Archive for May 27th, 2009
இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு லட்சம் பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள்
இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு லட்சம் பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அரச தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் வேறொரு தலைமையின் கீழ் போராட்டத்தை தொடக்க முயற்சி செய்யலாம் அதைதடுக்கும் வகையில் இராணுவத்தில் கூடுதலாக ஒருலட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் எனவே இதன்மூலம் இராணுவத்தினரின் எண்ணிக்கை மொத்தம் 3லட்சமாக உயரும் விடுதலைப்புலிகள் முன்போல் இனி இலங்கையில் ஒன்றிணைவது சுலபமல்ல இதுவரை 22ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் தற்போது 9ஆயிரம் பேர் சரணடைந்துள்ளனர் என இராணுவத் தளபதி மேலும் தெரிவி;த்தார்.
சிறிலங்கா விவகாரம் ஐ.நா.வில் பிளவு: சிறிலங்காவுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்த மூன்று நாடுகள்
| சிறிலங்கா மீதான சிறப்பு விவாதம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் சிறிலங்கா மீதான விசாரணைகள் அவசியம் என தெரிவித்திருக்கின்றார். |
| இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை தேவை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான நாடுகளும், இது அதற்கான தருணம் அல்ல என சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளும் தெரிவித்திருக்கின்றன. மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளில் சில இந்த சிறப்பு விவாதத்தை பலவந்தமாக திணித்துள்ளன. ஆனால், இது தேவையற்றது. சிறிலங்கா தொடர்பான விவாதத்தை சாதாரண கூட்டத்தில் விவாதிக்கலாம் என சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் இந்தியாவுக்கான தூதுவர் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஸ்யாவும் சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. கியூபாவும் சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. முன்பு பல நாடுகளை ஆண்ட நாடுகள் தற்போது சிறிய அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டை சிறுமைப்படுத்துவதாக கியூபா குற்றம் சாட்டியுள்ளதுடன், அது ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக சாடியிருந்தது. பாகிஸ்தான், கட்டார், ஜோர்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கானா நிக்கரகுவா, சவூதி அரேபியா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகள் சிறிலங்காவின் தீர்மானத்திற்கு ஆதரவுகளை வழங்கியுள்ளன. ஆனால், சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைகள் தேவை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருக்கின்றார். இறுதிக்கட்ட மோதல்களின்போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடாபாக விசாரணைகள் தேவை. சுயாதீனமானதும், காத்திரமானதுமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் தலைமையிலான நாடுகள் சார்பாக செக் குடியரசும் கருத்துக்களை வெளியிட்டிருந்தது. விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. ஆனால், சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களை மதிக்கவில்லை. மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக இடம்பெயர்ந்து இருந்தபோதும் சிறிலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என அது தெரிவித்திருக்கின்றது. மோதல்களின் பின்னர் நாம் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பலவந்தமாக காணாமல் போதல், தடுத்துவைத்தல், கடத்தல், கருத்து சுதந்திரத்தை தடுத்தல் போன்றவை கவலையை தருகின்றன எனவும் செக் குடியரசு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்றனவும் சிறிலங்கா மீதான விசாரணைக்கு ஆதரவுகளை தெரிவித்திருக்கின்றன. இத்தாலி, சுலோவேனியா, மெக்சிகோ, பிரேசில், சிலி போன்ற நாடுகளும் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது கவனத்தை தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. |
இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய அணிவகுப்பில் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளும் இணைந்து கொண்டுள்ளனர்!
வன்னியில் புலிகளை அழிக்கும் இறுதி நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டிருந்த இறுதி நாட்களில், ஏகாதிபத்திய மேற்கு நாடுகளும், அவர்களது ஊடகங்களும், சில ஐ.நா அதிகாரிகளும், மனித உரிமை அமைப்புகள் என்பனவும் நடந்துகொண்ட முறையிலிருந்து, அவர்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாக்க முற்பட்டமை மிகத்தெளிவாகத் தெரிகின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்டு, யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட, ஏதாவது ஒரு வகையில் இலங்கை அரசை பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த ஏகாதிபத்திய சக்திகள் செயல்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசு உலகின் மிக மோசமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்ததையிட்டு மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, இந்த சக்திகள் இலங்கை அரசை நோக்கி விரல்களை நீட்டுவதன் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில் அரசியல் தெரிந்தவர்களுக்கு மிகச்சுலபமானது. இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், முன்னையது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது என்பதையும், பின்னையது ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமானது என்பதையும் ஒருவர் விளங்கிக் கொள்வது அப்படியொன்றும் சிரமமானது அல்ல.
thanks.thenee
இறுதி யுத்தத்தில் 24,100 படையினர் பலி! – சிங்கள ஊடகம்
தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக இறுதியாக சிறிலங்கா அரசாங்கம் 2006 இல் மாவிலாற்றில் ஆரம்பித்த படை நடவடிக்கைகளில் இருந்து இறுதிப்படை நடவடிக்கைகள்வரை சிறி லங்கா இராணுவத்தில் 24 100 இராணுவத்தினர் பலியாகியிருப்பதாகவும், (இதில் தப்பியோடியோர் -காணாமற்போனோர் பட்டியல் உள்ளடக்கப்படவில்லை) இராணுவப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் இந்த எண்ணிக்கைகளை தலைகீழாக மாற்றியே சிறி லங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிங்கள அமைப்பொன்றை ஆதாரமாகக்காட்டி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.அதில் ஆரம்பம் முதலே தமது இழப்புக்களை சிறி லங்கா இராணுவத்தினர் மிகையாக குறைத்தே செய்திகளை வெளியிட்டுவருவதாக சிங்கள மக்களுக்கே புரியும் எனவும், அவர்கள் வாழை மரக்குற்றிகளை தமது பிள்ளைகளின் சடலம் என்று சொல்லப்பட்டே இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே மாவிலாறு மற்றும் கிழக்கு மாகாண விடுவிப்பின்போது 2 900 இராணுவத்தினரும், வடக்கு கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1300 இராணுவத்தினரும் (கபறனை தாக்குதல் உட்பட), மன்னார் பிரதேசங்களில் எற்பட்ட மோதல்களின்போது 3100 இராணுவத்தினரும், மாங்குளம் பிரதேச மீட்பின்போது 2500 பேரும், மல்லாவி, துணுக்காய் பகுதிகளின் மீட்பின்போது 3500 பேரும், பின்னர் நடந்த இடை மோதல்களில் 1700 பேரும் பூனகரி மோதல்களின்போது 4200 பேரும், கிளிநொச்சி கைப்பற்றுதலில் 2600 பேரும், பின்னர் விடுதலைப்புலிகளின் கிளிநொச்சி ஊடறுப்புத்தாக்குதலில், 2300 பேரும், விடுதலைப்புலிகளின் குளம் உடைப்புத்தாக்குதலில் 3300 பேரும் பின்னர் இடம்பெற்ற இறுதித்தாக்குதலில் மிகுதி இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தமது தரப்பு இழப்புக்கள் பற்றி குறிப்பிட்ட சிறி லங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இறுதிமோதல்களில் 6200 படையினர் மட்டுமே பலியானதாகவும், இத்தனைநாள் இடம்பெற்றமோதல்களில் சுமார் 22 அயிரம் வரையான படைவீரர்களே இறந்துள்ளதாக தெரிவித்தமை மிகவும் கேலிக்குரியதெனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
thank Ilakku
//
புத்தளம் பல்லம காட்டுப்பகுதியில் வைத்து கொள்ளைகளுடன் தொடர்புடைய
புத்தளம் பல்லம காட்டுப்பகுதியில் வைத்து கொள்ளைகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றுகாலை 10மணியளவில் கைது செய்யப்பட்டதாக பல்லம பொலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இன்றுகாலை முந்தல் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், பின்னர் பொலீசார் தேடிச்சென்ற வேளையில் பல்லம காட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்த போது காட்டிலுள்ள கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இரண்டு சந்தேகநபர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் தற்போது முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கைப்பற்றியிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.







