Lankamuslim.org

One World One Ummah

புலிகள் பதுங்கியுள்ள பகுதி எங்கும் ஒரே கறுப்புநிற புகைமண்டலம்! இறுதி கட்டத்தில் புலிகள்!


நேற்று மாலை முதல் இப்போதுவரை புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள அப்பகுதி வானமெங்கும் ஒரேபுகை மண்டலம் நெருப்பு சுவாலைவிட்டு எரிவதையும் காணமுடிகின்றது. 1.2 கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகள் இறுதிகட்டமாக வளங்களை கொண்டும் தற்கொலை தாக்குதல் மூலம் முன்னரங்க நிலையில் உள்ள படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றபோதும், மேலும் பல கரும்புலிகள் தாங்கள் தாங்களே வெடித்து தற்கொலை செய்து கொள்வதையும் மேலும் சிலர் படையினரிடம் சரணடைந்தும் வருகின்றனர்.

புலிகள் படையினர் மீதான இறுதிகட்ட தாக்குதலை மேற்கொண்டு வருகின்றபோதும், படையினர் புலிகளின் தாக்குதலை முறியடித்து முன்னேறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மூன்று கரும்புலிகள் உட்பட 150-200 பேர் வரையிலான புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளனர். இவ் சிறுபகுதியில்தான் பிரபாகரன், பொட்டுஅம்மான்,சூசை போன்ற புலிகளின் முக்கிய தளபதிகள் பதுங்கியுள்ளதாக தற்போதுவரை நம்பப்படுகின்றது.

அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் இவர்கள் பதுங்கியிருப்பதாக கருதப்படும் பகுதி முழுமையாக முடக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஜோர்டான் நாட்டுக்கான உத்தியோகப+ர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கு உரையாற்றுகையில் இலங்கையில் தலைதூக்கியிருந்த பயங்கரவாதம் அடுத்த 48 மணிநேரங்களில் முற்று முழுதான துடைத்தெறியப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஜோர்டான் நாட்டு சரக்கு கப்பலை புலிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தி சென்று முல்லைத்தீவின் கரையாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்திருந்ததும் அதனை நேற்றையதினம் படையினர் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

About these ads

Written by lankamuslim

May 15, 2009 at 7:11 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers

%d bloggers like this: