Archive for June 30th, 2009
13ஆம் திருத்தத்தை அமுல்படுத்தினால் அரசிலிருந்து ஹெல உறுமய வெளியேறும்
| தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித் துள்ளார்.
அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்துள்ள அவர், இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசு இதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டிவரும். 13 ஆவது திருத்தச் சட்டம் நாட்டிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது முழுமையாக அமுல்படுத்தப்படாமல் உள்ளதால் தான் நாடு இதுவரை மோசமான பாதிப்புகளிலிருந்து தப்பியுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதையும் எதிர்க்கிறோம். தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சமூக கௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. இலங்கை போன்ற சிறிய நாடு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் தேவையற்ற பொருளாதாரச் செலவுகளையே எதிர்கொள்ள வேண்டிவரும் என்றார் lankasri.com |
M.ஷாமில் முஹம்மட் ஒரு சமூகவியல் , அரசியல் , இஸ்லாமிய எழுத்தாளர்
M.ஷாமில் முஹம்மட் ஒரு சமூகவியல் , அரசியல் , இஸ்லாமிய எழுத்தாளர்களில் ஒருவர் இவர் எமது இணையத்தள குழுமத்துக்கு எழுதிவருபவர் இவர் இலங்கையின் குறிப்பிடத்தக்க ஒரு சமூகவியல் , அரசியல் எழுத்தாளர்களில் ஒருவர். இவரின் ஆக்கங்கள் சமூக, அரசியல், இஸ்லாமிய ஆய்வுத்திறன் கொண்டவை , தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகிய இரு மொழிகளிலும் இவரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன இவர் தனது தனிப்பட்ட பார்வை மற்றும் அணுகுமுறை , மொழி நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
ஒரு எழுத்தாளர், என்பதுடன் மொழிபெயர்ப்பாளர், அரசறிவியலாளர். என்று குறிபிடும் அளவுக்கு தனது ஆக்கங்களை தந்துள்ளார் தமிழ் மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் , ஆங்கிலம் , அரபு , மொழி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
இவரின் ஆக்கங்கள் பல கட்டுரைகளாக தமிழ் , ஆங்கில மொழி இணையத்தளங்கள் , மற்றும் தமிழ் , ஆங்கில மொழி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன M.ஷாமில் முஹம்மட் என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் எழுதி வருகின்றார் இவர் பனி தொடர எமது வாழ்த்துக்கள்
அவரின் மெயில் முகவரி:
m.shamilmohamed@gmail.com
இலங்கையில் டெங்கு நோய் தொற்றுக்களை இல்லாதொழிக்கும் பக்றீரியா
இலங்கையில் டெங்கு நோய் தொற்றுக்களை இல்லாதொழிக்கும் பக்றீரியாக்களை கியூபாவிலிருந்து தருவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 165பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெங்குநோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா கியூப தூதுவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்தவகை பக்றீரியாக்களை அனுப்பிவைக்க கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பீ.ஐ.ரி என்னும் பக்றீரியாக்கள் டெங்குநோய் கிருமிகளை இல்லாதொழிக்கும் திறனைக் கொண்டவையென கூறப்படுகின்றது. தெரிவித்துள்ளார். குறித்த வகைப் பக்றீரியாக்களை பயன்படுத்துவது தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை ரஸ்யா இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதேவேளை இந்தியா மற்றும் மலேசிய நாடுகளும் இந்த பக்றீரியா பாவனை முறைமூலம் நன்மையடைந்துள்ளன.
athirady.org









