Lankamuslim.org

One World One Ummah

கிலாபா- உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவது அனைவர் மீதும் கட்டாய கடமை

with 20 comments

கிளாபத் ஏற்படுத்துவது அனைவர் மீதும் கட்டாய கடமை

கிளாபத் ஏற்படுத்துவது அனைவர் மீதும் கட்டாய கடமை

இஸ்லாமிய கிலாபா ஆட்சியால் மட்டுமே முஸ்லிம்களின் நாடுகளை பாதுகாக்க முடியும். அதனை நிலைநாட்டுவது கடமையாகும். இக்கடமையை நிலைநாட்டாது முடங்கிக்கிடப்பது ஹராமாகும். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்குமான ஆட்சி ஒழுங்குதான் கிலாபா ஆகும் இதன் மூலம் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் அமுல் செய்யப்படும்.

இஸ்லாமிய தஆவா முழு உலகுக்கும் சுமந்து செல்லப்படும். இது முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய, இஸ்லாமிய நாடுகளை ஒன்றுபடுத்தக்கூடிய அரசியல் ஒழுங்காகும். இஸ்லாமிய ஷரீஆவைக் கொண்டு ஆளுகின்ற கலீஃபா ஒருவர் இருப்பது அவசியம் என நபிகள் நாயகம்(ஸல்) கட்டளையிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. “…அதிகமான கலீஃபாக்கள் காணப்படுவார்கள் நாயகமே அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?” என்றனர் சஹாபாக்கள். அதற்கு நாயகம்(ஸல்) கூறினார்கள் ‘முதலாமவருக்கு உங்கள் பைஅத் (சத்தியப்பிரமாணத்தை) கொடுங்கள்’ மேலும் கூறினார்கள் ‘இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத் கொடுக்கப்பட்டால் அவர்களுள் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்’. கிலாபா என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீண்டும் வரும் என்று செய்தி கூறிச்சென்ற ஆட்சிமுறையாகும்.

நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் ‘பிறகு ஒரு கிலாபா நபியின் வழிமுறையில் தோன்றும்’. இஸ்லாமிய கிலாபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய நீதி நிர்வாகம், பொருளாதாரம், சமூகவியல், கல்வி, வெளிநாட்டு அலுவல்கள் ஆகியவை தொடர்பான சகல இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களும் நடைமுறைபடுத்தப்படும். கிலாபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய ஜிஹாத் போராட்டம் நடைமுறைபடுத்தப்படும். இந்த ஜிஹாத் இஸ்லாத்தை முழு உலகுக்கும் சுமந்து செல்வதற்காகவும், முஸ்லிம் நிலங்களையும், உயிர், மானம், செல்வம் ஆகியவற்றையும் பாதுகாப்பதற்காகவும், மேலும் தமது ஆட்சியை ஏற்றுக்கொண்ட திம்மீக்களையும் (இஸ்லாமிய ஆட்சியில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள்) பாதுகாப்பதற்கான போராட்டமாகும். இஸ்லாமிய கிலாபா என்பது அல்லாஹ் எந்தத் தீமைகளைவிட்டும் தவிர்த்து விலகிக்கொள்ளுமாறு முஸ்லீம்களுக்கு ஏவினானோ அவற்றை தடுக்கின்ற ஆட்சியாகும்.

இது சமூகத்தில் காணப்படுகின்ற தீமையின் அடையாளங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டும். இஸ்லாமிய நன்மையை பாதுகாக்கும். சகலவிதமான வழிகேடுகள் உட்செருகல்கள், அத்துமீறல்கள் அனைத்தையும் தடுக்கும். கிலாபா, சமூகத்தின் நாலா பக்கங்களிலும் ஈமானிய பண்பாடுகளையும் போற்றத்தக்க சுத்தத்தையும், ஒளியையும், தொலைத்தொடர்பு மூலமாகவும் கல்லூரிகள், நிறுவனங்கள் மூலமாகவும் பரப்பிவிடும்.

இஸ்லாமிய ஆட்சியில் வாழும் பிரஜைகள், தமது பிள்ளைகள், தீமைகள், சீர்கேடு, ஒழுக்க வீழ்ச்சி என இழுத்துச் செல்லப்படுவார்களே என அஞ்சமாட்டார்கள். கிலாபா என்பது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிறைவேற்றும்படி கூறிய கட்டளையாகும். தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருத்தல், பிரதேசவெறி, தேசியவெறி, இனவெறி, நிறவெறி மற்றும் கோத்திற வெறிகளை விட்டும் தூரமாக இருத்தல் ஆகியவற்றையும் நிலைநாட்டும். இது ஒருசாரரின் அல்லது ஒரு துறையினரின் ஆட்சியாக இருக்காது. மாறாக இதன் பார்வை தமது பிரஜைகள் அனைவரும் ஒன்றே என்பதாகவே இருக்கும். குர்ஆனிலும் சுன்னாவிலும் காணப்படுகின்ற பலமான ஆதாரத்திற்கு ஏற்பவே இஸ்லாம் நடைமுறைபடுத்தப்படும். இது இனத்தையும் நிறத்தையும் பார்க்கின்ற ஆட்சியாக இருக்காது. அஜமியைவிட அரபிக்கு எந்த சிறப்பும் இருக்காது.

கறுப்பரைவிட வெள்ளையருக்கு எந்த சிறப்புமிருக்காது. தக்வாவைக்கொண்டே சிறப்பு கணிக்கப்படும்.ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய சட்டங்கள் சகலத்தையும் நிறைவேற்றும்படியே ஏவப்பட்டுள்ளனர். இதன் கருத்து உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமம் என்பதே. எனவே அவர்கள் அனைவரையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் நிச்சயமாக விசுவாசிகள் சகோதரர்களே! நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் விசுவாசிகள் தங்களுக்கு மத்தியில் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இருப்பதிலும் ஓர் உடலைப் போன்றவர்கள். உடலின் ஓர் உறுப்பிற்கு நோய் ஏற்பட்டாலும் ஏனைய உறுப்புகளும் உறக்கமின்மையாலும் காய்ச்சலாலும் பாதிக்கப்படும்.இஸ்லாமிய கிலாபா என்பது சகல முஸ்லிம்களுக்குமான ஆட்சியும் தேவையுமாகும். மேலும் அவர்கள் மீது கடமையுமாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பின் வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கிற முஸ்லிமாக இருக்கட்டும், சீனாவிலும் இந்தோனேசியாவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், லெபனானிலும் மொரோக்கோவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும் அனைவருமே இஸ்லாமிய சட்டங்கள் முழுவதையும் பின்பற்றுமாறு ஏவப்பட்டுள்ளனர். எனவே இஸ்லாமிய கிலாபாவை நிலைநாட்டுவதும் அவர்கள் மீது கடமையாகும்.

நாம் அனைவரும் ஒரேயொரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருப்பது அவசியமாகும். ஏகாதிபத்தியவாதிகளால் நம்மீது திணிக்கப்பட்ட நிலையில் உருவான பல நாடுகளாக நாம் பிரிந்துள்ளோம். எனவே மிக பலவீனமானவர்களாகவும் இருக்கின்றோம். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாறாக முஸ்லிம்கள் அனைவருக்குமான ஒரு ஆட்சியின் கீழ் முஸ்லிம்களின் பலமான இருப்பை ஏற்படுத்திக்கொள்ள நாம் ஆர்வத்தோடும் முழு முயற்சியோடும் செயற்படுவது அவசியமாகும். எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக எகிப்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய கிலாபா நோக்கி அழைக்கவேண்டும். அதற்காக பாடுபடவேண்டும். அவ்வாறே குவைத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் குவைத் இஸ்லாமிய ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக பாடுபடவேண்டும். இதைப்போன்றே ஏனைய அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருக்கின்ற முஸ்லிம்களும் இஸ்லாமிய கிளாபாவை நோக்கி அழைக்கவேண்டும்,

பாடுபடவேண்டும். இஸ்லாமிய கிலாபா முஸ்லிம்களை மட்டும் கவனிக்கின்ற ஓர் ஆட்சியாக இருக்காது, மாறாக முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரி, இஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலரையும் கவனிக்கிற ஆட்சியாக இருக்கும். இஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலருக்கும் பரிபூரண குடியுரிமை இருக்கும். ஷரீஆ எதிர்பார்க்கின்ற கடமைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பார்கள். நீதி, சமூக விவகாரங்கள் எதிலும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. முஸ்லிம்களைப்போன்றே முஸ்லிம் அல்லாதோரின் உடல், மானம், உடமைகள் யாவும் பாதுகாக்கப்படும். சத்தியமும் அச்சமும் ஒன்று சேரமுடியாது என ஒரு முஸ்லிமிற்கு நன்றாகத்தெரியும். அதைப்போலவே இறைவிசுவாசமும், இறைமறுப்பும் ஒன்றுசேரமுடியாது. இஸ்லாமிய கிலாபாவை நோக்கி போராடுகையில், இறைமறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கவேண்டிவரும் என்பதை முஸ்லிம் நன்கு அறிவான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவர்களுடைய விசுவாசிகளும் அங்கீகாரத்தையோ வரவேற்பையோ முதலில் பெறவில்லை. மாறாக உருவப்பட்ட வாள்களையும் கடும் கோபப்பட்ட உள்ளங்களையுமே சந்தித்தனர். மிகப்பெரிய இஸ்லாமியப் போராட்டங்களே நிகழ்ந்தன. ஆனால் அவற்றில் இஸ்லாத்திற்கே வெற்றி கிட்டின. இதுவே நம்மை நோக்கி அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்ற சத்தியமாக இருக்கிறது.

nermai

Written by lankamuslim

June 23, 2009 at 5:35 am

20 Responses

Subscribe to comments with RSS.

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    கிலாபா- உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவது அனைவர் மீதும் கட்டாய கடமை

    இதற்குரிய ஆதாரத்தைத் தரமுடியுமா? கடமை என்பதால் தெளிவான கட்டளையைக் காட்டவும்.

    “…அதிகமான கலீஃபாக்கள் காணப்படுவார்கள் நாயகமே அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?” என்றனர் சஹாபாக்கள். அதற்கு நாயகம்(ஸல்) கூறினார்கள் ‘முதலாமவருக்கு உங்கள் பைஅத் (சத்தியப்பிரமாணத்தை) கொடுங்கள்’ மேலும் கூறினார்கள் ‘இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத் கொடுக்கப்பட்டால் அவர்களுள் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்’.

    இதில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துமாறு எந்தக் கட்டளையும் இல்லை. 2 கலீபா இருந்தால் ஒருவரைக் கொள்ளுங்கள் என்றுதான் இருக்கிறது.
    கிலாபத் என்பது இஸ்லாத்தில் உள்ள ஒன்றுதான். ஆதை ஏற்படுத்துவதே தாவாவின் இலக்கு என்று வாதிடுவதற்குத் தகுந்த ஆதாரத்தைச் சமர்ப்பிக்கவும்.

    razmi

    November 12, 2009 at 11:57 pm

    • it is better to follow the ijithihad of a mujithahid who is from palatine because they are free from all the political influences (not like saudi arabia because fatwas are influenced by kings and pricess in favour of saudi royal family and americans and even isrealies )

      mohamed

      February 4, 2010 at 12:16 pm

    • islam is a complete way of life (deen)…this indicate that islam has the solution for political structer too
      so we dont have to allow democarcy to muslim contry or dictator ,monarchy (mulk) like saudi they r batils (not islamic ) so khilafah is the solution for islamic ruling ship

      mohamed

      February 4, 2010 at 12:20 pm

    • the purpose of dawa is to establish the islamic way of life in the world by imposing sharia on people and calling them for Islam and calling for good and forbidding the evil not only calling for thowheed .

      if we dont try to bring islamic rulling system who will look after the affairs of umma ( saudi royal family or usa, brition isreal or a dictator. or united nation )?

      who will forbid the evil (munkar)by meand of force and jihad ?

      actually what is teh best rulling system for a muslim contry is it
      democacy(europe) ?
      dictatorship(china ) ?
      monarchy ?(saudi royal family)?
      or khilafah ?

      then the answer will khilafat according prophetic methods

      mohamed

      February 4, 2010 at 12:37 pm

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.
    ஆம் இதற்குரிய ஆதாரத்தைத் இன்ஸாஅல்லாஹ் விரைவில் உங்களின் ஈ மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்

    lankamuslim

    November 13, 2009 at 9:35 am

  3. என்னுடைய ஈ மெயிலுக்கு அனுப்புவதை விட இந்தப்பகுதியிலேயே கொமென்டாகப் பிரசுரிக்கவும். மாற்றுக்கருத்து இருந்தால் மீண்டும் எழுதலாம். மேலும் அந்த ஆதாரத்தை மக்கள் முன் வைப்பது சிறந்தது.
    ரஸ்மி

    razmi

    November 13, 2009 at 5:42 pm

    • உங்களின் ஈ மெய்லுக்கு அனுப்பட்டுள்ளது இந்தப்பகுதியிலேயே கொமென்டாகப் பிரசுக்க முடியாது காரணம் இது ஒரு போரம் அல்ல என்பதுடன் அந்த ஆதாரங்கள் பெரிய இடத்தை பிடிக்க கூடியதாகவும் இருக்கின்றமையால் இன்ஸாஅல்லாஹ் விரைவில் ஒரு போரம் ஒன்றை திறக்க முயற்சிகிக்றோம் . மாற்றுக்கருத்து இருந்தால் மீண்டும் சுருக்கமாக இங்கு எழுதலாம்

      lankamuslim

      November 13, 2009 at 8:34 pm

  4. முதலாவதாக நீங்கள் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்களுக்கு அர்த்தம் என்ன என்பதைப் பார்த்துவிட்டு ஹதீசுக்குச் செல்வோம்.
    முதல் வசனம்
    ஆகவே அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் ஆட்சிசெய்வீராக. மேலும் உம்மிடம் சத்தியம் வந்த பின்னர் அவர்களின் மனஇச்சைகளை நீர் பின்பற்றக்கூடாது, ( அல்மாயிதா 5:48)
    இது நீங்கள் செய்துள்ள அர்த்தம்.
    1. ‘ஆகவே அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் ஆட்சிசெய்வீராக’
    இங்கு ஹூகும் என்ற பதத்துக்கு ஆட்சி என்று தவறாக மொழியாக்கம் செய்துள்ளீர்கள்.

    razmi

    November 14, 2009 at 2:17 pm

    • இது ஒரு போரம் அல்ல என்பதுடன் உங்கள் பதில் பெரிய இடத்தை பிடிக்க கூடியதாகவும் இருக்கின்றமையால் உங்கள் கொமென் நீக்கபட்டுள்ளது இன்ஸாஅல்லாஹ் விரைவில் ஒரு போரம் ஒன்றை திறக்க முயற்சிகிக்றோம் . மாற்றுக்கருத்துகளை அங்கு பதிவு செய்யவும்

      lankamuslim

      November 14, 2009 at 7:00 pm

    • ஹீக்குமை எப்படி நிலை நாட்டுவது ஹஸ்மி அவர்களே? அதிகாரம் இல்லாமல் எப்படி நிலைநாட்ட முடியும் ?bin

      bin malang y kader

      September 30, 2010 at 8:22 pm

  5. Kilafath Only Solve the All Muslim Community Problems Insha allah

    nasar

    February 6, 2010 at 9:36 pm

  6. can u let razmi to leave the full comment. i think he can do something

    roshan

    March 18, 2010 at 1:03 pm

    • it has 2 pages that is suitable for forum , InshaAllah we wil open up a forum soon than every one can post long comm

      lankamuslim

      March 18, 2010 at 1:10 pm

  7. ஒன்பது மாதகாலம் ஆகிவிட்டது. இன்னும் போரம் திறந்தபாடில்லை. நீங்கள் யார் எவர் என்று குறிப்பிட்டால் திறந்த மனதுடன் நேரடியாகப் பேசலாம்.

    razmi

    August 17, 2010 at 2:47 pm

  8. 24:55 தமிழ்
    உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்…திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

    “அன்றியும்,
    இவர்கள் (எத்தகையோரென்றால்)
    இவர்களுக்கு நாம் பூமியில் அதிகாரத்தை கொடுத்தால் , தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்;
    ஜகாத்தும்
    கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும்
    …விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே
    இருக்கிறது.” (Surathu Haj : 41)

    ஹதீஸ் என்பது நபியவர்களின் சொல் செயல் அங்கீகாரம். நபியவர்கள் மதீனாவில் அமைத்தது ஒரு அரசாங்கத்தைதான் அதன் மூலம் குர்ஆனில் இறக்கப்படும் சட்டங்களை அமுல்படுத்தினார். நபியவர்களை தொடர்ந்து வந்த கலீபாக்களும் இஸ்லாமிய அரசாங்கத்தை விரிவுபடுத்தினார்கள். ஏனெனில் உலகை ஆட்சி செய்ய வேண்டிய ஒரே மார்க்ம் இஸ்லாம் தான் அதன் சட்டப் புத்தகம் குர்ஆன் தான். இது அவசியமற்ற ஒன்று என்றிருந்தால் கலீபாக்கள் அதை செய்திருக்க மாட்டார்கள்.நபியவர்கள் செயல் ரீதியாக ஒரு அரசாங்கத்தை அமைத்து காட்டியிருக்கிறார்கள். குர்ஆன் சொல்கிறது விபச்சாரம் செய்பனுக்கு மரணதண்டனை மது அருந்துபவனுக்கு கசையடி குப்ர் செய்பவனுக்கு கொலை என்று குர்ஆன் பல சட்டங்களை சொல்கிறது இந்த சட்டங்களை அமுல்படுத்த கிலாபத்தை விட ஒரு சிறந்த தீர்வு இருந்தால் சொல்லுங்கள். மேற்கூறிய 2 வசனங்கள் இஸ்லாமின ஆட்சி தொடர்பானைவையே

    inas

    September 15, 2010 at 6:00 pm

    • alquraan sunnavil ulla 100% sattankalaum pinpatra khilafath veendum enpadil sandeeham illai.aanaal khilaafath irunda poodu kooda abbasiyaakkal umayaakalaum umayaakkal abbasiyaakkalaum konru kuvittaarhal,abbasiyaakkalin masjidai umayaakkal asinkapaduttinaarhal.penkalai niruvaanappaduttinaarhal,ivai ellam khilaafattinaal nadandaduthaaney idatku enna solhinreerhal.khilaafattai munnirutti daawa seyda Egyptil ulla ALjamaathul islaamiya enra iyakka talaivarhal kilai vidayamaana Khilafattitkaaha kadamayaana vidayankalai kooda solla mudiaamal tadai vidikka pattaarhal,India vil Alumma enra jamaathinar sirupaanmai muslimkal enru kooda paarkaamal hindukkal perumpaanmayaaha ulla nattil Khilaafattai konduvara edutta muyatchi awarhalai illaamal aakkivittadu,Aljeeriyavil Khilaafattai munnirutti latchakkanakkaana makkal kolai seyyappaduvadatku ippadiyaanavarhal kaaranamaaha irundanar,ippadi pala sampavankalai khilafath enra peyaril seydu mudittanar.naam solvadu ennavenraal khilaafath illamal kooda sirupaanmayaaha ulla muslimkal 96% kadamaihalai seydukollamudium.sirupaanmayaaha vaalakoodiya muslimkal mattiyil Khilafathi munnirutthi daawa seyyumpoluthu 96% kadamaikalai kooda seyya musiyaamal aahividuhiradu. enavey Daawa seyyumpoluthu makkalin eemaan balamaakkappada veendum.islaamiya adippadai kadamaihal kooda theriyaadavarhalukku khilaafath kidaikumpoluthu adu Aboobakkar Umar Udman Ali umar bin abdul azeez poonravarhalin aatchiyin kaalvaasikooda peramudiyaadu,enavey sirupaanmai muslimkalum Arabic muslimkalum Khilafattai adaivadatku jananaayahattai karuviyaaha kolavadu siranda oru valiyahum.kurippaaha sirupaanmayaaha valum muslimkal anda naattil ulla jananaayaha murayil tamadu koorikkaihalai adaindu kolvadan moolam amaidiyaana arasiyalai adaindukolla mudium,kilafattai adiha mukkiyattuvam kodutta koottam ellaam ippoothu illai kawaarijuhal illai sheeyakkal illai prumpaalaana ikhwaankal karlaviyin karuttukku eatpa maarivittanar.egyptil ulla aljamaathul islamiya enra amaipu kooda ippoodu kilaafat …enra karuttil irundu thirindi ullanar.mukkiyamaaha ahlussunna ulamaakkal khilafath enbadu usool alla adu froo kilai vidayam enrey solli ullanar kilaafattai kondu alaitha ella jamaathum adihamana uyir palihal eatpada kaaranamaaha irundullanar nabimaarhal kooda kilaafattai munnirutthi enda dawaa vum panna villai nabihal naayaham sal avarhal kooda makka vaalkayil arasiyal patri eduvum peasavillai makka vasanankal eduvum arasiyal sammandamaaha pesiyadum illai makkalai mulumayaha eeman islaattai vilakkiya pinbey islamiya arasu uruvaanathu .khilaafath and jihaad sammandamaaha yousuful karlaviyin fikhul jihaad enra noolai vaasikkavum. ippadikkooruvadaal kilafattai maruttu nitkirean enra artam illai oruvidayattai adaivadatku adanai adaum valihalum aahumaanathaaha irukka veandum kilaafattai adaivadatku tavaraana valiyai edukka koodaathu aayudam moolam kilafattai adayakkood…adu dawaawin moolamaahavey khilafattai adaya veandum.tatkaappukkaha mattumeay aayudam edukka veendum uttam puriya veendum khilafattukkaha makkal tamadu istappadi aayudam eduppadu teeviravaadamaahum.teeviravaadam talai tookkumpoodu muslimkal pira aatchiyaalarhalaal mudakkapaduhinranar tamadu ibaadathkalai kooda seyya mudiyaada nilamai uruvaahinradu enaveay khilaafattitku munbu makkalai sariyana islaattin paal alaipaduveay awlaviyaatul harakatul islaamiya

      Ahamed Jamsath

      October 4, 2010 at 5:24 am

  9. தேவையில்லாத காமென்ட் எல்லாம் பிரசுரித்து உள்ளீர்கள். தயவுசெய்து சகோ. ரஸ்மியின் காமென்ட்டை முழுமையாக பிரசுரிக்கவும். என்னதான் சொன்னார் என்று பார்ப்போமே

    sadath

    November 10, 2010 at 9:57 pm

  10. bother rasmin udaiya full comment i pirasurikkavum sathiyam veli vara vendum

    Hifras

    August 11, 2011 at 4:33 pm

  11. யாருங்க இந்த ரஸ்மி? கருத்த நீக்கி விடுகின்ற அளவுக்கு அவர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்? கொஞ்சம் பிரசரித்து விடுங்களேன்.

    sheloobeen

    September 13, 2011 at 7:16 pm

  12. hello brother we have cleared the truth now we have a jamath as you expected that is jamath ul muslimeen. we have a amir for whole world also we all doing baiath and we follow every single sunnahs of prophet……

    shifras

    October 3, 2011 at 10:43 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers