அழகல்ல. அது நாம் பின்பற்றும் மார்க்கம் நமக்குக் காட்டித் தந்த வழிமுறையுமல்ல.

நன்றி முஸ்லிம் காடியன்

Written by lankamuslim

July 31, 2009 at 9:46 am

ஜனாதிபதி மஹிந்த -பஹ்ரேய்ன் பிரதமர் சந்திப்பு: இருதரப்பு பேச்சு: மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

leave a comment »

0013729c0495096afb5427

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பஹ்ரேய்ன் பிரதமர் கலீபா பின் ஷல்மான் அலி கலீபா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் மூன்று முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. வடக்கில் இடம்பெயர்ந்தோரின் புனர் வாழவு மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான பூரண ஒத்துழைப்பை தமது அரசாங்கம் வழங்குமென பஹ்ரேய்ன் பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய பஹ்ரேய்ன் பிரதமர், பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளுக்கும் இது சிறந்த முன்னுதாரணமாக அமையுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

July 30, 2009 at 8:56 pm

பிரிகேடியர்கள் மூவர் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு!

leave a comment »

kk

புலிகளை அழிக்கும் வன்னி படைநடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய பிரிகேடியர்கள் மூவருக்கு மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 58வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய பிரிகேடியர் சர்வேந்திர சில்வா, 55வது படை பிரிவுக்கு தலைமை வகித்த பிரசண்ணா டி.சில்வா, 59வது படையணிக்கு தலைமை வகித்த சார்ஜி கமலகே ஆகிய பிரிகேடியர்களே மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Written by lankamuslim

July 30, 2009 at 12:13 pm

இன்று காளை தலையில் சுடப்பட்ட நிலையில் மேலும் இரண்டு சடலங்கள்

leave a comment »

போலீஸ் தகவல் இன்று காளை  இரண்டு இனம்காணப்படாத துப்பாக்கி குண்டு தலைகளில்   துளைக்கப்பட்ட சடலங்களை  தேல்கண்ட , ரட்டனபிட்டிய பகுதில் காணப்பதுவதாக கூறுகிறது இச்சடலங்கள் இன்னும் இனம்காணப்பவில்லை.

dailymirror

Written by lankamuslim

July 30, 2009 at 11:55 am

நேற்று காலையில் இருவர் சுட்டு கொலை!

leave a comment »

போலீஸ் தகவல் நேற்று காலையில்   குடு  அஜித்  வயது 45 என்பவர் காலியில்  சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்    மற்றும்  கொழும்பு, மாளிகாவத்தைப் பகுதியில் வைத்து போலீசார் “ஆமி  சப்ப” முஹம்மத்   நிஷாத் என்ற இளைஞர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். பாதாளக் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் ஒரு தொகுதி ஆயுதங்களைக் காட்டித் தருவதாகக் கூறியதால் தாம் அவரை பெலியகொடவுக்குக் கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த கைக்குண்டால் போலீசாரைத் தாக்க முயன்றதால் சுட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

Written by lankamuslim

July 30, 2009 at 11:42 am

பஹ்ரேன் பிரதமர் ஜனாதிபதியுடன் சந்திப்பு பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளது

leave a comment »

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பஹ்ரேன் பிரதமர் ஷேக் காலிபா பின் சல்மான் அல்-பாலிபா இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையின் பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

July 29, 2009 at 11:24 pm

குவைத் ஒருங்கிணைந்த நிவாரணக்குழுவின் பிரதிநிதிகள் முசலி பிரதேசத்திற்கு விஜயம்

leave a comment »

குவைத் ஒருங்கிணைந்த நிவாரணகுழுவின் இரு பிரதிநிதிகள் நேற்று மன்னார் முசலி பிரதேசத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டனர் செரண்டிப் நிவாரண மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இலங்கை வந்த பிரதிநிதிகள் மற்றும் மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின்பேரில் முசலிக்கு விஜயம் செய்தனர். தற்போது அரசாங்கம் முசலி பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததன் பிற்பாடு அங்கு மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு  குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் பிரதிநிதிகளினால் கொண்டு வரப்பட்ட ஒருதொகை உலர் உணவுப் பொதிகள் அம்மக்;களுக்கு கையளிக்கப்பட்டது. குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் இணைப்பாளர்களான பத்ர்ஆஸ் சம்ரூக் மற்றும் பைசல் யகூத் சரண்டிப் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் முசலிக்கு சென்று இதனை கையளித்தனர். இதேவேளை வவுனியா சாளம்பைபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் அநுராதபுரம் இக்கிரிகொள்ளாவ நலன்புரி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் ரிஷாட் மற்றும் பிரதிநிதிகள் இந்த நிவாரணப் பொருட்களை கையளித்தனர்.

Written by lankamuslim

July 29, 2009 at 11:17 pm

பேருவளை:131 பேர் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை தடுப்புகாவளில்

leave a comment »

கடந்த 24-7-2009 அன்று இரவு 12 மணி அளவில் பேருவளையில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசலுக்குள் புகாரி தரீகாவை சேர்ந்த கும்பல் கொலைவெறியுடன் கூர்மையான வாழ்களுடன் நுழைந்து பள்ளிவாசலில் இருந்த சுமார் 20 பேரை வெட்டி தாக்கினர். இத்தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்தனர். சகோதரர்  மாஹிர்,சகோதரர் முஹம்மது ஆகிய இருவர்  சம்பவ இடத்திலேயே பலியாகினர்

இது வரையில் 131 பேர் வரை கைதானதாகவும் சரன் அடைந்ததாகவும்    போலீஸ் கூறுகிறது இவர்கள் களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டனர்   இவர்களை ஆகஸ்ட் மாதம் 6ம்  திகதி வரை தடுப்புகாவளில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Written by lankamuslim

July 29, 2009 at 4:31 pm

லண்டனுக்கான இலங்கையின் துணை தூதர் ஹம்ஸாவின் வாகனம் மீது தாக்குதல்

leave a comment »

லண்டனுக்கான இலங்கையின் துணை தூதர் ஹம்ஸாவின் வாகனம் மீது தாக்குதல் லண்டனுக்கான இலங்கை துணைத் தூதுவர் ஹம்ஸாவின் வாகனம் நேற்று முன்தினம் இரவு இந்திய  புலி  கோஷ்டியொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, மேலும் தெரியவருவதாவது

லண்டனிலுள்ள இலங்கை தூதராலயத்திற்கு துணைத் தூதுவராக மாற்றலாகிச் செல்வதையொட்டி தூதுவர் ஹம்ஸா ஆந்திர தொழில் கூட்டமைப்பைச் சார்ந்த தனது நண்பர்களுக்கு விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இவ்விருந்து சென்னையில், உள்ள ஜிம்கான கிளப்பில் நடைபெற்றது. இதனைக் கேள்வியுற்ற புலி  கோஷ்டி அங்கு சென்று தங்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கோரியுள்ளார்கள்.

அவர்களுக்கு அனுமதி மறுக்கவே, வெளியே வந்த புலி  கோஷ்டி. பின்னர் விருந்து முடிந்து வெளியே வந்த ஹம்ஸாவின் காரை சூழ்ந்து சுமார் 20 நிமிடங்கள் முற்றுகையிட்டதுடன்,  இதனை அறிந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஹம்ஸாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதையடுத்து அங்கு நிறுத்தபட்டிருந்த  அவரது காரை சேதப்படுத்திவிட்டு  தப்பி ஓடிவிட்டனர் , தாக்குதலில் ஈடுபட்ட புலி  கோஷ்டியை  தேடி வருவதாக தமிழக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன

புலிகளுக்கு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் குரல் எழுந்தபோதெல்லாம் இந்தியத் தலைமையுடன் தொடர்பு கொண்டு போராட்டத்தைத் தணிய வைத்தார் என்பதற்காக அவரைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் லண்டனில் உள்ள துணைத் தூதரகத்திற்கு அவரை மாற்றி உயர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி மகிந்தா .

Written by lankamuslim

July 29, 2009 at 4:01 pm

ஒரே இரவில் சீனாவில் சுமார் 10,000 உய்குர் முஸ்லிம்களை காணவில்லை

leave a comment »

சீனாவில் சுமார் 10,000 உய்குர்  முஸ்லிம்களைக் காணவில்லை என்றும், அவர்களை சீன அரசு கொன்றிருக்கலாம் என்றும் முஸ்லிம்  தலைவர் ரெபியா கதீர்  கூறியுள்ளார். சீனாவின் சிஞ்சியான் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கும், பெரும்பான்மை இன சீனர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் துவக்கத்தில் அங்கு வெடித்த கலவரத்தில் 185 க்கும் அதிகமான முஸ்லிம்கள்  கொல்லப்பட்டனர்.

இருப்பினும், அங்கு தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், உய்குர் முஸ்லிம்ளை இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று சீன அரசு 28/7/2009 நேற்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில் சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவிலிருந்து செயல்படும் உலக உய்குர் சபையின் தலைவரான ரெபியா கதீர், ஐந்து நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ளார்.

அங்கு அவர் ஜப்பான் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து,உய்குர் இன இஸ்லாமியர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் , இன்று டோக்கியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரெபியா கதீர், இந்த மாதம் தொடக்கத்தில் சிஞ்சியான் மாகாணத்தில் கலவரம் நடந்தபோது, ஜூலை 5 ஆம் தேதியன்று ஒரே நாள் இரவில் சுமார் 10,000 க்கும் அதிமான உய்குர்  இஸ்லாமியர்கள் காணாமல் போய்விட்டதாக கூறினார்.

அன்றைய தினம் இரவில் மின்தடையை ஏற்படுத்திய சீன அரசு, இருட்டில் உய்குர் இனத்தவர்களை சரமாரியாக சுட்டுக்கொன்றதாகவும், அடுத்த நாள் காலை மக்கள் விழித்து பார்த்தபோது ஏராளமான உய்குர் இன ஆண்கள் காணாமல் போய்விட்டதை அறிந்த்து கொண்டதாகவும் ரெபியா கதீர் தெரிவித்தார்.

உய்குர் இன மக்களை அழிக்க சீன அரசு முயற்சிப்பதாகவும், இதனை உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே ரேபியா கதீரை ஜப்பானுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தும், ஜப்பான் அரசு அதனை பொருட்படுத்தாமல் அவரது பயணத்திற்கு அனுமதி அளித்துள்ளது குறித்து சீனா அயலுறவுத் துறை அமைச்சகம கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கும் அணில் சீனாவும் இணைந்துள்ளது

Written by lankamuslim

July 29, 2009 at 3:36 pm

பேருவளையில் நடந்தது என்ன? விடியோ காட்சி தவ்ஹீத் ஜமாஅத்தினரால் வெளியிடப்பட்டது Beruwala Mosque video

leave a comment »

இந்த  விடியோ காட்சி தவ்ஹீத் ஜமாஅத்தினரால் வெளியிடப்பட்டது

கடந்த 24-7-2009 அன்று இரவு 12 மணி அளவில் பேருவளையில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசலுக்குள் புகாரி தரீகாவை சேர்ந்த கும்பல் கொலைவெறியுடன் கூர்மையான வாழ்களுடன் நுழைந்து பள்ளிவாசலில் இருந்த சுமார் 20 பேரை வெட்டி தாக்கினர். இத்தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்தனர். மாஹிர், முஹம்மது ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

இது அஹ்மத்  பின்  முஹம்மத்தினால் வழிநடத்தபட்டதாக கூறப்டுகின்றது  இது வரையில் 105 பேர் கைதானதாக  போலீஸ் கூறுகிறது  ஆனால் இதன் பிரதான சந்தேக நபர் இன்னும்  கைதாகவில்லை

இத்தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்திருந்தால் சேதங்களை; தடுக்கப்பட்ருக்கும் ஆனால் அவர்கள் உடனே வரவில்லை

Written by lankamuslim

July 29, 2009 at 12:01 am

ஹிஜாப் எதற்கும் தடை இல்லை என்பதை காட்டும் ஆவண காட்சி

leave a comment »

Written by lankamuslim

July 28, 2009 at 8:33 pm

மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியை பாடசாலைக்கு எடுத்துச் செல்ல உடனடித் தடை!

leave a comment »

மாணவர்கள் கையடக்கத் தொலை பேசிகளை பாடசாலைக்கு எடுத்துச் செல் வதற்கான தடை உடனடியாக நடை முறைக்கு வரும். கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான உத்தரவை நேற்று விடுத்துள்ளார். மாணவர்கள் கையடக்கத் தொலை பேசிகளை பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்வதால் வேண்டத்தகாத மற்றும் அநாவசியமான சம்பவங்கள் இடம்பெறு வது கண்டறியப்பட்டது பாடசாலைகளில் பணிபுரியும் கல்விசாராத ஊழியர்கள் மூலம் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வதனைத் தடுக்கும் புதிய நடைமுறை அமுல் செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Written by lankamuslim

July 28, 2009 at 7:44 pm

வடக்கில்லிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை உள்ளடக்கி மீள்குடியேற்றம் சமாந்தரமாக இடம்பெற வேண்டுமாம் ??

leave a comment »

யாழ்ப்பாணத்திலிருந்து  வெளியேற்றப்பட்ட  புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களையும் மீளக்குடியமர்த்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலை இரா.சம்பந்தன் இம் மீள் குடியேற்றம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் ஒரே நாளில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

யாழ்.மாநகர சபைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எம். அலீமை ஆதரித்து ரத்மல்யாய முஹம்மதிய்யா புரம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

சம்பந்தன் வடக்கில்லிருந்து  முஸ்லிம்கள பலவந்தமாக  வெளியேற்றப்பட்டபோது புலிகளின் தலைவரிடம் கூறவேண்டியவற்றை  இங்குவந்து புலம்புகிறார் எனறு முஸ்லிம் மக்கள் பேசிகொண்டனர்

Written by lankamuslim

July 28, 2009 at 12:11 pm

இறக்குவானை மாணவன் கொலை சந்தேக நபரின் வீடு தீக்கிரையானது

leave a comment »

இறக்குவானை பொலிஸ் பிரிவிலுள்ள இறக்குவானை எதர்லி தோட்ட மாணவன் கொலை செய்யப்பட்டது குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரின் வீடு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை மாலை இத்தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ் மகா வித்தியாலய உயர்தர மாணவன் யசோதரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன் அவரின் தந்தை மற்றும் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்து இரத்தினபுரி மற்றும் இறக்குவானை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

.இது குறித்து 5 பேரை சந்தேகத்தின் பேரில் இறக்குவானை பொலிஸார் கைது செய்து பெல்மதுளை மஜிஸ்ரேட் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதில் அவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நடைபெற்ற மறுதினம் மாலை சனிக்கிழமை இந்த சந்தேக நபர்களின் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இறக்குவானைப் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கசிப்பு விற்பனையாளர்களுக்கும் கோவில் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென தெரியவந்துள்ளது.

Written by lankamuslim

July 28, 2009 at 12:05 pm

ஆபாச இணையத்தளங்களை தடைசெய்யுமாறு உள்நாட்டு சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தல்

leave a comment »

பாலியல் மற்றும் ஆபாச விடயங்களடங்கிய இணையத்தளங்களை தடை செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சகல உள்நாட்டு இணையத்தள சேவை வழங்குநர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.பாலியல் விடயங்களடங்கிய 12 இணையத்தளங்களை தடைசெய்யுமாறு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் நிஷாந்த அப்புஆராச்சி இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு விடுத்த உத்தரவுக்கு அமையவே ஆணைக்குழு நேற்று இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது.

இதேநேரம், இம்மாதிரியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களை கண்டு பிடிக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் தங்களுக்கு உதவி புரியுமென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நேற்று விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thinakkura

Written by lankamuslim

July 28, 2009 at 12:01 pm

முகாம்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து உதவிக்கரம்

leave a comment »

வன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்ற  தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் இலங்கை  முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்தமை அறிந்ததே

ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களின் ஊடாக நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்புமாறு ஜம் இயத்துல் உலமாவின் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஜமா அத்தே இஸ்லாமிய சமுக சேவை பிரிவு  வவுனியாவுக்கு அனுப்ப சென்று  அங்கு உணவை சமைத்து வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்து

வவுனியா மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழுகின்ற முஸ்லிம்கள் மதியஉணவு மற்றும் உணவுப்பொருட்களை உடன் சேகரித்து வவுனியா நலன்புரிநிலையங்களில் உள்ள அகதிகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்து

குடிநீர் போத்தல், குழந்தைகளுக்கான பால்மா வகைகள், பிஸ்கற் வகைகள், பெண்களுக்கான உடுபுடவைகள் , சுகாதாரத் துணிகள், பெட்சீற், சாரம் போன்றவற்றைச் சேகரித்து வழங்கினர

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தெமட்டகொடவில் உள்ள வை.எம்.எம்.ஏ.தலைமையகத்தில் இப்பொருட்களை ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது  மேலதிக விபரங்களுக்கு 0777797311 அல்லது 0772612288 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி விடுக்கப்பட்ட அழைப்புக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து  கிடைத்த பதில் மிகவும் திருப்திகரமாக அமைந்தது என்பதை காட்டும் ஆவணப்படம்

ஆவணப்படம் யார்ட் டிவி

Written by lankamuslim

July 27, 2009 at 5:48 pm

சகோதர கொலை புரிந்த பாவிகள்

leave a comment »

அன்மையில் 27.7.2009 பேருவளை பகுதியில் அசம்பாவிதம் ஒன்றின்போது அல்லாஹ்வின் மாளிகை (மஸ்ஜித்  ரகுமான்) ஒன்றும் பல  அல் குர்ஆனின் பிரதிகளும் தீ மூட்டப்பட்டது   இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் 8 பேர்  காயமடைந்தனர் இந்த கொலை வெறியாட்டதுக்கு   காதிரியா தரீக்கா பிரதான காரணமாக கூறப்படுகிறது  இந்த வீரமிக்க  போராட்டம்  காதிரியா தரீக்காவின்  தலைவர் அஹ்மத்  பின்  முஹம்மத்தினால் வழிநடத்தபட்டதாக கூறப்டுகின்றது  இது வரையில் நுறு பேர் கைதானதாக  போலீஸ் கூறுகிறது  ஆனால் இதன் பிரதான சந்தேக நபர் இன்னும்  கைதாகவில்லை 26.7.2009 மகாகோட மற்றும் ஹெட்டிமுள்ள பகுதில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது    இவர்களுக்கு அரசியல் பின்னி கொண்ட கும்பல் ஒன்று துணை புரிந்ததாக சொல்லப்படுகின்றது அல்லாஹ்வின் மாளிகையில் அல் குர்ஆனில்   கை வைக்கும் அளவிற்கு இஸ்லாம் தெரியாத மூடர்கள் காட்டுமிராண்டிகள் கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கபப்டவேண்டும் இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு இருக்கபோகிறது  இவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சகோதர கொலை புரிந்த பாவிகள்

510

மூமின்கள் தம்மிடம் பிணக்குகளோ, அபிப்பிராயப் பேதங்களோ ஏற்படும் போது பின்வரும் மறைவசனத்துக்கு அமைவாக அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனின் பக்கமும், அவனது ரஸுலுடைய ஸுன்னாவின் பக்கமும் திரும்பி விடுவார்கள்.

“நீங்கள் ஏதேனுமொரு விவகாரத்தில் பிணங்கிக் கொண்டால், அதனை அல்லாஹ்வின் பாலும் அவனுடைய ரஸுலின் பாலும் மீட்டி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்றவர்களாக இருந்தால் (அவ்வாறு செய்யத் தவற மாட்டீர்கள்) இதுவே மிகச் சிறந்ததும், மிக்க அழகான முடிவுமாகும்” (4:59).

“(நபியே!) உமது இறைவனின் மீது சத்தியமாக (மூமின்களாகிய) அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிபடாத வரையில் அவர்கள் (உண்மை) மூமின்களாக ஆக மாட்டார்கள்” (4:65).

மூமின்கள் பின்வரும் மறை வசனத்துக்கமைவாக அல்லாஹ்வுடைய சொல்லையும், அவனது ரஸுலுடைய சொல்லையும் விட மேலாக வேறெவருடைய சொல்லுக்கும் முக்கியத்துமளிக்க மாட்டார்கள்.

“மூமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸுலுக்கும் முன்பாக (பேசுவதில்) முந்திக் கொள்ளாதீர்கள். (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும், நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்” (49:01).

Written by lankamuslim

July 27, 2009 at 1:36 pm

” முஸ்லிம் எவராக இருந்தாலும் அவர்களை சோதனையிட வேண்டியது விமான நிறுவனத்தின் கடமை”

leave a comment »

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை “கொண்டினென்டல் எயார்லைன்ஸ்’ நிறுவனம் சோதனையிட்டதில் தவறேதும் இல்லை என்று அமெரிக்க போக்குவரதது பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

டில்லியிலிருந்து கடந்த ஏப்ரலில் நியூயோர்க்கிற்கு கலாம் பயணம் மேற்கொண்ட போது, பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் மரபுகளை மீறி அவர் மேற்படி விமான நிறுவனத்தால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கலாமிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டதாக கொண்டினென்டல் அறிவித்தது. ஆனால், தன்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்று கலாம் கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க போக்குவரதது பாதுகாப்பு அமைப்பு எவராக இருந்தாலும் அவர்களை சோதனையிட வேண்டியது விமான நிறுவனத்தின் கடமை. அதைத் தான் அவர்கள் செய்துள்ளனர். இதில் தவறேதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

அப்துல் கலாம் முஸ்லிம் அல்வா அதனால்தான் கடும் சோதனை- அமெரிக்க நிறுவனம் இப்டி கூறினால் இன்னம் பொருத்தமாக இருக்கும் ” முஸ்லிம் எவராக இருந்தாலும் அவர்களை சோதனையிட வேண்டியது விமான நிறுவனத்தின் கடமை”

Written by lankamuslim

July 27, 2009 at 11:58 am

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் – (பாகம் -8)

leave a comment »


எஸ்.எம்.எம் பஷீர்

ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளைச் சந்தித்தபொழுது பிரபாகரனுடைய மிக முக்கிய நிபந்தனை வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 6 வது திருத்தச்சட்டம் நீக்கப்படவேண்டும். மேலும் எம்மக்கள் மத்தியில் புரிந்துணர்வான சூழல் ஏற்படட்டும் ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்திக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். (தகவல் அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை —அற்புதன்) அதேவேளை 09.05.1990 ம் ஆண்டு புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் பலிகளின் மக்கள் மன்னணி விடுத்த அறிக்கையில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இலங்கைக் குடி மக்களே! அவர்கள் அனைவருக்கும் குடியரிமை உடனே வழங்கப்பட வேண்டும். மலையக மக்களை திருப்பி அனுப்புவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அந்த மக்களை கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்டவை. ராஜீவ் –ஜே.ஆர் ஒப்பந்தம் இன்று செத்துவிட்டதைப் போலவே அந்தப் பழைய ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றவையாகும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினதும், புலிகளினதும் ஒப்பந்த சரத்துக்களும் புலிகளின் நிர்த்தாட்சண்யமற்ற செயற்பாடுகளும் நோக்கப்படவேண்டும். இலங்கை–இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் மக்கள் முன்னணியின் தலைவரான மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரராஜா திருகோணமலையில் இடம்பெற்று ஒரு கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் அவர்களின் தனித்துவ அரசியலுக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்திருந்தார். மலையக மக்களின் குடியுரிமை குறித்தும் அவர்கள் திருப்பியனுப்பக்கூடாது (இந்தியாவிற்கு) என்று மே மாதம் 1990 ல் அறிக்கைவிட்ட புலிகள்தான் ஆகஸ்ட் மாதம் கிழக்கில் முஸ்லிம் மக்கள்மீதான படுகொலையையும் அக்டோபர் மாதம் வடமாகாண வெளியேற்றத்தினையும். தமிழ் மக்களுடன் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள்மீது மேற்கொண்டனர்.
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளின் நன்மதிப்பை பெற்றிருந்தமைக்கு முக்கிய காரணம் அவரது ராஜதந்திர அணுகுமுறைதான் என்றும் புலிகள் பின்னா குறிப்பிட்டனர். இவரது புலிகளுடனான கிழக்கு மாகாண சந்திப்பு குறிதது இக்கட்டுரையின் தொடர்ச்சியில் பின்னர் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய தேவையும் உள்ளது. இக்கால கட்டத்தில முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி புலிகளுடன் ஒப்பந்தம ஒன்றினைச் செய்வதற்கு இந்திய –இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் செயற்பட்ட சம்பவங்கள் முஸ்லிம் அரசியல் குறிப்பாக வட, கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் இதன் பின்னணியிலுள்ள நோக்கங்கள், செயற்பாடுகள் ஒருபுறம் சமூகப் பாதுகாப்பையும் இன சௌகன்யத்தையும் எற்படுத்துவதற்காக செய்யப்பட்டாலும் மறுபுறத்தில் புலிகளின் தந்திரோபாய நலன்களுக்கு முஸ்லிம்களின் தலைமைததுவங்கள் எவ்வாறு பலியானார்கள்; என்ற கேள்வியும் எழுகின்றது. இந்திய—இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான குறிப்பாக ஜனாப் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு நிலைப்பாடுகளை கட்டமைத்து தமிழ் தேசிய பாரம்பரிய கோட்பாட்டினை முன்னெடுக்கும் செயற்பாடுகளை புலிகள் மேற்கொண்டனர்.
முஸ்லிம்களுக்கான தனித்துவ கட்சி ஒன்றினை கட்டியெழுப்பவதற்கான முயற்சியில் குறிப்பாக கிழக்கினை அடிப்படையாகக்கொண்டு கொழும்பிலே பினனர் முஸ்லிம் காங்கிரஸில் பிரபல்யமான பலரை உள்வாங்கிய தொடாச்சியான கலந்துரையாடல்களை; மேற்கொண்டிருந்த பின்னணியையும் எம்.ஐ.எம் முகைதீன கொண்டவர். அவா பின்னர் உருவாக்கிய அரசியல் கட்சியான முஸ்லிம்.ஐக்கிய. ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் எனக்கும் இன்னும் பலருக்கும் அனுப்பிய கடிதம் ஒனறில் குறிப்பிடுகையில்
“ எமது தீவிர செயற்பாடுகளின் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடிப் பேச்சுவாhத்தைகளை நடாத்துவதற்கான அழைப்பினையும் எமக்கு விடுத்தனர். இதனை ஏற்று நாங்கள் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தினையும் நடந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளையும் நீங்கள் அறிவீர்கள். இக்கட்டத்தில் நாங்கள் மிகப் பெருமையுடனும் மகிழ்ச்சியடனும் கூறிக்கொள்ள விரும்புவது எங்களது பேச்சுவார்த்தையின் பின்னர் இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு சிறிய அளவிலான தாக்குதலும் எற்படவில்லை என்பதைத்தான். தங்களது கட்சி மகாநாட்டிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்ட இக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தது
வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களாகிய எமக்கு தற்போதைய சூழ்நிலையில் எற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து எம்மைப் பாதுகாத்து, நிரந்தரமான அமைதிக்கும், உரிமைகளுக்கும், பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய யதார்த்தபூர்வமானதும், துரதிருஸ்டி வாய்ந்ததுமான ஒரு கொள்கைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருந்தது. இதுபற்றிய ஒரு அக்கறையும், கவலையும் எங்களைப்போலவே இச்சமூதாயத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான உங்களுக்கும் இருந்தது. எமது சமூதாயத்தில் ஏற்கனவே ஒரு அரசியல்கட்சி (இங்கு முஸ்லிம் காங்கிரஸினரையே குறிப்பிடப்பட்டுள்ளது.) தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளதை முழுமையாக தெரிந்திருந்தும் இன்னொரு கொள்கையினை முன்வைக்கும்போது இது முஸ்லிம்களை பிளவுபடுத்தும் முயற்சி என்ற அங்கலாய்ப்பினை பரவலாக ஏற்படுத்தும் என்பதனை பூரணமாக அறிந்திருந்தும் நாம் எமது சமூதாயத்தை குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்லவேண்டியது எமது கட்டாயக் கடமையென உணர்ந்தோம். இதன் விளைவாகவே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக இலங்கையிலும் பெரிதும் மதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முதன்முதலில் தேர்தல் களத்தில் இறங்கிய டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அவர்களை தமது புலிகளுடனான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைத்துவத்திற்காக மு.ஐ.வி.முன்னணியினர் அணுகினர். இவர்களின் உள்நோக்கம் புலிகளின அங்கீகாரத்துடன், அஷரப் அவர்களின் அரசியல் எழுச்சியினை தடுத்து தங்களைப் பதிலீடு செய்வதுமாகும். இவ்வொப்பந்தம் புலிகள் –முஸ்லிம் ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டாலும் கிழக்கில் அஷரப்பின் எதிரணியினரால் முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த அக்காலகட்டத்தில ;அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜனாப் பதியுதீன் அவர்களின் முகவரி அவர்களுக்கு கைகொடுத்ததாயினும இவ்வொப்பந்த அறிக்கையில் எம்.ஐ.எம் முகைதீனும், கிருஸ்னகுமாரும் (கிட்டு) ஒப்பமிட்டார்கள். எனவே இது உண்மையில் முகைதீன் –கிட்டு ஒப்பந்தமெனச் சொல்வதும் பொருத்தமாயிருக்கலாம். ஓப்பந்தத்திலுள்ள முக்கிய விடயங்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம்கொண்ட முஸ்லிம்களின் பகைப்புலத்தில் அதன் உள்ளடக்கம் முக்கியம் வாய்ந்ததாகவே கருதப்பட்டது. புலிகள் அஷரப்பின் எதிரணியினரின் அரசியலையும் முஸ்லிம்களின் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டனர்.
இவ்வொப்பந்தத்தின்மூலம் புலிகளின் அடிப்படை இலக்கான தமிழர் பாரம்பரிய தாயகக்கோட்பாடான இலக்கினை ஆதரிபப்தென்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாயினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்படும் தனித்துவமான ஒரு இனக்குழு என இது அடிப்படையில் தனித்தேசிய அடையாளத்தினை முஸ்லிம்களால் அவ்வப்போது முன்வைக்கப்படும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையினை மறுப்பதாக அமைந்திருந்தது. ( They (Muslims ) are a distinct ethnic group falling within the totality of Tamil nationality ) இக்குழுவினர் இலங்கை திரும்பியதும் முதன்; முதல் எம்.ஐ.எம் முகைதீன் இந்தியப பிரதமரை யுத்த நிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்கும் பிரகடனத்தினை வெளியிடுமாறும் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடரும்………

Written by lankamuslim

July 26, 2009 at 8:49 pm

கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்துவது அனைவர் மீதும் கடமை

leave a comment »

வீரமிக்க இஸ்லாமிய வரலாறு பற்றியும் இஸ்லாமிய வரலாறு கண்ட வீரமிக்க இஸ்லாமிய போராளிகள் பற்றியும் இஸ்லாமிய கிலாபத் 1924ல் விழ்ச்சிக்கு காரணமான துரோகி முஸ்தபா  கமால் அதாதுர்  பற்றியும் இஸ்லாமிய கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்துவது அனைவர் மீதும் கடமை என்பதை கூறும் ஆங்கில பாடல்

Written by lankamuslim

July 26, 2009 at 6:09 pm

Posted in Uncategorized

ஈரானிய துணை ஜனாதிபதி பணி நீக்கம்

leave a comment »

ஜனாதிபதி எஸ்பான்டியர் ராஹிம் மாஷாயியை ஜனாதிபதி முகமட் அகமட்நிஜாட் பணி நீக்கம் செய்துள்ளார்.

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல்-கொமேனியின் கட்டளைக்கு ஏற்ப ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்ட காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாஷாயை பணி நீக்குவது தொடர்பில் கடந்த ஒருவார காலமாக ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கொமேனிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட துணை ஜனாதிபதி மாஷாய் அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடுகளை மதிக்காது செயற்பட்டு வருவதாக அயதுல்லா கொமேனி கடித மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி முஹமட் அஹமட்நிஜாடின், துணை ஜனாதிபதியை பணி நீக்கம் செய்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அயதுல்லா கொமேனி அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதி தேசிய தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய கடும்போக்குடைய பல்கலைக்கழக மாணவர்கள் துணை ஜனாதிபதியை பணி நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

virakesari

Written by lankamuslim

July 26, 2009 at 3:08 pm

யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் 4559 பேருக்கான வாக்காளர் அட்டைகள்

leave a comment »

யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் 4559 பேருக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்வதற்கு கிடைக்கப்பெற்றுள்ளதக மாவட்ட தபால் நிலைய பொறுப்பதிகாரி எம்.றியாஸ்டீன் தெரிவித்தார்.இதனடிப்படையில், புத்தளத்தில் 3766 பேரும் பாலாவியில் 469 பேரும் மதுரங்குளியில் 82 பேரும் கல்பிட்டியில் 46 பேரும் பத்துளுஓயாவில் 24 பேரும் வாக்களிக்கவென வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உரியவர்களின் முகவரிக்கு இந்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் யாழ். மாநகரசபைக்கு வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கென 5 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.

புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரி, பாலாவி சிங்கள பாடசாலை, கல்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலை, புளிச்சாக்குளம் உமர் பாரூக் வித்தியாலயம் என்பவற்றில் தலா ஒவ்வொரு வாக்குச் சாவடிகளும் தில்லையடி முஸ்லிம் வித்தியாலயத்தில் இருவாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Written by lankamuslim

July 26, 2009 at 12:51 am

வெள்ளவாயவில் 2 இளைஞர் சுட்டுக்கொலை

leave a comment »

மொனராகலை வெள்ளவாய தெமலிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இவ்விருவரது சடலங்களும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லுனுகம்வெகர, தனமல்விலவைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்களிடையே இடம்பெறும் தகராறு முற்றியே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் அந்தப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லுனுகம்வெகர பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

July 26, 2009 at 12:40 am

பாபர் பள்ளி ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து இந்திய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

leave a comment »

உத்திரப்பிரதேசத்தில் பாபர் மஸ்ஜித் நிலவக்கில் தொடர்புடைய 23 கோப்புகள் மாயமானதாக கூறுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. இது தொடர்பாக உத்திரப்பிரதேச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய இப்படிப்பட்ட முக்கியமான கோப்புகள் காணாமல் போனால் இந்திய நாட்டில் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் மாற்றலாம், மறைக்கலாம் என்ற நிலை உருவானால் சிறுபான்மை பிரிவு மக்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கும் வகையில் இந்திய முஸ்லிம்கள் நேற்று (24-7-2009)  கண்டன ஆர்ப்பாட்டம்

Written by lankamuslim

July 25, 2009 at 2:15 pm

முஸ்லிம்கள் தம்மத்தியில் பிரச்சினைகளை தவிர்கவேண்டும்

leave a comment »

நேற்று (24-7-2009) பேருவளயில் இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் 8 பேர்  காயம்

பேருவள பகுதியில் அசம்பாவிதம் ஒன்றின்போது இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் 8 பேர்  காயமடைந்தனர் இந்த கொலை சம்பவத்துக்கு பிரச்சாரத்தின்போது  பரிமாறப்பட்ட வார்த்தைகள் பிரதான காரணமாக கூறப்படுகிறது இது பிற்போக்கான மூட பழக்கவழக்கங்கள்   மூட நம்பிக்கைகள்  என்பனவற்றில்  முழ்கிக்கிடக்கும்  மக்கள் மத்தியில் அதற்கு  எதிராக பிரச்சாரம் செய்தபோது பிரச்சாரத்தில் ஈடுபட்ட    குழுவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை இருவரின் கொலையில்  முடிந்துள்ளது இது நன்மைகளின் மாதம் ரமழான் நெருங்கி வரும்வேளையில் அனைத்து முஸ்லிம்களையும்  வேதனையடையச்செய்துள்ளது முஸ்லிம்கள் தம் மத்தியில் பிரச்சினைகனை  தவிர்க்கவேண்டும் அணுகுமுறைகளை சரியாக பயன்படுத்தினால் பிரச்சினைகளின் அளவை குறைத்துகொள்ளமுடியும்

Written by lankamuslim

July 25, 2009 at 1:56 pm

2ம் இணைப்பு- உடதலவின்ன 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை

leave a comment »

உடதலவின்ன படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 5 இராணுவ வீரர்களும் விடுதலை-உயர் நிதிமன்றம் தீர்ப்பு

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த உடதலவின்ன படுகொலை வழக்கில் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐந்து இராணுவ வீரர்களையும் உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் தினத்தன்று உடதலவின்னவில் 10 முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் ஐவர் படுகாயங்களுக்குள்ளாகியிருந்தனர். இந்த படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட இராணுவ வீரர்களான ரஞ்சித் விஜேரத்ன, சுனில் டீ சில்வா, கமல் விஜயரட்ன, அனுரகுமார, புத்திதிசாநாயக்க ஆகியோரே நேற்று உயர்நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த படுகொலை வழக்கில் முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரது மகன்மாரான லொஹான் ரத்வத்தை, சானுகரத்வத்தை ஆகியோர் உட்பட ஐந்து இராணுவத்தினர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அனுருத்த ரத்வத்தையும் அவரது மகன்மார் இருவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டதுடன் இந்த ஐந்து இராணுவ வீரர்களுக்கும் மரண தண்டனையுடன் நூறு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தண்டனைக்கு எதிராக ஐந்து இராணுவ வீரர்களும் உயர்நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இராணுவ வீரர்கள் ஐவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நிரபராதிகள் எனத் தீர்மானித்து விடுதலை செய்துள்ளது. பிரதம நீதியரசர் அசோக்க டீ சில்வா, நீதியரசர்களான நிமல் காமினி அமரதுங்க, ஜகத் பாலபட்ட பெந்தி, பி.ஏ. ரத்னாயக்க, சந்திரா ஏக்கநாயக்க ஆகிய ஐவரைக் கொண்ட குழுவினரே இத்தீர்ப்பினை நேற்று வழங்கியுள்ளனர். படுகொலை வழக்கில் மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தள்ளுப்படி செய்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் இராணுவ வீரர்களை விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட இந்த ஐந்து இராணுவ வீரர்களும் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அனுருத்த ரத்வத்தையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உடதலவின்ன பகுதியில் 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஆரம்பத்தில் கண்டி தெல்தெனிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட பின்னர் கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி மாற்றப்பட்டிருந்தது. ட்ரயல் அட்பார் விசாரணை அப்போதைய சட்டமா அதிபரின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் பிரதம நீதியரசர் சரன் என் சில்வாவினால் நியமிக்கப்பட்ட எரிக் பஸ்நாயக்க, தீபாலி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட நீதிபதிகளின் முன்னிலையில் இந்த வழக்கு ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்றது.

குற்றச்சாட்டுக்கள்

2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதிக்குள் பொது தேர்தல் சமயத்தின்போது உடதலவின்ன பகுதியில் 10 முஸ்லிம் இளைஞர்களை மிலோச்சத்தனமாக சுட்டுக் கொன்றமை, ஐந்து முஸ்லிம் இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்படுத்தியதன் மூலம் இவர்களை படுகொலை செய்ய முயன்றமை, 250 1655 என்ற இலக்கமுடைய வாகனத்தில் பயணம் செய்தவர்களை படுகொலை செய்வது தொடர்பில் சட்டவிரோதமாக கூடி ஆராய்ந்தமை, அரசியல் எதிரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, வாக்காளர்களை வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவிடாமல் தடுத்தமை, வாக்காளர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தியமை, வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப் பெட்டியை பலவந்தமாக கொள்ளையிட்டமை உட்பட மொத்த 80 குற்றச்சாட்டுகள் இவ்வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.

ரத்வத்தைக்கு எதிரான 31 குற்றச்சாட்டுக்கள்

இந்த வழக்கில் பிரதான எதிரியான அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக 31 குற்றச்சாட்டுக்களும் அவரது புதல்வர்கள் இருவருக்கும் எதிராக 32 குற்றச்சாட்டுக்களும் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கு விசாரணையை அடுத்து 706 பக்கம் கொண்ட தீர்ப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரால் வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் அனுருத்த ரத்வத்தையும் அவரது இரு மகன்மார்களும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக காணப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக தலா ஒவ்வொருவருக்கும் நூறு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவும் மகன்மாரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வரலியெத்தவும் விசாரணைகளின் போது ஆஜராகியிருந்தனர். சட்டமா அதிபரின் சார்பில் அன்றைய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆஜராகியிருந்தார்.

வீரகேசரி நாளேடு 7/25/2009

Written by lankamuslim

July 25, 2009 at 11:29 am

1ம் இணைப்பு-10 முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து ஐந்து இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று விடுதலை

leave a comment »

உடதலவின்ன 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை

கண்டி உடதலவின்ன பகுதியில் 2001 ஆம் ஆண்டு 10 முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து ஐந்து இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இவர்களுடன், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுரத்த ரத்வத்தை அவரது மகன்களான சானுக மற்றும் ரொஹான் ஆகியோரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். எனினும் அவர்கள் கண்டி நீதிமன்றத்தினால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டனர்.
உடதலவின்னவில் வைத்து 10 முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்  ஆஜர் செய்யப்பட்ட 15 சந்தேக நபர்களில் 10பேர் விடுதலை செய்யப்பட்டதோடு ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்தத் தீப்பை அட்சேபித்து ஐந்து கைதிகளும் மேன்முறையீடு செய்திருந்தனர் ஐந்து இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்  .

அப்படியானால் 10 முஸ்லிம் இளைஞர்கள் யாரால்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.??????????

Written by lankamuslim

July 24, 2009 at 10:56 pm

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியமைக்காக தயான் ஜயதிலகவின் ஐ.நா. சபையின் இலங்கைப் பிரதிநிதிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது

leave a comment »

இஸ்ரேலிய வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதி தயான் ஜயதிலக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் றஹ்மானின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், இலங்கைக்கு கீர்த்தியை பெற்றுக் கொடுக்கும் முகமாக செயற்பட்ட ஒரு மனிதர் என சில ஊடகங்கள் அவரை புகழாரம் சூட்டியுள்ளதாகவும், இவ்வாறான ஒருவர் பலஸ்தீன மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளைகளையும், அம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியமையே அவருக்கு எதிரான குற்றச் செயலாக கூறப்படுவதாகவும் அவ்வூடக அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும், இஸ்ரேலுக்கும் – பலஸ்தீனத்திற்குமிடையே முரண்பாடு காணப்படுவது யாவரும் அறிந்த விடயமாகும். ஆயினும், பலஸ்தீன நற்புரவுச் சங்கத்தின் ஆரம்ப தலைவரும், பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுப்பேன் என கூறி வருபவருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இஸ்ரேலின் வேண்டுகோளுக்கு இணங்க தயான் ஜயதிலக அவர்களை பணீ நீக்கம் செய்தமை கவலைக்குரிய விடயமாகும்.

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் பின்னிற்கப் போவதில்லை என்று கூறிவரும் இந்த அரசாங்கம், கடந்த காலங்களில் பிரதமர், அமைச்சர் ஷமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் இஸ்ரேலுக்கான உத்தியோகப் பூர்வ விஜயங்களை மேற்கொண்டதுடன், இஸ்ரேலுடனான பல்வேறு உடன்படிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்த உடன்படிக்கைகள் என்ன? என்பதை, இதுவரை இந்நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.

இஸ்ரேலுடனான உறவை மென்மேலும் பலப்படுத்துவதுடன், அரேபிய நாடுகளையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றி, இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் இரட்டைவேடத்தை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

muslimguardian

Written by lankamuslim

July 24, 2009 at 10:20 pm

வேலணையிலும் சடலம் கரை ஒதுங்கியது

leave a comment »

வேலணை செட்டிப்புலம் கடற்கரைப் பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கரையொதுங்கிய சுமார் 30 வயது மதிக் கத் தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று போதனா வைத்தியசாலையில் ஒப்படைக் கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகாதேவன் சடலம் கரை யொதுங்கிய இடத்தில் விசாரணையை மேற்கொண்டார்.
மேற்குறித்த சடலத்துடன் இதுவரை தீவுப்பகுதியில் கரையொதுங்கிய சடலங் களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள் ளது. குறித்த கடற்கரைப்பிரதேசத்தில் இந்திய

மீனவர்களின் மூன்று அடையாள அட் டைகளும் கரையொதுங்கியுள்ளன. அவை நீதிவானிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன.
இதேவேளை கடந்த செவ்வாய்க் கிழமை புங்குடுதீவிலும், எழுவைதீவிலும் கரையொதுங்கிய இரண்டு சடலங்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுடை யவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
புங்குடுதீவில் கரையொதுங்கிய சட லம் செந்தில்குமார் நடராஜா என்பவரது என்றும் எழுவை தீவில் கரையொதுங்கிய சடலம் கணேஷ் முனியராஜ் என்பவரு டையது என்றும் அடையாளம் காணப்பட் டுள்ளன.

uthayan

Written by lankamuslim

July 24, 2009 at 9:59 pm

நாமல் ராஜபக்ச மீது சேறு வீசப்பட்ட செய்தி தவறானது மீள்குடியேற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

leave a comment »

வீரகேசரி இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மீள்குடியேற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

20 நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களிற்கு தேவையான குடிநீர், சுகாதார, மருத்துவ, உணவு வசதிகளை அரசாங்கம் வழங்கிவருவதுடன், அங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை புத்தகங்கள், சீருடைகள், அப்பியா புத்தகங்களியும் அரசு வழங்கிவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று ஊடகவியலாளர் மாநாட்டு இடம்பெற்றது . இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் நிவாரண கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் இருந்து ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டு விசேட வகுப்புகளுடன் பயிற்சிகளும் வழங்க்கப்பட்டு வருகின்றன.அவர்களிற்க்கான பரீட்சை நிலையங்கள் அவ் நிவாரண கிராமங்களில் அமைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.நேற்று முன் தினம் வவுனியா நிவாரண கிராமங்களிற்கு விஜயம் செய்த கல்வி அமைச்சர் அங்கே கணணி நிலையம்,வதிவிட பயிற்சி நிலையம் ஒன்றையும் ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் அம்மக்களுக்கு தேவையான மருத்துவ சேவையினை வழங்குவதற்காக 100 வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியமாக நிவாரண கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது தவறான செய்தியாகும்.மூன்று இலட்சம் மக்கள் பராமரிக்கப்படும் இடத்தில் சாதாரணமாக ஒரு நாளைக்கு ஐந்து , அல்லது ஆறு பேர் உயிரிழக்கின்றனர். இவை அனேகமாக இயற்கை மரணமாகவே காணப்படுகின்றது.என அமைச்சர் தெரிவித்தார்.

ஜானாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ நிவாரண கிராமங்களிற்கு விஜயம் செய்த போது அவர் மீது சேறு வீசப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் முற்றிலும் தவறானதென தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் தானும் நிவாரண கிராமங்களிற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

அம்மக்கள் நாமல் ராஜபக்ஷவுடன் மகிழ்ச்சியுடன் உரையாடியதுடன், அங்குள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பந்து வீச அவர் துடுப்பட்டம் செய்து விளையாடியதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது ‘இளைஞர்களுக்கு நாளை ‘ நிதியத்தின் தலைவரும், ஜனாதிபதியும் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ அங்குள்ள 500 இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

From வீரகேசரி

Written by lankamuslim

July 24, 2009 at 9:55 pm

மாணவியை பாலியல் வன்முறைக்குட்படுத்தி கொலைசெய்த கிருஷ்ணகுமார் 35 என்பவரை பொதுமக்கள் அடித்துகொலை

leave a comment »

அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவி மதுனுஸ்கா கிருஷ்ணகுமார் என்பவரால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலணி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மதுனுஸ்கா (வயது 12)கடந்த 22ம் திகதி புதன்கிழமை அன்று குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கிருஷ்ணகுமார் 35 என்பவரால்  கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது;

பிற்பகல் 2 மணியளவில் இந்த மாணவி தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

மாலை 6 மணியளவில் அந்தப் பகுதியில் வீதியோர மதகொன்றின் கீழ் கிடந்த இவரை கண்டவர்கள் உடனடியாக அவரை மத்திய முகாம் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குற்றுயிராகக் கிடந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துவிட்டார். இவரது கழுத்திலும் வயிற்றுப்பகுதியிலும் ஆழமான கத்திக் குத்துக் காயங்களும் காணப்பட்டன.

இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குரிய உபகரணங்கள் இல்லாததால் உடல் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

இவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்ன கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் பின் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தெரியவரவே பொதுமக்கள் கடும் சினமடைந்ததுடன் இதற்கு காரணமானவனெனக் கூறப்படும்  கிருஷ்ணகுமார் வயது 35  என்பவரை தேடத் தொடங்கினர்.

மாணவியின் படுகொலையை அடுத்து அவர் கல்விகற்ற பாடசாலையும் நேற்று மூட்பட்டிருந்தது.

நேற்றுக் காலை சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்த மத்திய முகாம் பொலிஸார் பிரதான குற்றவாளியெனச் சந்தேகிக்கப்பட்ட ரவுடி பாவாவைத் தீவிரமாகத் தேடினர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் 4 ஆம் கொலனி வயல் பகுதியில்கிருஷ்ணகுமார் வயது 35 மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு திரண்டு சென்ற மக்கள் அவனை மடக்கிப் பிடித்ததுடன் அவனை மிகக் கடுமையாகத் தாக்கி கொலைசெய்தனர்

Written by lankamuslim

July 24, 2009 at 4:48 pm

முஷாரப்பை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அழைப்பாணை

leave a comment »

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. 2007 இல் அவசரகால நிலையை அமுல்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்தமை குறித்த வழக்கு தொடர்பில் ஜூலை 29 ஆம் திகதி முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சௌத்திரி தலைமையிலான குழு உத்தரவிட்டுள்ளது.இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவரது தலைமைத்துவத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் விதமாகவே முஷாரப் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதையடுத்து சர்தாரி ஜனாதிபதியானதும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வலியுறுத்தலால் இப்திகார் சௌத்திரி உட்பட பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே முஷாரப் தனது ஆட்சியில் எடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றம் மறு ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முஷாரப் தற்போது பிரிட்டனில் உள்ளார். அவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதற்காகச் சென்றுள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை, முஷாரப் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டுமென்ப தில்லை. தனது தரப்பில் வழக்கறிஞரை ஆஜர் படுத்தி உரிய விளக்கத்தை அளிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thinakural

Written by lankamuslim

July 24, 2009 at 4:15 pm

பரசிற்றமோல் மாத்திரைகளை உட்கொண்ட 24 சிறுவர்கள் பங்களாதேஷில் மரணம்

leave a comment »

பங்களாதேஷில் பரசிற்றமோல் மாத்திரைகளை உட்கொண்ட 24 சிறுவர்கள் மரணமடைந்துள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டின் தனியார் மருந்தாக்கல் அமைப்பொன்றின் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன்,சிறுவர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக ஏழு பேரைக்கொண்ட குழுவொன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

விற்றமின் மற்றும் பரசிற்றமோல் மாத்திரைகளின் உற்பத்தியையும் சந்தைப்படுத்தலையும் இடைநிறுத்துமாறு தனியார் மருந்தாக்கல் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ள அரச நிர்வாகம் சந்தைகளிலுள்ள இக் கம்பனியின் உற்பத்திப் பொருட்களை மீளப் பெறுமாறும் தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

July 24, 2009 at 4:13 pm

சீனா அரசும் சீனா முஸ்லிம்களும் தொழுகை, நோன்பு , ஹிஜாப் தடை

leave a comment »

முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கும் மேற்கு சீனாவின் பாலைவனப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளானில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தடையையும் வரம்புகளையும் சீனா விதித்துள்ளது. இவை சீன அரசின் நான்கு இணைய தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சீன அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உலக மக்கள் அனைவருக்கும் திகைப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது.

புனித ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுடன் கொண்டுள்ள தொடர்பு நெருக்கமாக இருக்கும் என்பதை அனுமானித்து அதனைச் சீர்குலைக்கும் முகமாக இவ்வருட ரமளான் மாதம் முழுக்க பெய்ஜிங்கின் யிங்மெய்லி என்ற நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அரசு அலுவர்கள் அவ்வப்போது வந்து “பரிசோதனை” நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரமளான் மாதத்தில் சீன சமூகத்தில் சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்டவை நடைமுறைப் படுத்தப் படுகின்றன என்ற முன்னுரையுடன், ஸின்ஹே (Xinhe) அரசு இணையத் தளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பு கீழே:

  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களோ மாணவர்களோ நோன்பிருக்கக் கூடாது.

  • ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது. ரமளான் மாத வழிபாடுகளில் ஈடுபடக் கூடாது.

  • ஆண்கள் தாடியைக் களைந்து மழித்திட வேண்டும்.

  • பெண்கள் ஹிஜாபைக் களைந்திட வேண்டும்.

  • பள்ளிவாசல்களில் யாரும் இரவில் தங்கக் கூடாது (ரமளான் மாதத்தில் இஃதிகாஃப் எனப்படும் இறை வழிபாட்டிற்காக உலகமெங்குமுள்ள முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் இரவில் தங்குவது வழக்கம்).

  • நோன்பு நேரங்களில் உணவு விடுதிகளில் வழக்கம்போல் சாதாரணமாக உணவுகள் பரிமாறப்பட வேண்டும்.

Written by lankamuslim

July 24, 2009 at 12:53 am

அமெரிக்க அரசு வலைமனைகள் மீது சைபர் தாக்குதல்

leave a comment »

அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரப் பூர்வமான வலைத் தளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் விடுதலை நாளான ஜூலை 4 அன்று தொடங்கிய இத்தாக்குதல், சில தளங்களில் சேவை முறிவுக்கு வழிவகுத்ததாகவும், பின்னர் அவை மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.

அமெரிக்க அரசின் நிதித்துறை, உளவுத்துறை, போக்குவத்துத் துறை, மத்திய தொழில் குழு இவற்றின் தளங்களைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் ஒரே நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இத்தாக்குதல்களின் விபரங்களை அரசு வெளியிடவில்லை. இதே வேளையில் தென்கொரிய அரசின் பாதுகாப்புத் துறை, அதிபர் மாளிகை இவற்றின் அதிகாரப் பூர்வ வலைத் தளங்களின் மீதும் இதே போன்று சைபர் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

Written by lankamuslim

July 24, 2009 at 12:10 am

அக்கரைப்பற்றில் மதுபான விற்பனை நிலையம் மீது கைக்குண்டு தாக்குதல்

leave a comment »

வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றின் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்து கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் நபர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

Written by lankamuslim

July 23, 2009 at 9:04 pm

தமிழீழ விடுதலை புலிகளின் புதிய தலைவராக செல்வராசா பத்மநாதன் (கே.பி)

leave a comment »

தமிழீழ விடுதலை புலிகளின் புதிய தலைவராக செல்வராசா பத்மநாதன் (கே.பி) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து புலிகளின் செயற்குழு என்ற பெயரில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் ராம், சுரேஸ் என்பவர்களின் பெயரில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், புலிகளின் நடவடிக்கைகளை அனைத்தும் முடங்கின. இந்த நிலையில் வெளிநாடுகளில் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக பிரபாகரனால் முன்பு நியமிக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன் தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலைமை பொறுப்பை புலிகளின் ஒருசாரர் நிராகரித்துள்ளதுடன், பிரபாகரனின் கொலைக்கு பத்மநாதனே காரணம் என்றும், துரோகி என்றெல்லாம் புலிகளின் ஒரு குழுவினர் துதிபாடுகையில் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை இவ் செல்வராசா பத்மநாதன்(கே.பி அல்லது குமரன்) சர்வதேச பொலிஸாரால் தேடப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழ் நிலையில் பத்மநாதன் புலிகளுக்கு எவ்வாறு தலைமை தாங்கபோகின்றார் என்பது தமிழ்மக்களின் கேள்வியாகவுள்ளது.

neruppu.com

Written by lankamuslim

July 23, 2009 at 8:54 pm

விமான நிறுவனத்தின் சார்பில் என்னிடம் யாரும் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை: அப்துல் கலாம் பேட்டி

leave a comment »

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சென்ற போது டெல்லி விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரக்குறைவாக நடத்தப்பட்டுள்ளார். இது பற்றி விமான நிலையத்தின் சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என்று அப்துல் கலாம் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த காண்டினென்டல் விமான நிறுவன ஊழியர் ஒருவர் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அப்துல்கலாமிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார்.

அப்துல்கலாமின் காலணியை கழற்ற வைத்து அவர் சோதனை நடத்தியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய தகவல் சுமார் 2 1/2 மாதத்துக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை தான் வெளியில் தெரிய வந்தது.

இந்தியர்களின் மனதில் பாசத்தோடு பதிந்து இருக்கும் அப்துல்கலாமுக்கு செய்யப்பட்ட இந்த அவமரியாதை சம்பவம் பற்றி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்பட்டது.

எல்லா கட்சி உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.இதையடுத்து அமெரிக்கா விமான நிறுவனம் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால் காண்டினென்டல் விமான நிறுவனம் கதி கலங்கிப்போனது. அப்துல்கலாம் மனம் புண்படும்படி சம்பவம் நடத்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக நேற்று அந்த விமான நிறுவனம் ஒருஅறிக்கை வெளியிட்டது. ஆனால் அந்த மன்னிப்பு முறைப்படி அப்துல்கலாமுக்கு அனுப்பபடவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அப்துல்கலாமிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

காண்டினென்டல் விமான நிறுவனத்திடம் இருந்து யாரும் என்னிடம் இதுவரை தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கவில்லை மன்னிப்பு கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை. இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.

டெல்லி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையை நீங்கள் அவமரியாதையாக கருதுகிறீர்களா? என்று அவரிடம் ஒரு நிருபர் கேட்டார். அதற்கு அப்துல்கலாம் பாராளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Written by lankamuslim

July 23, 2009 at 3:40 pm

ஊடக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது இலங்கை அரசு – ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு

leave a comment »

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் பல்வேறு வழிகளில் ஊடகங்களை நசுக்க முற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகப் பேரவையை மீளவும் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் காட்டி வரும் அக்கறை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றென குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க ஊடகப் பேரவை சட்ட மூலம் இந்த நாட்டு ஊடகவியலாளர்களை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தும் என பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஊடகப் பேரவை சட்ட மூலத்தை மீள அறிமுகப்படுத்துவதன் மூலம் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது எதிர்கால ஊடக சுதந்திரத்தை பாரதூரமாக பாதிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ள அவர் ஊடகப் பேரவை சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்ற விவாதமொன்று நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தள்ளார்.

Written by lankamuslim

July 23, 2009 at 3:31 pm

அமைச்சர் முரளிதரன் மீது அவரது மனைவி குற்றச்சாட்டு

leave a comment »

தேசிய நல்லிணக்கத்துறை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழின தலைவராக தமது கடமைகளை மறந்து செயற்பட்டார் என அவரது மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

லண்டனில் உள்ள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
6 ஆயிரம் போராளிகளுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து  உயரிய நோக்கத்திற்காக விலகி வந்தோம்.
எனினும் தற்போது தனது கணவர் அவரது  சுயநலத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக  குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் இன்னல்களுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போது மிகத் தெளிவான ஓர் குறிக்கோள் காணப்பட்டதாகவும், அதனை மறந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முரளிதரன் தனது சுயலாப நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவரே கருணாவை பிழையான பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், தற்போது முரளிதரன் அவரது வாக்குகளை வேத வாக்காக எண்ணிச் செயற்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

என் கணவர் திருந்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும், அவ்வாறு திருந்த மறுத்தால் அவரது சகல ஊழல்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்த பின்நிற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் 3 பிள்ளைகளோடு வாழ்ந்து வரும் அமைச்சர் முரளிதரனின் மனைவியான வித்தியாவதி,  தமிழீழ விடுதலைப்புலிகளின்  பெண்கள் பிரவில் சிரேஷ்ட உறுப்பினராக “நிரோ” என்ற பெயரில் இருந்தமையும் குறிப்பிடதக்கது

tamilwin.org

Written by lankamuslim

July 23, 2009 at 3:19 pm

யாழ். – கொழும்பு பஸ் கட்டணம் 325 ரூபா

leave a comment »

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலுள்ள இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பயணிகள் பஸ் சேவைக் கட்டணம் 325 ரூபாவென அறிவிக்கப்பட்டது.
ஏ  9 வீதியூடான பயணிகள் போக்குவரத்து நேற்றுக் காலை ஆரம்பமானது.நேற்றுப் பயணத்தை மேற்கொண்ட இலங் கைப் போக்குவரத்துச் சபையின் 5 பஸ் களில் 210 பயணிகள் ஏற்றப்பட்டிருந் தனர். ஒவ்வொரு பஸ்ஸிலும் தலா 42 பய ணிகள் வீதம் இருக்கைகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப

இதுதொடர்பாக போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை முகாமையாளர் எஸ்.யோகநாதன் தெரிவித்தவை வருமாறு:
ஒவ்வொரு பயணியிடம் இருந்தும் யாழ்.  கொழும்பு பயணக் கட்டணமாக 325 ரூபா அறவிடப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட இந்த 5 பஸ்களும் மதவாச்சி பஸ் நிலையம் வரை செல்லும்.  இதேவேளை, கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட போக்குவரத்துச் சபையின் 5 பஸ்களும் பயணிகளுடன் மதவாச்சி பஸ் நிலையத்தை வந்தடையும். அங்கு வைத்து யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பயணிகள் கொழும்பில் இருந்து வந்த பஸ்களுக்கும் கொழும்பில் இருந்து வந்த பயணிகள் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பஸ்களுக்கும்  மாற்றப்படுவர். யாழ்ப்பாணத்தில் பெறப்பட்ட பயணச் சீட்டுடனேயே அவர்கள் கொழும்பு வரை பயணம் செய்வார்கள்.  என்றார்.

Written by lankamuslim

July 23, 2009 at 2:23 pm

2000ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1713 பேர் பல்வேறு காரணங்களினால் மரணம்!

leave a comment »

2000ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1713 பேர் பல்வேறு காரணங்களினால் மரணத்தைத் தழுவியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டவர்களில் 30பேர் தப்பிச்செல்ல முற்பட்டபோது உயிரிழந்ததாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் ஜூலை 13ம் திகதிவரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 08பேர் தப்பிச் செல்ல முயற்சித்த போதும் 85பேர் வேறு காரணங்களினாலும் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் மிலிந்த மொறகொட குறிப்பிட்டுள்ளார். 2000ஆம் ஆண்டுமுதல் 2009 ஜூலை 13ம் திகதிவரை வேறு காரணங்களினால் உயிரிழந்த மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 1183என அமைச்சர் சபையில் குறிப்பிட்டுள்ளார். சிறையிலிருந்து தப்பியோட முயற்சிக்கும்போது மரணத்தைத் தழுவுபவர்கள் தொடர்பில் இன்று பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டது. சிறைக்கைதிகள் தப்பிச்செல்லும்போது அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்வது எவ்வாறு என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் மிலிந்த மொறகொட இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிறைக்குள்ளேயும் அதற்கு வெளியேறும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

athirady.org

Written by lankamuslim

July 22, 2009 at 10:16 pm

ஹிஜாப் அணிய தடை :மட்டகளப்பு கல்விக்கல்லூரி

leave a comment »

பகிடிவதை என்ற பெயரில் அடாவடித்தனம், புதிதாய் கல்விக்கல்லூரிக்கு வந்த முஸ்லிம் மாணவிகளை  அவர்கள் அணிந்திருந்த  ஹிஜாபை தமிழ் மாணவர்கள் அகற்றி அவமானப்படுத்தினர்  , இதை தடுக்க முற்பட்ட முஸ்லிம் மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது முஸ்லிம் மாணவர்கள் கடுமையாகத்தாக்கபட்டனர் இதில் படுகாயப்பட்ட ஒரு முஸ்லிம் மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

இது தொடர்பாக மட்டகளப்பு அனைத்துப் பள்ளிவாயல்களின் சம்மேளனம் அதிபர் பாகியராஜ்ஜுடன் தொடர்புகொண்டது மாணவர்கள் மத்தியிலான  ஹிஜாப் பிரச்சனை பற்றி பேசுவதற்கு ஒன்றுகூடல் ஒன்றை ஒழுங்கு செய்தது ஆனால்   பாகியராஜ் தனக்கு நேரம் இல்லை என்று மறுத்ததுடன்  மாணவர் மத்தியில்  எந்தக் குழப்பமும் நடக்கவில்லை என்றும் பொறுபற்ற முறையில் கூறிவிட்டார். இது பற்றி முஸ்லிம்  மாணவர்கள் குறிப்பிடும்போது முஸ்லிம் பெண் மாணவியருக்கு ஹிஜாபை அணிய அனுமதிக்குமாறு  கோரி 20கும் அதிகமான கடிதங்களை அதிபருக்கு அனுப்பியதாகவும் அதன் பிரதிகளை முஸ்லிம் அமைச்சர்களுக்கும் அனுப்பியதாககவும் ஆனால்  எந்த பயனும் கிடைக்கவில்லை எனக்கூறினர் இது முற்றுமுழுதான முஸ்லிம்களின் மறுக்கமுடியாத  அடிப்படை உரிமையில் கைவைக்கும் விடயமாகும் என்பதுடன் இன மத முரண்பாடுகளை வளர்க்கும் நாசவேலையாகும்.

முஸ்லிம்களை வருத்தும் விடயம் என்னவென்றால் இப்போதும் முஸ்லிம் மாணவிகள் தமிழ் மாணவிகளை ஒத்த உடைகளை அணிய மட்டும்தான் அனுமதிக்கபட்டுள்ளனர் இதன்பின்னனியில் தமிழ் அமைச்சர் ஒருவரின் ஆட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது  இது முற்றுமுழுதான முஸ்லிம்களின் மறுக்கமுடியாத  அடிப்படை உரிமை மீறல் மேலும், மேலும், இன மத   ரீதியிலான பிரச்சனைகள் உருவெடுக்காமல் தவிர்க்க, தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வன்கொடுமைகளை அனைத்துதரப்பினரும் தவிர்கவேண்டும்
முஸ்லிம்களின் உணர்வுகளைப் பாதிக்கும் இவ்வகைச் செயல்கள் மட்டகளப்பு கல்விக்கல்லூரியில் தொடர்ந்தும்  நடைபெற்று வருகின்றது.

Written by lankamuslim

July 22, 2009 at 9:49 pm

வட மாகாணத்தில் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவது தொடர்பா இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

leave a comment »

இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 வருடங்களுக்கு முன்னர் வடக்கில்லிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களின் சொந்த இடங்களில் துரிதமாக தமிழ் மக்களுடன்   மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம்,  தீவிர கரிசனை காட்டி மீள் குடியேறபடுவதை அரசு உருதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்று  வாதிட்டனர்

வட மாகாணத்தில் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவது தொடர்பான பலவிதமான கருத்துக்கள் அரச உயர்மட்டத்திலிருந்து அண்மைக் காலமாக விடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.  ,

1990ஆம் ஆண்டு வடக்கு  முஸ்லிம்கள் புலிகளால் 2 மணித்தியாலத்தில்  துரத்தப்பட்டனர். இவர்களின் வாழும் உரிமை மறுக்கப்பட்டது. தமது சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழும் உரிமை இம்மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தாம் விரும்பும் எந்த இடத்திலும் குடியேறி வாழும் உரிமையுண்டு. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தி அவர்களுக்கும் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டுமென்பதை அனைவரும் ஏற்றுள்ளனர். இவர்கள் எந்தெந்த இடங்களில் வாழ்ந்து வந்தாரகளோ அந்தந்த இடங்களில் அவர்கள் மீள குடியமர்த்தப்பட வேண்டும்

Written by lankamuslim

July 22, 2009 at 9:28 pm

புங்குடுதீவு கரையில் ஒதுங்கிய 3 ஆண்களின் சடலங்கள் யாழ். ஆஸ்பத்திரியில்

leave a comment »

புங்குடுதீவு கடற்கரையில் கரையொ துங்கிய மூன்று ஆண்களின் சடலங்கள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினால் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை யில் ஒப்படைக்கப்பட்டன.
முதலாவது சடலம் நேற்றுப் பிற்பகல்

1.30 மணிக்கும் ஏனைய இரு சடலங் களும் மாலை 5.30 மணிக்கும் ஊர்காவற் றுறைப் பொலிஸாரினால் போதனா வைத் தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
மிகவும் உருக்குலைந்து துர்நாற்றம் வீசும் நிலையில் காணப்படும் இந்தச் சட லங்கள் இதுவரை அடையாளம் காணப் படவில்லை.

uthayan

Written by lankamuslim

July 22, 2009 at 8:21 pm

இலங்கைக்கு 25 ஆயிரம் கோடி ரூபா கடன் வழங்க நாணய நிதியம் இணக்கம் இறுதி முடிவு வெள்ளியன்று வெளியிடப்படும்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கு என  250 கோடி  டொலர் களை (25 ஆயிரம் கோடி ரூபாவை) கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தற்காலி கமாக தீர்மானித்துள்ளது. அதேவேளை, இது குறித்த இறுதி முடிவை வெள்ளிக்கிழமை நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

186 நாடுகள் அங்கம் வகிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரமளிக்கும் பட்சத்தில் இலங்கையால் உடனடியாக 31 கோடியே 300 லட்சம் டொலர்களைப் பெறமுடியும் எனத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின்  தூதுக்குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் பொருளாதார திட்டமொன்று குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதற்கு 20 மாத கடனடிப்படையில் 250 கோடி டொலர்  ஆதரவு வழங்கப்படும் என நாணய நிதியத்தின் முகாமைத்துவ இயக்குநர் டொமினிக் ஸ்ட்ரோஸ் கான் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுதொடர்ச்சியாக வரவு  செலவுத் திட்டப் பற்றாக்குறையை சமாளிப்பதற்குச் சர்வதேச சந்தையிலிருந்து கிடைக்கக்கூடிய குறுகிய காலநிதியை நம்பியிருந்தது எனவும், எனினும் சர்வதேச பொருளாதார நெருக்கடி அந்த ஏற்பாட்டை இப்போது பாதித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக இந்த குறுகிய கால நிதி கிடைப்பதும், மூலதன வருவாயும் பாதிக்கப்பட்டதால் இலங்கையின் வெளிநாட்டு நாணய சேமிப்பு குறிப்பிடத்தக்களவிற்கு குறைவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

July 22, 2009 at 7:45 pm

மாத்தளை மாநகரசபையால் விடுவிக்கப்படும் அறிவித்தல்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

leave a comment »

மாத்தளை மாநகரசபையினால் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்படும் அறிவித்தல்கள் அனைத்திலும் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு மூவின மக்களும் வாழ்வதால் மாநகரசபையின் சிங்கள மொழி மூலமான அறிவித்தல்களை விளங்கிக் கொள்வதில் மக்கள் சிரமப்படுவதாக தமிழ்பேசும மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சிறுபான்மை இனத்தவரான மாத்தளை மாநகரசபை மேயருக்கு அறிவித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தம் மாநகரசபை உறுப்பினர்கள் தமிழ் மொழியிலும் அறிவித்தல்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாத்தளை மாநகர மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

athirady.org

Written by lankamuslim

July 22, 2009 at 11:44 am

ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணம் – கொழும்பு சேவை இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ் ஸ்ரேடியத்திலிருந்து ஆரம்பம்

leave a comment »

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துச் சபையின் பயணிகள் சேவை ஏ9 பாதையூடாக இன்று ஆரம்பமாகின்றது.

Written by lankamuslim

July 22, 2009 at 11:08 am

காலி மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை

leave a comment »

காலி மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் துஷந்த செனவிரத்ன துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மராபிட்டியவில் வைத்து இவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

Written by lankamuslim

July 22, 2009 at 10:07 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers